பேச்சு:மண்டோதரி

@Sivansakthi: பொருத்தமற்ற உள்ளடக்கம், மேற்கோள் நீக்கியதற்கான காரணம்:

  • அந்த உள்ளடக்கங்களுக்கான மேற்கோள் வலைப்பூ பக்கமாக இருந்தது. வலைப்பூ பக்கங்கள் தமிழ் விக்கியில் மேற்கோளாக ஏற்கப்படுவதில்லை.
  • அத்துடன் மேற்கோளாகத் தரப்பட்ட பன்னிருதிருமுறைப் பாடலில் ராவணன் குறிப்பு மட்டுமே காணப்படுகிறது. மண்டோதரிக்கான குறிப்புகள் இல்லை.

விளக்கத்தைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:24, 16 சனவரி 2019 (UTC)Reply

== வண்டமராேதி,வண்டாேதரி(மண்டாேதரி). பாடல்களில் வரும் வண்டமராேதி,வண்டாேதரி என்பன மண்டாேதரியின் பெயர்கள்.வலைப்பதிவினை ஆதாரமாகக் காெள்ளாமல் பாடல்களை ஆதாரமாகக் காெள்ளுங்கள்.அக்கட்டுரையில் வலைப்பதிவினைத் தவிர்த்து மற்றவற்றை எனது பதிப்பிற்கு மீளமைக்க வேண்டுகிறேன். Sivansakthi (பேச்சு) 05:31, 16 சனவரி 2019 (UTC)Reply

@Sivansakthi: உங்களுக்கான விளக்கம்: பன்னிரு திருமுறை 3:22:8 பாடலும் பொருளும்

பாடல்
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
பொழிப்புரை
வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமா தேவியால் செபிக்கப்படும் சிறப்புடையன திருவைந்தெழுத்தாகும். முற்காலத்தில் இராவணன் திருவைந்தெழுத்து ஓதி உய்ந்தான். அடியார்கள் தங்கள் கடமையாகக் கொண்டு, செபித்த அளவில் அவர்களுக்கு அண்டங்களையெல்லாம் அரசாளக் கொடுப்பன இவ்வைந்தெழுத்தாகும்.
  • மேலுள்ள இணையப்பக்கப்படி, \வண்டம ரோதி மடந்தை\ என்பது பார்வதி தேவியைக் குறிக்கிறது; மண்டோதரியை அன்று. நீங்கள் மேற்கோளாகத் தந்த வலைப்பூ பக்கத்தைவிட இப்பக்கம் நம்பகமானதென்றே கருதுகிறேன். இப்பக்கம் விக்கிமூலத்தில் பன்னிரு திருமுறைக்கு மேற்கோளாகச் சுட்டப்பட்டுள்ளது.
  • \\அக்கட்டுரையில் வலைப்பதிவினைத் தவிர்த்து மற்றவற்றை எனது பதிப்பிற்கு மீளமைக்க வேண்டுகிறேன்.\\

அவற்றை மீளமைக்க அதற்கான தகுந்த ஆதாரங்களைத் (வலைப்பூக்கள் தவிர) தருவீர்களானால் மீண்டும் இணைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 10:58, 16 சனவரி 2019 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:மண்டோதரி&oldid=2632679" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மண்டோதரி" page.