விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்

முகப்பு   உரையாடல்   சந்திப்புக்கள்   களப் பணிளும் பட்டறைகளும்   கலைகள்   காலக்கோடு   களப்பணி விதிகளும் செயல்முறைகளும்   உசாத்துணைகள்    


தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களைப் பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாகத் திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகள் (trades) மற்றும் அருங்கலைகளும் (crafts), அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு முன்மொழிவினை முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கித் தன்னார்வலர்களாலும், நூலக நிறுவனப் பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. அந்த முன்மொழிவு தற்போது மீளாய்வுக்காகச் (review) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்கெடுக்க உங்களை வரவேற்கிறோம்.

பின்புலமும் தேவையும்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயல்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.

இந்தச் செயல்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

  • முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்ச்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாகத் தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
  • இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயல்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கியத் தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயல்திட்டமாக இது அமையும்.
  • மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயல்திட்டமாக அமையும்.

முன்மொழிவு

தொகு

முக்கிய திகதிகள்

தொகு
  • முன்மொழிவு சமர்ப்பிப்பு - மார்சு 14 -  Y ஆயிற்று
  • பணியாளர்கள் முன்மொழிவுத் தகுதி மீளாய்வு - மார்சு 15 - 21 -  Y ஆயிற்று
  • சமூக மீளாய்வு - மார்சு 22 - ஏப்பிரல் 4 -  Y ஆயிற்று
  • குழு மீளாய்வு - ஏப்பிரல் 5 - 18 -  Y ஆயிற்று
  • நல்கை அளிக்கப்பட்டவர்கள் அறிவிப்பு - மே 19 -  Y ஆயிற்று - ஏற்கபப்ட்டது - https://blog.wikimedia.org/2017/06/09/project-grants-round-one-2017/

முன்மொழிவின் சாரம்

தொகு

பட்டியல்லாக்கமும் - வார்ப்புரு/சட்டக வடிவமைப்பும்

தொகு
  • கருத்தாய்வு களப்படி ஊடாக மரபுவழி தொழிற்கலைகளை விவரித்தல், பட்டியலாக்கம் செய்தல். முதற்கட்ட இலக்கு 50 - 75 கலைகள். இவற்றை வகைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் முறைகள் இருந்தால் அவற்றுக்கு ஏற்ப வகைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல். இந்தத் தகவல்கள் ஒரு விக்கி நூலாக வளரக்கூடிய வாய்ப்பு உள்ளது. தொடர்புடைய பட்டியல் ஒன்று இங்கே உள்ளது: https://ta.wikipedia.org/s/zra
  • ஒரு கலையைப் பற்றி விரிவாக ஆவணப்படுத்த உதவும் வகையில் ஒரு வார்ப்புருவை/சட்டகத்தை உருவாக்கல். 9 நல்ல எடுத்துக்காட்டுக் கட்டுரைகள் உருவாக்கல். மேலே தொகுக்கப்பட்ட பட்டியலில் இருந்து 9 கலைகள் விரிவான ஆய்வுக்கும் ஆவணப்படுத்தலுக்கும் எடுத்துக்கொள்ளப்படும்.

பல்லூடக உள்ளடக்க விரிவாக்கம் (Expand Content and Coverage)

தொகு
  • பல்லூடக உள்ளடக்க உருவாக்கம்
  • சிறு நிகழ்படங்கள் = 50
  • நீண்ட, ஆழமான நிகழ்படங்கள், வாய்மொழி வரலாறுகள் உட்பட (9 தெரிவுசெய்யப்பட்ட கலைகள் x 2) = 18
  • ஆவணகத் தரப் படங்கள் = 9 தெரிவுசெய்யப்பட்ட கலைகள் x 50 படங்கள் = 400 படங்கள் (குறைந்தது)
  • ஆவணகத் தரப் படங்கள் = 41 x 10 = 410 படங்கள் (குறைந்தது)
  • விக்சனரிக்கு உள்ளடக்கத் தரவேற்றம் - தொழிற்கலைகள் சார் கலைச்சொல் அகராதிகளை (5) விக்சனரிக்கு தரவேற்றுதல்.
  • எண்ணிமப்படுத்தல் - 25 - 50 உசாத்துணை வளங்களை அடையாளம் காணல். இவை பொதுவில் இருந்தால், எண்ணிமப்படுத்தி விக்கிமூலத்துக்குப் பதிவேற்றல். கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி பெறப்பட்டால் நூலக எண்ணிம நூலகத்தில் பதிவேற்றல்.

சமூக கூட்டுச் செயற்பாடும் களப்பணியும்

தொகு
  • 3 பயிற்சிப் பட்டறைகள் - பல்லூடக ஆவணப்படுத்தல் தொடர்பான பயிற்சி
  • 6 விழிப்புணர்வு/வெளிக்கள நிகழ்வுகள் - உள்ளூர் அமைப்புகள், தொழில்கலைகள் சார் அமைப்புகள், பல்லூடகக் கலைஞர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சென்றடைவதற்கான, அவர்களிடம் தரவுகள் திரட்டுவதற்கான நிகழ்வுகள்.
  • 15 - 30 களப் பணிகள் - களத்துக்குச் சென்று ஆவணப்படுத்தல், தகவல் திரட்டுதல்.
  • தமிழ் விக்கியூடக, நூலகப் பங்களிப்பாளர்கள் ஒருங்கிணைப்புப் பணிகள் செய்வார்கள், இணைய உள்ளடக்க உருவாக்கப் பணிகளில் உதவுவார்கள்.
  • ஊடகத் தொடர்பாடல் திட்டமிட்டுச் செயற்படுத்தல்

ஆதரவு

தொகு
  1. அருமையான திட்டம் என் முழு ஆதரவு --செல்வா (பேச்சு) 16:06, 7 மார்ச் 2017 (UTC)
  2.   ஆதரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:12, 7 மார்ச் 2017 (UTC)
  3.   ஆதரவு--Kanags \உரையாடுக 20:37, 7 மார்ச் 2017 (UTC)
  4.   ஆதரவு--கலை (பேச்சு) 21:09, 7 மார்ச் 2017 (UTC)
  5.   ஆதரவு--Chandravathanaa (பேச்சு) 15:22, 8 மார்ச் 2017 (UTC)
  6.   ஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 03:45, 9 மார்ச் 2017 (UTC)
  7.   ஆதரவு--இரவி (பேச்சு) 05:59, 9 மார்ச் 2017 (UTC)
  8.   ஆதரவு--மயூரநாதன் (பேச்சு) 06:01, 9 மார்ச் 2017 (UTC)
  9.   ஆதரவு--சுந்தர் \பேச்சு 06:14, 9 மார்ச் 2017 (UTC)
  10.   ஆதரவு--5anan27 (பேச்சு) 06:31, 9 மார்ச் 2017 (UTC)
  11.   ஆதரவு--AntanO 06:32, 9 மார்ச் 2017 (UTC)
  12.   ஆதரவு--உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:46, 9 மார்ச் 2017 (UTC)
  13.   ஆதரவு--ஜுபைர் அக்மல் (பேச்சு) 14:02, 9 மார்ச் 2017 (UTC)
  14.   ஆதரவு-- மாதவன்  ( பேச்சு ) 15:42, 9 மார்ச் 2017 (UTC)
  15.   ஆதரவு-- அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 16:40, 09 மார்ச் 2017 (UTC)
  16.   ஆதரவு -- --Sengai Podhuvan (பேச்சு) 18:46, 9 மார்ச் 2017 (UTC)
  17.   ஆதரவு--Saroj Uprety (பேச்சு) 05:05, 10 மார்ச் 2017 (UTC)
  18.   ஆதரவு--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:02, 10 மார்ச் 2017 (UTC)
  19.   ஆதரவு -- Mdmahir (பேச்சு) 06:56, 11 மார்ச் 2017 (UTC)
  20.   ஆதரவு --அஸ்வின் (பேச்சு) 07:10, 11 மார்ச் 2017 (UTC)
  21.   ஆதரவு -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:34, 11 மார்ச் 2017 (UTC)
  22.   ஆதரவு --சி.செந்தி (உரையாடுக) 18:39, 11 மார்ச் 2017 (UTC)
  23.   ஆதரவு --உழவன் (உரை) 02:35, 12 மார்ச் 2017 (UTC)
  24.   ஆதரவு--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:10, 12 மார்ச் 2017 (UTC)
  25.   ஆதரவு--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 12 மார்ச் 2017 (UTC)
  26.   ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:46, 14 மார்ச் 2017 (UTC)
  27.   ஆதரவு--குறும்பன் (பேச்சு) 19:39, 15 மார்ச் 2017 (UTC)
  28.   ஆதரவு--Booradleyp1 (பேச்சு) 04:09, 16 மார்ச் 2017 (UTC)
  29.   ஆதரவு--சிவகோசரன் (பேச்சு) 15:51, 17 மார்ச் 2017 (UTC)
  30.   ஆதரவு--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:15, 25 மார்ச் 2017 (UTC)

எதிர்ப்பு

தொகு

கருத்துக்கள்

தொகு

உதவுவதற்கு முன்வரல்

தொகு

இத்திட்டத்தில் என்னல் முடியுமான உதவிகளைச் செய்ய இயலும். எனினும் தேவைப்படும் உதவிகளைக் கூறினால் அவற்றில் எவற்றை செய்யமுடியும் என திட்டவட்டமாகக் கூறுவேன். இத்திட்டத்தினூடு கிடைக்கும் பயன்களைத் தெளிவு படுத்தி தமிழில் குறிப்பிடுவீர்களா? நன்றி! தங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:23, 7 மார்ச் 2017 (UTC)


ஐயம். விக்கியில் மேற்கோள் தரணும் என்பது விதி. மேற்கோள் தரமுடியாத கட்டுரைகளை எழுதுவதில் சிக்கலை தீர்பதில் உள்ள தீர்வை வைத்துள்ளதாக தெரிகிறது அதை என்னால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இன்னும் விரிவாக கூற முடியுமா?--குறும்பன் (பேச்சு) 17:09, 9 மார்ச் 2017 (UTC)

இதுதொடர்பில் வாய்மொழிமரபுதொடர்பான திட்டமொன்று முன்பு செயற்படுத்தப்பட்டுள்ளது: m:Research:Oral Citations. நடுநிலைச்சிக்கல்கள் இல்லையெனில் நாமும் செய்யலாம். -- சுந்தர் \பேச்சு 02:39, 10 மார்ச் 2017 (UTC)
https://commons.wikimedia.org/wiki/Category:Oral_Citations_Project மேற்கோள் தர வேண்டும் என்ற விதி உதவும் வண்ணமே ஒரு தீர்வை இது முன்வைக்கிறது. அதாவது அச்சில் வெளிவந்த ஒரு படைப்பின் ஊடாக மட்டும் இல்லாமல், வாய்மொழி வரலாறுகள், நேரடி ஆவணப்படுத்தல்களில் இருந்தும் மேற்கோள்கள் தரலாம். ஒரு கலையைப் பற்றி அச்சில் வெளிவந்த ஒரு படைப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் நேராகச் சென்று, அவரை, அல்லது அக் கலையை ஆவணப்படுத்தினால், அதனை நாம் ஒரு சான்றாகப் பயன்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கான எடுத்துக்கலை சுந்தர் சுட்டியுள்ளார். இதை மேலும் நாம் ஆய வேண்டும். --Natkeeran (பேச்சு) 17:07, 10 மார்ச் 2017 (UTC)
People are Knowledge --Natkeeran (பேச்சு) 17:21, 10 மார்ச் 2017 (UTC)


மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம், கப்பற்கலை ஆய்வாளர் சிவா கருத்துக்கள்

தொகு

நேற்று ஒரு நிகழ்வுக்கு சென்று இருந்தேன். அங்கு மொழிபெயர்ப்பாளர் என். கே. மகாலிங்கம் அவர்களோடு இருந்த்ச் செயற்திட்டத்தைப் பற்றி உரையாடும் வாய்ப்புக் கிடைத்து. ஒரு கலையை ஒரு குறிப்பிட்ட இனவரைவிற்குள் வரையறை செய்ய முடியாது என்று சுட்டினார். நாம் அவ்வாறு செய்ய முடியவில்லை என்று பின்வரும் எடுத்துக்காட்டுடன் விளக்கினேன். https://www.khanacademy.org/humanities/art-history-basics/beginners-art-history/a/what-is-cultural-heritage என்ற கட்டுரையில் மொன லீசா யாரது மரபுவளம் என்று ஆசிரியர் கேள்வி எழுப்புகிறார். மொன லீசாவரை வரைந்தவர் இத்தாலிய ஓவியர் லியனார்டோ. எனவே அது இத்தாலிய மரபுரிமை. ஆனால் அவர் அதை பாரிசில் வரைந்தார். அது பாரிசு அருங்காட்சியகத்தி உள்ளது. எனவே அது பிரான்சிய மரபுரிமை. இந்த ஓவியம் வரலாற்றில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே அது மனிதர்களின் மரபுரிமை என்று ஆசிரியர் சுட்டுகிறார்.

மேலும் கே. மகாலிங்கம் இலங்கையில் தொழிற்கலைகளைப் பற்றிய குறிப்புக்களைப் பகிர்ந்தார். எ.கா எவ்வாறு குருணாகல் மாவட்டத்தில் தச்சுக்கலை சிறப்பாக இருந்தது என்றும். எவ்வாறு மன்னார் போன்றே புத்தளத்திலும் முத்தெடுத்தல் கலை சிறப்பு இருந்தது என்றும். கப்பற்கலை பற்றியும் உரையாடினோம். இவரோடு உரையாடிக் கொண்டு இருந்த போது கப்பற்கலை பற்றி ஆய்வு செய்யும் சிவாவினை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார். சிவா ஈழத்துப் பூராடனாரின் வல்வெட்டித்துறை கடலோடிகள் நூலுக்கு தகவல்களை தொகுத்து வழங்கியவர்களின் முதன்மையானவர். அதனைத் தொடர்ந்து ஈழத்து கப்பற்கலை பற்றி, குறிப்பாக அன்னபூரணி பற்றி விரிவாக அமெரிக்க மூலங்களைக் கொண்டு ஆய்ந்து வருபவர். அமெரிக்க மூலங்களைக் கொண்டு அன்னபூரணி பற்றி விரிவான தகவல்களை தொகுக்கக் கூடியதாக இருப்பதாகவும், ஆனால் தமிழர் தரப்பில் இருந்து விரிவான ஆவணப்படுத்தல்கள் இல்லாததைப் பற்றியும் குறிப்பிட்டார். அன்னபூரணி போன்று சுமார் 150 கப்பற்கள் கடந்த நூற்றாண்டில் இருந்தத்தாக அறியக்கூடியதாகக் கூறினார். ஈழத்தில் பெரிய கப்பல் கட்டும் தொழில்நுட்பம் பெரும்பாலும் இழக்கப்பட்டு விட்டதாகவும், ஒர் இரு முதியோர்கள் இவ்வாறு பெரும் கப்பற்கலைக் கட்டியவர்களின் வழித்தோன்றல்களாக இன்னும் இருக்கின்றனர் என்று, அவர்களிடம் சில தகவல்களை அறிய முடியும் என்றும் கூறினார். --Natkeeran (பேச்சு) 12:45, 13 மார்ச் 2017 (UTC)

அம்முதியோர்கள் பற்றிய விபரங்கள் உள்ளனவா? ---மயூரநாதன் (பேச்சு) 13:02, 27 மார்ச் 2017 (UTC)

பொதுவக தரவேற்ற வழிகாட்டி

தொகு

பின்வரும் இணைப்பினூடாக இத்திட்டத்திற்கான படங்களை நேரடியாக இணைக்கலாம்.

ஊடகங்களை பதிவேற்றவும்