தங்களின் கவனத்திற்கு...தொகு

வணக்கம்! 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயற்பாடுகள் எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். முக்கியக் கட்டுரையிலிருந்து இக்கட்டுரைக்கு உள்ளிணைப்பு உள்ளது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:05, 25 மார்ச் 2016 (UTC)

வணக்கம்! புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 எனும் தலைப்பில் புதிய கட்டுரையைத் துவக்கியுள்ளேன். ஆர்வமிருந்தால், இற்றை செய்யலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:39, 29 மார்ச் 2016 (UTC)

முக்கியக் கட்டுரையில் இந்தப் புதிய பகுதி துவக்கப்பட்டுள்ளது. இதனை இற்றை செய்ய, இங்குள்ள அட்டவணையில் தொகுக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகின்றன என்பதனைக் காட்டுதலே இந்த அட்டவணையின் நோக்கம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:26, 31 மார்ச் 2016 (UTC)

April 2016தொகு

திண்டுக்கல்தொகு

  வணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO 07:12, 8 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan வணக்கம் நான் அதை நீக்கவில்லை வேறு தலைப்பில் இன்னும் தகவல் சேர்த்து அமைத்துள்ளேன்.நன்றி. Akmalzubair 1:00,8 ஏப்ரல் 2016 (UTC)

Akmalzubair அவ்வாறு செய்யும் போது தலைப்பை நகரத்திவிட்டு செய்யுங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 03:14, 13 ஏப்ரல் 2016 (UTC)

உலகில் அழிந்து போன நகரங்கள்தொகு

உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை en:Lost city என்பதற்கு ஏற்ப எழுதுங்கள். எல்லா நகரங்களின் பட்டியலும் அதில் இருப்பது அவசியம். ஒவ்வொரு நகருக்கும் பந்தி அமைக்காது பட்டியலாக எழுதுங்கள். --AntanO 00:58, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan அவ்வாறு செய்ய விழைகிறேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 05:40, 18 ஏப்ரல் 2016 (UTC)

ஐயா, Antan ,உலகில் அழிந்து போன நகரங்கள் என்ற கட்டுரையை ஆங்கில விக்கிக்கு ஏற்ப மாற்றியுள்ளேன் பார்க்கவும்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 12:46 , 22 ஏப்ரல் 2016 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்கள் பங்களிப்பு என்னை வியக்க வைக்கின்றது. மேலும் முனைப்பாக பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 14:10, 18 ஏப்ரல் 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:53, 30 ஏப்ரல் 2016 (UTC)

நன்றிதொகு

ஆர்வமூட்டும் ஐயா  மாதவன்  அவர்களுக்கும் ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கும் நன்றிகள்-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 17:16 , 30 ஏப்ரல் 2016 (UTC)

தங்களைப் பற்றிய தகவல்களை பயனர் பக்கத்தில் தந்தமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 30 ஏப்ரல் 2016 (UTC)

Sahih_Muslimதொகு

வணக்கம், Sahih_Muslim பக்கத்தை நீக்கியுள்ளேன், தவறுதலாக மொழி பெயர்த்து முடிக்கும் முன்னரே வெளியிட்டு விட்டீர்களா? --சண்முகம்ப7 (பேச்சு) 18:18, 3 மே 2016 (UTC)

நன்றி சண்முகம்ப7 (பேச்சு) .நான் மொழி பெயர்த்து முடிக்கும் முன்பே இக்கட்டுரை தவறுதலாக பதிவேறி விட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 18:30 , 3 மே 2016 (UTC)

ஐயா சண்முகம்ப7 ஆங்கில விக்கியின் Sahih_Muslim தமிழ் மொழி பெயர்ப்பு கட்டுரை ஸஹீஹ் முஸ்லிம் (நூல்) என்ற பெயரில் வெளியிட்டுள்ளேன்.நன்றி.-- சுபைர் அக்மல்  ( பேச்சு  ) 06:07 , 4 மே 2016 (UTC)

பயனர் பக்கம்தொகு

வணக்கம், பயனர் கணக்கிலேயே உங்கள் பயனர் பக்கத்தை வைத்திருக்கலாம். வேறு பெயர்களில் பயனர் பக்கம் வைத்திருக்க முடியாது. வேண்டுமானால் உங்கள் பயனர் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.--Kanags \உரையாடுக 08:27, 5 மே 2016 (UTC)

நன்றி ஐயா Kanags பயனர் பெயரை மாற்ற எவ்வாறு விண்ணப்பிப்பது? என்று தெரிய வில்லை.--சுபைர் அக்மல் 09:15, 5 மே 2016 (UTC)
@Shanmugamp7: உதவமுடியுமா?.--Kanags \உரையாடுக 10:42, 5 மே 2016 (UTC)
சிறப்பு:GlobalRenameRequest இப்படிவத்தை பயன்படுத்தலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 11:04, 5 மே 2016 (UTC)
நன்றி ஐயா சண்முகம்ப7 பயனர் பெயரை மாற்ற அவ்வாறே விண்ணப்பிப்பத்துள்ளேன்.--சுபைர் அக்மல் 11:22, 5 மே 2016 (UTC)

மேற்கோள் இல்லாத பக்கங்கள்தொகு

வணக்கம்! நான் உருவாக்கி வரும் பக்கங்களில் ஒன்றினை தாங்கள் மேற்கோள்கள் இல்லாத பக்கமென்று தாங்கள் 26 சூலை அன்று குறித்துள்ளீர்கள். அவை தேவையான அளவில் நிரப்பப்பட்டு விட்டன. இருந்தும் மேற்கோள்கள் இல்லாத பகுப்பிலேயே உள்ளது. ஏன் என்பதை அறியத் தரவும் அல்லது அப்பகுப்பிலிருந்து நீக்கவும். நன்றி! --Jayreborn (பேச்சு) 15:53, 28 சூலை 2016 (UTC) பக்கம் - லூர்து நகர்

@ Jayreborn தாங்கள் கூறியபடி அப்பக்கத்தில் நீக்கிவிட்டேன்.நன்றி. --ஜுபைர் அக்மல் 16:00, 28 சூலை 2016 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றிதொகு

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், ஜுபைர் அக்மல்!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 06:25, 15 ஆகத்து 2016 (UTC)

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

--ஜுபைர் அக்மல், 06:37, 15 ஆகத்து 2016 (UTC)

பதக்கம்தொகு

  பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Rio Olympics Edit-a-thonதொகு

Dear Friends & Wikipedians, Celebrate the world's biggest sporting festival on Wikipedia. The Rio Olympics Edit-a-thon aims to pay tribute to Indian athletes and sportsperson who represent India at Olympics. Please find more details here. The Athlete who represent their country at Olympics, often fail to attain their due recognition. They bring glory to the nation. Let's write articles on them, as a mark of tribute.

For every 20 articles created collectively, a tree will be planted. Similarly, when an editor completes 20 articles, a book will be awarded to him/her. Check the main page for more details. Thank you. Abhinav619 (sent using MediaWiki message delivery (பேச்சு) 16:54, 16 ஆகத்து 2016 (UTC), subscribe/unsubscribe)

முன்னேற்றக் குறிப்புகள்...தொகு

வணக்கம்! இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். ஒரு வாக்கியம் முடிந்து முற்றுப் புள்ளி வைக்கிறோம். அடுத்து ஒரு இடைவெளி (single space) விட்டு, பின்னர் அடுத்த வாக்கியத்தைத் தொடர்ந்தால், படிப்பவர்களுக்கு எளிதாக (better readability) இருக்கும் என்பது எனது கருத்து; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:58, 11 அக்டோபர் 2016 (UTC)

@ மா. செல்வசிவகுருநாதன் மிக்க நன்றி ஐயா! தங்கள் கூற்று சரியானதே.-- ஜுபைர் அக்மல் 03:16, 12 அக்டோபர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1தொகு


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:17, 22 திசம்பர் 2016 (UTC)

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்தொகு


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:17, 22 திசம்பர் 2016 (UTC)

முன்னேற்றக் குறிப்புகள்...தொகு

வணக்கம்! தங்களின் தொடர்பங்களிப்பிற்கு பாராட்டுகளும், நன்றிகளும்!

 • தினம் என்பதைவிட நாள் என்பது தனித்தமிழாகக் கருதப்படுவதால், இந்திய இராணுவ நாள் என நகர்த்தியிருக்கிறேன். இந்திய இராணுவ தினம் எனும் தலைப்பும் இருக்கும்; எவரேனும் தேடினால் கிடைக்கவேண்டும் என்பதற்காக.
 • இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். ஒரு வாக்கியம் முடிந்து முற்றுப் புள்ளி வைக்கிறோம். அடுத்து ஒரு இடைவெளி (single space) விட்டு, பின்னர் அடுத்த வாக்கியத்தைத் தொடர்ந்தால், படிப்பவர்களுக்கு எளிதாக (better readability) இருக்கும்; நன்றி!

@ மா. செல்வசிவகுருநாதன் மிக்க நன்றி ஐயா! தங்கள் கூற்று சரியானதே தற்போது புரிந்து கொண்டேன்.-- ஜுபைர் அக்மல் 19:51, 15 சனவரி 2017 (UTC)

விக்கித்தரவில் இணைப்புதொகு

நீங்கள் புதிதாக எழுதும் கட்டுரைகள், மற்றும் உருவாக்கும் பகுப்புகளுக்கு அவற்றுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரைகள் அல்லது பகுப்புகள் இருந்தால் அவற்றுக்கு விக்கித்தரவின் மூலம் இணைப்பைக் கட்டாயம் தாருங்கள். கட்டுரைகளை, பகுப்புகளை விக்கித் தரவில் இணைப்பது என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது.--Kanags \உரையாடுக 08:20, 17 சனவரி 2017 (UTC)

@ Kanags நன்றி ஐயா! நான் முடிந்த அளவு விக்கித் தரவில் இணைத்து வருகிறேன்.சில நேரங்களில் இணைப்பு எளிமையாக இல்லாமல் மொழித் தேர்வில் பிரச்சனை வருகிறது.-- ஜுபைர் அக்மல் 09:10, 17 சனவரி 2017 (UTC)

தற்காவல்தொகு

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 03:18, 22 சனவரி 2017 (UTC)

  விருப்பம்--Kanags \உரையாடுக 03:27, 22 சனவரி 2017 (UTC)
@ ஐயா AntanO மற்றும் ஐயா Kanags ஆகியிருக்கு நன்றி. என் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டதை அறிந்தேன். தங்களைப் போன்றோரின் வழிகாட்டுதல்களுடன் விக்கியில் எனது பங்களிப்பினைத் தொடர்வேன். அதில் என்னென்ன பணிகளைச் செய்யவேண்டும் என அறிய விரும்புகிறேன்.--ஜுபைர் அக்மல் 06:07, 22 சனவரி 2017 (UTC)
காண்க:- விக்கிப்பீடியா:சுற்றுக்காவல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:22, 22 சனவரி 2017 (UTC)
நீங்கள் உருவாக்கும் கட்டுரையை இன்னொரு அனுபவம்மிக்க பயனர் கவனித்து, தேவைப்படும் மாற்றங்களை செய்யவேண்டும் என்பது அவசியம் இல்லை அதாவது - விக்கிப்பீடியாவின் கொள்கைகள் தொடர்பாக நல்ல புரிதலை நீங்கள் கொண்டிருப்பதை, தங்களின் பங்களிப்பு வெளிப்படுத்தியிருப்பதாக விக்கி சமூகம் கருதுகிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:25, 22 சனவரி 2017 (UTC)
@ ஐயா மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு நன்றி.தற்போது புரிந்து கொண்டேன்.ஜுபைர் அக்மல் , 06:34, 22 சனவரி 2017 (UTC)

தகவலுக்காக...தொகு

வணக்கம். தியாகிகள் நாள் எனும் பக்க நெறிப்படுத்தல் பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:20, 24 சனவரி 2017 (UTC)

 • ஜெ. தீபா என்றே ஒரு இடைவெளி விட்டு பெயர்களை விக்கியில் எழுதுகிறோம். எடுத்துக்காட்டு: எஸ். ராமகிருஷ்ணன்.
  • அண்மைக்கால ஆண்டுகளை எழுதும்போது, கி.பி. என விக்கியில் குறிப்பிடுவதில்லை. 439 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடும்போது, கி.பி.யா அல்லது கி. மு.வா என்பதனை தெளிவாகக் குறிப்பிடலாம்.
  • முதலாவதாக எழுதப்படும்போது விக்கி உள்ளிணைப்பு தரப்பட்டால் போதுமானது. ஒவ்வொரு முறையும் தரும்போது உங்களுக்கும் வேலைப்பளு; வாசகருக்கும் எவ்வித பலனும் இல்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 4 பெப்ரவரி 2017 (UTC)

@ மா. செல்வசிவகுருநாதன் தங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி ஐயா! -- ஜுபைர் அக்மல் 09:30, 4 பெப்ரவரி 2017 (UTC)

விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்றுதொகு

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:56, 25 சனவரி 2017 (UTC)

நீங்கள் போட்டிக்காக சான்றிணக்கும் கட்டுரைகளில் சான்றை இணைத்த பின்னர், சான்றில்லை எனும் வார்ப்புருவை நீக்கிவிடுங்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 1 பெப்ரவரி 2017 (UTC)

பதக்கம்தொகு

  பாராட்டுகள்
விக்கிக்கோப்பையில் முனைப்புடன் பங்குபற்றியதுடன் ,மட்டுமல்லாது இரண்டாம் பாகத்திலும் வெகுவாகப் பங்காற்றியிருந்தமைக்கு இப்பத்தக்கத்தை விட வேறு எதுவும் தங்களுக்கு ஈடாகாது. குறிப்பாக இசுலாம் பற்றிய கட்டுரைகளை உருவாக்கியமை மிகச்சிறப்பு! தங்கள் பணி தொடர வாழ்த்துகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:40, 2 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

வாழ்த்துகள்.   விருப்பம் --AntanO 09:31, 4 மார்ச் 2017 (UTC)

  விருப்பம் --Arulghsr (பேச்சு) 09:42, 4 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:08, 4 மார்ச் 2017 (UTC)
பாராட்டு தெரிவித்த ஸ்ரீஹீரன், AntanO, Arulghsr, Kanags அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். - ஜுபைர் அக்மல், 11:42, 4 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:34, 7 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவுதொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

தொடர்பங்களிப்பாளர் போட்டி:அறிவிப்பு 1தொகு

 


அறிவிப்பு

போட்டியில் பங்குபெறப் பதிவுசெய்தமைக்கு நன்றிகள்!
போட்டி விதிகளை கவனத்திற் கொள்க!...
போட்டியில் சிறப்புற பங்குபெற்று வெற்றிபெற வாழ்த்துகள்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:56, 12 மார்ச் 2017 (UTC)

விக்கித்திட்டம் 15: போட்டி ஆரம்பமாகிவிட்டது!தொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • 👍 - போட்டி ஆரம்பமாகின்றது!
  • 📆 - மே 01, 2017, இலங்கை & இந்திய நேரம் காலை 05:30 முதல் (UTC:-00:00)
 • ✒️ - இன்றே பங்குபற்றத் தொடங்குங்கள்!...
 • ⏩ - விரிவாக்கிய கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் இற்றை செய்யுங்கள்!...
 • 🎁 - அசத்தலாகப் பங்குபற்றி பரிசுகளையும் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 17:05, 30 ஏப்ரல் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி:வழிகாட்டல்தொகு

வணக்கம்! தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காக நீங்கள் விரிவாக்கக் கருதியுள்ள கட்டுரைகளை 29,000 பைட்டுக்களுக்குக்கும் அதிகமாக விரிவாக்குங்கள்! ஏனெனில், ஓரிரு நாட்களில் விதிகளில் மார்றங்கள் கொண்டுவரப்படலாம். 26,000 பைட்டளவு எனும் வரையறை கூடலாம், ஆகையினாலேயே 29,000 அல்லது அடஹ்ற்கு மேற்பட்ட பைட்டு அளவில் கட்டுரைகளை விரிவாக்குங்கள், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 2 மே 2017 (UTC)

26,000 பைட்டுக்கு மேல் கட்டுரையை விரிவாக்கினால் போதும். நடுவர்களினால் போட்டிக்காலத்தில் வழங்கும் ஆலோசனைகளையும், பின்பற்றுங்கள்! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:39, 6 மே 2017 (UTC)
மக்களாட்சி எனும் கட்டுரையை போட்டிக்காக விரிவாக்கி சமர்ப்பிக்கலாம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:33, 10 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : உதவிக் குறிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...

 • ✒️ - போட்டிக்காக ஒரு கட்டுரையை நீங்கள் விரிவாக்கும் போது, பிற பயனர்கள் நீங்கள் விரிவாக்கும் கட்டுரையைத் தொகுக்கலாம். அப்போது நீங்கள் செய்த மொத்த விரிவாக்கமும் அழிந்து போக நேரிடலாம். இதனைத் தவிர்த்துக்கொள்ள,
 • ⏩ - நீங்கள் விரிவாக்கும் கட்டுரையின் மேலே {{AEC|உங்கள்பெயர்}} என்பதனை இட்டு சேமித்துவிட்டு, விரிவாக்க ஆரம்பியுங்கள். உங்கள் பயனர் பெயரைக் குறிப்பிடத் தவறாதீர்கள்.
 • 👉 - விரிவாக்கம் முடிந்த பின் {{AEC|உங்கள்பெயர்}} இனை நீக்கிவிடுங்கள்.
 • 🎁 - தொடர்ந்து முனைப்போடு பங்குபற்றி போட்டியில் வெல்லுங்கள்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:01, 21 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : கட்டுரை முற்பதிவு அறிவிப்புதொகு

போட்டியாளர்களுக்கான அறிவிப்பு...
சிலநேரங்களில் ஒருவர் முற்பதிவு செய்த கட்டுரைகளை இன்னொருவர் விரிவாக்கும் செயற்பாடு தவறுதலாக நடைபெற்றுள்ளதனால், அதனைத் தவிர்க்கும் வகையிலும், அனைவருக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலும் கட்டுரைகள் முற்பதிவு செய்வதில் ஒரு சில மாற்றங்கள் செய்துள்ளோம். அவை பின்வருமாறு:

 • 👉 - ஒரு நேரத்தில் ஒருவர் மூன்று கட்டுரைகளுக்கு மட்டுமே முற்பதிவு செய்து வைக்கலாம். முற்பதிவைச் செய்ய இங்கே செல்லுங்கள்.
 • 🎰 - நீங்கள் முற்பதிவு செய்யும் கட்டுரைக்கு, முற்பதிவு வார்ப்புரு இடப்படும்.
 • ✒️ - ஒருவரால் முற்பதிவு செய்யப்படும் கட்டுரை 10 நாட்கள்வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வேறொருவர் விரும்பினால் விரிவாக்கலாம்.
 • ⏩ - போட்டிக்கான முற்பதிவு வார்ப்புரு இடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையை 10 நாட்களுக்கு முன்னர் வேறொருவர் விரிவாக்கினால், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புரிந்துணர்வுடன், ஒத்துழைப்பு நல்குவீர்கள் என நம்புகின்றோம்.
 • 🎁 - இவற்றை கருத்திற் கொண்டு தொடர்ந்து சிறப்பாகப் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற வாழ்த்துகின்றோம்!...

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:35, 31 மே 2017 (UTC)

வணக்கம் ஜுபைர் அக்மல்! நீங்கள் ஏற்கனவே முற்பதிவு செய்திருந்த கட்டுரைகளின் பட்டியலிலிருந்த மூன்று கட்டுரைகளும் (ஒரு கடவுட் கொள்கை, நீரிழிவு நோய், ஊடகவியல்) உங்கள் பெயரில் முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால், இவற்றில் ஒவ்வொன்றும் விரிவாக்கி முடிக்கையில், புதிதாக ஒன்றை முற்பதிவு செய்ய முடியும். நன்றி.--கலை (பேச்சு) 17:30, 1 சூன் 2017 (UTC)

வணக்கம்! உங்களுக்காக 01.06.17 இல் முற்பதிவு செய்யப்பட்ட ஒரு கடவுட் கொள்கை, நீரிழிவு நோய், ஊடகவியல் ஆகிய கட்டுரைகள் 10 நாட்களாகத் தொகுக்கப்படாத காரணத்தால் முற்பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 10 நாட்களுக்கு, ஏனைய பயனர்கள் விரும்பின் அந்தக் கட்டுரையை முற்பதிவு செய்ய சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 21.06.17 இற்குள், வேறு எவரும் இந்தக் கட்டுரையை முற்பதிவு செய்யாவிடின், 21.06.17 இற்குப் பின்னர் நீங்கள் மீண்டும் இங்கே குறிப்பிட்ட நாளில் (தொடர்ந்துவரும் 10 நாட்களுக்கு) முற்பதிவு செய்யலாம். முற்பதிவின்போது, ஒரு தடவையில் மூன்று கட்டுரைகளுக்கு மேல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 11:30, 11 சூன் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள சுபைர் அக்மல்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 19:08, 18 மார்ச் 2018 (UTC)