Jayreborn
- பெயர் : ஜே (எ) ஜெய்ஸ்
- புனைப் பெயர் : ஜே ரீபார்ன், Jay Reborn, Jay
- பிறந்த நாள் : 17 - 09
- சொந்த ஊர் : புதுச்சேரி
- கல்வி : கடலூர், பெங்களூர், நெல்லை
- கல்வித் தகுதி : வணிக மேலாண்மையிலும், வணிகவியலிலும், சட்டத்திலும் இளங்கலை, இதழியலில் பட்டயம், சமூகப்பணியில் முதுகலை
- பணி : பணிச் சார்பற்ற ஊடக புகைப்படவியலாளர் மற்றும் தமிழாய்வு முயற்சிகள். பன்மொழி படிப்பு, ஐரோப்பா
- களம் : அனைத்து அறிவு சார் தளங்கள். முக்கியமாக, தமிழ், தமிழ்ச் சமூகம், தமிழாய்வு, புகைப்படம், ஆவணத் தொகுப்பு மற்றும் வலைத்தள உருவாக்கம்.
விக்கிப்பீடியாவில் நான்
தொகுஇளையோராக இருந்தாலும் நானறிந்த விடயங்களை, பயணத்தின் வாயிலாக கண்டவற்றைத் தொடர்ந்து பதிவிட முயன்று வருகிறேன். பட்டைய கிளப்புவோம் என்று நம்புவோம் :)
தற்சமயம் ஐரோப்பிய நாடொன்றின் விக்கிப்பீடிய செயலக அலுவலகத்தில் பழகுநராகவும், தமிழ் திட்டப்பணியொன்றினை மேம்படுத்தும் தன்னார்வல பணியிலும் இணைந்து செயல்பட்டு வருகிறேன். செர்மனி, பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து, எசுபானியா போன்ற நாடுகளில் யாரேனும் தமிழ் விக்கிப்பீடியர்கள் அல்லது ஆர்வலர்கள் இருப்பின் உடன் தொடர்பு கொள்ளவும் :)
முயற்சிகள்
தொகுதமிழ் குறித்த ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளை ஊடகவியல் வழியாக மேற்கொள்கிறேன். விக்கிப்பீடியா மற்றும் ஏனைய வலைப்பூக்கள், வலைத்தளங்களில் உறங்கிக்கொண்டிருக்கும் தரவுகளை சீர் செய்து ஆவணத் தொகுப்பாக வலைத்தளத்தில் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன். அதன் நோக்கமே உலகத் தமிழர்கள் பார்வைக்கு தமிழ் சார்ந்த விடயங்களை கொண்டு செல்வதும், அதனை ஆவணப் பதிவாக உருவாக்குவதுமேயாகும். தனித் தமிழ் ஊடகமாக மாற்றும் முயற்சிகளும் எண்ணமும் உள்ளன. தமிழ், இன பற்றாளர்கள் இணைந்து உதவ விரும்பினால் மின்னஞ்சல் அனுப்பவும்.
catchmejaes@gmail.com
இப்பயனர் விக்கிப்பீடியா ஆசிய மாதம் போட்டியின் பங்களிப்பாளர் ஆவார்。 |