விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை
விக்கிக்கோப்பை
விக்கிக்கோப்பை | ♦ | உரையாடல் | ♦ | 2017 பங்கேற்பாளர்கள் | ♦ | பயனர் நிலவரம் | ♦ | புள்ளி நிலவரம் |
விக்கிக்கோப்பை என்பது தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வருடாந்திரம் நடத்தப்படும் போட்டியாகும். சிறந்த கட்டுரை உருவாக்குநர்கள் வெற்றி பெற இப்போட்டி இடமளிக்கிறது. இப்போட்டி தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க உதவுகிறது. மேலும் இது அனைவருக்கும் இலகுவான போட்டியாகும்.
போட்டியில் பங்குபற்றுவதற்காகப் பதிவு செய்தபின் நீங்கள் விரும்பிய தலைப்பில் பல கட்டுரைகளையும் போட்டிக்காலத்தில் உருவாக்கலாம்.
இப்போட்டி சனவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகும். இதில் யாரும் பங்கு பெறலாம். உங்கள் பெயரைப் பதிவு செய்ய "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்துங்கள்.
இப்போட்டியில் பங்குபற்றி சிறந்த விக்கிப்பீடியராவதுடன் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் நீங்களும் கைகோருங்கள்!...
விதிகள்
தொகுஉங்கள் போட்டிக்கான 50 சொற்களுக்குக் குறையாத கட்டுரைகளை இங்கே (கட்டுரைகள்) உங்கள் பெயர்களின் கீழ் குறிப்பிடுங்கள். இது பின்னர் மதிப்பீடு செய்யப்படும்.
- கட்டுரைகள் சனவரி 1, 2017 00:00 முதல் சனவரி 31, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
- உருவாக்கும் கட்டுரைகள் குறைந்தது 50 சொற்களையாவது கொண்டிருக்க வேண்டும்.
- நீங்கள் விரும்பிய தலைப்பில் கட்டுரைகள் அமையலாம்.
- நீக்கல் அல்லது குறிப்பிடத்தக்கமை போன்ற சிக்கல்கள் கொண்ட கட்டுரைகள் போட்டிக்கு ஏற்புடையன அல்ல.
- முதற்பக்கக் கட்டுரைக்கு பரிந்துரைக்கப்படும் கட்டுரைக்கு குறித்த பயனரால் 300 இற்கு குறையாத சொற்கள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
- சனவரி 15 இற்கு முன் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் சேர்த்தால், அப்பயனர் போட்டியில் சேர்ந்ததன் பின்னரான கட்டுரைகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். புள்ளிகள் கணக்கிடல் உட்பட்ட பிற நடைமுறைச் சிக்கல் இருப்பதால் இவ்விதி அமைகிறது.
புள்ளிகள்
தொகுபுள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (புள்ளிகள் இங்கே இற்றைப்படுத்தப்படும்).
- புதிதாக உருவாக்கப்படும் 50 சொற்களுக்கு குறையாத கட்டுரைகளுக்கு 05 புள்ளிகள்.
- மேலும் ஒவ்வொரு மேலதிக 50 சொற்களுக்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும்.
- 500 சொற்களுக்கு குறையாது எழுதப்படும் கட்டுரைக்கு கூடுதலாக 08 புள்ளிகள்.
- முதற்பக்கக் கட்டுரைக்கு - 10 புள்ளிகள்.
- தமிழர் வாழ்வியல் சார்ந்த, விக்கிப்பீடியாத் தரமுள்ள, 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக 10 புள்ளிகள்.
முடிவுகள்
தொகுஒவ்வொரு பயனர்களினதும் புள்ளிகளுக்கு ஏற்ப அப்புள்ளிகள் இக்கருவியில் தரவரிசைப் படுத்தப்பட்டு, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாகவே முடிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்படும்
ஒருங்கிணைப்பாளர்கள் (2017)
தொகுநடுவர் குழு
இதனையும் பார்க்க
இப்பயனர் ஒரு விக்கிக்கோப்பை பங்குபற்றுனர் ஆவார். |
இது விக்கிக்கோப்பை பங்குபற்றுனர்களுக்கான பயனர் வார்ப்புரு ஆகும். இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்க, {{Wikipedia:WikiCup/Userbox}} என்ற வரிகளை உங்கள் பயனர் பக்கத்தில் சேருங்கள்.