வாருங்கள், Mdmahir! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Mdmahir, உங்களை வரவேற்கிறோம்!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--சிவகுமார் 10:50, 20 ஜூலை 2006 (UTC)

திரு சிவகுமார் அவர்களே காலதாமதத்திற்கு மன்னிக்கவும். நான் முதன்முதலில் கட்டுரை தொகுத்தது [உமர் தம்பி|உமர்தம்பி]அவர்களைப் பற்றியதுதான். மற்றபடி என்னுடைய பங்களிப்புகள் மிகவும் குறைவே.

வணக்கம் Mahir, தங்கள் விக்கிபீடியா பங்களிப்புக்கு நன்றி. நீங்கள் ஆஸ்திரேலியா பக்கத்தில் வால்லரு (Wallaroo) என்பதை வல்லாரு என்பதாக மாற்றியிருந்தீர்கள். வால்லரு பக்கம் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆஸ்திரேலியா பக்கத்தில் மாற்றங்களை செய்தால் வால்லரு பக்கத்துக்கு இணைப்புத் துண்டிக்கப்பட்டுவிடும். எனவே அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது நல்லது. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்.---Kanags 21:52, 25 நவம்பர் 2006 (UTC)Reply

தோழரே ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்து இடுவது தமிழ்க் கட்டுரையாகாது. தமிழில் அல்லாத கட்டுரைகளை நீக்குவதே பொருத்தமானதாகும். --கோபி 18:20, 14 ஜனவரி 2007 (UTC)
உங்களைப் பற்றி பிற விக்கிகளில் இருக்கும் தகவல்களை இங்கே பயனர் பக்கத்தில் தந்தால் நன்று. நன்றி.--Natkeeran 16:31, 6 பெப்ரவரி 2007 (UTC)
நன்றி நற்கீரன் அவர்களே...சிறிது சேர்த்திருக்கிறேன்.மாஹிர், 11.04 6 பெப்ரவரி 2007(IST)

நட்கீரன் இல்லீங்க, நற்கீரன். :-) --கோபி 17:45, 6 பெப்ரவரி 2007 (UTC)

தவறுக்கு வருந்துகிறேன்..சுட்டிகாட்டியமைக்கு நன்றி.மாஹிர், 11.17 6 பெப்ரவரி 2007(IST)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC)

Hello, I could not find how to create a new post. I wanted to talk to you for a story I am doing about local languages on Wikipedia. Please email me at karishmaindianexpress@gmail.com Karishma

நிற்க :) தொகு

மாஹிர், பக்கத்துக்குப் பக்கம் நீங்கள் techtamil பக்கங்களுக்கான இணைப்புகளைத் தருவது விக்கிபீடியா கொள்கைகள் அடிப்படையில் spamingஆக கருத இடம் இருக்கிறது. இது குறித்து ஆலமரத்தடியில் உரையாடப்பட்டு வருகிறது. அங்கு கலந்துரையாடவும். --ரவி 20:14, 23 மே 2007 (UTC)Reply

நன்றி ரவி....தவறுக்கு வருந்துகிறேன்....--மாஹிர் 24 மே 2007

மகிழ்ச்சி தொகு

தமிழ் விக்கிபீடியாவில் நீங்கள் நேரடியாகவே கட்டுரைப் பங்களிப்புகள் செய்யத் தொடங்கி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. காப்ட்சா போன்ற தலைப்புகள் அருமை. நன்றி--ரவி 19:51, 5 ஜூன் 2007 (UTC)

விக்கியில் பங்களிக்கவேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் ஆசை. ஆனால் எதை எழுதுவது என்பது தான் தெரியவில்லை. -- மாஹிர் 07 ஜூன் 2007

மன்னிக்கவும் தொகு

நான், தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் முஸ்லிம்களும் கட்டுரையில் நீங்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதமுன்னர் ஆரம்பித்ததை கவனிக்க மறந்துவிட்டேன். உங்கள் மனதைப் புண்படுத்தும் விதத்தில் எழுதியிருந்தால் தயவுசெய்து மன்னித்து விடுங்கள். தொடர்ந்தும் விக்கிபீடியாவில் தயவுசெய்து பங்களிக்கவும். நன்றி. --Umapathy 19:04, 10 ஜூன் 2007 (UTC)

தொடர்ந்து எனக்கு வழிகாட்டக் கேட்டுக்கொள்கிறேன். தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்...--மாஹிர் 11:37, 15 ஜூன் 2007 (UTC)

படிமம்:Asia big hospital.jpg தொகு

 

இடதுபுறத்திலுள்ள இந்தப் படிமம் நீங்கள் எடுத்ததா? அப்படியானால் இதை ஒரு கட்டற்ற காப்புரிமையின்கீழ் தர முடியுமா? அந்தப் பக்கத்திற்குச் சென்று {{GFDL-self}} என்ற நிரல்துண்டை இணைத்து விடுங்கள். அல்லது காமன்சில் பதிவேற்றினால் ஆங்கில விக்கி உட்பட பிற விக்கிக்களிலும் பயன்படுத்த இயலும். -- Sundar \பேச்சு 09:00, 23 ஆகஸ்ட் 2007 (UTC)

இது நான் எடுத்ததுதான் கட்டற்ற முறையில் தாராளமாக பயன்படுத்தலாம். 08:08, 1 ஏப்ரல் 2010 (UTC)

விக்கிசெய்திகள் இணைப்பு தொகு

மாகிர், விக்கிசெய்திகள் ஒவ்வொன்றும் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைக்க வேண்டிய அவசியமில்லை. பெங்களூர் கட்டுரையில் விக்கிசெய்திகளில் உள்ள பெங்களூர் பகுப்பை மட்டும் இணைத்தால் போதுமானது. அதுபோல் சத்தீஸ்கர் கட்டுரையிலும். மேலும், இங்குள்ள தலைப்புச் செய்திகளில் நீங்கள் இன்று செய்துள்ள மாற்றங்களில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:10, 8 ஏப்ரல் 2010 (UTC)

நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொன்றாக இணைக்க வேண்டியதில்லை. அதற்குப் பதில் கடைசி 5 செய்திகள் வரும் படி செய்தால் நன்றாயிருக்கும். வருகை அதிகரிக்கலாம். (தேதி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்). நான் விக்கியில் இன்னும் மாணவன், தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். மாஹிர் 12:27, 8 ஏப்ரல் 2010 (UTC)
மேலும் ஒரு ஆலோசனை. செய்தி ஒன்று புதிதாக சேர்க்கும் போது வார்ப்புருவில் கடைசியில் இருந்து ஒரு பழைய செய்தியை நீக்கி விடுங்கள்.--Kanags \உரையாடுக 21:45, 8 ஏப்ரல் 2010 (UTC)

மகிழ்ச்சி தொகு

உங்கள் அண்மைக்கால விக்கிப் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 13:16, 9 மே 2010 (UTC)Reply

மாகிர், விக்கி செய்திகளில் உங்கள் பங்களிப்புகளைக் காணவில்லையே:(--Kanags \உரையாடுக 07:00, 23 மே 2010 (UTC)Reply

தாலுகா தொகு

தாலுகா தமிழ் சொல் அல்ல வட்டம் என்பதே அதற்கு ஈடான தமிழ் சொல். தாலுகாக்கள் = வட்டங்கள். நீங்கள் புதிதாக உருவாக்கும் மாவட்டங்களுக்கான வார்ப்புருவில் வட்டம் என்ற சொல்லை பயன்படுத்தவும். --குறும்பன் 01:28, 24 மே 2010 (UTC)Reply

இப்பொழுதுதான் விக்சனரியைப் பார்த்தேன்.. நன்றி குறும்பன். -- மாஹிர் 04:57, 24 மே 2010 (UTC)Reply

தலைப்புச் செய்திகள் தொகு

சென்ற ஆண்டுச் செய்தி ஒன்றை இப்போது தலைப்புச் செய்தியாகத் தந்திருக்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதனை நீக்கியிருக்கிறேன். நடப்பு நிகழ்வுகளை மட்டும் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 21:08, 9 ஜூன் 2010 (UTC)

Request for help தொகு

Please help me translate this part into ta.wikipedia.org. Thank you very much for your help.Genghiskhan 13:35, 10 ஜூன் 2010 (UTC)

 
Dong Hoi Airport

Dong Hoi Airport is an airport in Vietnam. It is in Dong Hoi city, Quang Binh province, 450 km south of Hanoi. The runway is 2400 meters long 45 meters wide. It can serve 500,000 passengers per years and can serve Airbus A321. en:Dong Hoi Airport

நகராட்சிகள் தொகு

நகராட்சிகள் வார்ப்புருவில் அவற்றை வகைபடுத்தினால் சிறப்பாக இருக்கும். பார்க்க - http://www.tn.gov.in/cma/municipalities/municipalities_gradewise.html அதாவது சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலையென.

Mahir, I noticed you replaced {{Infobox Indian Jurisdiction}} with {{இந்திய ஆட்சி எல்லை}} on சென்னை. Now the locator shows the red dot for Chennai in south Tamil Nadu. It looks pretty bad. {{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} is the alternative template that I was working on. If you notice the example on the documenation, it places the Chennai locator correctly. Regards, Ganeshk 09:33, 20 ஜூன் 2010 (UTC)

Thanks. Ganeshk 12:25, 21 ஜூன் 2010 (UTC)

Monobook.js தொகு

மாகிர், மோனோபுக் சாவாசுகிரிட் போன்றவற்றை நம் தளத்திலேயே மாற்றியமைக்கலாம். தேவையான நிரல்களை விக்கிப்பீடியாவில் இருந்து கவர்ந்து ஒட்டலாம். நிருவாக அணுக்கம் தேவை என்று நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 16:23, 30 ஜூலை 2010 (UTC)

வாழ்த்துக்கள் தொகு

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:52, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:26, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply
உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 10:06, 10 செப்டெம்பர் 2010 (UTC)Reply
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. உடனடியாக பதிலிடமுடியாமைக்கு வருந்துகிறேன். நன்றி -- மாஹிர் 09:32, 14 செப்டெம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் மாகிர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மாகிர் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 07:48, 18 நவம்பர் 2010 (UTC)Reply

விக்கிசெய்தி RSS தொகு

மாகிர், விக்கிசெய்திக்கான RSS செய்தியோடை தொடர்பாக உதவ முடியுமா? தற்போதுள்ள வழங்கி இயங்கவில்லை. toolserver.org இல் நீங்களே ஒரு கணக்குத் தொடங்க முடியாதா?--Kanags \உரையாடுக 10:45, 19 திசம்பர் 2010 (UTC)Reply

வார்ப்புரு தொகு

ஒரு வார்ப்புருவை தேர்வு செய்தால் மற்றொன்று காட்டுகிறது. எதை முதலில் தேர்வு செய்தோமோ அதை. open template helper and click various template. u can c it. மேலும் template helper தமிழில் எழுத என்பதற்கு மேல் பாதியாக தெரிகிறது. எனக்கு இது தெரியும் என்பதால் தேடி அதை சொடுக்குகிறேன். முதன் முதல் நீங்கள் இதை பயன்படுத்த சொன்ன போது நன்றாகவே தெரிந்தது. சோதனை ஓட்டம் என்பதால் இப்போது பாதியாக மறைத்து விட்டீர்களா? --குறும்பன் 12:21, 19 திசம்பர் 2010 (UTC)Reply

இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி வார்ப்புருவில் தொலைப்பேசி குறியீட்டு எண் என்பதில் உள்ள ப் என்பதை நீக்கினால் தொலைபேசி எண் கட்டுரையில் தெரிகிறது.--குறும்பன் 16:58, 1 சனவரி 2011 (UTC)Reply

நாடுகளின் பெயர்களைத் தமிழில் தொகு

மாகிர், பயனர் பேச்சு:Mahir78/trans country.js என்னும் பக்கத்தில் நேரடியாகவே நாடுகளின் பெயர்களைத் தமிழில் எழுதியுள்ளேன். அப்படி நேரடியாகவே அங்கு இட்டது சரியோ என ஓர் ஐயம். இது பற்றி ஏதும் உரையாட வேண்டும் எனில் இன்னொரு பக்கத்தில் செய்யலாம்.--செல்வா 22:11, 19 திசம்பர் 2010 (UTC)Reply

மாகிர்,செல்வா-- உலக நாடுகளின் பட்டியல் இங்குள்ளது. இதனையும் கருத்தில் கொண்டு மாற்றங்களையும் உரையாடல்களையும் அங்கு மேற்கொள்ளலாம். மாகிரின் இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலநேரங்களில் நான் ஒரு நாட்டினைக் குறித்த ஏற்கெனவே உள்ள தலைப்பைக் காண குழம்பியுள்ளேன். காட்டாக, Argentina - அர்ஜென்டினா,அர்ஜெண்டினா,அர்ச்சென்டினா என பலவாறாக கட்டுரைகளில் ஒலிபெயர்க்கப்படுகின்றன. சீராக்கப்பட்ட பெயர்களை பயன்படுத்துவதை வற்புறுத்த வேண்டும்.--மணியன் 02:15, 20 திசம்பர் 2010 (UTC)Reply
நல்ல தொடுப்பு, நல்ல கருத்து மணியன். எல்லா இடங்களிலும் ஒரே சீராக நாடு-நகர-ஊர்ப்பெயர்கள் வந்தால் நன்றாக இருக்கும். நானும் நீங்கள் இடர்ப்பட்டது போல இடர்ப்பட்டுள்ளேன். கடைசியாக ஆங்கில விக்கியில் பார்த்துப் பின்னர் தமிழ் வடிவம் அறிந்தேன். இப்பெயர்களில் ஒரு சீர்மை இருப்பது தேவை. --செல்வா 04:07, 21 திசம்பர் 2010 (UTC)Reply

தூதரகங்களின் பட்டியல் தொகு

நீங்கள் உருவாக்கிவரும் தூதரகங்களில் பட்டியல்கள் கட்டுரைகளின் முதல் பந்திகள் மொழிபெயர்க்காது உள்ளனவே?--Kanags \உரையாடுக 12:23, 25 திசம்பர் 2010 (UTC)Reply

பகுப்புகள் ஆ. விக்கியிலிருந்து அப்படியே இறக்கப்படுகின்றன. இதற்கு பதிலாக [[பகுப்பு:தூதரகங்களின் பட்டியல்கள்]] மற்றும் [[பகுப்பு:நாட்டுப் பெயர்]] ஆகிய பகுப்புகள் இணையுமாறு செய்யலாமே.--சோடாபாட்டில் 16:13, 27 திசம்பர் 2010 (UTC)Reply
நானும் கவனித்தேன் உடன் செய்கிறேன். பகுப்பை asia topic வார்ப்புருவிலே சேர்த்துவிடலாம். -- மாஹிர் 16:22, 27 திசம்பர் 2010 (UTC)Reply

பகுப்பு:நாட்டுப்பெயரும் சேர்க்கப்படவேண்டும். உ+ம்: பகுப்பு:எகிப்து.--Kanags \உரையாடுக 21:00, 27 திசம்பர் 2010 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் வேண்டல் தொகு

வணக்கம் மாகிர். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மாகிர் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--இரவி 08:59, 30 திசம்பர் 2010 (UTC)Reply

சரியாக ஒரு ஆண்டு கழித்து ஒரு நினைவூட்டல் :) --இரவி 05:20, 30 திசம்பர் 2011 (UTC)Reply
இது மூன்றாம் ஆண்டு நினைவூட்டல் :) இதற்கு மேலும் அறிமுகம் தராவிட்டால் மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப் போகிறேன் :) தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இட்டு வரும் வேளையில், உங்களைப் பற்றிய அறிமுகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 16:47, 28 சனவரி 2013 (UTC)Reply
நடத்துங்கள் மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தலைமையில்! :-) - தமிழ்க்குரிசில்

Infobox Indian jurisdiction தொகு

மாகிர், வெள்ளிமலை கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள உள்ள வார்ப்புருவில் இருந்து ஆங்கிலப் பெயர்களில் பகுப்புகள் உருவாகின்றன. கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 21:13, 9 சனவரி 2011 (UTC)Reply

திருச்சூர் கட்டுரையில் நகரத்தின் அமைவிடம் சரியான இடத்தில் வரவில்லை.--Kanags \உரையாடுக 02:19, 18 சனவரி 2011 (UTC)Reply

tn election results தொகு

மாஹிர்,

இப்போதைக்கு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி வாரி முடிவுகளை (மொழி பெயர்க்காதவற்றை) பதிவேற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இரு காரணங்கள் :1) மொழி பெயர்க்காத ஆங்கில உள்ளடகங்களால் பார்வையிடுபவர்களுக்கு இங்கு ஆங்கிலத்தில் பக்கங்கள் இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகுகின்றது. (ஆங்கிலத்தில்/தமிங்கலத்தில் புதிதாக அடித்து விட்டு, நீக்கினால், ஏற்கனவே இங்கிலீசுல இருக்கேன் என்று கேட்கிறார்கள்). எம். எல். ஏ. பெயர்களை மொழி பெயர்க்க பல மாதங்கள் ஆகலாம். அதுவரை இவை இங்கு ஆங்கிலத்தில் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். 2) கட்டுரை சைஸ் - 150 kb வரை போகும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முழுமையாக மொழிபெயர்த்து/எழுத்துப்பெயர்த்து ஏற்றும் போது தனிக்கட்டுரைகளாக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 14:18, 1 பெப்ரவரி 2011 (UTC)

மொழிபெயர்ப்பு தொகு

மாஹிர்,

மொழிபெயர்ப்பு ஹெல்பரில் அப்படியே பொருந்தினால் மட்டும் மொழிபெயர்ப்பது போல ஒரு ஆப்சன் குடுக்க முடியுமா. ஒரு தொடரில் india இருந்தால் இப்போது அது மட்டும் மாறி விடுகிறது - தமிழில் மாற்றும் போது விகுதிகள்/இடம் மாறி வர வேண்டுமென்பதால் சற்று இடைஞ்சலாக இருக்கிறது.

(எ. கா 1) Peasants and Worker party of india என்பது இப்போது Peasants and Worker party of இந்தியா என்று மாறுகிறது. நான் இதை இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி என்று மாற்றுகிறேன் என்பதால் தானியங்கி மொழிமாற்றம் தேவையற்றுப் போகிறது.

(எ.கா 2) Bharatiya navanirman என்பது பாரதiya navanirman என்பது போல மாறுகிறது. இதுபோன்று partial word translationum வேண்டாம்.

exact match இருந்தால் மட்டும் மாற்றுவது போல ஒரு ஆப்சன் செய்து தர வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 18:14, 10 பெப்ரவரி 2011 (UTC)

சோடாபாட்டில், எகா 2 சரிசெய்துள்ளேன்.
எகா 1க்கு, [[Peasants and Worker party of india]] என்பதை இரண்டாவது பெட்டியில் போட்டு பின்னர் முன்தோற்றம்(preview) பொத்தானை சொடுக்கி சிகப்பிணைப்பாக காட்டியப்பிறகு, langlinks தொடுப்பை சொடுக்கினால் இணையான தமிழ் கட்டுரையாக [[இந்திய குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி]] என்று மாற்றப்படிருக்கும். முக்கியமாக இது ஆவியில் விக்கியிடை இணைப்புகளை எடுத்து இங்கு மாற்றுகிறது. ஆவியில் தமிழ் விக்கியிடைத்தொடுப்பு கொடுக்கப்படிருக்காவிட்டால் இது சாத்தியமில்லை. இந்த வசதியைக் கொண்டுதான் ஒன்றிரண்டு கட்டுரைகளை உருவாக்கிப் பார்த்தேன். இந்தக் கருவியை எளிமைப்படுத்தவேண்டியுள்ளது. தயவுசெய்து சோதித்து ஆலோசனைக் கூறவும். -- மாஹிர் 16:44, 21 பெப்ரவரி 2011 (UTC)

தூதரகங்கள் பட்டியல் சில மாற்றங்கள் தொகு

முதல் வரியினை : இது XXX நாட்டு தூதரகங்களின் பட்டியல் என்று மாற்ற வேண்டும் permanent mission :நிரந்தர தூதுக்குழு --சோடாபாட்டில்உரையாடுக 13:36, 12 பெப்ரவரி 2011 (UTC)

TUSC token 3f7db589681334246bc654dde8a96c3b தொகு

I am now proud owner of a TUSC account! 3f7db589681334246bc654dde8a96c3b

தானியங்கி தமிழாக்கம் தொகு

மாகிர், ஒரு வேண்டுகோள். தானியங்கி தமிழாக்கக் கட்டுரைகள் பகுதி பகுதியாக தமிழாக்கம் செய்வது போல இருந்தால் பயனர்வெளியில் செய்து பின்னர் பொதுவெளிக்கு மாற்றுங்கள். சிறிய கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும் போது (முதல்வர் கட்டுரைகள் போன்று) அயர்ச்சி தெரியவில்லை. ஆனால் தூதரகம், நகரம், ஐபில் போன்ற பெரிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் உள்ளவற்றை தமிழில் manual ஆக மாற்றும் போது கடினமாக இருக்கிறது. பெரிய கட்டுரைகள் இப்படி பாதி ஆங்கிலம்/தமிழில் வந்தால் அப்படியே தேங்கிவிட வாய்ப்புள்ளது. எனவே இவற்றை முதலில் பயனர்வெளியில் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:58, 2 மார்ச் 2011 (UTC)

சோடாபாட்டில், பட்டியல் கட்டுரைகள் திருத்த எளிது என்கிற நினைப்பிலேயே பதிவேற்றுகிறேன். முழுவதும் தானியக்கமாக இல்லாமல் எனது பங்களிப்புகளையும் சேர்த்தே பதிவேற்றுகிறேன். சில இடங்களில் ஆங்கிலம் கலப்பதால் தான் தூதரக கட்டுரைகளை பதிவேற்றுவதைத் தொடரவில்லை. இனி பயனர்வெளிக்கு ஏற்றி பின் நகர்த்தலாம். (பெரிய கட்டுரைகளுக்கு find/replace பயன்படுத்தினால் எளிதாக திருத்தலாம்). நன்றி -- மாஹிர் 05:13, 3 மார்ச் 2011 (UTC)

நன்றி மாகிர்,
find/replace பயன்படுத்துகிறேன். ஆனால் பொதுவாக 40k தொடும் கட்டுரைகளில் நமது கருவிப்பட்டையில் வரும் find/replace போட்டால் உலாவி தேங்கி விடுகிறது. (ஃபயர்பாஃக்ஸ் பயன்படுத்துகிறேன் - சாதாரண find/replace க்கே மெமரி யூசேஜ் எகிறுகிறது.) அதனால், அப்படியே காப்பி பண்ணி, வேறு ஏதாவது word processing மென்பொருளில் போட்டு இப்போது செய்து கொண்டிருக்கிறேன். மேலும் தொழில் நுட்பச் சிக்கல் என்பதை விட ஒருவித உளவியல் சிக்கலாகவே உள்ளது (பெருசா இருந்தா கஷடமா இருக்கும்ன்ற தோற்றம் :-))--சோடாபாட்டில்உரையாடுக 05:20, 3 மார்ச் 2011 (UTC)
சரிதான். find/replaceக்கு notepad++ பயன்படுத்திதான் நானும் திருத்துகிறேன். --மாஹிர் 05:30, 3 மார்ச் 2011 (UTC)

தானியங்கி வழு தொகு

இரண்டு நாட்களுக்கு முன்னர் உங்கள் தானியங்கி மூலம் செய்யப்பட்ட மாற்றம் ஒன்று ஒரு கட்டுரை முழுவதையும் அழித்து விட்டது. [1].--Kanags \உரையாடுக 11:30, 4 மார்ச் 2011 (UTC)

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சில நேரங்களில் இந்த வழு வருகிறது. ஏன் என்று தெரியவில்லை. -- மாகிர் 14:30, 5 மார்ச் 2011 (UTC)

சிறப்புப் பணி பதக்கம் தொகு

  சிறப்புப் பணிகள் பதக்கம்
விக்கிப்பீடியாவில் தொகுத்தலில் பெரும் உதவியாக இருக்கும் வார்ப்புரு உதவிக் கருவிக்காகவும் மொழிபெயர்ப்பு உதவிக் கருவிக்காகவும் தங்களுக்கு இந்த சிறப்பு விக்கிப்பதக்கத்தை வழங்குகிறேன். --சூர்ய பிரகாசு.ச.அ. 11:45, 16 மார்ச் 2011 (UTC)
நன்றி சூர்ய பிரகாசு. ஆங்கிலத்திலிருந்து எல்லா மொழிகளுக்கும் பொதுவான மொழிபெயர்ப்பு (list-type articles translations only) கருவியாக உருவாக்க முயற்சித்து வருகிறேன். டூல்செர்வரில் அதற்கான அணுக்கத்திற்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்தவுடன் நல்ல கருவியாக உருவாகும் என்று நம்புகிறேன். - மாகிர் 17:11, 16 மார்ச் 2011 (UTC)
வாழ்த்துகள் மாகிர்.

--சூர்ய பிரகாசு.ச.அ. 17:18, 16 மார்ச் 2011 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தல் குறித்த கட்டுரைகளில் மற்றவர்களுடன் நீங்கள் கூட்டாகச் சேர்ந்து பங்களிப்பதற்காக இப்பதக்கத்தை வழங்குகிறேன்! சூர்ய பிரகாசு.ச.அ. 18:01, 26 மார்ச் 2011 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

விக்கிப்பீடியர் அறிமுகம் தொகு

  • தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்க அறிமுகத்திற்கேற்றவாறு விக்கிப்பீடியா பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் தங்கள் படத்தையும் தகவல்களையும் பதிவேற்றம் செய்திட வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:33, 2 ஏப்ரல் 2011 (UTC)

Newsletter sample தொகு

See this. Many Tamil wikimedians were part of this first edition. --Shijualex 13:36, 16 மே 2011 (UTC)Reply

template helper தொகு

template helperல் நீங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்கிறீர்களா என்று தெரியவில்லை. தற்போது அதில் எதுவும் தெரிவதில்லை :( --குறும்பன் 14:49, 1 சூன் 2011 (UTC)Reply

அதில் முன்பின் வருகிற வழு இன்னும் உள்ளது. மற்றபடி நன்றாக வேலை செய்கிறதே. நீங்கள் ctrl+f5 உபயோகித்து கேசை நீக்கி பார்க்கவும். -- மாகிர் 14:56, 1 சூன் 2011 (UTC)Reply

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா? தொகு

வணக்கம் மாகிர். தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க தங்களுக்கு விருப்பம் எனில் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 16:15, 11 சூன் 2011 (UTC)Reply

நன்றி இரவி, அணுக்கம் இருந்தால் உதவியாய் இருக்கும் என்று சில நேரங்களில் எண்ணியதுண்டு. உங்கள் விருப்பப்படியே (பரிந்துரை) செய்யுங்கள். -- மாகிர் 11:07, 13 சூன் 2011 (UTC)Reply

நன்றி, மாகிர். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் என் பரிந்துரையை முன்வைத்துள்ளேன். உங்கள் சம்மதத்தை அங்கு முறைப்படி தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி 16:20, 15 சூன் 2011 (UTC)Reply


வணக்கம் மாகிர். உங்களுக்கு நிர்வாகி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்களை நிர்வாகியாப் பெறுவது விக்கிப்பீடியாவிற்குப் வளம் சேர்க்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். --Natkeeran 22:45, 27 சூன் 2011 (UTC)Reply

நன்றி நற்கீரன். -- மாகிர் 06:36, 28 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் தொகு

வாழ்த்துகள் மாகிர்!! --மணியன் 08:40, 28 சூன் 2011 (UTC)Reply

தாங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் மாகிர். தங்கள் பணி ஏற்கெனவே உயரியது. மேலும் தமிழ் விக்கியை வளர்த்தெடுக்க இணைந்து உழைப்போம்--P.M.Puniyameen 13:18, 28 சூன் 2011 (UTC)Reply
நிர்வாகியாக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. -- மாகிர் 06:53, 1 சூலை 2011 (UTC)Reply

நன்றிகள் தொகு

எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:08, 17 சூன் 2011 (UTC)Reply

தானியங்கி AwB தொகு

நீங்கள் கூறிய AwBக்கான அனுமதி பற்றி யாரிடம் கேட்பது? --அஸ்வின் 08:05, 17 சூன் 2011 (UTC)Reply

AWBக்கு அனுமதியெல்லாம் எதுவும் தேவையில்லை அஸ்வின். அது ஒரு Application தான். பதிவிறக்கி நீங்களே பயன்படுத்தலாம். மேலதிக விபரங்கள் இங்கு தரப்பட்டுள்ளன. உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். விக்கிப்பீடியா:AWB, English Wikipedia --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 08:12, 17 சூன் 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

மாஹிர்! பல நாட்களின் பின்னர் விக்கிக்கு பங்களிக்க வந்தமையினால், தங்களுக்கான நிர்வாக அணுக்க வாக்கெடுப்பில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவிக்க முடியாமல் போய் விட்டது. ஆனாலும் நீங்கள் நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு தற்போது எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். --கலை 22:59, 29 சூன் 2011 (UTC)Reply

நன்றி கலை. -- மாகிர் 06:54, 1 சூலை 2011 (UTC)Reply

இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011

 

வணக்கம் Mdmahir,

முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.

மாநாட்டு உரலிகள்: மாநாட்டு இணையபக்கம், ஃபேசுபுக் நிகழ்ச்சி பக்கம் , உதவித் தொகை விண்ணப்பம்(கடைசி : ஆகஸ்ட் 15) மற்றும் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்க (கடைசி : ஆகஸ்ட் 30).

மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது.

நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி.

உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi Mdmahir,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

உதவ முடியுமா? தொகு

மாகிர், தமிழ் விக்கி பற்றிய ஆய்வொன்றுக்காக வேண்டி தமிழ் விக்கியில் நடைமுறையிலுள்ள தொழிநுட்பங்கள் பற்றியும், அது தொடர்பாக பங்களிப்புச் செய்யும் விக்கியர்கள் பற்றியும் அறிய ஆசைப்படுகின்றேன். இது குறித்து எனக்கு உதவமுடியுமா?--P.M.Puniyameen 16:37, 12 ஆகத்து 2011 (UTC)Reply

ஆளுநர்களின் இற்றைப்படுத்தல் தொகு

மாகிர், தற்போது நியமன ஆணை மட்டுமே வெளியாகியுள்ளது. பதவியேற்ற பின்னர் இவற்றை இற்றப்படுத்தலாம்.--மணியன் 03:19, 27 ஆகத்து 2011 (UTC)Reply

ஈத் முபாரக் தொகு

இம் மாதம் முழுவதும் நோன்பிருந்து, பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:32, 31 ஆகத்து 2011 (UTC)Reply

என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:53, 31 ஆகத்து 2011 (UTC)Reply
  அஸ்ஸலாமு அலைக்கும் Mdmahir அவர்களே , எனது இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் !
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!
--சமீர்உரையாடுக!

வாழ்த்துக்களைப் பறிமாறிய அனைவருக்கும் நன்றி. விடுமுறையிலிருந்ததால் உடனடியாக பதிலிடமுடியவில்லை. -- மாகிர் 00:45, 4 செப்டெம்பர் 2011 (UTC)Reply

சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் தொகு

நன்றி மாகிர், நான் மாதங்கள் ஆங்கிலத்தில் இருந்ததை கவனிக்க தவறிவிட்டேன், திருத்தியமைக்கு நன்றி.--Jenakarthik 14:38, 16 செப்டெம்பர் 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு தொகு





மலாய, இந்தோனேசிய மொழிகள் தொகு

சகோதரரே! மலாய மற்றும் இந்தோனேசிய மொழிகளில் k எழுத்து வரும் பெரும்பாலான இடங்களில் அவற்றைத் தொடர்ந்து உயிரெழுத்து எதுவும் வராவடின் அவை ஒலிக்கப்படுவதில்லை. உதாரணம்: jamek - ஜாமஃ, iklan - இஃலான், pondok - பொண்டொஃ, mbak - ம்பாஃ. எனவே, மலேசியா குறித்த உங்களது கட்டுரைகளில் இவற்றை அனுசரித்துக் கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.--பாஹிம் 17:02, 7 நவம்பர் 2011 (UTC)Reply

தகவலுக்கு நன்றி பாஹிம். கவனத்தில் கொள்கிறேன். -- மாகிர் 14:23, 8 நவம்பர் 2011 (UTC)Reply

அரபு மொழி ஒலிப்பு தொகு

மாஹிர்,

அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • ظهر - ழுஹ்ர்
  • ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).

அவ்வாறே ض என்ற எழுத்து என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • حضرموت - ஹளரமௌத்
  • مضر - முளர்.

தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும் ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனாற்றான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதிற் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றாற் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:

  • مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
  • جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
  • ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
  • ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
  • حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.

இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.--பாஹிம் 16:30, 12 நவம்பர் 2011 (UTC) தகவலுக்கு நன்றி பாஹிம். இத்தகவலை தேவையான பக்கத்திலும் சேர்த்திடுங்கள். அரபி தமிழ் (அல்லது அரபுத் தமிழ்) உச்சரிப்பு பற்றி கட்டுரை ஒன்று எழுதுங்களேன். -- மாகிர் 07:08, 19 நவம்பர் 2011 (UTC)Reply

வார்ப்புரு தொகு

மாகிர், வார்ப்புரு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் இனை முழுமையாகத் தமிழ்ப்படுத்தியுள்ளேன். உங்கள் தானியங்கியை ஏவி, அனைத்து தொகுதிகள் கட்டுரைகளிலும் இணைக்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:30, 19 நவம்பர் 2011 (UTC)Reply

திருத்தங்களை பார்த்தேன். நன்றி. இந்தவாரம் தானியங்கியை இயக்க எண்ணியிருந்தேன். நினைவூட்டலுக்கு நன்றி. -- மாகிர் 07:06, 19 நவம்பர் 2011 (UTC)Reply

மாகிர், உங்கள் தானியங்கி சில தவறுகளைச் செய்துள்ளது. இவற்றைப் பாருங்கள்:

--Kanags \உரையாடுக 12:13, 26 நவம்பர் 2011 (UTC)Reply

அன்றே இதனை கவனித்து சிலவற்றை மீள்வித்தேன். முழுமையாக எல்லாவற்றையும் பார்க்கிறேன். -- மாகிர் 14:50, 26 நவம்பர் 2011 (UTC)Reply

மேலும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் வார்ப்புருவிலும் சிறிய மாற்றம் ஒன்று செய்துள்ளேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:24, 26 நவம்பர் 2011 (UTC)Reply

அடியை மீட்டராக மாற்று வார்ப்புருவில் சிக்கல் தொகு

Template:Convert/m என்பதைப் பயன்படுத்தும்பொழுது ஆயிரம் மீட்டருக்கு மேல் இருந்தால் ஏதோ குழப்பம் வருகின்றது. இதே போல சதுர கி.மீ ஆக மாற்றுவதிலும் ஆயிரத்தால் பெருக்கல் ஏனோ நிகழவில்லை. அவாயித் தீவுகள் என்னும் பக்கத்தைப் பார்த்தால் அதில் வரும் வார்ப்புரு:முக்கிய அவாயித் தீவுகள் என்னும் பக்கத்தில் இவை நிகழ்கின்றன. இதற்கான ஆங்கிலப் பக்கம் Template:Main Hawaiian Islands. இதனைச் சரி செய்து தர இயலுமா? நன்றி.--செல்வா 22:42, 31 சனவரி 2012 (UTC)Reply

மாஹிர்,

பேட்மேன் கட்டுரையில் நீக்கல் வேண்டுகோள் வார்ப்புரு சேர்த்துள்ளீர்கள். ஆனால் காரணம் குறிப்பிடவில்லை. இது கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரை என்பதாலா?. கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் நீக்கல் வேண்டுகோளுக்கான காரணத்தை இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:29, 11 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில வார்ப்புரு தொகு

எனது சில ஆங்கில வார்ப்புருவை நீக்கிய தகவலை தந்ததற்கு நன்றி. அவைகள் தமிழ் வார்ப்புரு பக்கத்திற்கு வழிமாற்றுகிறது. நான் தேடியவரை மற்ற அனைத்து நாட்டிற்கும் ஆங்கில வழிமாற்றி வார்ப்புருக்கள் உள்ளன உதாரணம் வார்ப்புரு:நாட்டுத்_தகவல்_India. தமிழாக்கம் செய்ய தடையாகயிருந்தால் அனைத்து ஆங்கில வார்ப்புருவையும் நீக்குவது நல்லது அன்புடன்--நீச்சல்காரன் (பேச்சு) 16:50, 20 மார்ச் 2012 (UTC)

அடையாறு வரை வந்துவிட்டோம் மெரினா கடற்கரையில் காலை நனைக்கலாம்னு (நீங்க நீச்சல் அடிக்கலாம்னு சொல்லுவீங்க :-)) நினைக்கிறேன். வேண்டாம் இந்தியா - India வாகவே இருக்கட்டும்னு சொல்கிறீர்கள். ISO கோடுகள் தவிர்த்து முழுபெயரையும் எழுதவேண்டாம் என்பது எனது கருத்து. நன்றி -- மாகிர் (பேச்சு) 07:28, 21 மார்ச் 2012 (UTC)

உதவி தொகு

சாதாரண பயனர்கள் பக்கமொன்றை வழிமாற்று இன்றி நகர்த்த முடியுமா? --மதனாஹரன் (பேச்சு) 14:58, 24 மார்ச் 2012 (UTC)

நீங்கள் கேட்பது சரியாகப் புரியவில்லை. பயனர் வெளியில் இருக்கும் பக்கங்களை கேட்கிறீர்களா? User:Mahir78/தேசிய சின்னம் பக்கத்தை தேசிய சின்னம் என்று வழிமாற்றின்றி நகர்த்தலாம். -- மாகிர் (பேச்சு) 06:27, 25 மார்ச் 2012 (UTC)
சாதாரண பயனர்களால் எந்த பக்கத்தையும் வழிமாற்று இன்றி நகர்த்த இயலாது என நினைக்கிறேன்... நிர்வாகிகளால் மட்டுமே இயலும் என நினைக்கிறேன்.. ஒருமுறை சோடாபாட்டில் யாரிடமோ உரையாடியதாக நினைவு...:)... உதவி:பக்கத்தை நகர்த்துதல் இங்கு இரவியின் பக்க screenshot உள்ளது.. அதில் ஒரு வழிமாற்றினை விட்டுச்செல் என ஒரு தேர்வு உள்ளது.. ஆனால் சாதாரண பயனர்களுக்கு அது வருவதில்லையே? பார்க்க படிமம்:Page moving.png ...--shanmugam (பேச்சு) 07:44, 25 மார்ச் 2012 (UTC)


உதவியதற்கு நன்றிகள்! --மதனாஹரன் (பேச்சு) 08:34, 25 மார்ச் 2012 (UTC)

வழிமாற்று இன்றி நிருவாகிப் பயனரால் மட்டுமே நகர்த்த முடியும். பக்கம் ஒன்றை வழிமாற்றி விட்டு தேவையில்லாத வழிமாற்றுக்கு delete வர்ப்புருவைச் சேர்த்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 11:41, 25 மார்ச் 2012 (UTC)

நன்றி தொகு

 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:30, 26 மே 2012 (UTC)+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:42, 26 மே 2012 (UTC)Reply

பேச்சு தொகு

 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Mdmahir. உங்களுக்கான புதிய தகவல்கள் Dineshkumar Ponnusamy இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


அன்பர் மஹிர், மேலுள்ள தலைப்பில் பக்கம் சரியாக இணைக்கப்பட்டுள்ளது. தற்காலிக தவறுகளுக்கு வருந்துகிறேன். தற்போது தலைப்பு சரியாக உள்ளது. சரிபார்த்துக்கொள்ளவும். நன்றி! --(சதீஷ்பாபு)விக்கியில்பாபுவெல்க தமிழ்! 15:16, 20 சூலை 2012 (UTC)Reply

முதற்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம் தொகு



Hi Mahir, last year you removed Saint Petersburg from the list of diplomatic missions in Russia. It would make sense, given the historical and modern importance of Saint Petersburg to keep this list in the article to make it complete. Unfortunately, I don't speak Tamil so this would be almost impossible for me to do. But I am curious as to what is the complex part for translating this part of the list? Any info appreciated. Cheers, Russavia (பேச்சு) 04:06, 23 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தாங்கள் தொடங்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்த, மேம்படுத்த வேண்டுகோள் தொகு

வணக்கம், Mdmahir! நீங்கள் தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பது கண்டு மகிழ்கிறேன். தாங்கள் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, மற்ற விக்கிப்பணிகளில் பங்கு கொள்வதுடன் ஏற்கனவே நீங்கள் எழுதிய சில கட்டுரைகளையும் அவ்வப்போது மேம்படுத்த முனைந்தால் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, நீங்கள் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில் உருவாக்கிய கட்டுரைகளை இற்றைப்படுத்தலாம். இவ்வாறு செய்வது தமிழ் விக்கிப்பீடியா 50,000 கட்டுரைகளை எட்டும் நிலையில் அதன் தரத்தை உயர்த்த உதவும். பின்வரும் வழிகளில் உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

  • தகுந்த இடங்களில் உள்ளிணைப்பு தரலாம்.
  • பிற விக்கிப்பீடியா கட்டுரைகளுக்கு பக்கப்பட்டையில் இருந்து இணைப்பு தரலாம்.
  • எழுத்து, இலக்கணம், தகவல் முதலியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தலாம்.
  • கட்டுரைக்குப் பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம்.
  • தகுந்த உசாத்துணைகள், மேற்கோள்கள் சேர்க்கலாம்.
  • தகுந்த பகுப்புகளைச் சேர்க்கலாம்.
  • கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் ஏதேனும் கருத்து இருந்தால், அதைப் படித்துப் பார்த்து அதற்கு ஏற்ற மாற்றம் செய்யலாம். உரையாடல் பக்கத்தில் மறுமொழி இடலாம்.
  • கட்டுரையை விரிவாக்கலாம்.
  • கட்டுரையில் உள்ள தரவுகளை இற்றைப்படுத்தலாம்.

ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். இது என் தனிப்பட்ட வேண்டுகோள் மட்டுமே :) இன்னும் இலகுவான வழிகளில் பல்வேறு பங்களிப்பாளர்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த இயலும் எனில், அது குறித்த உங்கள் பரிந்துரைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 14:59, 25 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு தொகு



தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) இலோ அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

மாகிர், வலைச் செயலிகள்/நடமாடும் கருவிச் செயலிகள் ஊடாக தமிழ் தரவுகளை எப்படிப் பகிரலாம். தரவுகள் எந்த வடிவத்தில் இருந்தால் உதவியாக இருக்கும் என்று ஒரு கட்டுரை வரைந்தால் உதவியாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 19:25, 26 திசம்பர் 2012 (UTC)Reply

நற்கீரன், நேரமின்மையால் பங்களிக்க இயலவில்லை. தாமதமான பதிலுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். மாநாடு சிறப்புற வாழ்த்துக்கள். நன்றி --மாகிர் (பேச்சு) 04:55, 6 சனவரி 2013 (UTC)Reply

நன்றி தொகு

  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:13, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:29, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:56, 15 சனவரி 2013 (UTC)Reply

சென்னை விக்கியர் சந்திப்பு தொகு

வரும் சனிக்கிழமை (9 மார்ச்) அன்று மாலை சென்னை ஐஐடி வளாகத்தில் விக்கிப்பீடியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இரு ஆண்டுகளுக்குப் பின் இத்தகைய சந்திப்பொன்றை நடத்துகிறோம். அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறேன்--சோடாபாட்டில்உரையாடுக 15:09, 5 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 06:01, 28 சூன் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:54, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் தொகு

வரும் வார இறுதியில், மலேசியா, சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். பார்க்க: விக்கிப்பீடியா:மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம். நன்றி--இரவி (பேச்சு) 09:32, 25 மே 2014 (UTC)Reply

மாஹிர், நீங்கள் புதிய பயனர்களுக்குப் பயிற்சி அளிக்கிறீர்கள் என்பதை அறியாது துன் சம்பந்தன் கட்டுரையை வழி மாற்றி விட்டேன். மன்னிக்கவும்.--Kanags \உரையாடுக 06:53, 31 மே 2014 (UTC)Reply

உங்கள் மீடியாவிக்கி கருவிகள் தொகு

Toolserverஐ மூடி விட்டதால் உங்கள் மீடியாவிக்கி கருவிகளை http://tools.wmflabs.org/ க்கு இடம் மாற்ற வேண்டுகிறேன். விவரங்களுக்கு http://toolserver.org/ பாருங்கள்.--இரவி (பேச்சு) 05:44, 9 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு தொகு

 
அனைவரும் வருக

வணக்கம் Mdmahir!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:52, 30 திசம்பர் 2014 (UTC)Reply

Your administrator status on the Tamil Wikinews தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.   You meet the inactivity criteria (no edits and no log actions for 2 years) on the wiki listed above. Since that wiki does not have its own rights review process, the global one applies.   If you want to keep your rights, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.   If you wish to resign your rights, you can reply here or request removal of your rights on Meta.   If there is no response at all after approximately one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards. Rschen7754 04:56, 11 பெப்ரவரி 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:49, 7 மே 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:05, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு தொகு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:11, 8 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி! தொகு

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:54, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள் தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

நன்றி..! தொகு

வணக்கம்! 2015 மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் (தமிழகம்) எனும் கட்டுரையினை நல்லமுறையில் வளர்த்தெடுத்து வருவதற்கு, எனது நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:14, 10 ஆகத்து 2015 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

 

வணக்கம், Mdmahir!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO 03:24, 18 ஆகத்து 2015 (UTC)Reply

உங்களது எச்சரிக்கை பலகை, தமிழ் விக்கிப்பீடியாவில் சுமூக சூழல் இல்லையோ என்பதை காட்டுகிறது. ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்வதும் பதிப்புரிமை மீறலில் வருமா என்று கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகாலம் தமிழ் விக்கியில் இருக்கிறேனா? பக்கம்: மக்கா வெற்றி --மாகிர் (பேச்சு) 06:37, 18 ஆகத்து 2015 (UTC)Reply
மாகிர், ஆண்டன் தொகுப்புச் சுருக்கத்தில் இணைப்பையும் வழங்கியுள்ளார். அத்துடன், நீங்கள் இரண்டாவது தடவையும் இணைத்த பின்னே மேற்கூறிய வார்ப்புருவை இட்டுள்ளார். மேற்கூறிய வலைத்தளத்திலுள்ள நூல் 1977 அல்லது அதற்குப் பின் வெளிவந்ததாகத் தெரிகின்றது. மேற்கூறிய நூல் பொது உரிமத்தில் உள்ளதா? அவ்வாறு பொது உரிமத்தில் இருந்தாலும் அதனைத் தொகுப்புச் சுருக்கத்திலோ பேச்சுப் பக்கத்திலோ குறிப்பிட வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 07:45, 18 ஆகத்து 2015 (UTC)Reply
இரண்டாவது முறை திருத்தி, ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது என்று குறிப்பு கொடுத்திருக்கிறேனே. ஒருமுறை ஆங்கில விக்கியில் (background section) அந்த பகுதியை ஒப்பிடுங்கள். அடிப்படையில் ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கமாக துவங்கப்பட்ட கட்டுரை அது. --மாகிர் (பேச்சு) 07:56, 18 ஆகத்து 2015 (UTC)Reply
சிசில காலங்கள் இவ்வாறு கழிய, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பக்ர் கிளையினர் குஜாஆ கோத்திரத்தாரிடமிருந்து தங்களது பழைய பகைமைக்குப் பழி தீர்த்துக் கொள்ள விரும்பினர். ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவன் புறப்பட்டான். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினான். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர். - ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம் செய்ய முன்னனரே எவ்வித மாற்றமுமின்றி 100% இங்கு எப்படி தமிழாக்கம் செய்யப்பட்டது என்பது வியப்பாகவுள்ளது. en:Wikipedia:Copying text from other sources --AntanO 08:10, 18 ஆகத்து 2015 (UTC)Reply
தமிழாக்கம் செய்ய முன்னனரே இங்கு நடக்கும் கருத்துப் பறிமாற்றம் இரண்டாவதற்கு தான் --மாகிர் (பேச்சு) 08:32, 18 ஆகத்து 2015 (UTC)Reply
பெரும்பாலான வரிகள் (நிறுத்தக்குறிகள், இடைவெளி விடல் உள்ளடங்கலாக) மேற்கூறிய வலைத்தளத்தை அவ்வாறே ஒத்துள்ளன. குறிப்பாக, //சண்டைசெய்து கொண்டே// என்றவாறு இடைவெளி பிரித்த முறை, //இருளை பயன்படுத்திக் கொண்டு// என்று வலைத்தளத்தில் உள்ளவாறே சந்திப்பிழையுடன் எழுதியது போன்றவற்றைக் குறிப்பிடலாம். --மதனாகரன் (பேச்சு) 08:10, 18 ஆகத்து 2015 (UTC)Reply

taking advantage of the dark night. -- //இருளை பயன்படுத்திக் கொண்டு// Pressed by their enemies, the tribesmen of Khuza'ah sought the Holy Sanctuary, //சண்டைசெய்து கொண்டே// இங்கு நடக்கும் கருத்துப் பறிமாற்றம் மாற்றப்பட்ட பிறகுதான் என்று நினைக்கிறேன். பிழைகளை ஆழமாக தேடுவதாக மட்டும் தெரிகிறது. --மாகிர் (பேச்சு) 08:32, 18 ஆகத்து 2015 (UTC)Reply

இங்கும் அதே தமிழாக்கம் --AntanO 08:12, 18 ஆகத்து 2015 (UTC)Reply
ஆண்டன், தொகுப்பு முரண் ஏற்பட்டுள்ளது. தவற்றுக்கு வருந்துகிறேன். தங்கள் கருத்தை மறுபடி இணைத்துள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 08:14, 18 ஆகத்து 2015 (UTC)Reply
நான் புது பயனரோ, விசமத்தொகுப்பு செய்வதற்கோ, விக்கிப்பீடியாவிற்கு தீங்கு விளைவிக்கவோ கட்டுரை எழுதவில்லை. simply விக்கிப்பீடியா:நல்லெண்ண_நம்பிக்கை -- மாகிர் (பேச்சு) 08:50, 18 ஆகத்து 2015 (UTC)Reply

மீடியாவிக்கிப் பக்கங்களை நீக்கியமை தொடர்பாக தொகு

மீடியாவிக்கி:Alllogstext என்ற பக்கத்தை நீக்கியமைக்கான விளக்கத்தை அளிக்கும்படி வேண்டுகிறேன். மீடியாவிக்கி பேச்சு:Aboutsite என்ற பக்கத்தையும் கவனியுங்கள். --மதனாகரன் (பேச்சு) 07:34, 20 ஆகத்து 2015 (UTC)Reply

see ex. Edit I thought many such pages are no more useful & current mediawiki version may not required. If still needed please revert the deletions. THanks -- மாகிர் (பேச்சு) 07:44, 20 ஆகத்து 2015 (UTC)Reply

Alllogstextஐ நீக்கியதால், சிறப்பு:Logs பக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆகவே, மீட்டெடுத்து விட்டு, புதிய பதிப்புக்கு இற்றைப்படுத்தியுள்ளேன். இவ்வாறான மீடியாவிக்கிப் பக்கங்களை நீக்கினால், அவை தொடர்பான பக்கங்களில் ஏற்படும் மாற்றங்களையும் ஒரு முறை சரிபார்த்து விடுங்கள். நன்றி. --மதனாகரன் (பேச்சு) 07:49, 20 ஆகத்து 2015 (UTC)Reply

வழிமாற்றுடன் நகர்த்தல் தொகு

திரைப்படக் கட்டுரைகள் சிலவற்றை வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளீர்கள். உ+ம், காக்க காக்க என்ற தலைப்பில் வேறு ஒரு பொருளில் கட்டுரை இல்லாவிட்டால் வழிமாற்றுடன் நகர்த்துவதே நல்லது. இதனால் அனுகூலங்கள்: ஏனைய பக்கங்களில் சிவப்பு இணைப்புகளைத் தவிர்க்கலாம். இதே தலைப்பில் இதே திரைப்படத்தைப் பற்றி வேறு ஒருவர் கட்டுரை எழுதாமல் தவிர்க்கலாம்.--Kanags \உரையாடுக 20:14, 5 அக்டோபர் 2015 (UTC)Reply

Template edits தொகு

Mahir, Neechalbot is already running now to create panchayat articles. Please see none of your template edits conflict with existing structure in Maharajapuram article. Thanks. Attention - @Neechalkaran: --இரவி (பேச்சு) 15:05, 9 நவம்பர் 2015 (UTC)Reply

சரியாக வேலைசெய்கிறது. --Mdmahir (பேச்சு) 15:14, 9 நவம்பர் 2015 (UTC)Reply

வார்ப்புரு வல்லவரே, உதவிக்கு மிக்க நன்றி :)--இரவி (பேச்சு) 11:14, 11 நவம்பர் 2015 (UTC)Reply

அறிவிப்பு தொகு

பேச்சு:கும்பகோணம் நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் என்பதில் மாற்றுக்கருத்திருப்பின் தெரியப்படுத்தவும்--உழவன் (உரை) 06:06, 8 திசம்பர் 2015 (UTC)Reply

உதவி தொகு

1801, ஏப்ரல் 13 சூரியகிரகணம் கட்டுரையில் படம் பதிவேற்ற முடியுமா? --கி.மூர்த்தி 15:14, 5 பெப்ரவரி 2016 (UTC)

நன்றி நண்பரே. எவ்வாறு பதிவேற்றுவது சொல்லித்தர இயலுமா?--கி.மூர்த்தி 15:58, 5 பெப்ரவரி 2016 (UTC)

படம் பதிவேற்றவில்லை. ஆவி யில் உள்ள தரவுகளையும், மாடூல்களையும் இங்கு பதிவேற்றுகிறேன். லுவா நிரலில் உள்ளது.--Mdmahir (பேச்சு) 16:01, 5 பெப்ரவரி 2016 (UTC)

தகவல்பெட்டி ஆங்கிலத்தில் உள்ளது. எங்கே தமிழ்ப் படுத்துவது?--Kanags \உரையாடுக 21:15, 5 பெப்ரவரி 2016 (UTC)

கனகு, (Module| solar eclipse) இங்கு function infobox ல் வலதுபுறம் உள்ள சொற்களை தமிழாக்க வேண்டும்.

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு தொகு

 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கித்தரவு நேரடியாக விக்கிப்பீடிய வார்ப்புருவுடன் இணைத்தல் தொகு

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவுகளை காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நலமா இருப்பீர்களென்றே எண்ணுகிறேன். விக்கித்தரவிலிருந்து நேரடியாக தகவல்பெருமாறு வகை செய்தல் என்பதைக் கண்டேன். அதே போன்றதொரு தேவை இங்கு அனைத்து உயிரியல் கட்டுரைகளிலும் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு மாதிரி கட்டுரையாக, ரோசிதுகள் என்பதை நண்பர் மூர்த்தி அமைத்துள்ளார். ரோசிதுகளில் உள்ள இந்த விக்கித்தரவு வார்ப்புரு, பொதுவகம், விக்கியினங்கள் போன்ற விக்கிமீடியத் திட்டங்களை உள்ளடக்கி செய்யப்பட்டுள்ளது. எனவே, உதவுக. இது வெற்றிகமாக அமையும் என்றே எண்ணுகிறேன். அத்தகைய அமைப்பால், மேலும் இரு நண்பர்களுடன் இணைந்து ஆயிரகணக்கான கட்டுரையை உருவாக்க இயலும். முதல் தேவை Infobox என்பதால் நீண்ட நாட்களாக விழித்து வருகிறேன். உதவுக. ஆவலுடன்..--உழவன் (உரை) 08:25, 1 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017 தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:31, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

கட்டுரை நீக்கப்பட்டதைக் காணும் பயனர் கவைலையுறுவதாகவும், நீக்கல் போன்ற வார்ப்புருவினால் அச்சமுறுவதாகவும் கருத்துக்கள் தெரிவித்ததாலும், பயனருக்கு வழிகாட்ட முனையும்போது கட்டுரை இல்லாது இருப்பது பயிற்சியாளர்களுக்கு கடினமாக இருப்பதாகவும் கருத்து உள்ளது. எனவே, "ஆலால சுந்தரம் பிள்ளை" கட்டுரையில் இருந்து நீக்கல் வார்ப்புருவை நீக்கியுள்ளேன். --AntanO 02:46, 10 மே 2017 (UTC)Reply

சுற்றுக்காவல் தொகு

வணக்கம். லண்டனில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்விக் கல்லூரிகளின் பட்டியல் இக்கட்டுரையை நீங்கள் சுற்றுக்காவல் செய்துள்ளீர்களெனக் கருதுகிறேன். (தவறாக இருந்தால் மன்னிக்கவும், சுற்றுக்காவல் வரலாற்றைக் காணும் தெளிவில்லை). கட்டுரை கண்கூடாக விக்கித் தரத்தில் இல்லை; அப்பட்டமான கூகுள் மொழிபெயர்ப்பு. துப்புரவு வார்ப்புரு இணைத்து விடுங்கள். உங்களால் முடிந்தால் கட்டுரைகளில் திருத்தங்களை மேற்கொண்டு, அவற்றின்படி பயனர்களுக்கு வழிகாட்டலாம். முடியாத போது வார்ப்புரு மட்டும் இணைத்துவிட்டு, சுற்றுக்காவல் செய்யாமல் விட்டுவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதனால் அக்கட்டுரை பிற பயனர்களால் திருத்தப்படலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:32, 22 மே 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு தொகு

அன்புள்ள மாகிர்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:27, 18 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம் தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

Project Tiger 2.0 தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

Invitation for Wiki Loves Women South Asia 2021 தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021view details!


 
Wiki Loves Women South Asia is back with the 2021 edition. Join us to minify gender gaps and enrich Wikipedia with more diversity. Happening from 1 September - 30 September, Wiki Loves Women South Asia welcomes the articles created on gender gap theme. This year we will focus on women's empowerment and gender discrimination related topics.

We are proud to announce and invite you and your community to participate in the competition. You can learn more about the scope and the prizes at the project page.

Best wishes,
Wiki Loves Women Team HirokBot (பேச்சு) 21:59, 18 ஆகத்து 2021 (UTC)Reply

How we will see unregistered users தொகு

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

18:19, 4 சனவரி 2022 (UTC)

Your advanced permissions on tawiki தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully.

Stanglavine (பேச்சு) 17:25, 13 சனவரி 2022 (UTC)Reply

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mdmahir&oldid=3605600" இலிருந்து மீள்விக்கப்பட்டது