Shameermbm
[[✔|:#Don't Giveup! எம்.பீ.எம்.சமீர்|✆|✎|★ ]]
விக்கிபீடியாவில் எனது நடவடிக்கைகள் குறித்து ஏதாவது முறைப்பாடுகள்,பாராட்டுகள்,அறிவுருத்தல்கள் மற்றும் கேள்விகள் இருப்பின் தயவு செய்து இங்கே இற்றைப்படுத்தவும். --மொஹமட் சமீர் உரையாடுக...
பயனாளர்களுக்கான தொடர்புகள்:
தொகுபுதுக்கட்டுரை
தொகுபுதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
வெலிகமை
தொகுசமீர், வெலிகமை குறித்த கட்டுரையை மேம்படுத்த விரும்பினால் கட்டாயம் செய்யுங்கள். மதுராப்புர என்ற தீவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கட்டுரை உள்ளடக்கத்தில் ஏதாவது முரண்பாடு இருப்பின் அதன் பேச்சுப் பக்கத்தில் இடுவது நல்லது. கட்டுரையை எழுதியவர்கள் பதிலளிக்கலாம். மதுராப்புர என்று தனியே ஒரு கட்டுரை உள்ளது. அதன் பேச்சுப்பக்கத்திலும் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கலாம். நன்றி.--Kanags \பேச்சு 03:55, 15 அக்டோபர் 2009 (UTC)
சிறு தொகுப்புகள்
தொகுபயனர் பக்க வரவேற்பு போன்ற ஒரே மாதிரியான சிறிய மாற்றங்களை சிறு தொகுப்புகளாக குறிக்க வேண்டுகிறேன். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் சிறு தொகுப்புகளை மறைத்துப் பார்க்கலாம் என்பது முக்கியமான மாற்றங்களை மட்டும் கவனிக்க இயலும். நன்றி--ரவி 10:08, 12 நவம்பர் 2009 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுசமீர் நீங்கள் நல்ல கட்டிரைகளை தந்து கொண்டிருக்கின்றீர்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.--<fa_dj> 07:14, 17 ஆகஸ்ட் 2010 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுஇனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 01:58, 10 செப்டெம்பர் 2010 (UTC)
மொழிபெயர்த்தல் உதவி தேவை
தொகுகூகுல் மொழிமாற்றியினை உபயோகிக்கின்றேன்: xampp ஐ எவ்வாறு மொழிபெயர்ப்பது XAMPP
- pronounced /ˈzæmp/ or /ˈɛks.æmp/) தமிழில் எக்சாம்ப் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 07:16, 31 அக்டோபர் 2010 (UTC)
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
தொகு--சூர்ய பிரகாசு.ச.அ. 12:20, 8 மார்ச் 2011 (UTC)
படிமங்களை அகற்றல்
தொகுபடிமம்:User113.PNG படிமம்:User112.PNG படிமம்:User111.PNG ஆகிய படிமங்களை நீக்கிவிடுக. -- மொஹமட் சமீர் உரையாடுக...
கட்டுரை - முழுமைப்படுத்த வேண்டுகோள்
தொகுசமீர், தாங்கள் தொடங்கிய 17 கட்டுரைகளில் சில கட்டுரைகள் முழுமையடையாமல் இருக்கின்றன. இக்கட்டுரைகள் தங்களால் மட்டுமே விரிவுபடுத்தும் நிலையிலிருப்பதால் விரிவுபடுத்தி கட்டுரையை முழுமையடையச் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:41, 7 சூலை 2011 (UTC)
மிக்க நன்றி
தொகுமிக்க நன்றி தம்பி, தமிழ் விக்கியில் ஒரு இலக்கை நோக்கி நான் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ் நவம்பர் 14க்கு முன் என் இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அதன் பின்பு நிச்சயமாக தங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வேன். நீங்கள் என் மாணவர்களின் ஒருவராக இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்கின்றேன் --P.M.Puniyameen 11:22, 27 ஆகத்து 2011 (UTC)
ஈத் முபாரக்
தொகுஇம் மாதம் முழுவதும் நோன்பிருந்து பல்வேறுபட்ட நற்கருமங்களில் ஈடுபட்டு புனித ரமழான் பெருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் அகமகிழ்வடைகின்றோம். விக்கி குடும்பத்தின் சார்பில்--P.M.Puniyameen 00:48, 31 ஆகத்து 2011 (UTC)
- என் இனிய வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 00:56, 31 ஆகத்து 2011 (UTC)
- எனது இனிய ஈகைத் திருநாள் வாழத்துக்கள் உங்களுக்கும், சார்ந்தோருக்கும்.--கலைமகன் பைரூஸ்12:51, 31 ஆகத்து 2011 (UTC)
- மிக்க நன்றி சேர், உங்களுக்கும் நல்வாத்துக்கள்.
- மிக்க நன்றி தேனி.--சமீர் 04:53, 31 ஆகத்து 2011 (UTC)
- மிக்க நன்றி சேர், உங்களுக்கும் நல்வாத்துக்கள்.
முதற்பக்க சீரமைப்பு
தொகுசமீர் முதற் பக்கத்தில் அனைத்து பகுதிகளுக்கும் நீங்கள் style="{ .{Round corners}} என மாற்றம் செய்து உள்ளீர்கள், ஆனால் இந்த style="{ .{Round corners}} மூலம் பக்கத்தின் உயரம கூடுகின்றதே!. அனைத்து தொடுப்புகளும் மிகக் குறைந்த பகுதியில் தெரிவதே சாலச் சிறந்தது என எண்ணுகிறேன். தங்களால் மாற்ற முடியுமா? உதாரணத்துக்கு ஆங்கில விக்கி நூல்கள் பக்கத்தைக் காணலாம்.
இரு கணக்குகள்
தொகுசமீர், நீங்கள் தான் அந்தச் சாணக்கியனா? விக்கிப்பீடியாவில் ஒருவர் இரு கணக்குகள் வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 08:34, 24 செப்டெம்பர் 2011 (UTC)
- இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு கனக்ஸ். (பொதுக்கணினிகளில் பயன்படுத்த தனிக்கணக்கு போன்றது). எதற்காக இரண்டாவது கணக்கு என்று தெளிவு படுத்தி இரண்டும் தன்னுடையது என்று அடையாளப்படுத்திவிட்டால் வைத்திருக்கலாம். --சோடாபாட்டில்உரையாடுக 08:40, 24 செப்டெம்பர் 2011 (UTC)
தெளிவு படுத்தியமைக்கு நன்றி. ஆனாலும் விக்கியில் அதிகம் பங்களிக்கும் ஒருவர் இரு கணக்குகள் வைத்திருப்பது அவ்வளவு விரும்பத்தக்கதல்ல. ஒன்றில் ஒரு கணக்கை முடக்கி தான் விரும்பிய ஒன்றைப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 08:51, 24 செப்டெம்பர் 2011 (UTC)
- சாணக்கியன் என்ற கணக்கு எனக்குத் தேவையற்றது, சில தற்காலிக காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது.
- தமிழில் பயனர் பெயர், அதுவும் புனைப்பெயரில்,
- பிரதான கணக்கின் அவசியத்தன்மையுடன் அது ஆங்கில பெயரில் இருத்தல்.
- விசேட நிலைமைகளில் தமிழ் பயனர் பெயருடன் உள்நுளைய முடிவதில்லை(தொ.நு.குறைகள்)
எனினும் சாணக்கியனை நீக்கிவிடுவது நல்லது என நினைக்கிறேன், ச மீர் ணக்கியன்
சமீர், இங்கு உங்கள் வேண்டுகோளைச் சமர்ப்பியுங்கள்.--Kanags \உரையாடுக 05:09, 26 செப்டெம்பர் 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த செப்புக்கு என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 9, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கியூ தாவரவியற் பூங்கா என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் பெப்ரவரி 13, 2013 அன்று வெளியானது. |
பிறந்த தின வாழ்த்துகள்
தொகுவிக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்
தொகுகொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:49, 13 மார்ச் 2013 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.