விக்கிப்பீடியா:விக்கிதானுலாவி
விக்கிதானுலவி (AutoWikiBrowser) என்பது முழுமையான அல்லது குறைவான தானியக்கம் செய்ய பயன்படும் விக்கிப்பீடியா தொகுப்பான் கருவி ஆகும். இது மைக்ரோசாஃப்டு விண்டோஸ் இயக்குதளங்களில் மட்டுமே இயங்கும் (2000/XP,...) இது இயங்கும் திறனுடையது. திரும்பத் திரும்பச் செய்ய வேண்டிய களைப்பூட்டும் வேலைகளை, இது எளிதாக்குகிறது.
பயன்பாடு
தொகுமுறை
தொகுஆங்கில விக்கிப்பீடியாவில் இதைப் பயன்படுத்த அனுமதி பெற வேண்டும். தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தற்போதைக்கு அனுமதி தேவையில்லை. எனினும் அதிக அளவு பயன்படுத்தும், ஒத்தாசை பக்கத்தில் அணுகி, உங்களது திட்டஇலக்கை வரையறைத்து, பிறரின் ஆலோசனைகளையும் பெற்று செயற்பட, பரிந்துரைக்கிறோம்.
செயல்முறை
தொகுஇது இண்டர்நெட் எக்சுபுளோரர் உலாவியின் பின்புல நிரலாக்கத்தைக் கொண்டு, செயற்பட சி# என்ற கணிய நிரலாக்கமொழியால் எழுதப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது. இது செவ்வனே இயங்க, சில முன் நிறுவல்கள், நீங்கள் பயன்படுத்தும் விண்டோசு இயக்குதளத்திற்கு ஏற்ப தேவைப்படுகிறது. பெரும்பாலும் விண்டோசு 7 இயக்குதளத்திற்கு பிறகு வந்தவைகளில், எந்த முன்நிறுவலும் தேவைப்படாது.
பயனர் கையேடு
தொகுபதிவிறக்கம்
தொகுஇணையத்தின் இப்பகுதியில் இருந்து, இந்த பயன்பாட்டு மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பதிவிறக்கப் பகுதியில் புதிய பதிப்பை பச்சைநிற ஆழியை(button) அழுத்திப் பெறவும். ஏனெனில், அங்கு முந்தையப் பதிப்புகளையும் காண இயலும். உங்களிடம் முந்தையப் பதிவுகள் இருப்பின், அதன் உதவி தத்தல் வழியாகவும் புதிய பதிப்பினை மேம்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தற்போது பயன்படுத்தும் பதிப்புக்கு அடுத்த பதிப்பு உருவானால், புதியபதிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள, அச்செயலியே கட்டாயப்படுத்தும்.
திட்டத்தேர்வு
தொகுஇக்கருவி விக்கிமீடியத் திட்டங்கள் அனைத்திலும், பல மொழிகளிலும் செயற்பட வல்லது. ஆனால், மேலும், மீடியாவிக்கி மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்து இணையதளங்களிலும் செயற்பட வல்லது. எனவே, ஒரு நேரத்தில், ஒரேயொரு மொழியில் அமைந்த, ஒருவிக்கிமீடியத்திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்த இயலும் என்பதை மறவாதீர்.எந்த விக்கிமீடியத்திட்டத்தில், எந்த மொழியில் பயன்படுத்தப் போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்து கொண்டு, அதற்கேற்ப நீங்கள் இந்த கருவியை, அமைத்துக் கொள்ளவேண்டும்.
பயன்பாட்டு விதிகள்
தொகுசெய்யப்படும் ஒவ்வொரு தொகுப்பிற்கும் நீங்களே பொறுப்பு. வழமையாக திருத்தம் செய்வது போல, ஒவ்வொரு திருத்தத்தையும் மதிப்பாய்வு செய்வீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகமாக இருப்பதனால் தரம் குறைவடையச் செய்யாதீர்கள். சேமிப்பதற்கு முன் அனைத்து மாற்றங்களையும் மதிப்பாய்வு செய்யுங்கள்.
அனைத்து விக்கிபீடியா வழிகாட்டுதல்களுக்கும் கொள்கைகளுக்கும் பொதுவான நடைமுறைகளுக்கும் கட்டுப்படுங்கள்.
இதன் மூலம் சர்ச்சைக்குரிய திருத்தங்கள் செய்ய வேண்டாம். பொருத்தமான இடத்தில் (ஆலமரத்தடி, விக்கித் திட்டம்) சர்ச்சைக்குரிய மாற்றங்களுக்கு ஒருமித்த கருத்தைத் தேடுங்கள்.
"துணிவு கொள்" என்பது ஒருமித்த கருத்து இல்லாத, பாரிய அளவிலான திருத்தம் செய்யலாம் என்று பொருள் அல்ல. மாற்றுக் கருத்து இருந்தால், விக்கிதானுலாவி மூலம் பெரிய அளவில் திருத்தங்கள் செய்ய விரும்பும் பயனர் விக்கிச் சமூகத்தின் ஒருமித்த கருத்தைப் பெற வேண்டும்.
முக்கியமற்ற அல்லது பொருத்தமற்ற திருத்தங்களைச் செய்ய வேண்டாம். குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாத ஒரு திருத்தம் பொதுவாக ஒரு சிறிய திருத்தமாக கருதப்படுகிறது. சந்தேகம் இருந்தால், அல்லது மற்ற பயனர்கள் இந்த விதியின் அடிப்படையில் திருத்தங்கள் செய்வதை எதிர்த்தால், மேலும் இதே போன்ற திருத்தங்களைச் செய்வதற்கு முன் பொருத்தமான இடத்தில் ஒருமித்த கருத்தைத் தேட வேண்டும்.
காட்சியகம்
தொகு-
தொடக்கத்தோற்றம்
-
இயல்புநிலைத் தோற்றம்
(பதிப்பு: 5.8.5.2 rev 11994) -
திட்டத்தேர்வு-1
-
திட்டத்தேர்வு-2(2வது படம்)
-
பகுப்புத்தேர்வு-1
வெளி இணைப்புகள்
தொகு
- Project home on SourceForge
- Browsing the source code on SourceForge
- Regular Expression Language Elements from the .NET Framework Developer's Guide in the online documentation of Microsoft