விண்டோஸ் விஸ்டா
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விண்டோஸ் விஸ்டா என்பது மைக்ரோசாப்ட்டின் மைக்ரோசாப்ட் எக்ஸ்பிக்கு பிந்தைய வர்த்தகரீதியாக வெளிவந்த விண்டோஸ் பதிப்பாகும். 22 ஜூன் 2005 இப் பெயரைப் பெறுவதற்கு முன்னர் இது லாங் ஹார்ன் என அறியப் பட்டது.[4]. விண்டோஸ் விஸ்டாவின் விருத்தியானது 8 நவம்பர் 2006 இல் முழுமையடைந்தது. இதை அடுத்துக் கட்டம் கட்டமாகப் வன்பொருள், மென்பொருள் விருத்தியாளர்கள், வணிக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. மைக்ரோசாப்ட்டின் அறிவிப்புப்படி விஸ்டாவின் வர்த்தகப் பதிப்பு நவம்பர் 2006 இலும் உலகளாவிய ரீதியில் ஜனவரி 30, 2007 இலும் வெளிவந்தது.[5] இந்தப் பதிப்பானது மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் எக்ஸ்பி வெளிவிடப்பட்டு ஐந்து ஆண்டுகள் கழித்தே வெளிவந்தது. இத்திட்டமானது கணினி வரலாற்றிலேயே மிகப் பெரியதும் மிகப் பணச் செலவானதுமான ஓர் திட்டமாகும் தவிர இதுவே விண்டோஸ் வரலாற்றில் ஓர் சந்ததி இயங்குதளங்களுக்கிடையிலான மிகக்கூடுதலான காலம் எடுத்த இயங்குதளமும் ஆகும். "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த இயங்குதளத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர்.
விண்டோஸ் விஸ்டாவின் திரைக்காட்சி | |
விருத்தியாளர் | மைக்ரோசாப்ட் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | மைக்ரோசாப்ட் விண்டோஸ் |
மூலநிரல் | மூடிய நிரல் / Shared source[1] |
உற்பத்தி வெளியீடு | நவம்பர் 8 2006 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 6.0 Service Pack 1 (SP1) (Build 6001) (6001.18063.080425-1930[2]) / ஜனவரி 30 2007[3] |
கருனி வகை | Hybrid kernel |
அனுமதி | EULA |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.microsoft.com/windowsvista/ |
ஆதரவு நிலைப்பாடு | |
தற்போது ஆதரவில் உள்ளது. |
மேலோட்டம்
தொகுவிண்டோஸ் விஸ்டாவானது புதிய பல வசதிகளைக் அறிமுகப் படுத்துகின்றது. ஏரோ(en:Windows Aero) என்றழைக்கப்படும் மேம்படுத்தப் பட்ட படங்களுடனான பயனர் இடைமுகம் (Graphical user interface) மற்றும் மேம்படுத்தப்பட்ட தேடற் தொழில் நுட்பம், வீட்டு வலையமைப்பில் கணினிகளிற்கிடையே தொடர்புகளை அதிகரிக்க en:Peer-to-peer தொழில்நுட்பத்தினூடாக கோப்புக்களைப் பகிர்தல் இலகுவாக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்டின் பிரதித் தலைவரும் விஸ்டா விற்குப் பொறுப்பானவருமான ஜிம் ஆல்சின் ஓராயிரத்திற்கு மேற்பபட்ட புதிய வசதிகளும் தொழில் நுட்பங்களும் இதில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். பில்கேட்ஸ் 12 ஆண்டுகளிற்கு முன்னர் வெளிவந்த வின்டோஸ் 95 இலிருந்து விண்டோஸ் மேம்படுத்தல் இதுவாகவே இருக்கும் என்றார்.
மைக்ரோசாப்டின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இயங்கு தளங்களின் பாதுகாப்பு இருக்கும். விண்டோஸ் XP இயங்குதளத்தின் முக்கிய குறைகளாக கணினி வைரஸ், கெட்டமென்பொருட்கள், buffer overflows ஆகியவைகளே இருக்கின்றன.
வசதிகள்
தொகுதமிழ் உட்பட இந்திய மொழிகளை இதன் முந்தைய பதிப்புப் போன்று கட்டுப்பாட்டுப் பலகத்தினூடாக சிக்கலான சிறுநிரல்கள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இது நேரடி ஆதரவினையும் வழங்குகின்றது. சிங்களம் முதன் முறையாக விண்டோஸ் கணினிகளில் ஒருங்குறி முறையில் விஸ்டாவூடாக ஆதரவளிக்கப்படுகின்றது.
புதிய தேடும் வசதி
தொகுவேகமாகத் தேடும் பாளம் (quick search pane) என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை தட்டச்சு செய்து அதனுடன் தொடர்பான கோப்புகளின் பெயர்களைப் பெறலாம். தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை கோப்புறைகளாக சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்கள் கிடைக்கையில் இந்த கோப்புறைகள் புதுப்பிக்கப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி கோப்புறையை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த கோப்புறையில் சேர்க்கப்படும்.
சிறு உருவம்
தொகுஇனி சிறு உருவங்கள் (icon) கோப்பு வகையைக் குறிக்காது. ஒவ்வொரு கோப்பின் உரையைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் ஆவணத்தின் சிறுஉருவம் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த சிறுஉருவ படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை கோப்பில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும்.
மடிக்கணினியில் புதுமை
தொகுவிண்டோஸ் விஸ்டா மடிக்கணினி இயக்கத்திலும் மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. இயங்குதளத்தை இயக்காமல் கூட ஒரு மடிக்கணினி ஏற்கனவே அமைக்கப்பட்ட தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும்.
வலையமைப்பில் இணைக்கப்படுகையில் அதனுடன் இணைந்த கணினிகளின் அனைத்து கோப்புகளையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கணினியில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள இசைக்கோப்புகளையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும்.
பதிப்புக்கள்
தொகுவிண்டோஸ் விஸ்டா 6 பதிப்புக்களாக வெளிவந்துள்ளது. அவையாவன
- விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர் - உலக வங்கியினால் தீர்மானிக்கப்பட்ட வருமானம் குறைந்த நாடுகளுகளில் மாத்திரம் விற்கப்படுவது. - ஏரோ இடைமுகம் கிடையாது.
- விண்டோஸ் விஸ்டா ஹோம் பெஸிக் - வீட்டுப்பாவனைக்கான மலிவான பதிப்பு. ஏரோ இடைமுகம் கிடையாது.
- விண்டோஸ் விஸ்டா ஹோம் பிறிமியம்
- விண்டோஸ் விஸ்டா பிஸ்னஸ்
- விண்டோஸ் விஸ்டா எண்டபிறைஸ்
- விண்டோஸ் விஸ்டா அல்டிமேட்.
விண்டோஸ் விஸ்டா ஸ்டாட்டர் | விண்டோஸ் விஸ்டா ஹோம் பெஸிக் | விண்டோஸ் விஸ்டா ஹோம் பிறிமியம் | விண்டோஸ் விஸ்டா பிஸ்னஸ் | விண்டோஸ் விஸ்டா எண்டபிறைஸ் | விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் | |
---|---|---|---|---|---|---|
ஒருங்கிணைந்த தேடும் வசதி | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
விண்டோஸ் பாதுகாப்பு(டிபெண்டர், தீச்சுவர் (பயர்வால்), இண்டநெட் எக்ஸ்புளோளர் 7) | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
கவர்ச்சிகரமான ஏரோ இடைமுகம் | இல்லை | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
விண்டோஸ் தொலைநகல் (பெக்ஸ்) மற்றும் ஸ்கானர் | இல்லை | இல்லை | இல்லை | ஆம் | இல்லை | |
இலகுவாக டிவிடியை ஏற்படுத்தும் வசதி | இல்லை | இல்லை | ஆம் | இல்லை | ஆம் | |
டொமைன்களுடன் இணைக்கும் வசதி | இல்லை | இல்லை | இல்லை | ஆம் | ஆம் | ஆம் |
விண்டோஸ் மீட்டிங் ஸ்பேஸ் | இல்லை | இல்லை | ஆம் | ஆம் | ஆம் | ஆம் |
விண்டோஸ் பிட் லொக்கர் டிரைவ் என்கிறிப்ஷன் | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | ஆம் |
வன்பொருட் தேவைகள்
தொகுவிண்டோஸ் விஸ்டாவை நிறுவக்கூடிய கணினிகள் இரண்டாக வகைப்படுத்தப்படும் அவையாவன விஸ்டாவை நிறுவக்கூடியது, விஸ்ட்டாவிற்குத் தயாரானது.[7] விஸ்டாவின் அடிப்படையான (பேசிக்) இடைமுகமும் மற்றும் விண்டோஸ் சம்பிரதாய (கிளாசிக்)இடைமுகமும் அநேகமாக எல்லா விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளங்களை ஆதரிக்கும் ஒளிஅட்டைகள் (வீடியோ காட்ஸ்) இவற்றையும் ஆதரிக்கும்.
விஸ்டா இயங்கக்கூடியது | விஸ்டாவிற்குத் தயாரானது | |
---|---|---|
மையச் செயலி | 800 MHz[9] | 1 GHz |
தற்காலிக நினைவகம் | 512 MB | 1 GB |
ஒளிஅட்டை (கிராபிக்ஸ் காட் Graphics card) | DirectX 9.0 இயக்கக்கூடியது | DirectX 9.0 இயக்கக்கூடியதும் WDDM 1.0 டிரைவர்களை ஆதரிக்ககூடியதும். |
ஒளி அட்டை (கிராபிக்ஸ்) நினைவகம் | 32 MB | 128 MB |
வன் வட்டு அளவு | 20 GB | 40 GB |
வன்வட்டு இடவசதி | 15 GB | |
ஏனைய சாதனங்கள் | DVD-ROM |
மேம்படுத்தல் நிறுவல்கள்
தொகுவிண்டோஸ் 2000 உம் விண்டோஸ் எக்ஸ்பியுமே விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்தக் கூடியவை. ஏனைய பதிப்புக்களை விண்டோஸ் விஸ்டாவாக மேம்படுத்த இயலாது. எனினும் அக்கணினியானது வன்பொருட் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தால் நேரடியாக புதிய துப்பரவான நிறுவலை மேற்கொள்ளலாம்.[10]
ஹோம் பேசிக் | ஹோம் பிறிமியம் | பிஸ்னஸ் | அல்டிமேட் | |
---|---|---|---|---|
விண்டோஸ் எக்ஸ்பி புரொபெஷனல் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் |
விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் |
விண்டோஸ் எக்ஸ்பி மீடியா செண்டர் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் |
விண்டோஸ் எக்ஸ்பி டப்லட் பிசி | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் | மேம்படுத்தல், துப்பரவான நிறுவல் |
விண்டோஸ் எக்ஸ்பி 64பிட் பதிப்பு | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் |
விண்டோஸ் 2000 | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் | துப்பரவான நிறுவல் மாத்திரம் |
குறைபாடுகள்
தொகுவிண்டோஸ் விஸ்டா தமிழ் உட்பட பல இந்திய மொழிகளை ஆதரித்தாலும் அவை நேரம் மற்றும் திகதியினைக் காட்டும்போது திகதியின் ஒருபகுதியை மாத்திரமே காட்டும் இப்பிழையானது விண்டோஸ் 2000 காலப் பகுதியில் இருந்தே வழு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட போதும் இக்குறைபாடானது இற்றைவரை தீர்க்கப்படவில்லை. தவிர விண்டோஸ் விஸ்டாவுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் காலண்டரிலும் இக்குறைபாடுண்டு.
வெளியிணைப்பு
தொகு- விண்டோஸ் விஸ்டா பரணிடப்பட்டது 2014-11-02 at the வந்தவழி இயந்திரம் அதிகாரப்பூர்வத்தளம் (ஆங்கில மொழியில்)
- ↑ "Windows Licensing Programs". மைக்ரோசாப்ட். பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
- ↑ "Upgrade Windows Vista to 6001.18063.080425-1930 with KB952709 Update". Archived from the original on 2008-07-18. பார்க்கப்பட்ட நாள் 2008-07-19.
- ↑ http://www.microsoft.com/Presspass/press/2007/jan07/01-29VistaLaunchPR.mspx
- ↑ Microsoft (2005-07-22). "Media Alert: Microsoft Unveils Official Name for "Longhorn" and Sets Date for First Beta Targeted at Developers and IT Professionals". பார்க்கப்பட்ட நாள் 2007-01-02.
- ↑ "Microsoft Launches Windows Vista and the 2007 Office System to Consumers". PressCentre. Microsoft New Zealand. 2007-01-30. பார்க்கப்பட்ட நாள் 2007-01-30.
- ↑ விண்டோஸ் விஸ்டாப் பதிப்புக்களின் ஒப்பீடு மைக்ரோசாப்ட் அணுகப்பட்டது 15 பெப்ரவரி 2009.
- ↑ "Microsoft and PC Manufacturers Make It Easier for Customers to Get Ready for Windows Vista". PressPass. Microsoft. 2006-05-18. பார்க்கப்பட்ட நாள் 2006-05-18.
- ↑ "Windows Vista Enterprise Hardware Planning Guidance". TechNet. Microsoft. 2006. பார்க்கப்பட்ட நாள் October 26, 2006.
- ↑ விண்டோஸ் விஸ்டாவின் ஆகக்குறைந்த வன்பொருட் தேவைகள் "Windows Vista: Recommended System Requirements". Microsoft. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.
- ↑ விண்டோஸ் விஸ்டா மேம்படுத்தற் தேர்வுகள் அணுகப்பட்டது 15 பெப்ரவரி 2009