இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு
இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு அல்லது இறுவட்டு என்பது குறுவட்டுகளைக் காட்டிலும் ஆறு மடங்கு கூடுதல் தரவுகளைச் சேமிக்கக் கூடியது. (குறைந்த அளவாக 4.5 GB அளவிலான தரவினைச் சேமிக்க வல்லது.) இன்று நிகழ்படங்கள் எண்மிய வடிவில் டிவிடியிலேயே பெரிதும் சேமிக்கப்படுகின்றன. வி.எச்.எ (VHS) அரிதாகி, டிவிடி பயன்பாடு கூடி வருகிறது. குறுவட்டுகளின் பயன்பாடும் அருகி வருகிறது.[1][2][3]
டிவிடி-ஆர் படிக்கும் / எழுதும் பக்கம் | |
ஊடக வகை | ஒளியியல் வட்டு |
---|---|
கொள்திறன் | 4.7 ஜி.பி. (ஒற்றை-பக்கம், ஒற்றை-அடுக்கு – பொதுவானது) 8.5–8.7 ஜி.பி (ஒற்றை-பக்கம், இரட்டை-அடுக்கு) 9.4 ஜி.பி (இரட்டைப் பக்கம், ஒற்றை-அடுக்கு) 17.08 ஜி.பி (இரட்டை-பக்கம், இரட்டை-அடுக்கு – அரிதானது) |
வாசித்தல் தொழிநுட்பம் | 650 nm லேசர், 10.5 Mbit/s (1×) |
பதிவுத் தொழிநுட்பம் | 10.5 Mbit/s (1×) |
Standard | டிவிடி கருத்துக்களம் டிவிடி புத்தகங்கள் மற்றும் டிவிடி + ரைட்டர் கூட்டணி குறிப்புகள் |
டிவிடி என்பது DVD என்ற ஆங்கில சுருக்கத்தின் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு ஆகும். இதன் ஆங்கில விரிவு Digital Versatile Disc என்பதை தமிழில் எண்மிய பல்திற வட்டு எனலாம்.
- 4.7 GB (ஒரு புறம், ஓரடுக்கு -( பொதுவான பயன்பாடு))
- 8.5–8.7 GB (ஒருபுறம், ஈரடுக்கு)
- 9.4 GB (இரு புறம், ஓரடுக்கு)
- 17.08 GB (இரு புறம், ஈரடுக்கு -அரிதான பயன்பாடு) ஆகிய கொள்திறன்களில் இறுவட்டுகள் உள்ளன.
தொழில்நுட்பம்
தொகுபல்திற இறுவட்டு (DVD) 650 நா.மீ (nm) அலைநீளம் கொண்ட சீரொளிக் கற்றையைப் வெளிவிடும் இருமுனையத்தைப் பயன்படுத்துகின்றது. ஆனால் குறுந்தகடு (சிடி), 780 நா.மீ அலைநீளச் சீரொளியைப் பயன்படுத்துகின்றது. பல்திற இறுவட்டு குறைந்த அலைநீள சீரொளியைப் பயன்படுத்துவதால், மிகவும் சிறிய புள்ளியாகக் குவியச்செய்ய இயலும், ஆகவே அதிகமான எண்ணிக்கையில் புள்ளிபோன்று குழிகளை உருவாக்க முடியும் (பல்திற இறுவட்டில் உள்ள புள்ளிகள் 0.74 µm (மைக்குரோ மீட்டர்) அளவினதாகவும், குறுந்தகட்டில் உள்ளவை 1.5 µm மைக்குரோ மீட்டர் அளவினதாகவும் இருக்கும்).
இதை ஒப்பிடும்பொழுது புதிதாக வந்துள்ள புளூ-ரே என்னும் நீலக்கதிர் வட்டு இன்னும் குறைந்த அலை நீளம், 405 நா.மீ கொண்ட சீரொளியைப் பயன்படுத்துகின்றது, இந்த அலைநீளம் நீல நிற ஒளியைத் தருவதால் நீலக்கதிர் வட்டு எனப் பெயர்பெறுகின்றது. இரு படல (dual-layer) வட்டு ஒன்று 50 GB கொள்திறன் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Taylor, Jim (March 21, 1997). "DVD Frequently Asked Questions (with answers!)". Video Discovery. Archived from the original on March 29, 1997. பார்க்கப்பட்ட நாள் August 20, 2019.
- ↑ Johnson, Lawrence B. (September 7, 1997). "For the DVD, Disney Magic May Be the Key". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து July 29, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180729081959/https://www.nytimes.com/1997/09/07/movies/for-the-dvd-disney-magic-may-be-the-key.html.
- ↑ Copeland, Jeff B. (March 23, 1997). "Oscar Day Is Also DVD Day". E! Online. Archived from the original on April 11, 1997. பார்க்கப்பட்ட நாள் August 21, 2019.