வின்டோஸ் டிஃபென்டர்

(விண்டோஸ் டிபெண்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


முன்னர் வின்டோஸ் அன்டிஸ்பைவேர் என முன்னர் அறியப்பட்ட வின்டோஸ் டிஃபென்டர் ஸ்பைவேர் என்றழைக்கப்படும் மைக்ரோசாப்ட் இலவச மென்பொருளானது ஒற்றுமென்பொருட்களை வின்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் சேவர் 2003, விண்டோஸ் விஸ்டா இயங்குதளங்களில் இயங்குதல் மற்றும் நிறுவுதல்களைத் தடுத்தும் நீக்கவும் உதவுகின்றது. விஸ்டாவுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளானது மைக்ரோசாப்டின் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கப்படக்கூடியது.

வின்டோஸ் டிஃபென்டர்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
அண்மை வெளியீடு1.1.1593.0 / மார்ச் 3, 2007
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் வின்டோஸ்
மென்பொருள் வகைமைஒற்றுமென்பொருள் நீக்கி
உரிமம்இலவச மென்பொருள்
இணையத்தளம்Windows Defender

மேலோட்டம் தொகு

விண்டோஸ் டிபெண்டர் ஜயண்ட் கம்பனி சாப்ட்வேரினால் உருவாக்கப் பட்ட ஜயண்ட் அண்டிஸ்பைவேரை அடிப்படையாகக் கொண்டது. இதை மைக்ரோசாப்ட் டிசெம்பர் 16, 2004 இல் உள்வாங்கிக் கொண்டது. இதன் பழையமென்பொருளானது விண்டோஸ் 98 போன்ற பழைய இயங்குதளங்களில் இயங்கினாலும் மைக்ரோசாப்டின் உள்வாங்கலின் பின் பழைய இயங்குதளங்களின் ஆதரவு கைவிடப்பட்டது. ஜயண்ட் சாப்வேரின் பங்காளியான சண்பெல்ட் சாப்ட்வேர்ரின் கவுண்டஸ்பைவேர் பழைய இயங்குதளங்களை இன்றளவும் ஆதரித்து வருகின்றது.

இதன் பீட்டாப் பதிப்புக்கள் விண்டோஸ் 2000 ஆதரித்தாலும், அக்டோபர் 24, 2006 இல் வெளிவந்த இறுதிப்பதிப்பில் இந்த ஆதரவு விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளப்போதும் இது மென்பொருளை நிறுவும் போதுள்ள ஓர் செயற்கையான நிபந்தனை மூலமே இது கட்டுப்படுத்தப்படுவதாகவும் இந்நிபந்தனையை நீக்கிவிட்டால் இவை வின்டோஸ் 2000 இயங்குதளத்திலும் இயங்கக்கூடியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[1]

மேம்படுத்தப் பட்ட வசதிகள் தொகு

நிகழ்நிலைப் பாதுகாப்பு தொகு

வின்டோஸ் டிஃபெண்டர் தேர்வுகள் நிகழ்நிலையில் தெர்வு செய்யக் கூடியவை.

  • தானாக ஆரம்பிக்கும் மென்பொருட்கள் - கணினியை ஆரம்பித்ததும் தானாக ஆரம்பிக்கும் மென்பொருட்களைக் கண்காணித்தல்
  • சிஸ்டம் கோப்புக்கள் - விண்டோஸ் பாதுகாப்புத் தொடர்பான கோப்புக்களைக் கண்காணித்தல்
  • இண்டநெட் எக்ஸ்புளோளர் சேர்க்கைகள் - இண்டநெட் எக்ஸ்புளோளரை ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கும் சேர்க்கைகளைக் கண்காணித்தல்.
  • இண்டநெட் எக்ஸ்புளோளர் விருப்பங்கள் - இண்டநெட் எக்ஸ்புளோளர் உலாவியின் பாதுகாப்பு விருப்பத் தேர்வுகளைக் கண்காணித்தல்.
  • இண்டநெட் எக்ஸ்புளோளர் பதிவிறக்கம் - இண்டநெட் எக்ஸ்புளோளரில் பதிவிறக்கப்பட்டு இண்டநெட் எக்ஸ்புளோளருடன் சேர்ந்தியங்கும் மென்பொருட்களைக் கண்காணித்தல்
  • சேவைகள் மற்றும் டிரைவர்ஸ் - டிரைவர்ஸ் மற்றும் விண்டோஸ் மென்பொருட் சேவைகளைக் கண்காணித்தல்
  • மென்பொருள் நடத்தை - மென்பொருட்களின் இயங்கும் போது அதன் நடத்தைகள் கண்காணிக்கப்படுகின்றன.
  • விண்டோஸ் சேர்க்கைகள் - மென்பொருள் யுட்டிலிட்டிஸ் என்கின்ற மென்பொருட்களின் பயன்பாட்டை இலகுவாக்கும் அல்லது வசதிகளைச் சேர்க்கும் சேர்க்கைகளின் நடத்தைகளை அவதானித்தல்.

வெளியிணைப்புக்கள் தொகு

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்டோஸ்_டிஃபென்டர்&oldid=3588357" இலிருந்து மீள்விக்கப்பட்டது