.நெட் வரைவுரு
.நெட் வரைவுரு (.NET Framework, .நெட் பிரேம்வொர்க்)[1],(டொட் நெட், dot net என்று ஒலிக்கப்படுகிறது) என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் கட்டமைப்பு ஆகும். இது மைக்ரோசாப்ட் விண்டோசில் இயங்குகிறது.
உருவாக்குனர் | மைக்ரோசாப்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | 13 பெப்ரவரி 2002 |
அண்மை வெளியீடு | 4.5.2 (4.5.51209.34209) / 6 மே 2014 |
இயக்கு முறைமை | விண்டோசு 98 உம் அதற்புக் பின்னரும், விண்டோசு என். டி. 4.0 உம் அதற்குப் பின்னரும். |
மென்பொருள் வகைமை | மென்பொருள் சட்டகம் |
உரிமம் | மூடிய மூலம் |
இணையத்தளம் | microsoft |
இந்த வரைவுரு பல உலக மொழிகளை உறுதுணை செய்கிறது (ஒவ்வொரு மொழியும் பிற மொழிகளில் எழுதப்பட்ட குறியீடுகளை பயன்படுத்த முடியும்). இவ்வரைவுருவில் எழுதப்பட்ட நிரல் மொழிகள் CLR எனப்படும் ஒரு மெய்நிகர் இயந்திரத்தால் (application virtual machine) இயக்கப்படுகின்றன.
இந்த CLR பாதுகாப்பு, நினைவக மேலாண்மை, மற்றும் பிழை கையாளுதல் ஆகிய சேவைகளை வழங்குகிறது. பொதுவாக CLR மற்றும் Class Library சேர்ந்ததே .நெட் பிரேம்வொர்க் எனப்படுகிறது.
பயனர் இடைமுகம், தகவல் பெறுதல், தரவுத்தளம் இணைப்பு, மறையீட்டியல், வலைத்தளங்கள் உருவாக்கம் மற்றும் நெட்வொர்க் தொடர்புகள் போன்ற அடிப்படை வசதிகளை .நெட் பிரேம்வொர்க் வழங்குகிறது.
. நெட் மென்பொருள்கள் பெரும்பாலும் விசுவல் ஸ்டுடியோ எனப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனம் IDE மூலம் உருவாக்கப்படுகின்றது.
வரலாறு
தொகுமைக்ரோசாப்ட் நிறுவனம் .நெட் பிரேம்வொர்க்- ஐ 1990இன் இறுதிகளில் "அடுத்த தலைமுறை விண்டோஸ் சேவைகள் என்ற பெயரில் உருவாக்க தொடங்கியது. 2000 ஆம் ஆண்டு இறுதியில் .நெட் 1.0 எனப்படும் முதலாம் பீட்டா பதிப்பை வெளியிட்டது. 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இல் .நெட் பிரேம்வொர்க் 4.0 பதிப்பை விசுவல் ஸ்டூடியோ 2010- உடன் வெளியிடப்பட்டது.
நெட் கட்டமைப்பின் 3.0 பதிப்பு விண்டோஸ் சர்வர் 2008 மற்றும் விண்டோஸ் விஸ்டா உடன் சேர்க்கப்பட்டுள்ளது. பதிப்பு 3.5 விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 R2 உடன் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
- .நெட் பிரேம்வொர்க் பதிப்புகள்
- பீட்டா பதிப்பு நவம்பர் 2000
- 1.0 ஜனவரி 2002
- 1.1 ஏப்ரல் 2003
- 2.0 2005
- விசுவல் ஸ்டூடியோ .நெட் பதிப்புகள்
- பீட்டா பதிப்பு நவம்பர் 2000
- VS.NET 2002 பெப்ரவரி 2002
- VS.NET 2003 ஏப்ரல் 2003
- VS.NET 2005
- VS.NET 2010
- VS.NET 2012
- VS.NET 2013
வடிவமைப்பு அம்சங்கள்
தொகு- .நெட் பிரேம்வொர்க் -இன் ஒவ்வொரு பதிப்பும் அதன் முந்தைய பதிப்புடன் உறுதுணை செய்கிறது (Interoperability).
- எல்லா . நெட் பிரேம்வொர்க் நிரல்களும் CLR -இன் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.CLR நினைவக மேலாண்மை, பாதுகாப்பு, மற்றும் பிழை கையாளுதல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
- . நெட் பிரேம்வொர்க் பல நிரலாக்க மொழிகளை அனுமதிக்கிறது. ஒரு மொழியில் எழுதப்பட்ட ப்ரோக்ராமை மற்றொரு மொழியில் பயன்படுத்த முடியும்.(Language independence)
- ஒரு மென்பொருளை வடிவமைக்க தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் . நெட் பிரேம்வொர்க் -ன் Base Class Library
வழங்குகின்றது.
கட்டமைப்பு
தொகு- பல மொழிகளை support செய்யும் பொதுவான பிரேம்வொர்க்
- .அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள்.
- அடிப்படை தேவைகளுக்கான Class library -கள்.
- நினைவக மேலாண்மை (Memory management )
மேற்கோள்கள்
தொகு- ↑ http://msdn.microsoft.com/en-in/vstudio/aa496123.aspx ..நெட் வரைவுரு மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகள்
- ↑ "நிர்வாகிகளுக்கான டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5 நிறுவுதல் கையேடு". எம்எஸ்டிஎன். Microsoft. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2008.