மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ

மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ என்பது ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கச்சூழல் (Integrated Development Environment - IDE) பயன்பாடாகும். இப்பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு மேம்படுத்துகிறது. இதனைப் பயன்படுத்தி, முனையம் (கன்சோல்) மற்றும் எழுத்து வரைகலை (கிராஃபிக்கல்) பயனர் இடைமுக பயன்பாடுகளை உருவாக்க முடியும், கூடவே விண்டோஸ் ஃபார்ம்ஸ் பயன்பாடுகள், வலை தளங்கள், வலை பயன்பாடுகள் மற்றும் வலை சேவைகள் ஆகியவற்றையும் உருவாக்கலாம். வலைசேவைகளானது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் விண்டோஸ் மொபைல், விண்டோஸ் சிஈ, டாட்நெட் ஃப்ரேம்வொர்க், டாட்நெட் சுருக்க ஃப்ரேம்வொர்க் மற்றும் மைக்ரோசாஃப்ட் சில்வர்லைட் போன்ற ஆதரிக்கப்படும் தளம் (ப்ளாட்ஃபார்ம்) ஆகியவற்றிலும் இயங்கும் படியாக, இயல்பான குறியீடு அதனுடன் நிர்வகிக்கப்பட்ட குறியீடு ஆகியவற்றைக் கொண்டும் வடிவமைக்க முடியும்.

Microsoft Visual Studio
உருவாக்குனர்Microsoft
மொழிC++
இயக்கு முறைமைMicrosoft Windows
கிடைக்கும் மொழிChinese (Simplified), Chinese (Traditional), English, French, German, Italian, Japanese, Korean, Spanish, Russian
மென்பொருள் வகைமைIntegrated Development Environment
உரிமம்Microsoft EULA
இணையத்தளம்msdn.microsoft.com/vstudio

விஷுவல் ஸ்டுடியோவில் இன்டலிசென்ஸ் மற்றும் குறியீடு பிரித்தெடுத்தல் ஆகியவற்றை ஆதரிக்கும் குறியீடு திருத்தி உள்ளது. இதனுடன் ஒருங்கிணைந்த பிழைதிருத்தியும் உண்டு, இது மூல நிலை பிழைதிருத்தியாகவும் இயந்திரநிலை பிழைதிருத்தியாகவும் பணிபுரியக்கூடியது. பிற கட்டமைந்த கருவிகளில், GUI பயன்பாடுகளை கட்டமைப்பதற்கான படிவங்கள் வடிவமைப்பான், வலை வடிவமைப்பான், கிளாஸ் வடிவமைப்பான் மற்றும் தரவுத்தள திட்ட அமைப்பு வடிவமைப்பான் ஆகியவை அடங்கும். எல்லா நிலைகளிலும் செயல்பாட்டை அதிகரிக்கக்கூடிய செருகுநிரல்களை இது ஏற்றுக்கொள்கிறது—இதில் மூல கட்டுப்பாட்டு அமைப்புகளும் அடங்கும் (எடுத்துக்காட்டாக, சப்வெர்ஷன் மற்றும் விஷுவல் சோர்ஸ்சேஃப் போன்றவை). இதனால் களம் சார்ந்த மொழிகளுக்காக புதிய கருவித்தொகுப்புகள் மற்றும் விஷுவல் வடிவமைப்பாளர்கள் அல்லது மென்பொருள் உருவாக்குதல் வாழ்க்கை சுழற்சியின் பிற பகுதிகளுக்கு உதவும் கருவித்தொகுப்புகள் (டீம் ஃபவுண்டேஷன் சர்வர் கிளையன்ட்: டீம் எக்ஸ்ப்ளோரர்) போன்றவற்றை இணைப்பது எளிதாகிறது.

மொழி சேவைகளின் மூலமாக விஷுவல் ஸ்டுடியோ மொழிகளை ஆதரிக்கிறது. இவற்றின் மூலமாக பிழைதிருத்தியும் குறியீடு திருத்தியும் (பல மாறுபடும் நிலைகளில்) கிட்டத்தட்ட எந்தவொரு நிரலாக்க மொழியையும் ஆதரிக்கிறது. குறிப்பிட்ட மொழிசார்ந்த சேவை இருக்க வேண்டியது அவசியம். கட்டமைக்கப்பட்ட மொழிகளில், சி/சி++ (விஷுவல் சி++ வழியாக), விபிடாட்நெட் (விஷுவல் பேசிக் டாட்நெட் வழியாக), மற்றும் சி# (விஷுவல் சி# வழியாக) ஆகியவை அடங்கும். எஃப்#, எம், பைத்தான் மற்றும் ரூபி ஆகிய மொழிகளுக்கான ஆதரவு, தனியாக மொழி சேவைகள் நிறுவப்பட்டால் கிடைக்கின்றன. XML/XSLT, HTML/XHTML, ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் CSS போன்றவற்றையும் இது ஆதரிக்கிறது. மொழி சார்ந்த விஷுவல் ஸ்டுடியோ பதிப்புகளும் கிடைக்கின்றன, இது பயனர்களுக்கு இன்னும் கட்டுப்படுத்தப்பட்ட மொழி சேவைகளை வழங்குகிறது. இந்த தனித்தனி தொகுப்புகள் மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக், விஷுவல் ஜே#, விஷுவல் சி#, மற்றும் விஷுவல் சி++ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

விசுவல் ஸ்டுடியோவின் அடிப்படை பதிப்பான சமூகப் பதிப்பு இலவசாமாகக் கிடைக்கிறது.

கட்டமைப்பு

தொகு

உள்ளார்ந்த விதமாக எந்தவொரு நிரலாக்க மொழி, தீர்வு அல்லது கருவியையும் விஷுவல் ஸ்டுடியோ ஆதரிப்பதில்லை. ஆனால், வேறுபட்ட செயல்பாடுகளை செருகு நிரல்களாக பயன்படுத்த இது அனுமதிக்கிறது. குறிப்பிட்ட செயல்பாடுகள் விஎஸ்தொகுப்புகளாக குறியீட்டாக்கம் செய்யப்படுகின்றன. நிறுவப்படும்போது, இந்த செயல்பாடுகள் ஒரு சேவை யாக கிடைக்கிறது. இந்த ஐடிஈ மூன்று சேவைகளை வழங்குகிறது: செயல் திட்டங்களையும் தீர்வுகளையும் ஒழுங்குப்படுத்த உதவும் SVsதீர்வு; சாளரமாக்கல் மற்றும் பயனர் இடைமுக செயல்பாட்டை வழங்கும் SVsUIஷெல் (தாவல்கள், கருவிப்பட்டிகள் மற்றும் கருவிச்சாளரங்கள் அடங்கியது); மற்றும் VSதொகுப்புகளின் பதிவுசெய்தலில் உதவக்கூடிய SVsஷெல் ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஐடிஈ ஆனது சேவைகளுக்கு இடையேயான ஒழுங்கமைப்பு மற்றும் தகவல் தொடர்புக்கு பொறுப்பானதாகும்.[1] எல்லா திருத்திகள், வடிவமைப்புகள், செயல்திட்ட வகைகள் மற்றும் பிற கருவிகள் VSதொகுப்புகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. விஷுவல் ஸ்டுடியோ VSதொகுப்புகளை அணுக COM களைப் பயன்படுத்துகிறது. விஷுவல் ஸ்டுடியோ SDKவில் நிர்வகிக்கப்பட்ட தொகுப்பு கட்டமைப்பு (Managed Package Framework - MPF ) அடங்கியுள்ளது, இது COM -இடைமுகங்களைச் சுற்றியுள்ள நிர்வகிக்கப்பட்ட ரேப்பர்களின் தொகுப்பாகும், இவற்றால் தொகுப்புகளானவை எந்தவொரு CLI இணக்க மொழியிலும் எழுதப்பட அனுமதிக்கப்படுகிறது.[2] ஆனாலும், MPF விஷுவல் ஸ்டுடியோ COM இடைமுகம் வெளிப்படுத்தும் எல்லாவிதமான செயல்பாடுகளையும் வழங்குவதில்லை.[3] பின்னர் இந்த சேவைகளை பிற தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்திக் கொள்ள முடியும், இவை விஷுவல் ஸ்டுடியோ ஐடிஈக்கு கூடுதல் செயல்பாடுகளை வழங்குகிறது.

ஒரு குறிப்பிட்ட நிரலாக்க மொழிக்கான ஆதரவானது மொழிச்சேவை என்ற குறிப்பிட்ட VSதொகுப்பைப் பயன்படுத்துவதால் கிடைக்கிறது. ஒரு மொழி சேவை என்பது, பலவகையான இடைமுகங்களை வரையறுக்கிறது, எனவே VSதொகுப்பு, பல செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்கக்கூடும்.[4] இந்த வகையில் சேர்க்கப்படக்கூடிய செயல்பாடுகளில், சிண்டேக்ஸ் நிறமிடல், அறிக்கை முடித்தல், அடைப்புக்குறி பொருத்தம், அளவு தகவல் உதவிக்குறிப்புகள், உறுப்பினர் பட்டியல்கள் மற்றும் பின்னணி தொகுத்தலுக்கான பிழை குறிப்பான்கள் (மார்க்கர்கள்) ஆகியவை அடங்கும்.[4] இடைமுகம் நடைமுறைப்படுத்தப்பட்டால், செயல்பாடானது, அந்த மொழிக்கு கிடைக்கும். மொழி சேவைகளானவை ஒரு மொழிக்கு ஒன்று என்ற அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறைகளை, அந்த மொழிக்கான பார்சர் அல்லது தொகுப்பியிலிருந்து குறியீடுகளை மீண்டும் பயன்படுத்துமாறு செய்ய முடியும்.[4] மொழி சேவைகளை இயல்பான குறியீடு அல்லது நிர்வகிக்கப்பட்ட குறியீடு ஆகியவற்றில் ஒன்றில் நடைமுறைப்படுத்தலாம். இயல்புநிலை குறியீட்டுக்கு, இயல்புநிலை COM இடைமுகங்கள் அல்லது பேபல் கட்டமைப்பு (விஷுவல் ஸ்டுடியோ SDK வின் ஒரு பகுதி) பயன்படுத்தப்பட வேண்டும்.[5] நிர்வகிக்கப்பட்ட குறியீட்டுக்கு, MPF -இல் எழுதுதல் நிர்வகிக்கப்பட்ட மொழிசேவைகளுக்கான ரேப்பர்கள் அடங்கியுள்ளன.[6]

விஷுவல் ஸ்டுடியோவில் எந்தவிதமான மூலக் கட்டுப்பாட்டு ஆதரவும் கட்டமைக்கப்படவில்லை, ஆனால் இது MSSCCI (மைக்ரோசாஃப்ட் சோர்ஸ் கோட் கன்ட்ரோல் இன்டர்ஃபேஸ்) -ஐ வரையறுக்கிறது, இதனால் மூலக் கட்டுப்பாட்டு அமைப்பு முறைகள் IDE உடன் ஒருங்கிணைக்கப்பட முடியும்.[7] பலவகையான மூலக் கட்டுப்பாட்டு செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த தேவையான செயல்பாடுகளின் தொகுப்பை MSSCCI வரையறுக்கிறது.[8] MSSCCI ஆனது, முதன்முதலில் விஷுவல் ஸ்டுடியோ 6.0 விஷுவல் சோர்ஸ்சேஃப் ஐ ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்டது, பின்னர், விஷுவல் ஸ்டுடியோ SDK வழியாக இது திறக்கப்பட்டது. விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2002 MSSCCI 1.1 -ஐ பயன்படுத்தியது மற்றும் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 MSSCCI 1.2 -ஐ பயன்படுத்தியது. விஷுவல் ஸ்டுடியோ 2005 மற்றும் 2008 ஆகிய இரண்டுமே MSSCCI பதிப்பு 1.3 -ஐ பயன்படுத்துகின்றன, இதனால் மறுபெயரிட்டல், நீக்குதல் செயல்முறை மற்றும் ஒத்திசையாத திறத்தல் ஆகியவற்றுக்கான ஆதரவு அதிகரிக்கிறது.[7]

விஷுவல் ஸ்டுடியோவானது, இந்த சூழலின் ஒன்றுக்கு மேற்பட்ட நேர்வுகள் ஒரே நேரத்தில் இயங்குவதை அனுமதிக்கிறது (ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய தனிப்பட்ட VSதொகுப்புகள் உண்டு). இந்த நேர்வுகள், வெவ்வேறான பதிவக பகுதிகளைப் பயன்படுத்துகின்றன (இங்கு பயன்படுத்தியுள்ள சூழலில் பொருளை அறிந்து கொள்ள சொல்லின் MSDN வரையறையை காண்க: "ரிஜிஸ்ட்ரி ஹைவ் ") இதனால் அவற்றின் உள்ளமைவு நிலை சேகரிக்கப்படுகிறது மற்றும் அவை AppId (பயன்பாட்டு ஐடி) மூலமாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நேர்வுகளானவை AppId-சார்ந்து தொடங்கப்படுகின்றன, AppIdயைத் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட .exe யானது, மூல ஹைவை அமைக்கிறது, பின்னர் IDE ஐ தொடங்குகிறது. ஒரு ஆப்ஐடிக்கு பதிவு செய்யப்பட்ட VSதொகுப்புகள் அந்த ஆப் ஐடிக்கான பிற VSதொகுப்புகளுடன் இணைந்துள்ளன. வெவ்வேறு ஆப்ஐடிகளைப் பயன்படுத்தி, விஷுவல் ஸ்டுடியோவின் பல்வேறான தயாரிப்பு பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன. விஷுவல் ஸ்டுடியோ எக்ஸ்பிரஸ் பதிப்பு தயாரிப்புகள், அவற்றின் சொந்த ஆப் ஐடிகளுடன் நிறுவப்படுகின்றன, ஆனால் ஸ்டாணர்ட், புரோஃபஷனல் மற்றும் டீம் சூட் தயாரிப்புகள் ஒரே ஆப் ஐடியைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன் விளைவாக, எக்ஸ்பிரஸ் பதிப்புகளை பிற பதிப்புகளுடன் ஒன்றாக நிறுவமுடியும், ஆனால் பிற பதிப்புகள் ஒரே நிறுவலை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும். புரோஃபஷனல் பதிப்பில், ஸ்டாண்டர்ட் பதிப்பை விட அதிக விஎஸ்தொகுப்புகள் உள்ளன, அதே போல டீம் சூட் பதிப்பில் மற்ற இரண்டு பதிப்புகளை விட அதிக விஎஸ்தொகுப்புகள் உள்ளன. விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் ஆப் ஐடி முறையானது விஷுவல் ஸ்டுடியோ ஷெல்லால் மாற்றீடு செய்யப்படுகிறது.[9]

அம்சங்கள்

தொகு

குறியீடு திருத்தி

தொகு

வேறு எந்தவொரு, ஐடிஈயைப் போன்றே, விஷுவல் ஸ்டுடியோவும் ஒரு குறியீடு திருத்தியைக் கொண்டுள்ளது. இது சிண்டேக்ஸ் தனிப்படுத்தல் மற்றும் குறியீடு நிறைவு செய்தல் ஆகியவற்றை மட்டுமின்றி, இன்டெலிசென்ஸைப் பயன்படுத்தி மாறிகள், செயல்பாடுகள் மற்றும் மெத்தடுகள் ஆகியவற்றையும் ஆதரிக்கிறது, மேலும் மொழிசார்ந்து உருவாக்கப்படுபவையான லூப்கள் மற்றும் வினவல்கள்(queries) ஆகியவற்றையும் ஆதரிக்கிறது.[10] இன்டலிசென்ஸ் சேர்க்கப்பட்ட மொழிகளால் ஆதரிக்கப்படுகிறது, அதேபோல வலைதளங்களை உருவாக்குதல் மற்றும் வலை பயன்பாடுகளை உருவாக்குதல் போன்றவற்றின்போது XML மற்றும் கேஸ்கேடிங் ஸ்டைல் ஷீட்கள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றுக்கும் ஆதரவு உண்டு.[11][12] தானியங்கு நிறைவு பரிந்துரைகள், பயன்முறை சாராத பட்டியல் பெட்டியில் காண்பிக்கப்படுகின்றன, இது குறியீடு திருத்தியின் மேற்புறத்தில் அமைந்திருக்கும். விஷுவல் ஸ்டுடியோ 2008 க்கு பின்னர், இது, தற்காலிகமாக பாதி ஒளி ஊடுருவக்கூடிய ஒன்றாக மாற்றப்பட்து, இதனால் அதன் குறியீடு தெளிவாக காட்டப்படும்.[10] இந்த குறியீடு திருத்தி ஆதரிக்கப்படும் எல்லா மொழிகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

விஷுவல் ஸ்டுடியோ குறியீடு திருத்தியானது, குறியீடுகளில் அடையாளக்குறிகளை வைக்க அனுமதிக்கிறது, இதனால் விரைவான வழிசெலுத்தல் கிடைக்கும். வழிசெலுத்தலில் கிடைக்கும் பிற உதவிகளானவை, குறியீட்டு தொகுதிகளைச் சுருக்குதல் மற்றும் சாதாரண உரைத்தேடல் மற்றும் ரிஜெக்ஸ் தேடல் ஆகியவற்றுடன் அதிகரித்தல் தேடல் என்பதும் உண்டு.[13] குறியீட்டு திருத்தியானது, பல உருப்படி கிளிப்போர்டு மற்றும் ஒரு பணி பட்டியல் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.[13] குறியீடு திருத்தியானது, குறியிட்டு துண்டுகளை (ஸினிப்பெட்கள்) ஆதரிக்கிறது, இவை அடிக்கடி தேவைப்படும் குறியீடுகளின் டெம்ப்ளேட்களாக சேமிக்கப்பட்டு, குறியீட்டில் தேவைப்படும் இடத்தில் செருகிக்கொள்ளுமாறு கிடைக்கின்றன, மேலும் இதை நடந்து கொண்டிருக்கும் செயல் திட்டத்திற்கு ஏற்ப தனிப்பயனாக்கிக் கொள்ளவும் முடியும். குறியீட்டு துண்டுகளை நிர்வகிக்க உதவும் ஒரு நிர்வாகக் கருவியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவிகள் மிதக்கும் சாளரங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன இவற்றை பயன்படுத்தாதபோது தானாகவே மறையுமாறு அல்லது திரையின் ஓரத்தில் பொருந்துமாறு அமைத்துக் கொள்ளலாம். விஷுவல் ஸ்டுடியோ குறியீடு திருத்தியானது, குறியீடு பிரித்தெடுத்தலையும் ஆதரிக்கிறது, இதில் அளவுரு மறுவரிசைப்படுத்தல், மாறி மற்றும் மெத்தடு மறுபெயரிடல், இடைமுகம் பிரித்தெடுத்தல் மற்றும் கிளாஸ் உறுப்பினர்களை குணங்களின் கீழ் கூட்டாக்குதல் ஆகியவை மற்றவற்றுடன் கூடவே காணப்படுகின்றன.

விஷுவல் ஸ்டுடியோ பின்னணி தொகுத்தலை ஆதரிக்கிறது (இன்கிரிமென்டல் தொகுத்தல் என்றும் அழைக்கப்படுகிறது).[14][15] ஒரு குறியீட்டை எழுதும்போதே, விஷுவல் ஸ்டுடியோ அதை பின்னணியில் தொகுத்து, சிண்டேக்ஸ் மற்றும் தொகுத்தல் பிழை தொடர்பான பின்னூட்டத்தை வழங்கும், இவை சிவப்பு வரி அடிக்கோடுகள் மூலம் காட்டப்படும். எச்சரிக்கைகள் பச்சைநிற அடிக்கோடுகள் மூலம் காட்டப்படும். பின்னணி தொகுத்தலானது, இயக்கத்தக்க குறியீட்டை உருவாக்காது, ஏனெனில் அதற்கு வேறுபட்ட ஒரு தொகுப்பி தேவைப்படும்.[16] பின்னணி தொகுத்தலானது, முதன்முதலில் மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது சேர்க்கப்பட்ட எல்லா மொழிகளுக்குமாக விரிவடைந்துள்ளது.[15]

பிழைதிருத்தி

தொகு

மூல நிலை அளவிலும், கணினி நிலையிலும் செயல்படக்கூடிய ஒரு பிழை திருத்தி ஒன்றை விஷுவல் ஸ்டுடியோ கொண்டிருக்கிறது. இது நிர்வகிக்கப்பட்ட குறியீடு மற்றும் இயல்புநிலை குறியீடு ஆகிய இரண்டுடனும் செயல்புரிகிறது மற்றும் விஷுவல் ஸ்டுடியோவால் ஆதரிக்கப்படும் எந்தவொரு மொழியிலும் எழுதப்பட்ட பயன்பாடுகளை பிழை திருத்தம் செய்ய பயன்படுத்தலாம். கூடுதலாக, நடந்து கொண்டிருக்கும் ஒரு செயல்முறையை கண்காணித்து, அந்த செயல்முறைகளில் பிழைதிருத்தமும் இது செய்யமுடியும்.[17] நடந்து கொண்டிருக்கும் செயல்முறைக்கான மூலக் குறியீடு கிடைத்தால், இயங்கும் குறியீட்டை இது காண்பிக்கும். மூலக் குறியீடு கிடைக்கவில்லை என்றால், அது பிரித்தெடுக்கப்பட்டதைக் காண்பிக்கும். விஷுவல் ஸ்டுடியோ பிழைதிருத்தி, நினைவக டம்ப்களை உருவாக்கி, அவற்றை பின்னர் பிழைதிருத்தம் செய்யவும் பயன்படுத்தக்கூடும்.[18] பல தொடரிழைகளைக் கொண்ட நிரல்களும் ஆதரிக்கப்படுகின்றன. விஷுவல் ஸ்டுடியோ சூழலுக்கு வெளியே இயங்கும் ஒரு பயன்பாடு செயலிழந்தால் இது தொடங்கப்படுமாறும் உள்ளமைக்க முடியும்.

பிழை திருத்தியானது, உடைப்பு புள்ளிகளை அமைக்கவும் அனுமதிக்கிறது (இதனால் இயக்கமானது ஒரு குறிப்பிட்ட புள்ளியில் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்) மற்றும் கவனிப்புகள் செய்யலாம் (இதன் மூலம் இயக்கம் செயல்படும்போதே, மாறிகளின் மதிப்புகளைக் கண்காணிக்கலாம்).[19] உடைப்பு புள்ளிகளை, நிபந்தனை சார்ந்ததாகவும் அமைக்கலாம், அதாவது, ஒரு நிபந்தனை பொருந்தினால் மட்டும் அவை இயங்குமாறு அமைக்க முடியும். குறியீட்டில் படிப்படியாக செல்ல முடியும், அதாவது மூலக்குறியீட்டின் ஒரு வரி மட்டும் ஒரு நேரத்தில் இயங்குமாறு செய்யலாம்.[20] செயல்பாடுகளை பிழை திருத்தம் செய்ய, அவற்றில் நுழைய முடியும் அல்லது, அவற்றைத் தவிர்க்க முடியும் , அதாவது செயல்பாட்டின் அங்கமானது, கைமுறை ஆய்வுக்கு கிடைக்காது.[20] பிழைதிருத்தியானது திருத்தித் தொடர் என்பதை ஆதரிக்கிறது, அதாவது, பிழை திருத்தும்போதே, குறியீடு திருத்தப்படுவதற்கு இது உதவுகிறது (32 பிட்டில் மட்டுமே; 64 பிட்டில் ஆதரிக்கப்படுவதில்லை).[21] பிழைத் திருத்தத்தின்போது, ஏதேனும் மாறியின் மீது சுட்டியை கொண்டு சென்றால், அதனுடைய தற்போதைய மதிப்பு காண்பிக்கப்படும் ("தரவு உதவிக்குறிப்பு"), அந்த மதிப்பை நாம் விரும்பியவாறு திருத்திக் கொள்ளவும் முடியும். குறியீட்டாக்கத்தின்போது, விஷுவல் ஸ்டுடியோ பிழைதிருத்தியானது, இமிடியேட் கருவி சாளரத்திலிருந்து சில செயல்பாடுகளை இயக்க அனுமதிக்கிறது. ஒரு மெத்தடுக்கான அளவுருக்கள், உடனடி சாளரத்திலிருந்துதான் வழங்கப்படுகின்றன.[22]

டிசைனர்

தொகு

ஏராளமான வடிவமைப்பு உதவிகளை உருவாக்கத்தின்போதே, விஷுவல் ஸ்டுடியோவில் பெற முடியும். இந்த கருவிகளில்:

விண்டோஸ் ஃபார்ம்ஸ் டிசைனர்
விண்டோஸ் பார்ம்ஸ் என்பதைப் பயன்படுத்தி ஜியூஐ பயன்பாடுகளைக் கட்டமைக்க இந்த விண்டோஸ் பார்ம்ஸ் டிசைனர் பயன்படுகிறது. இதில் பல பயனர் இடைமுக விட்ஜெட் மற்றும் கட்டுப்பாடுகளின் பேல்லட் உள்ளது (பொத்தான்கள், வளர்ச்சி பட்டிகள், லேஅவுட் கன்டெய்னர்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் போன்றவை அடங்கும்) இவற்றை ஃபார்ம் பரப்பிற்கு இழுத்து விடுவித்துக் கொள்ள முடியும். பிற கன் டெய்னர்களுக்குள் கட்டுப்பாடுகளை வைப்பதன் மூலம் அல்லது அவற்றை ஃபார்மின் பக்கத்தில் பூட்டுவதன் மூலம் தளவமைப்பைக் கட்டுப்படுத்தலாம். தரவைக் காட்டும் கட்டுப்பாடுகள் (உரை பெட்டி, பட்டியல் பெட்டி, கட்டக்காட்சி போன்றவை) தரவுடன் இணைந்ததாக மாற்றில், ஒரு தரவுத்தளத்துடன் இணைந்ததாக அல்லது வினவல்களுடன் இணைந்ததாக செய்ய முடியும். குறியீட்டுடன் பயனர் இடைமுகமானது, ஒரு நிகழ்வு சார்ந்த நிரலாக்க மாதிரியின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டுக்கு, டிசைனரானது சி# அல்லது விபிடாட்நெட் குறியீட்டை உருவாக்குகிறது.
WPF டிசைனர்
WPF டிசைனரானது, சிடர் ,[23] என்ற குறியீட்டு பெயர் கொண்டது, அது விஷுவல் ஸ்டுடியோ 2008 இல் வெளியிடப்பட்டது. விண்டோஸ் ஃபார்ம் டிசைனரைப் போன்று, இதுவும் இழுத்து விடுவித்தலை ஆதரிக்கிறது. விண்டோஸ் விளக்கக்காட்சி அடிப்படையை இலக்காகக் கொண்ட பயனர் இடைமுகங்களை வடிவமைக்க இவை உதவுகின்றன. எல்லா வகையான WPF செயல்பாடும், தரவு இணைப்பும் தானியங்கு தளவமைப்பு நிர்வாகமும் இணைந்து, இதை ஆதரிக்கிறது. பயனர் இடைமுகத்திற்கு, இது XAML குறியீட்டை உருவாக்குகிறது. உருவாக்கப்பட்ட XAML கோப்பானது, மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பிரஷன் டிசைன் உடன் இணக்கமானது. XAML குறியீடானது ஒரு குறியீடு-பின்னணியில் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாதிரி ஆகும்.
வலை வடிவமைப்பு/உருவாக்கம்
விஷுவல் ஸ்டுடியோ, வலைதள திருத்தி மற்றும் வடிவமைப்பையும் கொண்டுள்ளது, இது, விட்ஜெட்களை இழுத்து விடுவிப்பதன் மூலம் வடிவமைக்கத்தக்கது. ASP.NET பயன்பாடுகளை உருவாக்க பயன்படும் மற்றும் HTML, CSS மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் ஆகியவற்றை ஆதரிக்கும். இது குறியீடு பின்னணியில் மாதிரியைப் பயன்படுத்தி, ASP.NET குறியீட்டுடன் இணைக்கப்படுகிறது. விஷுவல் ஸ்டுடியோ 2008க்கு பின்னர், தளவமைப்பு எஞ்சினானது, மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பிரஷன் வெப் என்பதுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. MVC தொழில்நுட்பத்துக்கான ASP.NET MVC ஆதரவும் தனித்தனி பதிவிறக்கங்களாக கிடைக்கின்றன [1] மற்றும் மைக்ரோசாஃப்ட் வழங்கும் டைனமிக் டேட்டா செயல்திட்டமும் கிடைக்கிறது [2]
கிளாஸ் டிசைனர்
UML வடிவழகுகைப் பயன்படுத்தி கிளாஸ் டிசைனரைப் பயன்படுத்தி, கிளாஸ்களை உருவாக்கவும் திருத்தவும் முடியும் (இதில் அதன் உறுப்பினர்களும், அவற்றின் அணுகலும் அடங்கும்). கிளாஸ் டிசைனரானது, கிளாஸ்கள் மற்றும் மெத்தட்களுக்கு சி# மற்றும் விபிடாட்நெட் குறியீட்டை உருவாக்கக்கூடும். கையால் எழுதப்பட்ட கிளாஸ்களிலிருந்து படங்களையும் இது உருவாக்கும்.
தரவு டிசைனர்
தரவுத்தள திட்ட அமைப்பை காட்சி ரீதியாக திருத்துவதற்கு தரவு டிசைனர் பயன்படுகிறது, இதில் தட்டச்சு செய்யப்பட்ட அட்டவணைகள், முதன்மை மற்றும் பிற விசைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். காட்சி பயன்முறையிலிருந்து வினவல்களை வடிவமைக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.
மேப்பிங் டிசைனர்
விஷுவல் ஸ்டுடியோ 2008 முதல், மேப்பிங் டிசைனரானது LINQ இலிருந்து SQL க்கு ஆல் மட்டுமே, தரவுத்தள அமைப்புகள் மற்றும் அதனை அமைக்கும் கிளாஸ்கள் ஆகியவற்றை மேப்பிங் செய்வதற்காக வடிவமைக்கப் பயன்படுத்தப்பட்டன. தற்போது ORM அணுகுமுறையின் புதிய தீர்வுகள் மூலம் ADO.NET என்டிடி ஃப்ரேம்வொர்க் மூலமாக பழைய தொழில்நுட்பம் மாற்றீடு செய்யப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளது.

பிற கருவிகள்

தொகு
தாவல் திறப்பு உலவி
திறந்துள்ள எல்லா தாவல்களையும் பட்டியலிடவும் அவற்றுக்கு இடையே மாறவும் தாவல் திறப்பு உலவி உதவக்கூடும். இது CTRL+TAB விசையின் மூலம் செயல்படும்.
குணங்கள் திருத்தி
விஷுவல் ஸ்டுடியோவின் ஒரு கிராஃபிக்கல் பயனர் இடைமுக பலகத்தில் உள்ள குணங்கள் திருத்தி கருவியானது, குணங்களைத் திருத்த உதவுகிறது. எல்லா ஆப்ஜெக்ட்களுக்கும் கிளாஸ்கள், படிவங்கள், வலை பக்கங்கள் மற்றும் பிற உருப்படிகள் உட்பட கிடைக்கும் எல்லா பண்புகளையும் இது பட்டியலிடுகிறது.
ஆப்ஜெக்ட் உலாவி
ஆப்ஜெக்ட் உலாவி என்பது மைக்ரோசாஃப்ட் டாட்நெட்டுக்கான ஒரு பெயர்வெளி மற்றும் கிளாஸ் நூலக உலாவியாகும். இது நேம்ஸ்பேஸ்களில் உலாவவும், (படிநிலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டது) நிர்வகிக்கப்பட்ட அசெம்ப்ளிக்கும் பயன்படுகிறது. இந்த படிநிலையானது, கோப்பு அமைப்பில் உள்ள அமைப்பில் நிறுவனத்தைக் காண்பிக்கக்கூடும் அல்லது காண்பிக்காமல் இருக்கக்கூடும்.
தீர்வு உலவி
விஷுவல் ஸ்டுடியோவில், ஒரு பயன்பாட்டை கட்டமைக்க உதவும் குறியீட்டு கோப்புகள் மற்றும் பிற ஆதராங்களையும் பயன்படுத்தி தீர்வைக் கொண்டதாகும். இந்த தீர்வில் உள்ள கோப்புகள் படிநிலையில் அமைக்கப்பட்டுள்ளன, இது கோப்பு அமைப்பில் அமைப்பைக் காண்பிக்கலாம் அல்லது காண்பிக்காமல் இருக்கலாம். ஒரு தீர்வில் உள்ள கோப்புகளை நிர்வகிக்கவும் அதில் உலாவவும் தீர்வு உலவி பயன்படுகிறது.
டீம் எக்ஸ்ப்ளோரர்
டீம் எக்ஸ்ப்ளோரர் என்பது, டீம் ஃபவுண்டேஷன் சர்வர், ரிவிஷன் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றை, IDE உடன் ஒருங்கிணைக்கப் பயன்படுகிறது (மற்றும் திறவுமூல செயல்திட்டங்களான மைக்ரோசாஃப்ட்டின் கோட்ப்ளக்ஸ் வழங்குதல் சூழலுடன் இணங்குவதற்கான அடிப்படைகளையும் கொண்டது). மூலக் கட்டுப்பாட்டுடன், தனிப்பட்ட பணி உருப்படிகளைக் (பிழைகள், பணிகள் மற்றும் பிற ஆவணங்களும் இதில் அடங்கும்) காணவும் நிர்வகிக்கவும் திறனை வழங்குகிறது மற்றும் டிஎஃப்எஸ் புள்ளிவிவரங்களை உலாவவும் உதவுகிறது. டிஎஃப்எஸ் நிறுவலின் பகுதியாகவும் மற்றும் விஷுவல் ஸ்டுடியோ 2005[24] மற்றும் 2008 ஆகியவற்றின் பதிவிறக்கத்திற்காகவும் இது கிடைக்கிறது.[25] டீம் எக்ஸ்ப்ளோரர் என்பது, டிஎஃப்எஸ் சேவைகளை அணுகுவதற்கு மட்டும் பயன்படும் ஒரு சூழலாகும்.
தரவு உலவி
மைக்ரோசாஃப்ட் எஸ்க்யூஎல் சர்வர் நேர்வுகளில் உள்ள தரவுத்தளங்களை நிர்வகிக்க தரவு உலாவி பயன்படுகிறது. இது தரவுத்தள அட்டவணைகளை உருவாக்குதல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவுகிறது (T-SQL கட்டளைகளை வழங்குவது அல்லது தரவு டிசைனைரைப் பயன்படுத்துவது மூலமாக). வினவல்கள் மற்றும் சேமிக்கப்பட்ட நடைமுறைகள் ஆகியவற்றை உருவாக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது, இரண்டாவதாக கூறப்பட்டது SQL CLR வழியாக T-SQL அல்லது நிர்வகிக்கப்பட்ட குறியீடு ஆக இருக்கும். பிழைதிருத்தம் மற்றும் இன்டலிசென்ஸ் ஆதரவும் கிடைக்கிறது.
சேவையக உலாவி
சேவையக உலாவி கருவி என்பது, ஒரு அணுகப்படக்கூடிய கணினியில் தரவுத்தள இணைப்புகளை நிர்வகிக்க உதவும் ஒரு கருவியாகும். இயங்கும் விண்டோஸ் சேவைகள், செயல்திறன் கவுன்டர்கள், விண்டோஸ் ஈவென்ட் பதிவு மற்றும் செய்தி வரிசைகள் ஆகியவற்றை உலாவவும் அவற்றை தரவு மூலங்களாக பயன்படுத்தவும் உதவுகிறது.[26]
டாட்ஃபஸ்கேட்டர் சாஃப்ட்வேர் சர்வீசஸ் கம்யூனிட்டி பதிப்பு
விஷுவல் ஸ்டுடியோவில், ப்ரீஎம்டிவ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் டாட்ஃபஸ்கேட்டர் 'லைட்' பதிப்பு தரப்படுகிறது, இந்த மென்பொருள் குறியீட்டை புரியாததாக மாற்றவும், தயாரிப்பின் அளவைக் குறைக்கவும் பயன்படுகிறது.[27] விஷுவல் ஸ்டுடியோ 2010 முதல், டாட்ஃபஸ்கேட்டரின் இயங்குநேர நுண்ணறிவு திறன்களின் மூலம் தயாரிப்பில் இயங்கும் பயன்பாடுகளின் விவரங்களான இறுதிபயனர் பயன்பாட்டு விவரங்கள், செயல்திறன் மற்றும் நிலைப்புத்தன்மை விவரங்களை உருவாக்குநர்கள் சேகரிக்க முடியும்.[28]

நீட்டிப்பு

தொகு

விஷுவல் ஸ்டுடியோவின் செயல்திறன்களை அதிகமாக்குவதற்காக விஷுவல் ஸ்டுடியோ உருவாக்குநர்கள் நீட்டிப்புகளை எழுத முடியும். இந்த நீட்டிப்புகள் விஷுவல் ஸ்டுடியோவில் "செருகுநிரலாக" பயன்படுகின்றன மற்றும் அதன் செயல்திறனை அதிகரிக்கின்றன. மேக்ரோக்கள் , துணைநிரல்கள் மற்றும் தொகுப்புகள் ஆக நீட்டிப்புகள் வருகின்றன. மேக்ரோக்கள் என்பவை மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகள் மற்றும் செயல்களை குறிக்கின்றன, மற்றும் உருவாக்குநர்கள் அதனை நிரலாக்கத்தின்படி பதிவு செய்து, சேமித்து, மீண்டும் மீண்டும் இயக்கலாம் மற்றும் விநியோகிக்கலாம். ஆனாலும் மேக்ரோக்களை, புதிய கட்டளைகளை உருவாக்கவோ அல்லது கருவி சாளரங்களை உருவாக்கவோ பயன்படுத்த முடியாது. இவை விஷுவல் பேசிக் மூலம் எழுதப்பட்டவை மற்றும் தொகுக்கப்படாதவை.[3] துணைநிரல்கள் என்பவை விஷுவல் ஸ்டுடியோ ஆப்ஜெக்ட் மாடலுக்கான அணுகலை வழங்கக்கூடியவை மற்றும் அது IDE கருவிகளுடன் ஊடாடக்கூடியது. துணைநிரல்களை, புதிய செயல்பாட்டுக்காகவும் புதிய கருவி சாளரங்களை சேர்க்கவும் பயன்படுத்தலாம். COM வழியாக துணைநிரல்கள் IDE க்குள் சேர்க்கப்படுகின்றன மற்றும் எந்தவகையான COM-க்கு இணக்கமான மொழியிலும் உருவாக்கப்படலாம்.[3] தொகுப்புகளானவை விஷுவல் ஸ்டுடியோ SDK மூலம் உருவாக்கப்படடுகின்றன மற்றும் அதிகபட்ச நீட்டிப்பு நிலைகளை வழங்குகின்றன. டிசைனர்கள் மற்றும் பிற கருவிகள் உருவாக்கவும் மற்றும் பிற நிரலாக்க மொழிகளை ஒருங்கிணைக்கவும் இது பயன்படுகிறது. விஷுவல் ஸ்டுடியோ, இந்த செயல்முறைகளை முடிக்க SDK நிர்வகிக்கப்பட்ட API-ஐ வழங்குகிறது. ஆனாலும், நிர்வகிக்கப்பட்ட API ஆனது, நிர்வகிக்கப்படாததைப் போன்று விரிவானதாக இருப்பதில்லை.[3] விஷுவல் ஸ்டுடியோ 2005 -இன் ஸ்டாண்டர்ட் (அல்லது அதை விட உயர்ந்த) பதிப்புகளில் நீட்டிப்புகள் ஆதரிக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் பதிப்புகள் நீட்டிப்புகளுக்கான ஆதரவை வழங்குவதில்லை.

ஐடிஈ யின் தனிப்பயனாக்கப்பட்ட பதிப்பை உருவாக்குவதற்கான விஷுவல் ஸ்டுடியோ ஷெல் என்பது விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் அறிமுகப்படுத்தப்பட்டது. எந்தவொரு IDE -இலும் தேவையான செயல்பாட்டை வழங்கக்கூடிய VSதொகுப்புகளை விஷுவல் ஸ்டுடியோ ஷெல் வரையறுக்கிறது. அதற்கு மேலும், நிறுவலைத் தனிப்பயனாக்க பிற தொகுப்புகளையும் சேர்க்க முடியும். ஷெல்லின் தனிப்படுத்தப்பட்ட பயன்முறையானது, தொகுப்புகள் நிறுவப்பட்ட இடத்தில் புதிய ஆப் ஐடியை உருவாக்குகிறது. இவை வேறு செயலாக்க நிரலுடன் தொடங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது குறிப்பிட்ட சூழலுக்கு ஏற்ப தனிப்பயன் உருவாக்குதல் சூழல்களை உருவாக்குவதே லட்சியமாகும். ஒருங்கிணைந்த பயன்முறையானது, புரோஃபெஷனல்/ஸ்டாண்டர்ட்/டீம் கணினி பதிப்புகளில் தொகுப்புகளை நிறுவுகிறது, எனவே கருவிகள் இந்த பதிப்புகளுடன் ஒருங்கிணைகின்றன.[9] விஷுவல் ஸ்டுடியோ ஷெல் இலவசமாக பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது.

விஷுவல் ஸ்டுடியோ 2008 -இன் வெளியீட்டிற்கு பின்னர், மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ கேலரி பரணிடப்பட்டது 2009-03-09 at the வந்தவழி இயந்திரம் யை உருவாக்கியது. விஷுவல் ஸ்டுடியோவுக்கு தேவையான நீட்டிப்புகளை வெளியிடுவதற்கான மைய இடமாக இது தற்போது பயன்படுகிறது. சமூக உருவாக்குநர்கள் மற்றும் வணிகரீதியான உருவாக்குநர்கள், விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2002 முதல் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2008 வரையிலானவற்றுக்கு, அவர்களின் நீட்டிப்புகள் தொடர்பான விவரங்களைப் பதிவேற்றலாம். இந்த நீட்டிப்புகளை, தளத்தின் பயனர்கள் மதிப்பிடலாம் மற்றும் விமர்சிக்கலாம், இதனால் வெளியிடப்பட்ட நீட்டிப்புகளின் தரம் மதிப்பிடப்படும். தளத்தின் புதுப்பிப்புகள் தொடர்பான RSS ஓடைகள் மற்றும் குறியிடல் அம்சங்கள் ஆகியவையும் திட்டமிடப்பட்டுள்ளன.[29]

ஆதரிக்கப்படும் தயாரிப்புகள்

தொகு

சேர்க்கப்பட்ட தயாரிப்புகள்

தொகு
மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி++
மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி++ என்பது சி மற்றும் சி++ தொகுப்பியின் மைக்ரோசாஃப்ட் நடைமுறைப்படுத்தல் ஆகும், இதனுடன் விஷுவல் ஸ்டுடியோ IDE உடன் சேர்க்கப்பட்ட மொழி சேவைகள் மற்றும் குறிப்பிட்ட கருவிகள் ஒருங்கிணைப்பு ஆகியவையும் அடங்கும். இது சி பயன்முறை அல்லது சி++ பயன்முறையில் தொகுப்பை செய்யும். Cக்கு, இது ISO C தரமுறையையும், C99 குறிப்புகள் மற்றும் MS-குறிப்பான நூலக சேர்க்கைகள் ஆகியவை பயன்படுத்தப்படும்.[30] சி++ க்கு, இது ANSI C++ குறிப்புகளுடன் சில C++0x அம்சங்களையும் பயன்படுத்துகிறது.[31] நிர்வகிக்கப்பட்ட குறியீட்டை எழுதுவதற்கான C++/CLI விவரக்குறிப்புகளையும் இது ஆதரிக்கிறது, மேலும் கலவை குறியீடுகளையும் ஆதரிக்கிறது (இயல்புநிலை மற்றும் நிர்வகிக்கப்பட்ட குறியீடு). இயல்புநிலை குறியீடு அல்லது இயல்புநிலை மற்றும் நிர்வகிக்கப்பட்ட குறியீடு ஆகியவற்றை கொண்ட குறியீடு ஆகியவற்றை உருவாக்குவதற்கு மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி++ -ஐ நிலைநிறுத்தியுள்ளது. விஷுவல் சி++ COM மற்றும் MFC நூலகங்களை ஆதரிக்கிறது. MFC உருவாக்கத்திற்கு, MFC பாய்லர் பிளேட் குறியீட்டை உருவாக்குவதற்கும் தனிப்பயனாக்குவதற்கு உதவும் வழிகாட்டிகளை இது வழங்குகிறது. மேலும் MFC -ஐ பயன்படுத்தி கிராஃபிக்கல் பயனர் இடைமுக பயன்பாடுகளை உருவாக்கவும் உதவுகிறது. விஷுவல் சி++ ஆனது விஷுவல் ஸ்டுடியோ ஃபார்ம்ஸ் டிசைனரிலும் பயன்படுத்தப்படுகிறது. விஷுவல் சி++ ஆனது, விண்டோஸ் API உடனும் பயன்படுத்தப்படுகிறது. உள்ளார்ந்த செயல்பாடுகளை பயன்படுத்துவதை இது ஆதரிக்கிறது,[32] இவை தொகுப்பியால் கண்டறியப்படும் செயல்பாடுகள், நூலகத்தில் இல்லாதவை. நவீனகால சிபியூக்களின் SSE வழிகாட்டுதல்களை வெளிக்காட்ட உதவ உள்ளார்ந்த செயல்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. விஷுவல் சி++ OpenMP (பதிப்பு 2.0) விவரக்குறிப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.[33]
மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி#
மைக்ரோசாஃப்ட் விஷுவல் சி# என்பது சி# மொழியின் மைக்ரோசாஃப்ட் அணுகுமுறையாகும், இது டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கை இலக்காக கொண்டது, கூடவே, விஷுவல் ஸ்டுடியோ IDE ஆதரவு C# செயல்திட்டங்களை ஆதரிக்கும் மொழி சேவைகளும் இருந்தன. மொழி சேவைகள் விஷுவல் ஸ்டுடியோவின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது, அதேபோல தொகுப்பியானது டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கின் ஒரு பகுதியாக கிடைக்கிறது. விஷுவல் C# 2008 தொகுப்பியானது, சி# மொழி குற்ப்புகளின் 3.0 வெளியீட்டை ஆதரிக்கிறது. விஷுவல் சி# விஷுவல் கிளாஸ் டிசைனர், ஃபார்ம்ஸ் டிசைனர் மற்றும் தரவு டிசைனர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[34]
மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக்
மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக் என்பது விபிடாட்நெட் மொழியின் மைக்ரோசாஃப்டின் அணுகுமுறையாகும், இதனுடன் தொடர்புடைய கருவிகளும் மொழி சேவைகளும் அடங்கியுள்ளன. இது விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் (2002) உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. வேகமான பயன்பாடு உருவாக்கத்துக்காக மைக்ரோசாஃப்ட் விஷுவல் பேசிக்கை நிலைநிறுத்தியுள்ளது. கன்சோல் மற்றும் பயனர் இடைமுக பயன்பாடுகளை உருவாக்க விஷுவல் பேசிக்கைப் பயன்படுத்தலாம். விஷுவல் C# -ஐ போலவே, விஷுவல் பேஸிக்கும் விஷுவல் ஸ்டுடியோ கிளாஸ் டிசைனர், பார்ம்ஸ் டிசைனர் மற்றும் தரவு டிசைனர் ஆகியவற்றை ஆதரிக்கிறது. சி# -ஐ போன்றே, விபிடாட்நெட் தொகுப்பியானது, டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கின் ஒரு பகுதியாக கிடைக்கிறது, அதேபோன்று, விபிடாட்நெட்டை விஷுவல் ஸ்டுடியோவின் ஒரு பகுதியாக பயன்படுத்த உதவும் மொழி சேவைகள் ஒரு பகுதியாகவே கிடைக்கின்றன.
மைக்ரோசாஃப்ட் விஷுவல் வெப் டெவலப்பர்
வலை தளங்களையும் வலை பயன்பாடுகளையும் மற்றும் வலை சேவைகளையும் ASP.NET. மூலம் உருவாக்க மைக்ரோசாஃப்ட் வெப் டெவலப்பர் பயன்படுகிறது. இதற்கு சி# அல்லது விபிடாட்நெட் மொழிகள் பயன்படுத்தப்படலாம். வலை பக்க அமைப்புகளை காட்சி ரீதியாக வடிவமைக்க விஷுவல் வெப் டெவலப்பரை ஒரு உருவாக்குநர் பயன்படுத்தலாம்.
டீம் ஃபவுண்டேஷன் சர்வர்
விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் உடன் மட்டுமே சேர்க்கப்பட்ட, டீம் பவுண்டேஷன் சர்வரானது, ஒரு கூட்டு மென்பொருள் உருவாக்க செயல்திட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இது சேவையகம் சார் பின்புலமாக மூலக் கட்டுப்பாடு, தரவு சேகரிப்பு, அறிக்கையிடல், மற்றும் செயல்திட்டம் தடமறிதல் செயல்பாடுகள் ஆகியவற்றுக்காக உதவுகிறது. இது டீம் எக்ஸ்ப்ளோரர் ஐயும் கொண்டுள்ளது, இந்த கருவி TFS சேவைகளுக்கான பயனக கருவியாகும். விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டமுடன் இது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

முந்தைய தயாரிப்புகள்

தொகு
விஷுவல் பாக்ஸ்ப்ரோ
விஷுவல் பாக்ஸ்ப்ரோ என்பது ஒரு தரவு மைய ஆப்ஜெக்ட்-ஓரியண்டட் மற்றும் நடைமுறை வழி நிரலாக்க மொழியாகும். இது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய தயாரிப்பு. 1984 ஆம் ஆண்டில் பாக்ஸ் மென்பொருள் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்ப்ரோவில் (உண்மையில் பாக்ஸ்பேஸ் என்று அழைக்கப்பட்டது) இருந்து இந்த மென்பொருள் வருவிக்கப்பட்டது. விஷுவல் பாக்ஸ்ப்ரோவில், சொந்தமாக ஒரு தரவுத்தள எஞ்சின் ஒருங்கிணைக்கப்பட்டது, இதனால் பாக்ஸ்ப்ரோவின் எக்ஸ்பேஸ் திறன்கள் எஸ்க்யூஎல் வினவலையும் தரவு கணக்கீடுகளையும் ஆதரிக்கும். விஷுவல் பாக்ஸ்ப்ரோ என்பது, முழு அம்சங்களுடன் உள்ள, டைனமிக் நிரலாக்க மொழி ஆகும், இதற்கு கூடுதலாக பொது நோக்கு நிரலாக்க சூழல் எதுவும் தேவைப்படாது. 2007 ஆம் ஆண்டில், விஷுவல் பாக்ஸ்ப்ரோ என்பது அதன் 9வது வெளியீட்டின் சேவை தொகுப்பு 2 உடன் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்தது, ஆனால், 2015 ஆம் ஆண்டு வரை இதற்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் கூறியது.[35]
விஷுவல் சோர்ஸ்சேஃப்
மைக்ரோசாஃப்ட் விஷுவல் சோர்ஸ்சேஃப் என்பது ஒரு மூல கட்டுப்பாட்டு மென்பொருள் தொகுப்பாகும், இது சிறிய மென்பொருள் உருவாக்குதல் செயல்திட்டங்களை இலக்காக கொண்டது. சோர்ஸ்சேஃப் தரத்தளமானது, பல பயனர், பல செயல்முறை கோப்பு அமைப்பு தரவுத்தளமாகும், பூட்டுதல் மற்றும் பகிர்தல் ஆதரவை வழங்குவதற்கு விண்டோஸ் கோப்பு அமைப்பு தரவுத்தள முதன்மைகளை இது பயன்படுத்துகிறது. பல பயனர் அமைப்பின் எல்லா பதிப்புகளும், SMB (கோப்பு சேவையகம்) பிணையமாக்கலைப் பயன்படுத்துகிறது.[36][37][38] ஆனாலும், விஷுவல் சோர்ஸ்சேஃப் 2005 உடன், பிற பயனக சேவையக பயன்முறைகள் சேர்க்கப்பட்டன (லேன் பூஸ்டர் மற்றும் VSS இன்டர்நெட்), இவை ஒருவேளை பிற நெறிமுறைகளைப் பயன்படுத்தக்கூடும். விஷுவல் சோர்ஸ்சேஃப் 6.0 ஒரு தனிப்பட்ட தயாரிப்பாக கிடைக்கிறது[39] மற்றும் விஷுவல் ஸ்டுடியோ 6.0 உடன் சேர்க்கப்பட்டுள்ளது, ஆஃபீஸ் டெவலப்பர் எடிஷன் போன்றவற்றுடனும் கிடைக்கிறது. விஷுவல் சோர்ஸ்சேஃப் 2005 ஒரு தனிப்பட்ட தயாரிப்பாகவும் 2005 டீம் சூட்டுடனும் கிடைக்கிறது. மூலக் கட்டுப்பாட்டுக்கான டீம் ஃபவுண்டேஷன் சர்வர் உடன் விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஜே++/மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஜே#
ஜாவா மொழியின் (மைக்ரோசாஃப்ட் தொடர்பான நீட்டிப்புகளுடன்) மைக்ரோசாஃப்ட் அணுகுமுறையே மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஜே++ என்பதாகும். இதனுடன் பிற மொழிசார்ந்த சேவைகளும் இணைந்துள்ளன. சன் மைக்ரோசிஸ்டம்ஸின் சட்டப்பூர்வ எதிர்ப்புக்கு பின்னர் இது கைவிடப்பட்டது, அந்த தொழில்நுட்பம் விஷுவல் ஜே# க்கு மறு சுழற்சி செய்யப்பட்டது, இது டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கிற்கான மைக்ரோசாஃப்டின் ஜாவா கம்பைலர் ஆகும். ஜே# விஷுவல் ஸ்டுடியோஎ 2005 உடன் கிடைக்கிறது, ஆனால் விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் அது கைவிடப்பட்டது.
விஷுவல் இன்டர்டெவ்
விஷுவல் இன்டர்டெவ் என்பது மைக்ரோசாஃப்டின் ஆக்டிவ் சர்வ பக்க (ASP) தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வலை பயன்பாடுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. இது குறியீடு தொகுத்தலையும், தரவுத்தள சேவையக நிர்வாக கருவிகளையும் கொண்டுள்ளது. இது மைக்ரோசாஃப்டின் விஷுவல் வெப் டெவலப்பரால் மாற்றீடு செய்யப்பட்டு விட்டது.

பதிப்புகள்

தொகு
 
பல்வேறு வகைப்பட்ட விஷுவல் ஸ்டுடியோ பதிப்புகளுடன் உள்ள தொடர்புகளை விவரிக்கும் படம்

மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ பின்வரும் பதிப்புகளில் கிடைக்கின்றது:[40]

விஷுவல் ஸ்டுடியோ எக்ஸ்பிரஸ்
விஷுவல் ஸ்டுடியோவின் எக்ஸ்பிரஸ் பதிப்புகள் தனிப்பட்ட ஐடிஈகளின் தொகுப்பாகும். இவை ஒரு மொழிக்கு ஒன்று என்ற அடிப்படையில் விஷுவல் ஸ்டுடியோ ஐடிஈக்களின் சுருக்கமான பதிப்புகளாகும், அதாவது, தனிப்பட்ட விஷுவல் ஸ்டுடியோ ஷெல் ஆப் ஐடிகளில் ஆதரிக்கப்படும் மொழிகளின் மொழி சேவைகளை நிறுவுகின்றன. இது, பிற முறைகளை ஒப்பிடும்போது சிறிய அளவிலான கருவி தொகுப்புகளையே உள்ளடக்கியுள்ளது - தரவு டிசைனரில், தொலைநிலை தரவு தள ஆதரவு இல்லாமை, மற்றும் பல ஆதரிக்கப்படும் கருவிகள் மற்றும் அம்சங்கள் மற்றும் செருகுநிரல்களுக்கான ஆதரவு. x64 தொகுப்பிகள் விஷுவல் ஸ்டுடியோ எக்ஸ்பிரஸ் பதிப்பு ஐடிஈக்களுக்கு கிடைக்காது. எக்ஸ்பிரஸ் ஐடிஈக்களை மாணவர்கள் மற்றும் பழக்கத்திற்காக நிரலாக்கம் செய்பவர்களை இலக்காக கொண்டு மைக்ரோசாஃப்ட் வடிவமைத்துள்ளது. எக்ஸ்பிரஸ் பதிப்புகள், முழு MSDN நூலகத்தையும் பயன்படுத்தாது ஆனால் MSDN எக்ஸ்பிரஸ் நூலகத்தைப் பயன்படுத்தும். எக்ஸ்பிரஸ் ஐடிஈக்களின் பகுதிகளாக கிடைக்கும் மொழிகளாவன:
  • விஷுவல் பேசிக் எக்ஸ்பிரஸ்
  • விஷுவல் சி++ எக்ஸ்பிரஸ்
  • விஷுவல் சி# எக்ஸ்பிரஸ்
  • விஷுவல் வெப் டெவலப்பர் எக்ஸ்பிரஸ்
விஷுவல் ஸ்டுடியோ ஸ்டாண்டர்டு
விஷுவல் ஸ்டுடியோ ஸ்டாண்டர்டு பதிப்பானது ஆதரிக்கப்படும் எல்லா தயாரிப்புகளுக்கும் ஆதரவை வழங்குகிறது மற்றும் முழுமையான MSDN நூலகத்தையும் ஆதரிக்கிறது. இது XML மற்றும் XSLT திருத்தம், ஆப்ஜெக்ட் சோதனை பெஞ்ச்கள் ஆகியவற்றை ஆதரிக்கிறது மற்றும் ஒற்றை கிளிக் தொடங்குதல் தொகுப்புகளையும் உருவாக்கித்தருகின்றன. ஆனாலும், இது சர்வர் எக்ஸ்ப்ளோரர் அல்லது மைக்ரோசாஃப்ட் எஸ்க்யூஎல் சர்வர் போன்ற கருவிகளை உள்ளடக்கியதில்லை. மூன்று நீட்டிப்பு செயல்முறைகளில் இது துணை நிரல்களை மட்டும் ஆதரிக்கிறது. மொபைல் உருவாக்குதல் ஆதரவு விஷுவல் ஸ்டுடியோ 2005 ஸ்டாண்டர்டில் உள்ளது, ஆனாலும் விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் புரொஃபஷனல் மற்றும் உயர் பதிப்புகளில் மட்டுமே கிடைக்கிறது. தொலைநிலை பிழைதிருத்தம் விஷுவல் ஸ்டுடியோ 2008 புரொஃபஷனல் மற்றும் டீம் பதிப்புகளில் மட்டும் கிடைக்கிறது.
விஷுவல் ஸ்டுடியோ புரொஃபஷனல்
விஷுவல் ஸ்டுடியோ ஸ்டாண்டர்டில் உள்ள கருவிகள் அனைத்தும் புரொஃபெஷன்ல பதிப்பில் காணப்படுகின்றன. கூடவே மைக்ரோசாஃப்ட் எஸ்க்யூஎல் சர்வர் ஒருங்கிணைப்பு (விஷுவல் ஸ்டுடியோவிலிருந்து தரவுத்தளங்கள் உருவாக்கப்படுவதை அனுமதிக்கிறது) மற்றும் தொலை நிலை பிழைதிருத்தம் (2005 பதிப்புகளுக்கு) (இதனால் விஷுவல் ஸ்டுடியோ பிழைதிருத்தியிலிருந்தே தொலைநிலை கணினியிலிருந்து பிழைதிருத்தம் செய்ய முடியும். இதற்கு தொலைநிலை கணினியில் பிழைதிருத்தி இயங்க வேண்டும்) ஆகியவற்றையும் கொண்டுள்ளது. விஷுவல் ஸ்டுடியோ புரொஃபஷனல் மூன்று நீட்டிப்பு செயல்முறைகளையும் ஏற்கிறது.
ஆஃபீஸிற்கான விஷுவல் ஸ்டுடியோ கருவிகள்
ஆஃபீஸிற்கான விஷுவல் ஸ்டுடியோ என்பது ஒரு SDK ஆகும். மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் ப்ளாட்ஃபார்மிற்கான கருவிகளை உருவாக்குவதற்கான கருவிகளை இது கொண்டிருகிறது. முன்னதாக, அதாவது விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 மற்றும் விஷுவல் ஸ்டுடியோ 2005 ஆகியவற்றில், இது ஒரு தனிப்பட்ட SKU ஆக விஷுவல் சி# மற்றும் விஷுவல் பேசிக் மொழிகளை மட்டும் ஆதரிப்பதாக இருந்தது அல்லது டீம் சூட்டில் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் அது தொடர்ந்து ஒரு தனி எஸ்கேயூ ஆக இருக்கவில்லை, புரோஃபெஷனல் மற்றும் உயர் பதிப்புகளுடன் சேர்க்கப்பட்டதாக இருக்கிறது. VSTO தீர்வுகளைத் தொடங்கும்போது தனிப்பட்ட இயங்குநிரல்கள் தேவைப்படும்.
விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம்
மென்பொருள் தயாரிப்பு, கூட்டுப்பணி, அளவீடு மற்றும் அறிக்கையிடல் கருவிகள் போன்ற கூடுதல் அம்சங்களுடன் விஷுவல் ஸ்டுடியோ புரோஃபெஷனல் மென்பொருளின் அம்சங்களை இது கொண்டுள்ளது. VSTS என்பது வெவ்வேறு வகையான கருவித்தொகுப்புகளை, அது பயன்படுத்தப்படும் மென்பொருள் உருவாக்குதல் பங்கிற்கு ஏற்ப வழங்குகிறது. பங்கெடுப்பு சார்ந்த வகைகளாவன:[41][42]
  • டீம் எக்ஸ்ப்ளோரர் (அடிப்படை TFS கிளையன்ட்)
  • கட்டமைப்பு பதிப்பு
  • தரவுத்தள பதிப்பு
  • தயாரிப்பாளர் பதிப்பு
  • சோதனை பதிப்பு
இந்த நான்கு டீம் சிஸ்டம் பதிப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு, ஒரு டீம் சூட் பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த தரவுத்தள பதிப்பிற்கு, "டேட்டாட்யூட்" என்று பெயர், இது தொடக்கத்தில், ஒரு தனிப்பட்ட பதிப்பாக விஷுவல் ஸ்டுடியோ 2005 இன் ஆரம்ப வெளியீட்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டது. விஷுவல் ஸ்டுடியோ 2008 உடன் ஒரு தனிப்பட்ட பதிப்பாக சேர்க்கப்பட்டது, ஆனால் இதன் செயல்பாடானது வரவிருக்கிற 2010 ஆம் ஆண்டின் தயாரிப்பு பதிப்பிலேயே வெளியிடப்படும்.[43]
கிளையன்ட் SKUக்கள் உடன், விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் என்பதில் மூலக் கட்டுப்பாட்டு முறைகளுக்காக டீம் ஃபவுண்டேஷன் சர்வர் சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பணிஉருப்படி தடமறிதல், அறிக்கையிடல் மற்றும் குழு மேலாண்மை ஆகியவையும் இதில் அடங்கும். டீம் எக்ஸ்ப்ளோரர் என்பது ஒரு TFS கிளையன்ட் ஆகும், இது VSTS IDE உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மற்றும் பிற பயன்பாட்டு உருவாக்குதல் செயல்முறையுடனும் இணைக்கப்பட்டுள்ளது.

பதிப்புகள் அம்சங்கள் அட்டவணை[44]
தயாரிப்பு நீட்டிப்புகள் வெளிப்புற கருவிகள் அமைப்பு செயல்திட்டங்கள் MSDN ஒருங்கிணைப்பு கிளாஸ் டிசைனர் பிரித்தெடுத்தல் பிழைதிருத்தம் இலக்கு இயல்புநிலை 64 பிட் இலக்கு ஐடானியம் செயலிகள் ஆஃபீஸுக்கான விஷுவல் ஸ்டுடியோ கருவிகள் விண்டோஸ் மொபைல் உருவாக்கம்
விஷுவல் ஸ்டுடியோ எக்ஸ்பிரஸ் இல்லை minimal reduced functionality MSDN Express இல்லை reduced functionality reduced functionality இல்லை இல்லை இல்லை இல்லை
விஷுவல் ஸ்டுடியோ ஸ்டாண்டர்டு ஆம் ஆம் reduced functionality ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் இல்லை இல்லை இல்லை
விஷுவல் ஸ்டுடியோ புரோஃபஷனல் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் இல்லை ஆம் ஆம்
விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் பதிப்புகள் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்

பதிப்பு வரலாறு

தொகு

விஷுவல் ஸ்டுடியோ 97

தொகு

வார்ப்புரு:Citecheck மைக்ரோசாஃப்ட் முதன்முதலாக அதனுடைய பல நிரலாக்க மொழிகளை ஒன்றாக இணைத்து 1997 ஆம் ஆண்டில் விஷுவல் ஸ்டுடியோ 1997 என்ற பெயரில் வெளியிட்டது. விஷுவல் ஸ்டுடியோ 97 இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது, புரொஃபெஷனல் மற்றும் என்டர்பிரைஸ் ஆகிய இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. இதில் விஷுவல் பேசிக் 5.0 மற்றும் விஷுவல் சி++ 5.0, ஆகியவை முக்கியமாக விண்டோஸ் நிரலாக்கத்திற்காக சேர்க்கப்பட்டன; ஜாவாவிற்கான விஷுவல் ஜே++ 1.1 மற்றும் விண்டோஸ் நிரலாக்கம்; மற்றும் தரவுத்தளத்திற்காக விஷுவல் பாக்ஸ்ப்ரோ 5.0, குறிப்பாக எக்ஸ்பேஸ் நிரலாக்கத்திற்கானது. ஆக்டிவ் சர்வர் பக்கங்களைப் பயன்படுத்தும், டைனமிக் முறையில் உருவாக்கப்பட்ட வலைதளை உருவாக்க விஷுவல் இன்டர்டெவ். மைக்ரோசாஃப்ட் டெவலப்பர் நெட்வொர்க் நூலகத்தின் முன்னோடி பதிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது.

விஷுவல் ஸ்டுடியோ 97 என்பது ஒரே வடிவமைத்தல் சூழலைப் பல மொழிகளுக்கும் பயன்படுத்துவதற்கான மைக்ரோசாஃப்டின் முதல் முயற்சியாகும். விஷுவல் சி++, விஷுவல் ஜே++, இன்டர்டெவ், மற்றும் MSDN நூலகம் ஆகிய அனைத்தும் ஒரே சூழலில் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது டெவலப்பர் ஸ்டுடியோ என்றழைக்கப்படும் சூழலில் பயன்படுகின்றன. விஷுவல் பேசிக் மற்றும் விஷுவல் பாக்ஸ்ப்ரோ ஆகியவை தனித்தனி சூழல்களைப் பயன்படுத்துகின்றன.[9]

விஷுவல் ஸ்டுடியோ 6.0 (1998)

தொகு

அடுத்த வெளியீடு, வெளியீடு 6.0, என்பது ஜூன் 1998 -இல் வெளியிடப்பட்டது, மேலும் அதுவே விண்டோஸ் 9எக்ஸ் ப்ளாட்ஃபார்மில் இயங்கிய கடைசி வெளியீடாகும்.[45] இதிலுள்ள எல்லா பகுதிகளும் 6.0 க்கு நகர்த்தப்பட்டன, அதில் விஷுவல் ஜே++ என்பது 1.1இலிருந்து மாறியது, மற்றும் விஷுவல் இண்டர்டெவ் 1.0 -இல் இருந்தது. இந்த வெளியீடானது, மைக்ரோசாஃப்டின் தயாரிப்பு அமைப்பிற்கு அடிப்படையானதாக அடுத்த நான்கு ஆண்டுகள் வரை காணப்பட்டது, ஏனெனில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்களின் கவனத்தை டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கை உருவாக்குவதில் திருப்பியிருந்தனர்.

விஷுவல் ஸ்டுடியோ 6.0 என்பது விஷுவல் பேசிக்கின் COM-அடிப்படையிலான பதிப்பைச் சேர்த்திருந்த கடைசி வெளியீடாகும். இதற்கு பின்வந்த வெளியீடுகள் .NET அடிப்படையில் அமைந்திருந்தன. விஷுவல் ஜே++ இடம்பெற்றிருந்த கடைசி வெளியீடும் இதுவே ஆகும். சன் மைக்ரோசிஸ்டமுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டின்படி, அது அகற்றப்பட்டது. மேலும் ஜாவா விர்ச்சுவல் மெஷினை நோக்காக கொண்ட நிரலாக்க கருவிகளின் உருவாக்கத்தையும் மைக்ரோசாஃப்ட் நிறுத்திக் கொண்டது.

விஷுவல் பேசிக், விஷுவல் சி++ மற்றும் விஷுவல் பாக்ஸ்ப்ரோ ஆகியவை தனித்தனி ஐடிஈக்களைக் கொண்டிருந்தன, ஆனால் விஷுவல் ஜே++ மற்றும் விஷுவல் இண்டர்டெவ் ஆகியவை ஒரே புதிய சூழலைப் பகிர்ந்து கொண்டன. இந்த புதிய ஐடிஈ நீட்டிப்புத்தன்மையை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது, மேலும் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் வெளியீட்டிற்கு பின்னர் (பல அக மதிப்பாய்வுகளுக்கு பின்னர்) எல்லா மொழிகளுக்கும் பொதுவான சூழலாக மாறும்.[9] விஷுவல் பாக்ஸ்ப்ரோவைச் சேர்த்திருந்த கடைசி வெளியீடு விஷுவல் ஸ்டுடியோ 6.0 ஆகும்.

வழக்கம் போலவே, விஷுவல் ஸ்டுடியோ 6.0 பல பதிப்புகளாக வெளிவந்தது: ஸ்டாண்டர்டு, புரொஃபெஷனல் மற்றும் என்டர்பிரைஸ் ஆகியவையே அது. என்டர்பிரைஸ் பதிப்பு ஸ்டாண்டர்டு அல்லது புரொஃபெஷனல் பதிப்புகளில் இல்லாத கூடுதல் அம்சங்களைக் கொண்டிருந்தது:

  • பயன்பாடு செயல்திறன் உலவி
  • தானியங்கு நிர்வாகி
  • மைக்ரோசாஃப்ட் விஷுவல் மாடலர்
  • ரெமாட்டோ இணைப்பு மேலாளர்
  • விஷுவல் ஸ்டுடியோ அனலைசர்

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் (2002)

தொகு

மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் என்பதை வெளியிட்டது, இதனுடைய குறியீட்டு பெயர் ரெயினர் என்பதாகும் (அது வாஷிங்டனைச் சேர்ந்த மவுன்ட் ரெயினர் நினைவாக இந்த பெயர் சூட்டப்பட்டது) பிப்ரவரி 2002 -இல் வெளியிடப்பட்டது (இதனுடைய பீட்டா பதிப்பு மைக்ரோசாஃப்ட் டெவலப்பர் நெட்வொர்க்கின் வழியாக 2001 -இல் வெளியிடப்பட்டது). டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கை பயன்படுத்தி, நிர்வகிக்கப்பட்ட குறியீட்டு உருவாக்கம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. டாட்நெட்டைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நிரல்கள் இயந்திர மொழிக்கு தொகுக்கப்படவில்லை (எடுத்துக்காட்டாக, சி++ ஐப் போன்று) ஆனால் மைக்ரோசாஃப்ட் இடைநிலை மொழி (Microsoft Intermediate Language - MSIL) என்ற வடிவமைப்பிற்கு அல்லது பொது இடைநிலை மொழி (CIL) என்ற வடிவமைப்பிற்கு தொகுக்கப்பட்டது. எல்லா MSIL பயன்பாடுகளும் செயல்படுத்தப்படும்போது, இயக்கத்தின்போது தொகுக்கப்படுவது என்ற முறையின்படி, அது இயக்கப்படும் ப்ளாட்ஃபார்முக்கு பொருத்தமான இயந்திர மொழிக்கு தொகுக்கப்படுகிறது, இதனால் ஒரே குறியீடு பல ப்ளாட்ஃபார்மளிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். MSIL -இல் தொகுக்கப்பட்ட நிரல்கள், பொது மொழி உள்கட்டமைப்பை நடைமுறைப்படுத்திய ப்ளாட்ஃபார்ம்களில் மட்டுமே இயக்கப்படக்கூடியவையாக உள்ளன. MSIL நிரல்களை லீனெக்ஸ் அல்லது மேக் ஓஎஸ் எக்ஸ் ஆகியவற்றிலும், மைக்ரோசாஃப்ட் அல்லாத நடைமுறைகளான மோனோ மற்றும் டாட்ஜிஎன்யூ ஆகியவற்றைப் பயன்படுத்தி இயக்க முடியும்.

NT-அடிப்படையிலான விண்டோஸ் ப்ளாட்ஃபார்ம் தேவைப்பட்ட முதல் விஷுவல ஸ்டுடியோ வெளியீடு இதுவே ஆகும்.[46] நிறுவி இந்த தேவையை உறுதி செய்கிறது.

விஷுவல் ஸ்டுடியோ நாட்நெட் 2002 நான்கு பதிப்புகளாக வெளியிடப்படுகிறது: அகாடமிக் பதிப்பு, புரோஃபெஷனல், என்டர்பிரைஸ் டெவலப்பர் மற்றும் என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ட். டாட்நெட்டை இலக்காக கொண்ட சி# (சி-ஷார்ப்) என்ற புதிய நிரலாக்க மொழியை மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியது, மேலும் மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஜே++ க்கான தொடர்ச்சியை வெளியிட்டனர், அதன் பெயர் விஷுவல் ஜே# ஆகும். விஷுவல் ஜே# நிரல்கள் ஜாவா மொழியின் குறியீடுகளைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், விஷுவல் ஜே++ நிரல்களைப் போலன்றி, விஷுவல் ஜே# நிரல்கள் டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கை மட்டுமே இலக்காக கொண்டிருக்கின்றன, ஜாவா விர்ச்சுவல் மெஷினை இலக்காக கொண்டிருப்பதில்லை, இதனையே எல்லா ஜாவா கருவிகளும் இலக்காகக் கொள்ளும்.

புதிய கட்டமைப்புடன் பொருந்துமாறு, விஷுவல் பேசிக் மிகப்பெரிய அளவில் மாற்றப்பட்டது, இந்த புதிய பதிப்பிற்கு விஷுவல் பேசிக் டாட்நெட் என்று பெயர். சி++ க்கும் கூடுதல் நீட்டிப்புக்களை மைக்ரோசாஃப்ட் சேர்த்தது, அவற்றுக்கு சி++ க்கு நிர்வகிக்கப்பட்ட நீட்டிப்புகள் என்று பெயர், எனவே சி++ நிரலாக்குநர்களும் டாட்நெட் நிரல்களை உருவாக்க முடியும்.

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட்டைப் பயன்படுத்தி, விண்டோஸை இலக்காகக் கொண்ட நிரல்களை உருவாக்க முடியும் (இதற்கு டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கில் உள்ள விண்டோஸ் ஃபார்ம்ஸ் பயன்படுகிறது), வலை பயன்பாடுகளை உருவாக்க முடியும் (இதற்கு ASP.NET மற்றும் வலை சேவைகள் பயன்படுகிறது) மற்றும் துணைநிரல், சிறிய சாதனங்கள் ஆகியவற்றை பயன்படுத்த முடியும் (இதற்கு டாட்நெட் சுருக்க ஃப்ரேம்வொர்க் பயன்படும்).

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் சூழலானது, டாட்நெட்டைப் பயன்படுத்துமாறு ஒருபகுதி மீண்டும் எழுதப்பட்டது. எல்லா மொழிகளும் ஒரே சூழலின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. விஷுவல் ஸ்டுடியோவின் முந்தைய பதிப்புகளை ஒப்பிடும்போது, இதில் தெளிவான இடைமுகமும், சிறப்பான ஓரியல்பு தன்மையும் காணப்படுகிறது. மேலும் இது, கருவி சாளரங்கள் மூலம் எளிதாக தனிப்பயனாக்கி கொள்ளக்கூடியதாக இருக்கிறது மற்றும் பயன்படுத்தாத கருவிகள் தானாகவே மறைந்து விடுவதாக உள்ளன. விஷுவல் ஸ்டுடியோ 7 இன் ஒரு பகுதியாக தொடக்கத்தில் வெளியிடப்பட்டபோது, மற்றும் தொடக்கக்கால விஎஸ் பீட்டாக்கள், VFP-அடிப்படையிலான DLLகளில் பிழைதிருத்தத்தை அனுமதித்தன, இது வெளியீட்டின்போது அகற்றப்பட்டது, ஏனெனில் அதனுடைய சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட்டின் அக வெளியீட்டு எண்ணானது 7.0 ஆகும். மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2002 க்கான சேவை தொகுப்பு 1 ஐ மார்ச், 2005 -இல் வெளியிட்டது.[47]

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003

தொகு

ஏப்ரல் 2003 -இல், மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட்டில் சிறிய மேம்பாட்டைச் செய்தது, இதற்கு விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 என்று பெயர், இதன் குறியீட்டு பெயர் எவெரெட் (இதே பெயரைக் கொண்ட நகரத்தின் பெயரால் இவ்வாறு அழைக்கப்பட்டது). டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கில் மேம்பாடு இருந்தது, வெளியீடு 1.1 மற்றும் மொபைல் சாதனங்களுக்கான நிரல்களை உருவாக்குவதற்கான ஆதரவை வழங்கிய முதல் வெளியீடு இதுவாகும். இதற்கு ஏஎஸ்பி டாட்நெட் அல்லது டாட்நெட் காம்பெக்ட் ஃப்ரேம்வொர்க்கைப் பயன்படுத்தலாம். விஷுவல் சி++ தொகுப்பியின் தரநிலை இணக்கங்கள் மேம்படுத்தப்பட்டன, குறிப்பாக பகுதி டெம்ப்ளேட் சிறப்பம்சமாக்கல் என்பதில் அதிகரிக்கப்பட்டது. விஷுவல் சி++ டூல்கிட் 2003 என்பது விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 உடன் வழங்கபட்ட அதே தொகுப்பியின் இலவச பதிப்பாகும், இதில் ஐடி ஈ இருக்காது, ஆனாலும், இது தற்போது கிடைப்பதில்லை மற்றும் எக்ஸ்பிரஸ் பதிப்புகளால் மறைக்கப்பட்டுவிட்டது. விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 இன் அக பதிப்பு எண் பதிப்பு 7.1 ஆகும், ஆனாலும் கோப்பு வடிவமைப்பு பதிப்பு 8.0 என்பதாகும்.[48]

விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 நான்கு பதிப்புகளாக வெளிவருகிறது: அகாடமிக், புரோஃபெஷனல், என்டர்பிரைஸ் டெவலப்பர் மற்றும் என்டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ட் ஆகியவையே அவை. விஷுவல் ஸ்டுடியோ டாட்நெட் 2003 என் டர்பிரைஸ் ஆர்க்கிடெக்ட் பதிப்பானது, மைக்ரோசாஃப்ட் விசியோ 2002 வடிவழகு தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதாகும். இதில் ஒரு பயன்பாட்டின் கட்டமைப்பின், ஒருங்கிணைந்த வடிவழகு மொழி சார்ந்த காட்சி வெளிப்பாடுகள் மற்றும் ஒரு திறன்வாய்ந்த ஆப்ஜெக்ட் ரோல் வடிவழகு (ORM) மற்றும் லாஜிக்கல் தரவுத்தள வடிவழகு தீர்வு ஆகியவை காணப்படும். "என்டர்பிரைஸ் டெம்ப்ளேட்கள்" என்பவையும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் பெரிய டெவலப்மென்ட் குழுக்கள் குறியாக்க நடைமுறைகளை தரநிலைக்கு உட்படுத்தவும் பொருள் பயன்பாடு மற்றும் குணம் அமைத்தல் ஆகியவை தொடர்பாக கொள்கையை நடைமுறைப்படுத்தவும் முடியும்.

முதல் சேவை தொகுப்பு செப்டம்பர் 13, 2006 -இல் வெளியிடப்பட்டது.[49]

விஷுவல் ஸ்டுடியோ 2005

தொகு

விஷுவல் ஸ்டுடியோ 2005, குறியீட்டுப் பெயர் விட்பே (புகட் நீர்சந்தியில் உள்ள விட்பே தீவை குறிக்கிறது), அக்டோபர் 2005 -இல் ஆன்லைனிலும், சில வாரங்களுக்கு பின்னர் சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனைக்கு வந்தது. விஷுவல் ஸ்டுடியோ 2005 இலிருந்து "டாட்நெட்" இணைமொழியை மைக்ரோசாஃப்ட் அகற்றி விட்டது (பெயரில் டாட்நெட் என்பதைக் கொண்டிருந்த எல்லா தயாரிப்புகளிலிருந்தும் இது அகற்றப்பட்டது), ஆனாலும் இவை தொடர்ந்து முதலாவது இலக்காக டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கையே சார்ந்திருக்கின்றன, அது இரண்டாம் பதிப்புக்கு மேம்படுத்தப்பட்டது. இதுவே விண்டோஸ் 2000 க்கு கிடைத்த கடைசி பதிப்பாகும். விஷுவல் ஸ்டுடியோ 2005 இன் அக பதிப்பு எண் 8.0 ஆகும், ஆனால் கோப்பு வடிவமைப்பு பதிப்பு 9.0 ஆகும்.[48] விஷுவல் ஸ்டுடியோ 2005 க்கான முதலாவது சேவை தொகுப்பை டிசம்பர் 14, 2006 -இல் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டது.[50] முதல் சேவை தொகுப்பிற்கான கூடுதல் புதுப்பிப்பு விண்டோஸ் விஸ்டா இணக்கத்துடன் ஜூன் 3, 2007 இல் வெளியிடப்பட்டது.[51]

டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0, பொதுவானவைகள், ஏஎஸ்பிடாட்நெட் 2.0 ஆகியவற்றில் உள்ள புதிய அம்சங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் விதமாக விஷுவல் ஸ்டுடியோ 2005 மேம்படுத்தப்பட்டது. விஷுவல் ஸ்டுடியோவில் இருக்கும் இன்டலிசென்ஸ் அம்சமானது, ஜெனரிக்குகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டது மற்றும் புதிய செயல்திட்ட வகைகளும் சேர்க்கப்பட்டன. இவை ASP.NET வலை சேவைகளை ஆதரித்தன. விஷுவல் ஸ்டுடியோ 2005 -இல் ஒரு அக வலை சேவையகமும் உள்ளது, இது IIS -இலிருந்து வேறுபட்டது, இதனை ASP.NET பயன்பாடுகளின் உருவாக்கம் மற்றும் சோதனையின்போது பயன்படுத்தலாம். மேலும் இது எல்லாவிதமான எஸ்க்யூஎல் சர்வர் 2005 தரவுத்தளங்களையும் ஆதரிக்கிறது. டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 2.0 இல் சேர்க்கப்பட்ட ADO.NET 2.0 என்பதை ஆதரிக்கும் விதமாக தரவுத்தள வடிவமைப்பாளர்கள் மேம்படுத்தி விட்டனர். சி++ என்பதும் இதே போன்ற மேம்பாட்டையும் C++/CLI சேர்க்கையுடன் பெற்றுள்ளது, இது நிர்வகிக்கப்பட்ட சி++ இன் பயன்பாட்டை பயன்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.[52] விஷுவல் ஸ்டுடியோ 2005 -இல் உள்ள புதிய அம்சங்களில், "தயார் படுத்தல் வடிவமைப்பான்" என்பதும் அடங்கியுள்ளது, இது தயாரிப்பின் வெளியீட்டுக்கு முன்பு பயன்பாட்டின் வடிவமைப்புகள் சரிபார்க்கப்பட அனுமதிக்கிறது, மேலும் இது, ASP.NET 2.0 உடன் இணைக்கப்படும்போது, மேம்பட்ட ஒரு சூழலாக வலை வெளியீட்டுக்கு கிடைக்கிறது. மேலும் பலவகையான பயனர் சுமைகளின்போது, பயன்பாட்டு செயல்திறன் சோதனைகள் செய்தல் கிடைக்கிறது. விரிவான 64 பிட் ஆதரவையும் விஷுவல் ஸ்டுடியோ 2005 வழங்குகிறது. ஆனால் உருவாக்குதல் சூழல் மட்டும் 32-பிட் பயன்பாட்டுக்கு கிடைக்கிறது, விஷுவல் சி++ 2005 என்பது x86-64 (AMD64 மற்றும் Intel 64) மற்றும் IA-64 (ஐடானியம்) ஆகியவற்றுக்கான தொகுத்தலை ஆதரிக்கிறது.[53] ப்ளாட்ஃபார்ம் SDK ஆனது, 64-பிட் தொகுப்பிகள் மற்றும் நூலகங்களின் 64-பிட் பதிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

விஷுவல் பேசிக் ஃபார் அப்ளிகேஷன்ஸ் (VBA) மற்றும் VSA (விஷுவல் ஸ்டுடியோ ஃபார் அப்ளிகேஷன்ஸ்) ஆகியவற்றின் தொடர்ச்சியாக மைக்ரோசாஃப்ட் விஷுவல் ஸ்டுடியோ டூல்ஸ் ஃபார் அப்ளிகேஷன்ஸ் என்பதை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஆஃபீஸ் 2007 உடன் இணைந்ததாக, உற்பத்தி செய்யப்படுவதாக VSTA 1.0 வெளியிடப்பட்டது. ஆஃபீஸ் 2007 உடன் இது இணைக்கப்பட்டிருந்தது மற்றும் இது விஷுவல் ஸ்டுடியோ 2005 SDK -இன் ஒரு பகுதியுமாக உள்ளது. விஷுவல் ஸ்டுடியோ 2005 IDE -இன் அடிப்படையில் VSTA என்பது தனிப்பயனாக்கப்பட்ட IDE ஐ கொண்டது மற்றும் ஒரு டாட்நெட் ஆப்ஜெக்ட் மாடல் வழியாக அம்சங்களை வெளிக்காட்டும் ஒரு நிகழ்நேர நிரலையும் கொண்டுள்ளது. ஆஃபீஸ் 2007 பயன்பாடுகள் தொடர்ந்து VBA உடன் ஒருங்கிணையும், ஆனால் இன்ஃபோபாத் 2007 VSTA உடன் ஒருங்கிணையும். VSTA இன் தற்போதைய பதிப்பு (வெளியீடு 2.0, விஷுவல் ஸ்டுடியோ 2008 இன் அடிப்படையில் அமைந்தது) ஏப்ரல், 2008 இல் வெளியிடப்பட்டது.[54] இது, முதல் பதிப்பிலிருந்து கணிசமாக வேறுபட்டுள்ளது, இதில் WPF, WCF, WF, LINQ, மற்றும் டாட்நெட் 3.5 ஃப்ரேம்வொர்க் ஆகியவற்றுக்கான டைனமிக் நிரலாக்கம் மற்றும் ஆதரவை வழங்குகிறது.

விஷுவல் ஸ்டுடியோ 2008

தொகு

விஷுவல் ஸ்டுடியோ 2008 ,[55] மற்றும் விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் [56] குறியீட்டு பெயர் ஆர்க்காஸ் என்பது MSDN சந்தாதாரர்களுக்கு நவம்பர் 19, 2007 -இல் வெளியிடப்பட்டது, கூடவே டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5 வெளியிடப்பட்டது. குறியீட்டு பெயர் ஆர்க்காஸ் என்பது விட்பேவைப் போன்றே புகட் நீர்சந்தியில் உள்ள, ஆர்க்காஸ் தீவைக் குறிக்கிறது. விஷுவல் ஸ்டுடியோ 2008 -க்கான மூலக் குறியீடு IDE, ஒரு பகிரப்பட்ட மூல உரிமத்தின் கீழ் சில மைக்ரோசாஃப்ட் பங்குதாரர்கள் மற்றும் ISVகள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும்.[57] விஷுவல் ஸ்டுடியோ 2008 க்கான முதல் சேவை தொகுப்பை 2008 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11 இல் வெளியிட்டது.[58] விஷுவல் ஸ்டுடியோ 2008 க்கான அக வெளியீட்டு எண், பதிப்பு 9.0 ஆகும், ஆனால் கோப்பு வடிவமைப்பு பதிப்பு 10.0 ஆகும்.

விஷுவல் ஸ்டுடியோ 2008 என்பது விண்டோஸ் விஸ்டா, 2007 ஆஃபீஸ் அமைப்பு மற்றும் வலை பயன்பாடுகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. காட்சி ரீதியான வடிவமைக்காக, ஒரு புதிய விண்டோஸ் ப்ரசென்டேஷன் ஃபவுண்டேஷன் விஷுவல் டிசைனர் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பிரஷன் வெப் இன் பாதிப்பைக் கொண்ட புதிய HTML/CSS திருத்தி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஜே# சேர்க்கப்படவில்லை. விஷுவல் ஸ்டுடியோ 2008 க்கு, டாட்நெட் 3.5 ஃப்ரேம்வொர்க் தேவை மற்றும் இயல்புநிலை உள்ளமைவுகள் தொகுப்புகளை டாட்நெட் ஃப்ரேம்வொர்க் 3.5 இல் இயங்குமாறு கட்டமைக்கின்றன மற்றும் பல இலக்குகளையும் இது ஆதரிக்கிறது, இதனால் ஒரு டெவலப்பர் டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கைத் தேர்வு செய்யலாம் (2.0, 3.0, 3.5, சில்வர்லைட் கோர்சிஎல்ஆர் அல்லது டாட்நெட் காம்பக்ட் ஃப்ரேம்வொர்க் போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்). விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் புதிய குறியீட்டு பகுப்பாய்வு கருவிகளும் உள்ளன, இவை புதிய குறியீட்டு அளவுகள் கருவியும் அடங்கும் (டீம் பதிப்பு மற்றும் டீம் சூட் பதிப்புகளில் மட்டும்).[59] விஷுவல் சி++க்கு, விஷுவல் ஸ்டுடியோ மைக்ரோசாஃப்ட் பவுண்டேஷன் கிளாஸ்கள் (MFC 9.0) இன் புதிய பதிப்பைச் சேர்த்துள்ளது, இவை விண்டோஸ் விஸ்டாவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட விஷுவல் ஸ்டைல்கள் மற்றும் இடைமுக கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு ஆதரவை வழங்குகின்றன.[60] இயல்புநிலை மற்றும் நிர்வகிக்கப்பட்ட குறியீடு ஒருங்கிணைவுக்கு, விஷுவல் சி++ ஆனது STL/CLR ஐ அறிமுகப்படுத்துகிறது, இது சி++ இயல்பு டெம்ப்ளேட் நூலகத்தின் (STL) கன்டெய்னர்கள் மற்றும் நிர்வகிக்கப்பட்ட குறியீட்டின் அல்காரிதம்களின் ஒரு போர்ட் ஆகும். STL/CLR ஆனது, STL-போன்ற கன்டெய்னர்கள் , இட்ரேட்டர்கள் மற்றும் அல்காரிதம்களை சி++/CLI நிர்வகிக்கப்பட்ட ஆப்ஜெக்ட்களுக்காக வரையறுக்கிறது.[61][62]

விஷுவல் ஸ்டுடியோ 2008 -இல் பின்வரும் அம்சங்கள் உள்ளன: ஒரு XAML அடிப்படையிலான டிசைனர் (குறியீட்டு பெயர் சிடர் ), பணிப்போக்கு டிசைனர், LINQ இலிருந்து SQL டிசைனர் (SQL சேவையக தரவிற்கு வகை மேப்பிங்குகளை வரையறுத்தலுக்காக), XSLT பிழை திருத்தி, ஜாவாஸ்கிரிப்ட் இன்டலிசென்ஸ் ஆதரவு, ஜாவாஸ்கிரிப்ட் பிழைதிருத்த ஆதரவு, UAC அமைப்புகளுக்கான ஆதரவு, ஒரு ஒரியல்பு கட்டமைவு முறை.[63] மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுக விட்ஜெட்களுடன் இது தற்போது வெளிவருகிறது, விண்டோஸ் ஃபார்ம்ஸ் மற்றும் WPF ஆகிய இரண்டிற்காகவும். மேலும் இதில், பல தொடரிழைகள் கொண்ட, கட்டுமான எஞ்சின் (MSபில்ட்) காணப்படுகிறது, இது பல மூலக் கோப்புகளை ஒரே நேரத்தில் தொகுக்கக்கூடியது (மற்றும் இயக்கக்கூடிய கோப்பைக் கட்டமைக்கக்கூடியது). இது, விண்டோஸ் விஸ்டாவில் அறிமுகப்படுத்தப்பட்ட PNG சுருக்கப்பட்ட ஐகான் ஆதாரங்களையும் தொகுப்பதற்கான ஆதரவை வழங்குகிறது. ஒரு மேம்படுத்தப்பட்ட XML திட்ட அமைப்பு டிசைனரானது, விஷுவல் ஸ்டுடியோ வெளியீட்டுக்கு சில நாட்கள் பின்னர் வெளியிடப்பட்டது.[64]

விஷுவல் ஸ்டுடியோ பிழைதிருத்தியில் பல தொடரிழை பயன்பாடுகளை எளிதாக பிழைதிருத்தம் செய்வதற்கான அம்சங்கள் அடங்கியுள்ளன. பிழைதிருத்த பயன்முறையில், தொடரிழைகள் சாளரத்தில், எல்லா தொடரிழைகளும் பட்டியலிடப்படுகின்றன, ஒரு தொடரிழையின் மேல் சுட்டியை வைக்கும் போது, அந்த தொடரிழையின் சேமிப்பு தடம் உதவிக்குறிப்பாக காண்பிக்கப்படும்.[65] தொடரிழைகளுக்கு நேரடியாக பெயர்சூட்டப்படும் மற்றும் எளிதாக கண்டறிவதற்காக அந்த சாளரத்திலேயே பெயரிடப்படும்.[66] மேலும், குறியீட்டு சாளரத்தில், தற்போதைய தொடரிழையில் தற்போது இயங்கும் வழிமுறையின் இருப்பிடம் சுட்டிக்காட்டப்படும், பிற தொடரிழைகளில் உள்ள தற்போது இயங்கும் வழிமுறைகளும் காண்பிக்கப்படும்.[66][67] விஷுவல் ஸ்டுடியோ பிழைதிருத்தியானது ஒருங்கிணைந்த டாட்நெட் 3.5 ஃப்ரேம்வொர்க் பேஸ் கிளாஸ் லைப்ரரி(BCL)யின் பிழைதிருத்தத்தை ஆதரிக்கிறது. இது BCL மூல குறியீட்டை எளிதாக பதிவிறக்கும் மற்றும் பிழைதிருத்த சின்னங்களையும் பதிவிறக்கும் மேலும் பிழை திருத்தத்தின்போது BCL மூலத்துக்குள் செல்லவும் அனுமதிக்கும்.[68] BCL மூலத்தின் ஒரு வரம்புடைய துணைத் தொகுப்பு மட்டுமே கிடைக்கிறது, இந்த ஆண்டின் இறுதிக்குள் கூடுதல் நூலக ஆதரவு திட்டமிடப்பட்டுள்ளது.

விஷுவல் ஸ்டுடியோ 2010

தொகு

விஷுவல் ஸ்டுடியோ 2010 -இன் இறுதி பதிப்பு ஏப்ரல் 12–14 வரை நடைபெறும், டெவ்கனக்ஷன்ஸ் மாநாட்டில் வெளியிடப்படுவதற்கு திட்டமிடப்பட்டது.[69] விஷுவல் ஸ்டுடியோ 2010 ஏப்ரல் 12, 2010 இல் வெளியிடப்படும் என்று மைக்ரோசாஃப்ட்டின் வலைத்தளம் தெரிவிக்கிறது.[70]

The Visual Studio 2விஷுவல் ஸ்டுடியோ 2010 IDE ஆனது, பயனர் இடைமுக ஒழுங்கமைப்பில் இருந்துவந்த தெளிவின்மையைப் போக்கும் விதமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று மைக்ரோசாஃப்ட் தெரிவிக்கிறது, "சிக்கல்கள் மற்றும் தெளிவின்மையைக் குறைக்கிறது" என்கிறது மைக்ரோசாஃப்ட்.[71] புதிய ஐடிஈயில் பல ஆவணங்களின் சாளரங்களும், மிதக்கும் கருவி சாளரங்களும் அதிகமாக ஆதரிக்கப்படுகின்றன,[71] இதனால் அதிகமாக பல திரையக ஆதரவு கிடைக்கும். IDE ஷெல்லானது, விண்டோஸ் பிரசன்டேஷன் ஃபவுண்டேஷனை (WPF),[72] பயன்படுத்தி மீண்டும் எழுதப்பட்டுள்ளது, அதேபோல, அக உறுப்புகள் நிர்வகிக்கப்பட்ட நீட்டிப்பு ஃப்ரேம்வொர்க் (MEF) மூலமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன, இவை அதிக நீட்டிப்பு வசதியையும், முந்தைய IDE பதிப்புகளையும் ஆதரிக்கும், மற்றும் செயலாக்கப்பட்ட துணைநிரல்கள், IDE யின் நடத்தையை மாற்றும் வண்ணம் அமைந்துள்ளன.[73] புதிய பல நிலை நிரலாக்க மொழியான ML-மாறுபாட்டு F# ஆனது, விஷுவல் ஸ்டுடியோ 2010 -இன் ஒரு பகுதியாக இருக்கும்[74]; அதேபோல, உரைசார் வடிவழகு மொழியான எம் என்பதும், குவாட்ரன்ட் என்ற காட்சிவழி மாடல் டிசைனரும் இதில் இருக்கும், இவை அனைத்தும் ஓஸ்லோ முயற்சியின் பகுதிகளே.[75]

விஷுவல் ஸ்டுடியோ 2010 டாட்நெட் ஃப்ரேம்வொர்க் பதிப்பு 4.0 உடன் வெளிவருகிறது. மேலும் இது விண்டோஸ் 7 -ஐ இலக்காக கொண்ட பயன்பாடுகளை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கக்கூடியது.[71] மைக்ரோசாஃப்ட் எஸ்க்யூஎல் சர்வர் ஆதரவுடன் ஐபிஎம் DB2 மற்றும் ஆரக்கிள் தரவுத்தளங்களை இது ஆதரிக்கும் (கூடுதல் விவரங்களுக்கு, IBM.com மற்றும் TeamFuze.net[தொடர்பிழந்த இணைப்பு] ஆகியவற்றைக் காண்க).[71] இது, ஒருங்கிணைந்த, மைக்ரோசாஃப்ட் சில்வர்லைட் பயன்பாடுகளுக்கான ஆதரவையும் வழங்கும், இதில் ஊடாடக்கூடிய டிசைனரும் அடங்கும்.[71] விஷுவல் ஸ்டுடியோ 2010 ஆனது, இணைந்த நிரலாக்கத்தை எளிதாக்க பல கருவிகளை வழங்கும்: டாட்நெட் ஃப்ரேம்வொர்க்கிற்கான, இணை நீட்டிப்புகள் மற்றும் இயல்புநிலை குறியீட்டுக்கான இணை பேட்டர்ன்ஸ் நூலகம் ஆகியவற்றுடன் கூடுதலாக இவை வழங்கப்படுகின்றன, இணை பயன்பாடுகளைப் பிழைதிருத்தம் செய்யவும், விஷுவல் ஸ்டுடியோ 2010 இல் கருவிகள் உள்ளன. புதிய கருவிகளானது, இணை செயல்கள் மற்றும் அதன் நிகழ்நேர ஸ்டாக்குகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தும்.[76] இணை பயன்பாடுகளை நிகழ்த்தும் கருவிகளை, காத்திருப்பு நேரங்கள் மற்றும் தொடரிழை நகர்தல் நேரங்கள் ஆகியவற்றைக் கணக்கிடவும் பயன்படுத்தலாம்.[77] விஷுவல் ஸ்டுடியோ 2010 இல், உள்ள புதிய ஓரியல்பு நிகழ்நேர செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதாக, இன்டெல் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் இணைந்து உறுதியளித்துள்ளன[78] மற்றும், இன்டெல் நிறுவனமானது, இணைவியல்பு ஆதரவை பேரலல் ஸ்டுடியோ என்பதில், விஷுவல் ஸ்டுடியோவுக்கு ஒரு துணைநிரலாக வெளியிட்டுள்ளது.[79]

விஷுவல் ஸ்டுடியோ 2010 இன் குறியீடு திருத்தி, தற்போது பரிந்துரைகளை தனிப்படுத்திக் காண்பிக்கிறது, மற்றும் ஒரு சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் மற்றும் சின்னத்தின் பிற அனைத்து வகையான பயன்பாடுகள் ஆகியவற்றையும் காண்பிக்கிறது.[80] இது மேலும், விரைவு தேடல் அம்சம் சி++, சி# மற்றும் விபி டாட்நெட் செயல்திட்டங்கள் அனைத்திலும் வழங்குகிறது. விரைவுத்தேடலானது, துணை தொடர் பொருத்தங்கள் மற்றும் கேமல்கேஸ் தேடல்களையும் ஆதரிக்கிறது.[80] தற்போதைய மெத்தடிலிருந்து அழைக்கப்பட்ட எல்லா மெத்தட்களையும் மற்றும் ஒரு குறிப்பிட்ட மெத்தடை அழைக்கும் எல்லா மெத்தட்களையும் அழைப்பு படிநிலை அம்சமானது காண்பிக்கும்.[80] விஷுவல் ஸ்டுடியோவில் உள்ள இன்டலிசென்ஸ் என்பது வாடிக்கையாளர் முதலில் என்ற பயன்முறையை ஆதரிக்கிறது. இதனை ஒரு டெவலப்பர் தேர்வு செய்ய முடியும். இந்த பயன்முறையில், இன்டலிசென்ஸ் ஐடென்டிஃபையர்களை தானாக நிறைவு செய்யாது; இதனால் பயனர்கள் வரையறுக்கபடாத ஐடென்டிஃபையர்களைப் பயன்படுத்த முடியும் (மாறிகள் அல்லது மெத்தட்களின் பெயர்கள்) மற்றும் பின்னர் அவற்றை வரையறுத்துக் கொள்ள முடியும். அவற்றின் வகையானது, பயன்பாட்டிலிருந்து அறியப்படுமானால் விஷுவல் ஸ்டுடியோ 2010 ஆனது, இவற்றைத் தானாக வரையறுக்கவும் உதவும்.[80]

விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் 2010 ஆனது, ரோசாரியோ [81] என்ற குறியீட்டு பெயர் கொண்டது, இது பயன்பாட்டு வாழ்க்கை சுழற்சி நிர்வாகத்திற்கு பயன்படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இது புதிய வடிவழகு கருவிகளைக் கொண்டிருக்கும்,[82] கட்டமைப்பு எக்ஸ்ப்ளோரர் என்பது, செயல்திட்டங்களையும் கிளாஸ்களையும் அவற்றின் உறவுமுறைகளையும் காட்சி மூலமாக காண்பிக்கும்.[83][84] இது UML செயல்பாட்டு படம், தொகுதிக்கூறு படம், (தருக்க) கிளாஸ் படம், தொடர்நிகழ்வு படம், மற்றும் பயன் நிலை படம் ஆகியவற்றை ஆதரிக்கிறது.[84] விஷுவல் ஸ்டுடியோ டீம் அமைப்பு 2010 என்பதில், டெஸ்ட் இம்பேக்ட் அனலிசஸ் என்பதும் அடங்கியுள்ளது, இதில் மூல குறியீட்டில் செய்யப்படும் மாறுபாடுகளால் சோதனை நிலைகள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்று குறிப்புகள் காண்பிக்கப்படும், இதனால் எந்தவித சோதனை நிலைகளும் இன்றியே சோதனைகளைச் செய்ய முடியும்.[85] இதனால் தேவையற்ற சோதனை நிலைகள் இயக்கம் தவிர்க்கப்பட்டு, சோதனை செயல்முறையின் வேகம் அதிகரிக்கிறது.

விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் 2010 -இல் வரலாற்று பிழைதிருத்தி யும் அடங்கியுள்ளது. நடப்பில் செயலிலுள்ள, ஸ்டாக்கை மட்டும் பதிவு செய்யும், தற்போதைய பிழை திருத்தியைப் போலன்றி, வரலாற்று பிழை திருத்தி, செயல்பாட்டு அழைப்பு, மெத்தட் அளவுருக்கள், போன்றவற்றுக்கு முன்பே எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்து கொள்கிறது. உடைப்பு புள்ளி எதுவும் அமைக்கப்படாத நிலையில் பிழை ஏற்படும்போது, குறியீட்டு செயலாக்கத்தை எளிதாக மீண்டும் பெற முடியும்.[86] வரலாற்று பிழைதிருத்தியானது, பயன்பாட்டை மெதுவாக இயங்க வைக்கும், மற்றும் அதிகமான நினைவகத்தையும் எடுத்துக்கொள்ளும். எந்த அளவு தரவு பதிவு செய்யப்பட வேண்டும் என்று, உள்ளமைவின் மூலம் தேர்வு செய்ய மைக்ரோசாஃப்ட் அனுமதிக்கிறது, இதனால் டெவலப்பர்கள் செயலாக்கத்தின் வேகம் மற்றும் ஆதாரத்தின் பயன்பாடு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் 2010 -இல் அடங்கியுள்ள லேப் மேனெஜ்மென்ட் என்ற தொகுதிக்கூறு, சோதனையாளர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு ஒரே மாதிரியான சூழலைத் தருவதற்கு விர்ச்சுவலைசேஷனைப் பயன்படுத்துகிறது. மெய்நிகர் கணினிகள் சோதனைப்புள்ளிகளால் குறிச்சொல்லிடப்பட்டுள்ளன, இதனால் சிக்கல்கள் உள்ளதா என்று விசாரிப்பதும், சிக்கலை மீண்டும் உருவாக்குவதும் எளிதாக இருக்கும்.[87] விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் 2010 என்பது, சோதனை எண்ணிக்கைகளைப் பதிவு செய்யும் திறனையும் கொண்டுள்ளது. மேலும் சோதனையைச் செய்ய தேவையான துல்லியப் படிகளையும் பதிவு செய்யும். இந்த படிகளை பின்னர் ஒவ்வொன்றாக இயக்கி சிக்கல்களை மீண்டும் உருவாக்க முடியும்.[88]

விஎஸ் 2010 -இல் எஃப்# என்ற ஒரு செயல்நிலை நிரலாக்க மொழி உள்ளது, இது மைக்ரோசாஃப்ட் ரிசெர்ச்சில் உண்மையில் உருவாக்கப்பட்டது. இது முன்னர், ஒரு விருப்ப நீட்டிப்பாக இருந்தது, தற்போது முதன்மைக் கருவியாக மேம்பட்டுள்ளது.[89]

முன்னரே நிறுவப்பட்ட மெய்நிகர் கணினிகள்

தொகு

விஷுவல் ஸ்டுடியோ டீம் சிஸ்டம் 2008 மற்றும் 2005 ஆகியவற்றுடன் மெய்நிகர் கணினிகளை, முன்னரே நிறுவப்பட்ட மெய்நிகர் வன்வட்டு வடிவமைப்பை சோதனை பயன்பாட்டுக்காக வழங்குகிறது.[90]

குறிப்புதவிகள்

தொகு
  1. Visual Studio 2005 SDK. "Visual Studio Development Environment Model". Microsoft. Retrieved 2008-01-01.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  2. Visual Studio 2005 SDK. "VSPackages and Managed Package Framework (MPF)". Microsoft. Retrieved 2008-01-01.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. 3.0 3.1 3.2 3.3 Vijay Mehta. "Extending Visual Studio 2005". CodeGuru. Archived from the original on 2010-03-17. Retrieved 2008-01-01.
  4. 4.0 4.1 4.2 Visual Studio 2005 SDK. "Language Service Essentials". Microsoft. Retrieved 2008-01-01.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  5. Visual Studio SDK. "Babel Package Overview". Microsoft. Retrieved 2008-01-01.
  6. Visual Studio SDK. "Managed Language Services overview". Microsoft. Retrieved 2008-01-01.
  7. 7.0 7.1 Alin Constantin. "Microsoft Source Code Control Interface". Archived from the original on 2008-02-18. Retrieved 2008-01-03.
  8. Visual Studio SDK. "Source Control Plug-ins". MSDN. Retrieved 2008-01-03.
  9. 9.0 9.1 9.2 9.3 "Visual Studio Extensibility". CoDe Magazine. Retrieved 2008-01-01.
  10. 10.0 10.1 Scott Guthrie. "Nice VS 2008 Code Editing Improvements". Retrieved 2007-12-31.
  11. Scott Guthrie. "VS 2008 JavaScript IntelliSense". Retrieved 2007-12-31.
  12. Scott Guthrie. "VS 2008 Web Designer and CSS Support". Retrieved 2007-12-31.
  13. 13.0 13.1 "Visual Studio .NET - Top 10 Code Editor Tips and Tricks". MSDN TV. Retrieved 2007-12-31.
  14. "Background compilation, part 1". Archived from the original on 2011-03-16. Retrieved 2007-12-31.
  15. 15.0 15.1 Matthew Gertz. "Scaling Up: The Very Busy Background Compiler". MSDN Magazine. Retrieved 2007-12-31.
  16. Thomas F. Abraham. "Background Compilation in Visual Studio 2002, 2003 and 2005". Archived from the original on 2008-06-25. Retrieved 2007-12-31.
  17. "Attaching to Running Processes". MSDN. Retrieved 2007-12-31.
  18. "Dumps". MSDN. Retrieved 2007-12-31.
  19. "Breakpoint Overview". MSDN. Retrieved 2007-12-31.
  20. 20.0 20.1 "Code Stepping Overview". MSDN. Retrieved 2007-12-31.
  21. "Edit and Continue". MSDN. Retrieved 2007-12-31.
  22. "Debugging at Design Time". MSDN. Retrieved 2007-12-31.
  23. "MSDN TV: Introducing "Cider" - The Visual Studio Designer for WPF ("Avalon")". MSDN TV. Retrieved 2008-01-01.
  24. "Team Explorer 2005 (.img file)". Microsoft. Retrieved 2007-03-05.
  25. "Visual Studio Team System 2008 Team Explorer". Microsoft. Retrieved 2007-03-05.
  26. "How to use the Server Explorer in Visual Studio .NET and Visual Studio 2005". Microsoft. Retrieved 2008-01-01.
  27. "Dotfuscator Community Edition 4.0". Msdn.microsoft.com. Retrieved 2009-09-06.
  28. "Microsoft and PreEmptive Solutions to Provide Application Feature Monitoring, Usage Expiry and Tamper Defense in Visual Studio 2010: Post-build utility utilizes software plus services and instrumentation to improve application security, portfolio management and usability". Microsoft.com. 2008-10-27. Retrieved 2009-09-06.
  29. "The Visual Studio Gallery gets a little more community friendly". Archived from the original on 2009-04-12. Retrieved 2010-05-13.
  30. Visual C++ Team. "ISO C Standard Update". MSDN Blogs. Retrieved 2008-01-02.
  31. Visual C++ team. "Update On The C++-0x Language Standard". MSDN Blogs.
  32. "Compiler Intrinsics". MSDN. Retrieved 2008-01-02.
  33. "OpenMP in Visual C++". MSDN. Retrieved 2008-01-02.
  34. "Visual C# (MSDN)". MSDN. Retrieved 2009-06-01.
  35. "A Message to the Community". MSDN. Retrieved 2008-01-02.
  36. De, Alan. "Visual SourceSafe: Microsoft's Source Destruction System". Highprogrammer.com. Retrieved 2009-09-06.
  37. "INFO: Required Network Rights for the SourceSafe Directories". Support.microsoft.com. 2005-02-24. Retrieved 2009-09-06.
  38. "Microsoft Visual SourceSafe Best Practices". Msdn.microsoft.com. Retrieved 2009-09-06.
  39. "Buy Microsoft Visual SourceSafe 6 (324-00269) :: eCostSoftware.com - UK Software Supplier". eCostSoftware.com. Archived from the original on 2008-12-08. Retrieved 2009-09-06.
  40. "Visual Studio Editions". TechNet. Retrieved 2008-01-03.
  41. "Visual Studio Team System". TechNet. Retrieved 2008-01-03.
  42. Name changes for Team System products
  43. "Norman Guadagno: Announcing Visual Studio Team System 2010". Channel9. Microsoft. September 29, 2008. Retrieved 2008-09-30.
  44. "Visual Studio 2008 Product Comparison". Retrieved 2008-02-07.
  45. "System Requirements (Visual Studio 6.0)". MSDN. Retrieved 2008-01-02.
  46. "System Requirements (Visual Studio .NET)". MSDN. Retrieved 2008-01-02.
  47. "Visual Studio .NET 2002 SP1". Microsoft. Retrieved 2008-01-02.
  48. 48.0 48.1 "Hacking Visual Studio". Retrieved 2008-01-01.
  49. "Microsoft Visual Studio .NET 2003 Service Pack 1". Microsoft. Retrieved 2008-01-02.
  50. "Visual Studio 2005 Service Pack 1". Microsoft. Retrieved 2008-01-01.
  51. "Visual Studio Service Pack 1 Update". Retrieved 2008-01-01.
  52. "New Language Features in Visual C++". Visual Studio 2005 Visual C++ Language Reference. MSDN. Retrieved 2006-12-28.
  53. "64-bit and Visual Studio 2005". April 11, 2006. Retrieved 2006-12-28.
  54. VSTA vs VSTO in Software Development Kits. In the latest MSDN Flash email I just received, it announces the release of Visual Studio Tools for Applications 2.0 (VSTA).
  55. "Microsoft Details Dynamic IT Strategy at Tech-Ed 2007". Archived from the original on 2011-06-05. Retrieved 2007-06-04.
  56. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-20. Retrieved 2022-10-16.
  57. "Microsoft to Give Partners More Access to Orcas IDE Code". Retrieved 2007-11-06.[தொடர்பிழந்த இணைப்பு]
  58. "Download Details: Microsoft Visual Studio 2008 Service Pack 1 (exe)". Retrieved 2008-08-11.
  59. Darryl K. Taft. "Microsoft Pushes Secure, Quality Code". eWeek. Archived from the original on 2020-08-20. Retrieved 2007-10-06.
  60. Kirants. "Whats New in MFC 9.0 (Orcas)". CodeGuru. Archived from the original on 2010-05-04. Retrieved 2008-01-02.
  61. Nikola Dudla. "What Is STL/CLR?". MSDN Blogs. Retrieved 2008-01-02.
  62. Visual C++ Team. "Libraries Work In Orcas". MSDN Blogs. Retrieved 2008-01-02.
  63. "Download Visual Studio 03/07 CTP". Archived from the original on 2010-06-13. Retrieved 2007-06-14.
  64. "XSD Designer in Visual Studio". Archived from the original on 2017-02-11. Retrieved 2008-01-01.
  65. S. Somasegar. "Debugging and Profiling Features in VS 2008". MSDN Blogs. Retrieved 2007-07-24.
  66. 66.0 66.1 John Robbin. "Neat New Multithreaded Debugging Features in VS 2008". Archived from the original on 2009-09-17. Retrieved 2007-09-24.
  67. Scott Hanselman. "Multi-threaded Debugging in Visual Studio 2008". Retrieved 2007-09-24.
  68. Scott Guthrie. "Releasing the Source Code for the .NET Framework Libraries". Retrieved 2007-10-04.
  69. Microsoft. "Launch Event". Retrieved 2010-01-12.
  70. Microsoft. "Microsoft Visual Studio 2010". Retrieved 2010-03-21.
  71. 71.0 71.1 71.2 71.3 71.4 "Visual Studio 2010 Team System First Look". Microsoft. Retrieved 2009-04-18.
  72. "Writing Visual Studio 2010 shell in WPF Reflects Confidence". One .NET Way. Retrieved 2009-04-18.
  73. Carlos Quintero. "Visual Studio 2010 Extensibility moving beyond add-ins and packages". Archived from the original on 2010-06-23. Retrieved 2009-04-18.
  74. "F# to ship as part of Visual Studio 2010". Retrieved 2008-12-10.
  75. "Microsft details Oslo's modeling language, tools". SDTimes. Archived from the original on 2012-05-01. Retrieved 2009-04-19.
  76. Daniel Moth. "Debugging Parallel applications with VS2010". Archived from the original on 2010-01-08. Retrieved 2008-04-18.
  77. "More support for parallelism in the next version of Visual Studio". MSDN. Retrieved 2009-04-23.
  78. David Worthington. "SD Times: Intel, Microsoft converge on parallel computing". Archived from the original on 2009-06-04. Retrieved 2008-08-20.
  79. David Worthington. "Intel addresses development life cycle with Parallel Studio". Archived from the original on 2009-05-28. Retrieved 2009-05-26.
  80. 80.0 80.1 80.2 80.3 S. Somasegar. "Code Focused Development in VS 2010". Retrieved 2008-04-18.
  81. "'Visual Studio Team System Rosario'". Retrieved 2008-04-05.
  82. "Microsoft Unveils Next Version of Visual Studio and .NET Framework". Microsoft PressPass. Retrieved 2009-08-14.
  83. "Doing Architecture with Team System Rosario". Archived from the original on 2008-04-21. Retrieved 2009-04-18.
  84. 84.0 84.1 "Visual Studio 2010 Architecture Edition". Retrieved 2009-04-18.
  85. "Historical Debugger and Test Impact Analysis in Visual Studio Team System 2010". Channel9. Retrieved 2009-04-18.
  86. Habib Heydarian. "What's new in Visual Studio Team System 2010: Episode 2". Retrieved 2008-04-18.
  87. "Visual Studio 2010 Lab Management". Archived from the original on 2009-05-10. Retrieved 2009-04-18.
  88. Ina Fried. "Visual Studio 2010 to come with 'black box'". CNET News. CBS Interactive Inc. Archived from the original on 2011-11-06. Retrieved 2009-04-18.
  89. http://research.microsoft.com/en-us/um/cambridge/projects/fsharp/default.aspx
  90. "Team Suite 2008 Virtual Machine".

புற இணைப்புகள்

தொகு