பைத்தான்

பைத்தான் என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழிபனுவல்களை, பொது நோக்க இலக்குகளுக்கபைத்தான் (Python Programming Language)) என்பது ஒரு விளக்கப்பட்ட, உயர்-நிலை, பொது-நோக்க நிரலாக்க மொழியாகும். நிரல் படிப்புத்திறன் பைத்தானின் வடிவமைப்பு மெய்யியல் குறிப்பிடத்தக்க இடைவெளியுடன் பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது. சிறு, பேரளவு திட்டப்பணிகளுக்குத் தருக்கமுறை நிரற்தொடரைத் தெளிவாக எழுதுத கணிப்பொறி நிரலருக்கு அதன் மொழி கட்டமைப்புகளும் பொருள் நோக்கு அணுகுமுறையும் உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பைத்தான்
நிரலாக்கக் கருத்தோட்டம்:பன்முக-கருத்தோட்ட நிரலாக்க மொழி (Multi-paradigm programming language): பொருள் நோக்கு நிரலாக்கம்: ஏவல் நிரலாக்கம், பணிமுறை நிரல் மொழி
வெளியிடப்பட்டது:1991; 33 ஆண்டுகளுக்கு முன்னர் (1991)
வடிவமைப்பாளர்:குய்டொ வான் ரூஸ்ஸொம்
வளர்த்தெடுப்பாளர்:பைத்தான் சாப்ட்வேர் பவுண்டேசன்
அண்மை வெளியீட்டுப் பதிப்பு:3.12.4 / 6 சூன் 2024; 37 நாட்கள் முன்னர் (2024-06-06)[1]
2.7.12 / 28 சூன் 2016; 8 ஆண்டுகள் முன்னர் (2016-06-28)[2]
அண்மை முன்னோட்டப் பதிப்பு:3.3.0b1 /
27 சூன் 2012 (2012-06-27), 4399 நாட்களுக்கு முன்னதாக [3]
இயல்பு முறை:வலுவான, இயக்கமிக்க
மொழி வழக்குகள்:Cython, RPython, Starlark
பிறமொழித்தாக்கங்கள்:ஏபிசி, அல்கோல் 68,[4] சி, Haskell, Icon, லிஸ்ப், மொடியூலா-3, பேர்ள், ஜாவா
கோப்பு நீட்சி:.py, .pyi, .pyc, .pyd, .pyo (3.5 முன்),[5].pyz (3.5 முதல்)[6]
இம்மொழித்தாக்கங்கள்:Boo, Groovy, ரூபி, Cobra
இயக்குதளம்:லினக்சு, மாக்ஓஎஸ், விண்டோசு 8 அதற்குப் பிறகும்
பலவும்
விக்கிநூல்களில் Python Programming
அனுமதி:பைத்தான் சாப்ட்வேர் பவுண்டேசன் அனுமதி
இணையதளம்:https://www.python.org/

பைதான் இயக்க வகையும் நினைவகச் சுத்திகரிப்பும் கொண்டதாகும். ஒழுங்குசார் (குறிப்பாகப் படிமுறைத்தன்மை) பொருள் நோக்கு, பணிமுறை போன்றவை உட்பட பன்முக-கருத்தோட்டங்களை இம்மொழி ஒத்துழைக்கின்றது, விரிந்த தரமான ஏடகம் உள்ளதால் பைதான் "மின்கலன்கள் உள்ளடக்கிய மொழி” எனப் பெரும்பாலும் விவரிக்கப்படுகிறது.

பைத்தான் ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை, 'Monty Python's Flying Circus'[7][8] என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு, பைத்தான் என்று வைத்தார். அந்நாடகம் ஓர் 'அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை' (Surreal humor) அடிப்படையாகக் கொண்டதாகும். இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும்.[9] [10]

கூகிள், நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைதானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களைப் படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளைத் தற்பொழுது பைத்தோன் மென்பொருள் நிறுவம் பராமரித்து வருகிறது. இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சிபைத்தோன் என்பதாகும்.

பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்தில் இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகின்றது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோசு, லினக்சு, யுனிக்சு, மேக் இயங்குதளம் போன்ற பல்வேறு இயக்க சூழல்களிலும் பைத்தான் இயங்கும். சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ள் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


வரலாறு

தொகு
 
கைடோ வான் ரோசம்,பைத்தான் மொழியை உருவாக்கியவர்

பைதான் 1980 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது, 1991 இல் ஏபிசி நிரலாக்க மொழியைப் பின் தொடர்ந்து கைடோ வான் ரோசம் ஆல் முதன்முதலில் வெளியிடப்பட்டது.

வடிவமைப்பு மெய்யியலும் சிறப்பியல்புகளும்

தொகு

பயன்பாட்டுத் துறைகள்

தொகு

- இணைய மென்பொருள் (Web Application)[11],[12] - மின்னஞ்சல் அலகிடல் (Email Parsing)[13] - வலையமைப்பு நிரலான் (Network Program)[14] - மேசைத்தளம் மென்பொருள் (Desktop Application)[15],[16][17],[18] - இணைய நெறிமுறை (Internet Protocol) [19] - கணினி நிருவாகம் (System administration) - விளையாட்டுகள் (

sports)

பயன்படுத்தும் நிறுவனங்கள்

தொகு

எடுத்துக்காட்டு

தொகு

வருக வையகமே நிரல்

#!/usr/bin/python
print u"வணக்கம்"

வெளியீடு(Output)

வணக்கம்

வேறுபடுபவை(Variable)

#! /usr/bin/python
a = 1
b = 2
print a + b

வெளியீடு(Output)

3

இணை ஒப்படைப்பு(parallel assignment)

#! /usr/bin/python
#comment விளக்கம் கூறு
a, b = 1, 2
language = "python"
print a, b, language

வெளியீடு(Output)

1 2 python

கூற்று(Expression)

#! /usr/bin/python
print 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2

வெளியீடு(Output)

3 -1 6 2 2.5

கூற்று

#! /usr/bin/python
print 2 > 3, 1 < 3
print 2 > 3 and 1 < 3
print 1 < 2 < 3
print 1 + 2 * 3 + 5
print 1 or 2
print 1 and 2

வெளியீடு(Output)

False True
False
True
12
1
2

சரம்(String)

#! /usr/bin/python
language = "தமிழ்"
lang = 'தமிழ்'
l = """தமிழ்"""
kural = """
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
"""
print language, lang, l
print kural

வெளியீடு(Output)

தமிழ் தமிழ் தமிழ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கட்டியம்(Condition)

#! /usr/bin/python
a = 23
if a > 0:
	print "a %d is positive number" % (a)
else:
	print "a %d is negative number " % (a)
a = 0
if a >= 0:
	print "a(%d) is positive number" % (a)
elif a < 0:
	print "a(%d) is negative number" % (a)
elif a == 0:
	print "a(%d) is zero" %(a)

வெளியீடு(Output)

a 23 is positive number
a(0) is positive number

தரவுக் கட்டமைப்புகள் (Data structures)

தொகு
 

தொடர் (List)

#! /usr/bin/python
l = [] #தொடர் உருவாக்குதல்
l.append("தமிழ்")
l.append(1) #புதிய சேர்க்கை
print l, l.count()
l.remove(1) #1யை நீக்குதல்
print l

வெளியீடு(Output)

[தமிழ், 1], 2
[தமிழ்]

டியுப்பல் (Tuple)

t = (1, 2, 3, 1)
print t.count(1)
print t.index(2)

வெளியீடு(Output)

2
1

அகராதி(Dictionary)

d = {'name': 'Tamil Magan', 'age': 23, 'place': 'coimbatore'}
print d
print d['name']
print d['age']
print d.keys()
print d.values()
print d.items()

வெளியீடு(Output)

{'age': 23, 'place': 'coimbatore', 'name': 'Tamil Magan'}
Tamil Magan
23
['age', 'place', 'name']
[23, 'coimbatore', 'Tamil Magan']
[('age', 23), ('place', 'coimbatore'), ('name', 'Tamil Magan')]

தொகுப்பு (set)

s = set([1, 2, 3, 1, 2, 3])
print s
s.add(23)
print s
s.pop()
print s
s.remove(23)
print s
print len(s)

வெளியீடு(Output)

set([1, 2, 3])
set([1, 2, 3, 23])
set([2, 3, 23])
set([2, 3])
2

முழுச்சுற்றுகள் (Loops)

தொகு

தொடர்

for no in [1, 2, 3, 4, 5]: #தொடர்
  print no

வெளியீடு(Output)

1
2
3
4
5

டியுப்பல்

for no in (1, 2, 3, 4, 5): #டியுப்பல்
  print no

வெளியீடு(Output)

1
2
3
4
5

அகராதி

d = {'age': 23, 'name': 'Tamil Magan', 'place': 'coimbatore'}
for key in d: #அகராதி
  print key, d[key]

வெளியீடு(Output)

age 23
place coimbatore
name Tamil Magan

ஒயில் (while)

no = 1
while no < 10:
  if no % 2 == 0:
    print no, "இரட்டை"
  elif no % 2 == 1:
    print no, "ஒற்றை"
  no += 1

வெளியீடு(Output)

1 ஒற்றை
2 இரட்டை
3 ஒற்றை
4 இரட்டை
5 ஒற்றை
6 இரட்டை
7 ஒற்றை
8 இரட்டை
9 ஒற்றை

கொடுக்கப்பட்ட எண்ணை பெருக்கல் அட்டவணை அச்சிடும் நிரல் (பார் லூப் எடுத்துக்காட்டு)

val=5
for i in range(5):
 i=i+1
 print i," X ",int(val)," = ",int(i)*int(val),"\n"

வெளியீடு(Output)

1 X 5 = 5

2 X 5 = 10

3 X 5 = 15

4 X 5 = 20

5 X 5 = 25

செயலாற்றி (Function)

தொகு
def square(no):
  return no * no

def cube(no):
  return square(no) * no

print square(2)
print square(2) + square(3)
print cube(3)
print cube(square(2))
print square(no=10)

வெளியீடு(Output)

4
13
27
64
100

இயல்பிருப்பு(Default)

def square(no=2):
  return no * no

def cube(no=2):
  return square(no) * no

print square()
print square(4)

வெளியீடு(Output)

4
16

மாற்றுப்பெயர் (Alias)

def square(no=2):
  return no * no

def cube(no=2):
  return square(no) * no

def caller(func_name, arg):
  return func_name(arg)

s = square
c = cube
print s(2)
print c(3)
print caller(s, 10)
print caller(c, 5)
print caller(square, 7)
4
27
100
125
49

Open-Tamil library

தொகு

Open-Tamil [21] library example,

import re, operator
import tamil #open-tamil library
def print_tamil_words(tatext):
   taletters = tamil.utf8.get_letters(tatext)
   # tamil words only
   frequency = {}
   for pos, word in enumerate(tamil.utf8.get_tamil_words(taletters)):
     print(pos, word)
     frequency[word] = 1 + frequency.get(word, 0)
   # sort words by descending order of occurrence
   for l in sorted(frequency.iteritems(), key=operator.itemgetter(1)):
     print(l[0], :, l[1])

மேற்கோள்கள்

தொகு
 1. Hastings, Larry (2016-06-27). "Python 3.5.2 and Python 3.4.5 are now available". Python Insider. The Python Core Developers. பார்க்கப்பட்ட நாள் 2016-06-28.
 2. Peterson, Benjamin (2016-06-28). "Python 2.7.12 released". Python Insider. The Python Core Developers. பார்க்கப்பட்ட நாள் 2016-06-28.
 3. "Python 3.3.0 Release". Python Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012.
 4. "Interview with Guido van Rossum". 1998. Archived from the original on 30 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 July 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |4= (help)
 5. File extension .pyo was removed in Python 3.5. See PEP 0488
 6. Holth, Moore (30 March 2014). "PEP 0441 -- Improving Python ZIP Application Support". பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
 7. "General Python FAQ - Why is it called Python?".
 8. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Monty Python’s Flying Circus
 9. Programming Language Trends – O'Reilly Radar. Radar.oreilly.com (2006-08-02). Retrieved on 2013-07-17.
 10. The RedMonk Programming Language Rankings: January 2013 – tecosystems. Redmonk.com (2013-02-28). Retrieved on 2013-07-17.
 11. https://www.djangoproject.com/
 12. http://flask.pocoo.org
 13. http://docs.python.org/2/library/email
 14. http://docs.python.org/2/howto/sockets.html
 15. http://www.wxpython.org/
 16. http://sourceforge.net/projects/pywin32/
 17. http://qt-project.org/wiki/PySide
 18. http://www.riverbankcomputing.co.uk/software/pyqt/intro
 19. http://docs.python.org/2/library/internet
 20. http://highscalability.com/blog/2012/3/26/7-years-of-youtube-scalability-lessons-in-30-minutes.html
 21. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.

இவற்றையும் காணவும்

தொகு

புற இணைய இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தான்&oldid=4038903" இலிருந்து மீள்விக்கப்பட்டது