விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்/Field-Work Guide

முகப்பு   உரையாடல்   சந்திப்புக்கள்   களப் பணிளும் பட்டறைகளும்   கலைகள்   காலக்கோடு   களப்பணி விதிகளும் செயல்முறைகளும்   உசாத்துணைகள்    

பேரா. பாலசுந்தரம் அவர்கள் எழுதித் தந்த வழிகாட்டி:


களப்பணி விதிகளும் செயல்முறைகளும்

தொகு
1. குறிப்பிட்ட ஆய்வு வெளியிடம் சம்பந்தமாகவும், பிரதேசங்கள் சார்ந்ததாகவும் அமைவதால் களப்பணி ஆய்வு மிக இன்றியமையாததாகிறது.
2. களப்பணிக்குச் செல்வோர் இருவர் அல்லது மூவர் சேர்ந்து செல்லுதல் வேண்டும். குழுவாகச் செல்லும்போது நேர்காணலில் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை ஏற்படுகிறது.
3. களப்பணியாளர் தமக்கு வேண்டிய களப்பணி உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எ –டு;:
(1) ஒலிப்பதிவு - ஒளிப்பதிவு - புகைப்படம் ஆகியவற்றுக்குரிய கருவிகள், மற்றும் மடிக்கணினி அவற்றுக்குரிய மேலதிக பற்றரிகள், மற்றும் குறிப்புப்; புத்தகங்கள், எழுது கருவிகள் முதலியன
(2) வெப்பம் அல்லது குளிர் காலநிலைக்கு ஏற்ற ஆடைகள், போர்வைகள்.
(3) தாம் பயன்படுத்தும் மருந்துகள், முதலுதவிப் பொருட்கள் முதலியன....
(4) கைத்தொலைபேசி
4. களப்பணியில் சேகரிக்கப்படும் விடயங்கள் எடுத்துக்கொண்ட ஆய்வு விடயத்தை ஆழ அகலமாகவும் நம்பகரமாகவும் முன்னெடுத்துச் செல்ல உதவும் கருவிகள் (சான்றுகள்) ஆதலால் அவற்றில் கூடிய கவனமெடுத்தல் அவசியம்.
5. களப்பணி என்பது ஆய்வுக்குத் தேவையான தகவல்களை உரிய இடங்களுக்குச் சென்று ஆதாரங்களுடன் நம்பகமான முறையில் சேகரித்தலாகும். குறிப்பிட்ட விடயம் பற்றிய ஆய்வில் அது தொடர்பானவர்களைச் சந்தித்து அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுதல், அவர்களிடமிருந்து ஆய்வு சார்ந்த விடயங்களை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வினாக்கொத்துக்களின் அடிப்படையில் திரட்டுதல், தரவுகளை ஒளிப்பதிவாகவும், ஒலிப்பதிவாகவும், எழுத்து மூலமாகவும், ஒளிப்படாமகவும் பதிவு செய்து கொள்ளலாம். திரட்டும் தகவல்கள் பொருட்களாக இருந்தால் அவற்றை உரிய முறையில் அடையாளமிட்டு, பாதுகாப்பாக சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
6. களப்பணியில் அவதானிப்பு முக்கியமானது. எப்போது? எங்கே? என்ன சூழலில்? தரவுகள் சேகரிக்கப்பட்டன என்பனவும் பதிவுசெய்யப்பட வேண்டியனவாகும். நேர்காணல் மேற்கொண்ட இடமானது, வீடு, அலுவலகம், வியாபாரநிலையம், தொழிற்சாலை, வயற்களம், தோட்டம் முதலான இடங்களில் களப்பணி நடைபெற்றால் அவற்றைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அவை ஆய்வாளர்களுக்கு உதவியயாக அமையும் பெற்றியது.
7. களப்பணியில் நேர்காணல் செய்யும்போது, முதலில் நேர்காணல் செய்யப்படுபவர் பற்றிய முழுத்தகவல்களும் சேகரிக்கப்பட வேண்டும். அவரிடம் தகவல்கள் பெறும்போது அவரைப் பற்றிய அவதானிப்பு, கேள்விகளின் மூலம் அவர் தான் கூறும் தரவுககளை உறுதியாக நம்பிக்கையுடன் தருகிறாரா என்பதையும் உறுதிசெய்தல் வேண்டும். ஒருவர் தரும் தகவல் மற்றவர் கூறிய தகவலுடன் முரண்படும் சந்தர்ப்பங்களில் மற்றவருடன் அது பற்றி விசாரித்து உண்மைத் தகவலை முழு விபரங்களுடன் பதிவுசெய்து கொள்க.
8. தகவல் பதியப்படும்போது முக்கியமான விடயங்களை மனத்திலும் இருத்தி பின்னர் அவற்றைச் சரியான முறையில் எழுதிக்கொள்ளும் வழக்கத்தையும் கடைப்பிடிக்கலாம்.
9. தகவல் சேகரிக்கும்போது பக்கச் சார்புகள் தவிர்க்கப்பட வேண்டும். மதம், கலாசாரம், சமூகப் பாகுபாடுகள் சார்ந்த விடயங்களில் அதிருப்தி அல்லது; முரண்பாடுகள் ஏற்படாதவாறுறு நடந்துகொள்ளுதல் பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமாகும்.
10. களப்பணியில் சேகரிக்கப்படும் அணைத்துத் தகவல்களட் தருவுகள் பொருட்டுன் அனைத்தும் பணிப்பாளர் சiயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவை அனைத்தும் இத்திமட்டத்திற்குரிய சொத்துக்களாகும்.
11. களப்பணியாளர் தாம் திரடட்டிய தகவல்களை எக்காரணம் கொண்டும் தமது தனிப்பட்ட தேவைகளுக்கோ அல்லது பிறரது தேவைகளுக்கோ பயன்படுத்த முடியாது.
12. களப்பணியார் தங்குமிட வசதிகள் முன்கூட்டியே ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.
13. பணிப்பாளர் சபையின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகத் தமது களப்பணிகளில் செயற்படுவோம் என களப்பணியாளர் உரிய படிவத்தில் கையெழுத்திட வேண்டும்.
14. பணிப்பாளர் சபை அவ்வப்போது குறிப்பிடும் அறிவுரைகள், வழிகாட்டிகள் அனைத்தையும் களப்பணியாளர் பின்பற்றுதல் வேண்டும்.
15. திட்ட நிதியுதவியிற் குறிப்பிட்டபடி பணிப்பாளர் சபையினரால்; களப்பணியாளருக்குச் சன்மானம் (Pநச னநைஅ) வழங்கப்படும். அதற்குரிய பற்றுச் சீட்டுகள் அனைத்தையும் பணிப்பாளர் சபைக்குச் சமர்ப்பித்தல் வேண்டும்.