அன்னபூரணி (1930 கப்பல்)

அன்னபூரணி [Florence C Robinson][1] என்பது தமிழர்களால் கட்டப்பட்டு வழிநடத்தப்பட்டு ஈழத்தில் வல்வெட்டித்துறையில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் மாநில குளொசெசுட துறைமுகம் வரைக்கும் நீண்ட புகழ்பெற்ற பயணம் செய்த கப்பல் ஆகும். இக் கப்பலை நாகப்பசெட்டியாரிடம் இருந்து 1936 ம் ஆண்டளவில் 20,000 ரூபாவிற்கு அமெரிக்காரான வில்லியம் றொபின்சன் வாங்கினார். அவரிடம் தமிழ் கடலோடிகள் வல்வெட்டித்துறையில் இருந்து ஓட்டிச்சென்று கையளித்தனர்.[2][3]

அன்னபூரணிக் கப்பல்
வகை விபரங்கள்
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:[[

Failed to render property vessel class: vessel class property not found.

]] Imported from Wikidata (?)
நீளம்:90 ft
விரைவு:18 knots
பணியாளர்:6

வடிவமைப்பு தொகு

அன்னபூரணிக் கப்பல் வல்வெட்டித்துறையில் 1930ம் ஆண்டளவில் கட்டப்பட்டது. இது "நாகப்ப செட்டியாருக்காக சுந்தர மேசுதிரியாரின் அனுபவ அறிவின் முதிர்ச்சியின் முயற்சியினால் " கட்டப்பட்டது.[2]

இது ஒரு பாய்கப்பல் ஆகும். வேம்பு, இலுப்பை மரங்களைக் கொண்டு தமிழர் கப்பல் கட்டும் கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இதன் நீளம் 89 - 90 அடிகள் என்றும், அகலம் 19 அடி என்றும் மட்டிடப்படுகிறது. இக் கப்பலில் புவிப்படம், திசையறிகருவி, ஆழமானி ஆகியவை மட்டுமே இருந்தன.

கடலோடிகள் தொகு

  • கனகரெத்தினம் தம்பிப்பிள்ளை, தண்டையல்
  • சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை
  • தாமோதிரம்பிள்ளை சபாரெத்தினம்
  • பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம்
  • ஐயாத்துரை இரத்தினசாமி

மேற்கோள்கள் தொகு

  1. "Florence C Robinson". பார்க்கப்பட்ட நாள் 13 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 ஈழத்துப்பூராடனார். (2011). வல்வெட்டித்துறை கடலோடிகள். ரொறன்ரோ: நிப்ளக்ஸ் அச்சகம்.
  3. Sunday times article titled “Westward ho!”

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னபூரணி_(1930_கப்பல்)&oldid=3027334" இலிருந்து மீள்விக்கப்பட்டது