பேச்சு   பழைய உரையாடல்கள்   முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு   உ.தெ அறிவிப்பு    

.

பதினாறாம் ஆண்டு கொண்டாட்டம்தொகு

வணக்கம், நெடுநாள் பயனர் என்ற அடிப்படையிலும், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் என்ற அடிப்படையிலும் நமது விக்கிப்பீடியாவின் பதினாறாம் ஆண்டு கொண்டாட்டத்தில் தங்கள் வரவைப் பெரிதும் விரும்புகிறேன். வர வாய்ப்பிருந்தால் இலங்கையில் நடக்கும் நிகழ்விற்கு உதவுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 19 சூன் 2019 (UTC)

  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 14:45, 19 சூன் 2019 (UTC)

தகவலுக்கு நன்றி நீச்சல்காரன். நான் வசிக்கும் இடம் கனடா என்பதனால் வருவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன். இதை முன்னிட்டு வேறேனும் செய்ய வேண்டுமாயின் கூறுங்கள்.--சி.செந்தி (உரையாடுக) 03:33, 20 சூன் 2019 (UTC)

ஆஹா. அது தெரியாமல் போனது. நீங்கள் தமிழ்நாடு என்றே நினைத்துவந்தேன். பரவாயில்லை. எதிர்காலத்தில் கனடாவில் நடத்த வாய்ப்பு அமையும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து இயங்குவோம். நன்றி -நீச்சல்காரன் (பேச்சு) 06:07, 20 சூன் 2019 (UTC)
நிச்சயமாக..அது தவிர, நான் பிறந்த நாடு இலங்கை :) --சி.செந்தி (உரையாடுக) 00:03, 21 சூன் 2019 (UTC)

Project Tiger 2.0தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!தொகு

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, மற்றும் கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, மற்றும் Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர்தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:14, 25 நவம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கிதொகு

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:05, 4 சனவரி 2020 (UTC)

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:44, 17 சனவரி 2020 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Drsrisenthil&oldid=2896145" இருந்து மீள்விக்கப்பட்டது