பயனர் பேச்சு:Booradleyp1/தொகுப்பு05
பெயர்
தொகு- வணக்கம் பூங்கோதை ! நான் பல இடங்களில் தமிழகத்தில் ஹோட்டல் என்பதற்கு பதிலாக உணவகம் என்ற பெயர் பலகைகளைப் பார்த்துள்ளேன்--நந்தகுமார் (பேச்சு) 07:33, 21 சூன் 2014 (UTC)
பரிந்துரைக்கு நன்றி நந்தகுமார், நான் என் தேவையைத் தெளிவாகக் குறிப்பிடவில்லை என நினைக்கிறேன். உணவகம் என்றால் உணவு மட்டும் வழங்கப்படும் ஹோட்டல்களைக் குறிப்பதாகி விடலாம், நான் கேட்பது மும்பை தாஜ் ஹோட்டல், பார்க் ஷெரட்டன், ஹோட்டல் சோழா போன்ற ஆடம்பர ஹோட்டலுக்கான (உணவு மற்றும் தங்குமிடங்களுக்கான) தமிழ்ச் சொல்.--Booradleyp1 (பேச்சு) 07:47, 21 சூன் 2014 (UTC)
- @Booradleyp1, இங்கு எனக்குத் தெரிந்ததை எழுதியிருந்தேன். பார்த்தீர்களா என்பதறியேன். தேவைப்படின், நட்சத்திர உண்டுறை விடுதி என அழைக்கலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:15, 22 சூன் 2014 (UTC)
பார்த்து விட்டேன் செல்வசிவகுருநாதன், உங்கள் பரிந்துரைக்கு நன்றி. ஸ்ரீ கர்சன் பக்கம், மணியன் பக்கங்களிலும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். மணியனும் ’உண்டுறை விடுதி’யைப் பரிந்துரைத்திருக்கிறார். கனக்ஸ் மற்றும் சிலர் ’உணவு விடுதி’ என்பதைப் பரிந்துரைத்திருக்கின்றனர். இதற்கு மேற்கொண்டு பயனர்களின் கருத்துக்கள் தெரிவிப்பதைப் பொறுத்து இறுதியான சொல்லைத் தேர்ந்தெடுக்கலாம் என காத்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:38, 22 சூன் 2014 (UTC)
காரணம்
தொகுவணக்கம். Booradleyp நீங்கள் நான் எழுதிய ஜாக் கரிப்போ என்ற கட்டுரையில் உள்ள புகைப்படம் மற்றும் பகுப்புகளை [[1]]நீக்கி உள்ளீர் காரணம் என்ன வெற்று அறியலாமா? Thilakshan (பேச்சு) 02:04, 12 ஜூலை 2014 (UTC)
- திலக்சன், அந்தப் புகைப்படம் இருக்கவில்லை. அதனால் தொடுப்பு மட்டும் நீக்கப்பட்டது. உப பகுப்பு ஒன்றில் இருக்கும் போது தாய்ப்பகுப்புக்குள் சேர்ப்பது தேவையற்றது.--Kanags \உரையாடுக 00:11, 12 சூலை 2014 (UTC)
சரி நன்றி :) Thilakshan (பேச்சு) 02:025, 12 ஜூலை 2014 (UTC)
புரியவில்லை
தொகுவணக்கம் Booradleyp1 நான் இம்ரான் அப்பாஸ் நக்வி என்ற கட்டுரை ஒன்றை எழுதி அவரின் புகைப்படத்தை போன்று இருந்தேன் அதை தாங்கள் நீக்கி இருந்தீர் (ஒரு வேலை நான் பகுப்புக்கான அனுமதி பெறவில்லையா) அதை கொஞ்சம் விளக்க முடியுமா? Thilakshan (பேச்சு) 14:06, 12 சூலை 2014 (UTC)
- மேலே தந்துள்ள பதிலே இதற்கும். கட்டுரையின் வரலாற்றைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 12:26, 12 சூலை 2014 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
பயனர் பூங்கோதை அவர்கள் விக்கிப்பீடியாவில் அயராமல் உழைத்து தொடர்ந்தும் உழைப்பதற்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன்.உங்கள் பங்களிப்பு சிறக்க வாழ்த்துகள்!-- mohamed ijazz(பேச்சு) 07:41, 13 சூலை 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- பதக்கமளித்து ஊக்குவித்தமைக்கு நன்றி இஜாஜ்.--Booradleyp1 (பேச்சு) 15:21, 13 சூலை 2014 (UTC)
எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் எனும் அண்மையில் பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரை, தங்களின் சிறந்த உழைப்பிற்கு ஒரு நல்ல உதாரணம்; அனைத்துப் பணிகளுக்கும் உளங்கனிந்த நன்றிகள்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:27, 13 சூலை 2014 (UTC)
- விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:20, 5 ஆகத்து 2014 (UTC)
- உங்களது தொடர் பாராட்டுகளுக்கும் ஊக்குவித்தலுக்கும் நன்றி சிவகுருநாதன். --Booradleyp1 (பேச்சு) 15:36, 13 சூலை 2014 (UTC)
விருப்பம் --ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:59, 13 சூலை 2014 (UTC)
- விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:35, 14 சூலை 2014 (UTC)
- என் வாழ்த்துகளும்! ஆசிரியராக தொடர்ந்து வழிகாட்டி உதவியமைக்கு நன்றி! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:20, 5 ஆகத்து 2014 (UTC)
புதுப்பயனருக்கு உதவுங்கள்
தொகுகுழலி ஆர்வமுள்ள பயனராய் இருந்த போதும், கலைக்களஞ்சிய நடைமுறைகளை புரிந்துகொள்ள சிரமப்படுகிறார் என நினைக்கிறேன். தகவல்களில் மிகைப்பாடு அதிகம் காணப்படுகிறது. சில வரிகளை செய்தி நடையில் எழுதுகிறார். சில தகவல்கள் கலைக்களஞ்சியத்திற்கு ஏற்றவாறு இல்லை. அவற்றை நாம் திருத்தும்போது, அவர் தவறாக எடுத்துக் கொள்கிறார் என நினைக்கிறேன். அவருடைய பங்களிப்புகளை அடிக்கடி கவனத்தில் கொள்ளுங்கள். தக்க இடங்களில் அவருக்கு வழிகாட்டி உதவுங்கள். நீங்கள் பங்களிக்கும் துறைகளில், கணிதம் தவிர்த்த ஏனைய துறைகளில் அவரும் பங்களிப்பதால், நீங்கள் உதவினால் பேருதவியாய் இருக்கும் என நம்புகிறேன். மேலும், நீங்கள் பக்குவமாக எடுத்துக் கூறுவீர்கள் என்பதால் உங்களை வேண்டுகிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:20, 5 ஆகத்து 2014 (UTC)
உதவி தேவை ...
தொகுவணக்கம்! விக்கிக்கு சற்று வெளியேயான ஒரு உதவி தேவைப்படுகிறது.
In integers, 1 is the identity for _(c) Multiplication__________
(a) Addition (b) Subtraction (c) Multiplication (d) Division இவற்றுள் எது சரி? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:30, 24 ஆகத்து 2014 (UTC)
- உதவிக்கு மிக்க நன்றி! தங்களுக்கு நேரமிருக்கையில், முழு எண் எனும் கட்டுரையை விரிவுபடுத்த வேண்டுகிறேன்; ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:47, 25 ஆகத்து 2014 (UTC)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:17, 31 ஆகத்து 2014 (UTC)
எனக்கொரு உதவி
தொகுஅம்மையே, அண்மைக்காலமாக என் கணினியில் விக்கித்தரவு இயங்க மறுக்கிறது. Sinvalid token என காட்டுகிறது. பகுப்புகளுக்கும் சேர்க்க முடியவில்லை. நான் உருவாக்கிவரும் கட்டுரைகளிலும் பகுப்புகளிலும் பிற மொழி இணைப்பை சேர்த்து உதவுக. (அவற்றை திருத்தி நீங்கள் மேம்படுத்துவீர்கள் என்பது மறைபொருள் என்பதால் குறிப்பிடவில்லை. :P -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:42, 5 செப்டம்பர் 2014 (UTC)
பயனர்:தமிழ்க்குரிசில் எனக்கும் இன்று அதே பிரச்சனைதான். காலையில் நான் தொடங்கிய தங்கமலை ரகசியம் கட்டுரைக்கு ஆங்கில விக்கி இணைப்பை என்னால் இணைக்க முடியவில்லை. இப்போதும் முயற்சி செய்தேன். முடியவில்லை. ஒரு நாள் பொறுத்துப் பார்க்கலாம். --Booradleyp1 (பேச்சு) 16:49, 5 செப்டம்பர் 2014 (UTC)
- என் கணினியும் அடிக்கடி மெதுவாக இயங்குகிறது. நான் மறந்துவிடுவேன். நினைவில் கொண்டு செயல்படுத்துக. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:56, 5 செப்டம்பர் 2014 (UTC)
நன்றி...
தொகுவணக்கம்; விடுத்த வேண்டுகோளின்படி, தங்கமலை ரகசியத்தை எழுதியதற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:20, 8 செப்டம்பர் 2014 (UTC)
- பின் குறிப்பு: நான் தொடர்ந்து எழுப்பும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்பது கட்டாயமில்லை; உங்களுக்கு ஆர்வமும், உரிய நேரமும் இருந்தால் மட்டும் செய்யுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:40, 8 செப்டம்பர் 2014 (UTC)
பித்தேகோரசு தேற்றம்...
தொகுஇன்று மாலையில் என் மகனுக்கு இந்தத் தேற்றத்தினை முதன்முதலாக விளக்கி, பயிற்சிக் கணக்குகளும் தந்தேன். அதன்பிறகு தமிழ் விக்கிக்கு வந்தபின்னர், இக்கட்டுரையை நீங்கள் விரிவாக்கி வருவதைக் கண்டேன். தற்செயலான பொருத்தம் கண்டு வியந்தேன்; word problem ஒன்றில் சந்தேகம் உள்ளது. இடையூறாக இருக்காதெனில், உங்களின் தொலைபேசி எண்ணை எனது மின்னஞ்சலுக்கு அனுப்ப இயலுமா? அல்லது உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாமா? அல்லது இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் / உங்களின் பேச்சுப் பக்கத்தில் கேட்கவா?--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:30, 13 செப்டம்பர் 2014 (UTC)
பதக்கம்
தொகு12,500 + தொகுப்புகள் | |||
தமிழ் விக்கியில் 12,500+ தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்
|
- விருப்பம் வாழ்த்துக்கள் பூங்கோதை அவர்களே! Booradleyp1 என்ற பெயர் மூலம் நீங்கள் பங்களித்த தொகுப்புக்கள் 12,500+ எனினும் நீங்கள் ஏற்கனவே Booradleyp என்ற பெயர் மூலம் பங்களித்த தொகுப்புக்கள் 17,500+. ஆகவே 17,500+ + 12,500+ = 30,000++ கணக்குச் சரிதானே! வாழ்த்துக்கள்!!!--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:04, 2 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம் 30,000++ தொகுப்புக்களுக்கு மேல் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை முனைப்பாக மேம்படுத்திவரும் தங்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுகளும் !! வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 01:29, 3 அக்டோபர் 2014 (UTC)
நன்றி | ||
{{{1}}} |
பாராட்டி ஊக்கப்படுத்தும் உங்கள் மூவருக்கும் எனது நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:51, 3 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்! தங்களின் ஆர்வமிகு பங்களிப்பிற்கு என்னுடைய பாராட்டுகளும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:32, 3 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பமும் பாராட்டுகளும்.--Kanags \உரையாடுக 19:54, 21 அக்டோபர் 2014 (UTC)
உதவி
தொகுபேரரசரின் புதிய ஆடைகள் முழு உ.தி செய்து உதவுங்கள் :).--சோடாபாட்டில்உரையாடுக 16:43, 21 அக்டோபர் 2014 (UTC)
- ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 13:37, 22 அக்டோபர் 2014 (UTC)
- நன்றி. காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரைக்கும் உ.தி வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 13:45, 22 அக்டோபர் 2014 (UTC)
பதக்கம்
தொகுகடுமையான உழைப்பாளர் பதக்கம் | ||
உரைதிருத்தம், பதிப்புரிமை மீறல் அற்ற கட்டுரையாக்கத்திற்கு பங்களித்தல், கணிதம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்குதல் எனத் தொடரும் உங்கள் கட்டற்ற கலைக்களஞ்சியத்திற்கான சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி!--AntonTalk 19:20, 22 அக்டோபர் 2014 (UTC) |
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 21:09, 22 அக்டோபர் 2014 (UTC)
Anton, நந்தகுமார்- உங்கள் ஊக்குவித்தலுக்கு மிகவும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:28, 23 அக்டோபர் 2014 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:35, 23 அக்டோபர் 2014 (UTC)
பெண்ணியம் தொடர்பான வலைவாசல்
தொகுவணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:45, 27 அக்டோபர் 2014 (UTC)
- வணக்கம்! வாய்ப்பு கிடைக்கும்போது, Meena Kandasamy பற்றி எழுதித் தாருங்கள் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:55, 2 நவம்பர் 2014 (UTC)
கட்டுரை உருவாக்க வேண்டுகோள்
தொகுவணக்கம். அண்மையில் வந்த Interstellar திரைப்படத்தில் https://en.wikipedia.org/wiki/Tesseract ஒரு முக்கியமான காட்சியில் வருவதால் மக்கள் இதனைப் பற்றித் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான தமிழ் கட்டுரையை உருவாக்கித் தந்தால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 15:32, 13 நவம்பர் 2014 (UTC)
சிகரம்:பிலிப்பீன்சு
தொகுசிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள். |
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:09, 28 திசம்பர் 2014 (UTC)
பூங்கோதை அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:25, 1 சனவரி 2015 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Booradleyp1/தொகுப்பு05!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
- வணக்கங்க, நீங்கள் எல்லாம் சும்மாவே மாதம் 1000 தொகுப்புகளைக் கடப்பவர்கள் :) திட்டப்பக்கத்தில் உங்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 14:01, 9 சனவரி 2015 (UTC)
- இரவி, அனைவரும் உற்சாகமாகத் திட்டத்தில் முனைப்போடு செயலாற்றுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் வேண்டுகோளின்படி நானும் என் பெயரை இணைத்து விட்டேன்.--Booradleyp1 (பேச்சு) 16:26, 9 சனவரி 2015 (UTC)
- ஆம், இந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் தான் உந்துதல் :) பெயரை இணைத்தமைக்கு மிக்க நன்றி :)--இரவி (பேச்சு) 07:48, 10 சனவரி 2015 (UTC)
தகவலுக்காக...
தொகுவணக்கம்! இது, சென்றாண்டு செய்தி. புதிய செய்தியினை தற்போது இணைத்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:49, 15 சனவரி 2015 (UTC)
- தவறைத் திருத்தியமைக்கு நன்றி சிவகுருநாதன்.--117.197.200.25 14:59, 15 சனவரி 2015 (UTC)
மொழி பெயர்ப்பு உதவி
தொகுவணக்கம் :) இந்த பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து தரமுடியுமா?
- Chappie - சேப்பீ
- Faults - பால்ட்ஸ்
- Unfinished Business - அன்பினிஷ்டு பிசினஸ்
- Paul Blart: Mall Cop 2 - பால் பிலார்ட்: மால் காப் 2
- Don't Mess with Texas - டோன்ட் மெஸ் வித் டெக்சாஸ்
- Mad Max: Fury Road -மேட் மேக்ஸ்: புயூரி ரோட்
- Tomorrowland - டுமாரோலேன்ட்
--Thilakshan 14:49, 28 சனவரி 2015 (UTC)
- எனக்குத் தெரிந்தவரை தந்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:15, 28 சனவரி 2015 (UTC)
நன்றி :) --Thilakshan 13:11, 29 சனவரி 2015 (UTC)
@Booradleyp1 ஐயா உங்கள் கூற்று சரியே, திருத்திவிடுகிறேன். நான் வீக்கிபிடியாவிற்கு புதிது ஆகவே தடுமாற்றமும், எழுத்துபிழைகளும் தற்போதைய நிலையில் உள்ளது, திருத்திக்கொள்கிறேன்.
மணல் தொட்டி தொகுப்புகள்
தொகுகுறிப்பிடத்தக்க வசதிக்குறைவு ஏதும் இல்லாவிட்டால் நீங்கள் நேரடியாக கட்டுரை வெளியிலேயே உங்கள் கட்டுரைகளை வளர்க்கலாமே? பெரும்பாலும், கணிதம் / உங்கள் கட்டுரைகளில் யாரும் எடுத்தவுடன் திருத்தம் / வார்ப்புரு போட மாட்டார்கள் என்று எண்ணுகிறேன் :) கட்டுரைகளின் தரம் பற்றிய பல்வேறு அளவீடுகளில் கட்டுரைப்பக்கங்களில் உள்ள தொகுப்பு எண்ணிக்கையும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஒரே தொகுப்பில் கட்டுரைகளைப் பதிவேற்றுவதால் உங்கள் உழைப்பு சரியாக அளவிடப்படாமல் போகும். தவிர, உங்கள் பங்களிப்புக் கணக்கில் கட்டுரை வெளியில் உள்ள தொகுப்புகளும் சரியாக கருத்தில் கொள்ளப்படும். உங்களைப் போன்ற முனைப்பான பங்களிப்பாளர்களுக்கு இது ஒரு பொருட்டு இல்லை என்றாலும், தகவலுக்காக சொல்ல வேண்டும் என்று தோன்றியது. நன்றி.--இரவி (பேச்சு) 18:43, 4 பெப்ரவரி 2015 (UTC)
சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு
தொகுசிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:59, 5 பெப்ரவரி 2015 (UTC)
- வணக்கம் பூங்கோதை அவர்களே! நீங்கள் பிலிப்பீன்சு கட்டுரையில் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் என்பவற்றைச் சரிபார்த்துத் திருத்தி உதவினால் பேருதவியாக அமையும். திருத்தும் போது ஆங்கிலக் கட்டுரையையும் கவனத்திற் கொள்ளுங்கள். கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கட்டுரையின் ஏதாவது ஒரு பகுதி நீங்கள் உரைதிருத்திச் சொற்பிழை, இலக்கணப்பிழைகள் சரிபார்க்கப்பட்டதாகக் கருதினால் இங்கு கையொப்பமிட்டு உதவுங்கள். இவ்வாறு செய்வது அனைத்து விக்கிப்பீடியர்களும் ஒன்றிணைந்து உரைதிருத்தத்தை மேற்கொள்ள வசதியாக இருக்கும். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 10:22, 10 பெப்ரவரி 2015 (UTC)
தங்களின் கவனத்திற்கு...
தொகுவணக்கம்! உச்ச நீதிமன்றம் இச்சட்டங்களை அரசியலமைப்புக்குப் புறம்பானது எனத் தெரிவுபடுத்தியது - தெளிவுபடுத்தியது என்பது சரியென நினைக்கிறேன்; சரிபாருங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:23, 9 மார்ச் 2015 (UTC)
ஆயிற்று--Booradleyp1 (பேச்சு) 15:23, 9 மார்ச் 2015 (UTC)
மொழி பெயர்ப்பு உதவி
தொகுவணக்கம் :) இந்த பெயர்களை தமிழில் மொழி பெயர்த்து தரமுடியுமா? --Thilakshan 19:18, 9 மார்ச் 2015 (UTC)
- Unfriended -அன்பிரன்டடு
- The Age of Adaline-தி ஏஜ் ஆஃப் அடலின்
- The Transporter Legacy - தி ட்ரான்ஸ்போர்ட்டர்
- Terminator Genisys -டெர்மினேட்டர் ஜெனிசிஸ்
- Minions -மினியன்ஸ்
- The Man from U.N.C.L.E. - தெ மேன் ஃபிரம் யு.என்.சி.எல்.ஈ
- Masterminds -மாஸ்டர்மைன்ட்ஸ்
- Straight Outta Compton-ஸ்டெரெய்ட் அவுட்டா காம்ப்டன்
- பயனர்:Thilakshan முடிந்தவரை தமிழிலில் தந்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:11, 10 மார்ச் 2015 (UTC)
மிக்க நன்றி :) --Thilakshan 21:03, 12 மார்ச் 2015 (UTC)
சிறப்பு முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கங்க. உலக பெண்கள் வரலாற்று மாதத்தை முன்னிட்டு இன்னும் நிறைய பெண் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் உங்கள் படங்கள், அறிமுகங்களைப் பல களங்களில் இடுவதில் மகிழ்கிறேன். அந்த வகையில் மீண்டும் முதற்பக்கத்தில் உங்களைப் பற்றிய சிறப்பு அறிமுகம் இடம்பெறுகிறது. இதனை முன்னிட்டு, நெடுநாள் நான் தள்ளிப்போட்டு வந்த பணியைச் செய்திருக்கிறேன். உங்கள் உரையைத் தமிழ் எழுத்துகளில் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அன்புடன்...--இரவி (பேச்சு) 16:52, 10 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 14:49, 11 மார்ச் 2015 (UTC)
- விருப்பம் --AntonTalk 15:02, 11 மார்ச் 2015 (UTC)
பதக்கம்
தொகுசிறந்த உரைதிருத்துனர் பதக்கம் | ||
தமிழ் விக்கியில் தொடர்ந்து பயனளிக்கும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். இரா.பாலா (பேச்சு) 09:55, 22 மார்ச் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- ஊக்குவித்தலுக்கு நன்றி பாலா.--Booradleyp1 (பேச்சு) 14:45, 24 மார்ச் 2015 (UTC)
புதிய நிருவாகிகள் பரிந்துரை
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:37, 28 மார்ச் 2015 (UTC)
பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
தொகு2015 பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம் | ||
2015 பெண்கள் வரலாற்று மாதக் கட்டுரைகளில் சிறப்பான பங்களித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பெண்கள் சார்பான கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:16, 1 ஏப்ரல் 2015 (UTC) |
- விருப்பம்--இரா.பாலா (பேச்சு) 13:06, 1 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம்--AntonTalk 13:35, 1 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:44, 1 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 06:48, 2 ஏப்ரல் 2015 (UTC)
- பாராட்டி ஊக்குவிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:41, 3 ஏப்ரல் 2015 (UTC)
ping
தொகுஒருவருக்கு உரையாடல் குறிப்பை அவர் பேச்சுப்பக்கத்தில் இடுவதற்குப் பதில் {{ping}} எனும் வார்ப்புருவையும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் பயன்படுத்தலாம். எ.கா: {{ping|Username}} செய்தி அல்லது தகவல். , பேச்சு:நீல துர்கம் --AntonTalk 17:17, 8 ஏப்ரல் 2015 (UTC)
- பயனுள்ள இத் தகவலுக்கு நன்றி அன்டன். இனி இதைப் பயன்படுத்துகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:31, 9 ஏப்ரல் 2015 (UTC)
தற்காவல்
தொகுவணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --AntanO 11:08, 14 ஏப்ரல் 2015 (UTC)
- விருப்பம்--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 12:13, 16 ஏப்ரல் 2015 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! இங்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 16 ஏப்ரல் 2015 (UTC)
நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:46, 17 ஏப்ரல் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
தொகுPlease register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:06, 26 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:34, 7 மே 2015 (UTC)
குங்குமம் தோழி இதழில் தங்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது...
தொகுவிக்கிபீடியா வித்தகிகள்!; நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:53, 19 மே 2015 (UTC)
பகுப்பு:ஈரோடு மாவட்டதிலுள்ள கிராமங்கள்
தொகுவணக்கம்! பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராமங்கள் எனும் சரியான பகுப்பு ஏற்கனவே இருப்பதால், தவறான தலைப்பினைக் கொண்ட பகுப்பின்கீழ் வந்த அனைத்துக் கட்டுரைகளிலும் உரிய மாற்றத்தை செய்துள்ளேன். தவறான தலைப்பினைக் கொண்ட பகுப்பினை முற்றிலுமாக நீக்கிவிட்டேன். அதன் காரணமாக நீங்கள் உருவாக்கிய பேச்சுப் பக்கமும் நீக்கப்பட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:20, 11 சூன் 2015 (UTC)
- சரி செய்தமைக்கு நன்றி சிவகுருநாதன்.--Booradleyp1 (பேச்சு) 05:23, 11 சூன் 2015 (UTC)
உதவி
தொகுஒரு வார்ப்புருவை உருவாக்குவது எப்படி? சொல்லித் தருவீர்களா தோழர்? --கி.மூர்த்தி 18:48, 11 சூன் 2015 (UTC)
பயனர்: கி.மூர்த்தி, நான் வார்ப்புருக்கள் அதிகமாக உருவாக்குவதில்லை. முறையாக எப்படி உருவாக்குவது என்பது எனக்கும் தெரியாது.
நான் பின்பற்றும் முறை:
ஏற்கனவே உள்ள வார்ப்புருக்களில் ( அல்லது ஏற்கனவே ஏதாவது கட்டுரைகளில் உள்ள வார்ப்புருக்கள்) நமக்குத் தேவையான வார்ப்புருவுக்குப் பொருத்தமான வார்ப்புருவைத் தேர்ந்தெடுத்து, அதன் தொகு-பக்கத்தில் உள்ளவற்றைக் காப்பி பண்ணி நமது மணற்தொட்டிப் பக்கத்தில் பேஸ்ட் பண்ணின பிறகு அதில் நமக்கு அவசியமற்றவற்றை நீக்கிவிட்டு, அங்குள்ள தகவல்களுக்குப் பதில், பொருத்தமான இடங்களில் நமது வார்ப்புருவுக்கான தகவல்களை பதிலிட்டு சேமித்தால் புது வார்ப்புரு கிடைக்கும். பின் அதனைப் பொதுவெளிக்கு நகர்த்திக்கொள்ளலாம்.
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு ஏதாவது வார்ப்புரு தேவைப்பட்டால் சொல்லுங்கள் நானும் முயற்சிக்கிறேன்.
தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்புகள் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுகள். தொடரட்டும் உங்களது பங்களிப்புகள் என்ற வாழ்த்துகளுடன் --Booradleyp1 (பேச்சு) 13:56, 12 சூன் 2015 (UTC).
- நன்றி தோழர் . முயற்சிக்கிறேன். ஐயம் வந்தால் கேட்கிறேன். --கி.மூர்த்தி 14:03, 12 சூன் 2015 (UTC)
மறுமொழி
தொகுஇராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) கட்டுரையில் விந்தியமலைப் பிரதேசம் தென்னிந்தியாவான விந்தை! உப தலைப்பிலும், அயோத்தியிலிருந்து சித்திரக்கூடம் வரை! உப தலைப்பில் ஆதார தகவல்கள் உள்ளது. மேலும் இந்திய புதைபொருள் ஆய்வாளர் (H.D.SANGALIYA-ARCHIVIST) எச். டி. சங்காலியா தனது ஆய்வு அறிக்கையில் இதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்த வரைபடம் ஒன்று உள்ளது.--Yokishivam (பேச்சு) 08:35, 14 சூன் 2015 (UTC)
நூலட்டை சேர்த்தல்
தொகுஅண்மையில் பொதுவகம் வழியாக நான் சேர்த்த ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (நூல்) மற்றும் வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (நூல்) நூலட்டைகள் நீக்கப்பட்டிருந்தன. நெறிமுறை அறிந்திராமல் அவ்வாறு செய்துவிட்டேன். தற்போது தாங்கள் அதனைச் சரிசெய்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நூலட்டையைப் பதியும் முறையை எனக்குத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். முன்னர் ஒரு முறை செய்த நினைவு, ஆனால் மறந்துவிட்டேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:49, 16 சூன் 2015 (UTC)
தமிழர் வீரம் (நூல்)
தொகுவணக்கம். தமிழர் வீரம் (நூல்) பதிவிற்கு அதன் மேலட்டையைச் சேர்க்க விரும்புகிறேன். வேறு இரு நூல்களுக்கு முறையாகப் பதியாததால் அவை நீக்கப்பட்டு, தங்களால் சரிசெய்யப்பட்டிருந்தது என நினைக்கிறேன். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்நூலைப் பதிவதற்கான வழிமுறையை எனக்குத் தெரிவித்துதவ வேண்டுகிறேன். பிற நூல்களைப் பதிய அம்முறை எனக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். தங்களைப் போன்றோரின் உதவி விக்கியில் நான் எழுதும் ஆர்வத்தை மேம்படுத்துகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 01:52, 16 சூன் 2015 (UTC)
ஜம்புலிங்கம், நீங்கள் பொதுவகத்தில் நூல்களின் மேலட்டைகளைப் பதிவேற்றியிருந்தீர்கள். பொதுவகத்தில் ”நியாயப் பயன்பாட்டு உரிமம்” கிடையாது என்பதால் அப்படிமங்கள் பதிப்புரிமை சிக்கல் காரணமாக அங்கு நீக்கப்படும். எனவே இனிமேல் நூல்களின் மேலட்டைகளை தமிழ் விக்கியில் பதிவேற்றுங்கள். இங்கு அவற்றுக்கு அனுமதி உண்டு. த.விக்கியின் எந்தவொரு பக்கத்திலும் இடதுபுறமுள்ள ”கோப்பைப் பதிவேற்று” மூலம் செய்யலாம். தற்பொழுது இதுவும் பராமரிப்புக் காரணமாக ஒரு நீளமான முறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள சிவப்பு நட்சத்திரக் குறியிட்ட கட்டங்களை எல்லாம் முறையாக நிரப்பினால் தான் பதிவேற்றல் நிறைவு பெறும். ஓரிரு முறை செய்தபின் அதுவும் எளிதாகிவிடும்.--Booradleyp1 (பேச்சு) 04:31, 16 சூன் 2015 (UTC)
- வணக்கம். தாங்கள் கூறியபடி முயற்சித்துவிட்டு ஐயமிருப்பின் தொடர்புகொள்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:02, 17 சூன் 2015 (UTC)
தமிழர் வீரம் (நூல்) அட்டை
தொகுவணக்கம். தற்போது தமிழர் வீரம் (நூல்) பதிவில் நூலட்டை முயற்சி செய்து சேர்த்துள்ளேன். இந்நூலுக்கான அட்டையைப் பதியும் முன்பாக தவறுதலாக படிமம்:Sethupillai book cover.jpg என்ற நிலையில் தமிழண்ணலின் வளர்தமிழ் : உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (நூல்)நூலட்டையைச் சேர்த்துவிட்டேன். பின்னர் சரிசெய்தேன். இனி தவறு நிகழாமல் சேர்க்க முயற்சிப்பேன். தங்கள் கருத்து உதவியாக இருந்தது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:17, 17 சூன் 2015 (UTC)
நல்ல முயற்சி ஜம்புலிங்கம், ஒரு சிறு திருத்தம் உள்ளது. பதிவேற்றத்தின்போது உரிமம் தொடர்பான தேர்வுகளில் சற்று வேறுபட்டு விட்டது என நினைக்கிறேன். நூலட்டைகள்-பகுப்பில் சேர்க்கப்படாமல் இருந்தது. நான் படிமப்பக்கத்தில் உரிமம் -துணத்தலைப்பில் மாற்றம் செய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:15, 18 சூன் 2015 (UTC)
- தொடர்ந்து பதியப் பதிய சரிதாகிவிடும் என நினைக்கின்றேன். அன்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:24, 18 சூன் 2015 (UTC)
- இன்று தமிழின்பம் (நூல்) அட்டையைப் பதிவு செய்துள்ளேன். பெரும்பாலும் சரியாகப் பதிவாக்கியுள்ளேன் என நினைக்கிறேன். தொடர்ந்து முயற்சிப்பேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:31, 19 சூன் 2015 (UTC)
பகுப்புகளுக்கு விக்கியிடை இணைப்பு
தொகுவணக்கம், புதிய பகுப்புகளை உருவாக்கும் போது, அவற்றுக்குத் தகுந்த ஆங்கில விக்கிப் பகுப்புகள் இருந்தால் அவற்றை விக்கித்தரவில் இணைத்து விடுவது நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 08:33, 18 சூன் 2015 (UTC)
அவ்வாறே இணைத்து விடுகிறேன். அறிவுறுத்தலுக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:54, 18 சூன் 2015 (UTC)