Thilakshan
பயனர் பக்கம் | உரையாடல் | பங்களிப்புக்கள் | மின்னஞ்சல் | திட்டங்கள் |
படிமம் | நான் எழுதிய கட்டுரைகள் | நான் வாங்கிய பதக்கங்கள் | மணல்தொட்டி |
வாருங்கள்!
வாருங்கள், Thilakshan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:28, 24 மார்ச் 2013 (UTC)
தானியங்கித் தமிழாக்கம்
தொகுகூகுள் மொழிபெயர்ப்பியைக் கொண்டு உருவாக்கப்படும் கட்டுரைகளை எவ்வித மாற்றமும் இன்றி இங்கு வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவை உடனடியாக நீக்கப்படும். கூகுள் மொழிபெயர்ப்பி இன்னும் பீட்டா நிலையிலேயே உள்ளது. மொழிபெயர்க்கப்படும் பகுதிகளை மீண்டும் சரி பார்த்து தகுந்த திருத்தங்களுடன் இங்கு எழுத வேண்டும். மொழிபெயர்ப்பியை மட்டும் நம்பி மொழிபெயர்க்க முடியுமானால், தமிழ் விக்கியில் இப்போது 4 மில்லியன் கட்டுரைகள் உருவாக்கப்பட்டிருக்கும்:). புரிதலுக்கு நன்றி.--Kanags \உரையாடுக 23:15, 13 சூலை 2013 (UTC)
- காதலுக்கு சலாம் (தொலைக்காட்சித் தொடர்)
- இது காதலா (தொலைக்காட்சித் தொடர்)
தானியங்கித் தமிழாக்கம் எவ்வித மாற்றமும் இன்றி இங்கு வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இவ்வாறு செய்ய வேண்டாம். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 12:36, 12 நவம்பர் 2013 (UTC)
முந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)
தொகுவணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு அவசியம் ஆதாரங்கள் (மேற்கோள்கள்) இணைக்கவும். முந்தானை முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்) கட்டுரையில் கதைச் சுருக்கம் குழப்பமாக உள்ளது -\\சந்தர்ப்ப சூழ்நிலையால் கந்தசாமியின் மனைவி இறக்க, கந்தசாமியின் தம்பி இன்னொரு கல்யாணம் செய்து கொள்கிறார்.\\ இதனைத் தயவுசெய்து சரி செய்யவும். மேலும் நடிகர்கள் பட்டியலில் Revathi Sank-பெயர் முழுமையாக இல்லை. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:34, 20 நவம்பர் 2013 (UTC)
மேலே குறிப்பிட்ட கதைச் சுருக்கத்தில் நான் சுட்டியுள்ள குழப்பத்தைச் சரி செய்ய வேண்டி மீண்டும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:34, 3 திசம்பர் 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Thilakshan!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:26, 3 திசம்பர் 2013 (UTC)
விருப்பம்-நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:35, 3 திசம்பர் 2013 (UTC)
விக்கித்திட்டம் திரைப்படம்
தொகுதங்கள் கட்டுரைகள் நன்றாக உள்ளன.நீங்கள் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் இதில் பங்கு கொள்ளலாமே? விருப்பம் இருந்தால் உங்கள் பெயரை பதிந்துக் கொள்ளுங்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:48, 3 திசம்பர் 2013 (UTC)
தங்களுடைய கையெழுத்தை இட்டுவிடுங்கள் . மேலும் சந்தேகங்களுக்கு கேட்கலாம்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:11, 3 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுபேச்சு:துப்பறியும் ஆன்மா (ஆர்.ஐ.பி.டி)-இப்பக்கத்தினைப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:20, 4 திசம்பர் 2013 (UTC)
உங்கள் பயனர் பக்கத்தில் நீங்கள் கட்டுரைகள் பட்டியலில் தந்துள்ள கட்டுரைகளைப் பார்க்கும்போது, பயனர்:Arnav19-ம் நீங்களும் ஒருவர் போலத் தெரிகிறதே? தெளிவுபடுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:34, 4 திசம்பர் 2013 (UTC)
அறிவுரை உதவி
தொகு- பேச்சுப்பக்கத்திலுள்ள உள்ளடக்கங்களை நீக்க வேண்டாம், பதிலளியுங்கள்.
- ஆங்கிலப் படங்களுக்கு தமிழ்ப்படுத்தி தலைப்பிட வேண்டாம். வேண்டுமானால், மொழிமாற்றப்படங்களுக்கு வழிமாற்று உருவாக்கலாம். கட்டுரையில் உள்ளேயும் அது பற்றிக் குறிப்பிடலாம்.
:படிமம்:Cithiram Pesuthadi.jpeg இன் பதிப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Cithiram Pesuthadi.jpeg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:42, 5 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுதொலைக்காட்சித் தொடர்கள் பற்றி நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளுக்கு அவசியம் மேற்கோள்கள் இணைக்கவும். குறைந்தபட்சம், நீங்கள் எந்த இணையதளத்தில் இருந்து விவரங்களைப் பெறுகிறீர்களோ அதன் முகவரியை வெளி இணைப்பாகத் தாருங்கள்.
உங்களது பங்களிப்புகள் குறித்து பிறபயனர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு பதில் தரும் விதமாகக் இப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களைப் பதிந்து, கலந்துரையாடும்படி உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:47, 18 திசம்பர் 2013 (UTC)
- விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:48, 19 திசம்பர் 2013 (UTC)
வேண்டுகோள்
தொகுநீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் இணைக்கும் விவரங்கள், அவை தரப்பட்டுள்ள இணையதளப் பக்கங்களில் இருந்து சிறிதும் மாற்றாமல் அப்படியே இணைக்கப்படுகின்றன. இது பதிப்புரிமை மீறலாகும். அப்பக்கங்களில் உள்ள விவரங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, உங்கள் சொந்த வாக்கியங்களில் விக்கிநடையில் மாற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 06:12, 19 திசம்பர் 2013 (UTC)
- தயவுசெய்து பதிப்புரிமை உள்ள உள்ளடக்கங்களை அப்படியே கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம்--சண்முகம்ப7 (பேச்சு) 14:30, 22 திசம்பர் 2013 (UTC)
படிமம்:Ganesh-Venkatraman-photos-14.jpg எங்கிருந்து பெறப்பட்டது மற்றும் அதன் பதிப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Ganesh-Venkatraman-photos-14.jpg படிமத்தை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. இக்கோப்பு எங்கிருந்து எடுக்கப்பட்த்து என்றத் தகவல் இணைக்கப்படவில்லை. காப்புரிமைப் பற்றி சரிபார்க்க மூலம் தரப்படுதல் முக்கியமாகும்.தாங்கள் தகுந்த காப்புரிமை வார்ப்புருவையும் மூலத்தையும் படிம விளக்கப் பக்கத்தில் சேர்க்க வேண்டும் என வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நீங்கள் வேறு ஏதேனும் கோப்புகள் பதிவேற்றிருப்பின், அவற்றையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:04, 24 திசம்பர் 2013 (UTC)
கூகுள் தானியங்கி தொடர்பாக மீண்டும் எச்சரிக்கை
தொகுதிலக்சன், நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு கட்டுரைகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறீர்கள் போல் தெரிகிறது. //இந்த CCL போட்டி தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விளையாட்டு விட பிரபலமாக வளர்ந்து விட்டது.// கட்டுரைகளைத் திருத்துங்கள். உங்களுக்கு இங்கு ஒரு செய்தி உள்ளது.--Kanags \உரையாடுக 01:51, 28 திசம்பர் 2013 (UTC)
பதிப்புரிமை மீறல்
தொகுவணக்கம், Thilakshan!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
- தயவு செய்து பதிப்புரிமை மீறல் உள்ள உள்ளடக்கங்களை சேர்க்க வேண்டாம். பயனர் பேச்சுப் பக்கம் மற்றும் கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள். விக்கிப்பீடியா பலரின் கூட்டு முயற்சி. எனவே, கூட்டாக இயங்குவதும் முக்கியம். விளங்காவிட்டால் மற்றவர்களுடன் உரையாடி அறிந்து கொள்ளுங்கள். இனியும் பதிப்புரிமை மீறல் உள்ளடக்கங்களை சேர்த்தால் நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:48, 10 சனவரி 2014 (UTC)
பதக்கம்
தொகுஅசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
உங்களின் தொடர் பங்களிப்புகளை பாராட்டி உங்களுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது. உங்களின் பேச்சுப்பக்கம் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளும் பயனர்களும் உரையாட உருவாக்கப்பட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 00:41, 22 சனவரி 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பதிப்புரிமை மீறல் - மீண்டும்
தொகுவணக்கம், Thilakshan!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.
இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
பதிப்புரிமை மீறல் உள்ள படிமங்களை இங்கு பதிவேற்ற வேண்டாம். பல படிமங்கள் நியாயப் பயன்பாட்டுக் காரணங்கள் பொருந்தாது உள்ளது. அவற்றுக்கு தக்க அனுமதியினை இணைக்கவும். இங்கு படிமங்கள் உள்ளன. பல முறை நீங்கள் பதிப்புரிமை மீறல் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளீர்கள். இது தொடர்ந்தால் நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 01:24, 23 சனவரி 2014 (UTC)
- என் பேச்சுப் பக்கத்தில் பதிலளித்துள்ளேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 03:49, 24 சனவரி 2014 (UTC)
எச்சரிக்கை
தொகுநீங்கள் தொடர்ந்தும் பதிப்புரிமை உள்ளடக்கங்களைச் சேர்த்துள்ளீர்கள். இனியும் வலைத்தளம் உட்பட்ட ஊடகங்களில் இருந்து பிரதி செய்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடைசெய்யப்படலாம். இதை இறுதி அறிவிப்பாக கருதிக் கொள்ளுங்கள். நன்றி! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:18, 26 சனவரி 2014 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Thilakshan!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
--இரவி (பேச்சு) 10:26, 7 மார்ச் 2014 (UTC)
விருப்பம்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:59, 7 மார்ச் 2014 (UTC)
விஜய் விருதுகள்
தொகுவிஜய் விருதுகள் தொடர்பாக சில கட்டுரைகள் எழுதலாம். இதுவரைக்கும் எட்டு விஜய் விருது விழா நடட்ந்திருக்கிறது என நினைக்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்டுரை எழுதலாம். அது போல் பிலிம்பேர் ஆஸ்கர், சாகித்ய அகாடெமி, கேன்சு திரைப்பட விழா என்றும் எழுதலாம். நிறைய கட்டுரைகள் வரும். 2010ல் இருந்து நிறைய திரைப்படங்கள் பற்றிய கட்டுரைகள் விட்டுப் போயிருக்கின்றன. அவற்றை பற்றியும் எழுதலாம்.
கீழுள்ள பகுப்பைப் பார்க்கவும்.
பகுப்பு:ஆண்டுகள்_வாரியாகத்_தமிழ்த்_திரைப்படங்கள்
பகுப்பு:ஆண்டு வாரியாக திரைப்படங்கள்
நேரம் கிடைக்கும் போது எழுதவும் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:44, 10 மார்ச் 2014 (UTC)
unreferenced
தொகுவண்க்கம் Thilakshan, நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக அளவில் புதிய கட்டுரை எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆயினும் ஒரு சிறு குறை, நீங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு மேற்கோள்கள், உசாத்துணை போன்றவற்றையும் இணைத்தால், விக்கிப்பீடியாவின் தரமும் உயரும். அதிக கட்டுரைகளை தரத்துடன் உருவாக்க வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:22, 17 மார்ச் 2014 (UTC) விருப்பம்
ஆங்கில ஒலிபெயர்ப்பு
தொகுஆங்கிலப் படத் தலைப்புக்களை ஒலிபெயர்க்கும்போது சரியான தலைப்புக்களில் ஒலிபெயர்க்கவும். "The" > த, தி வேறுபாடுகளையும் கருத்திற் கொள்ளுங்கள். ஏற்கெனவே தலைப்புக்கள் மாற்றப்பட்டபடி, உள்ளடக்கங்களையும் மாற்றுங்கள். --AntonTalk 03:23, 1 ஏப்ரல் 2014 (UTC) விருப்பம்
கலர்ஸ் தொலைக்காட்சி
தொகுவணக்கம் நண்பரே, தொலைக்காட்சி, திரைப்படங்கள் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருவதற்கு என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கலர்ஸ் தொலைக்காட்சி என்ற நீங்கள் உருவாக்கிய கட்டுரையைக் கண்டேன். அத்தொலைக்காட்சியின் பெயர் Colors TV என்றிருந்தால் கலர்ஸ் தொலைக்காட்சி என்று தமிழில் பெயரிடலாம். ஆனால் Colors என்றே குறிக்கப்பட்டுள்ளது, எனவே கலர்ஸ் (தொலைக்காட்சி) என்பதே சரியாக இருக்குமென எனக்குப்படுகிறது. எனவே பெயர்மாற்றம் குறித்து ஆலோசிக்கவும். காண்க : புதிய தலைமுறை (தொலைக்காட்சி). நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:36, 3 ஏப்ரல் 2014 (UTC) விருப்பம்
தமிழ் + ஆங்கிலம்
தொகுதயவு செய்து தமிழ் ஆங்கிலம் கலந்து எழுதாதீர்கள். ஆங்கிலமே தெரியாத ஒருவர் ரோக்ஸென் மெக்கி கட்டுரையை எப்படி வாசிப்பார்? இப்படித்தான் இருக்கும் 2010ம் ஆண்டு ********** என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து *******, *******, மற்றும் த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்.... --AntonTalk 15:41, 8 ஏப்ரல் 2014 (UTC)
மன்னிக்கவும் :) இனி நான் முடிந்தளவு ஆங்கிலம் கலவாமல் தமிழ் மொழியில் மட்டும் கட்டுரை எழுதுகின்றேன். :)
எச்சரிக்கை
தொகுபிழையான பெயர்களுக்கு வழி மாற்றுதல், பிற பயனர்களின் அறிவுரைகளை கேளாது உங்கள் போக்கில் செயற்படுதல் போன்றவற்றில் நீங்கள் தொடர்ந்தும் ஈடுபட்டால் சில காலங்களுக்கு நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். கட்டுரை தொகுத்தல் உட்பட்ட பிற விடயங்களில் மாற்றுக் கருத்து இருந்தால், கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள் அல்லது மற்றவர்களுடன் கலந்துரையாடுங்கள். --AntonTalk 09:58, 10 ஏப்ரல் 2014 (UTC)
ஒலிபெயர்ப்பு - இலக்கணம்
தொகுDawn of the Planet of the Apes என்பதை டவ்ன் ஓப் த ப்ளனேட் ஓப் த அபேஸ் என்று ஒலிபெயர்த்துள்ளீர்கள்.
- "Dawn" என்பது "டவ்ன்" என்று ஒலிக்காது. known என்பது நவ்ன் என்றோ கிநவ்ன் என்றோ ஒலிப்பதில்லை.
- Planet என்பது ப்ளனேட் என்னு எழுதப்படல் தமிழ் இலக்கணப்பிழை. காரணம், மெய்யெழுத்தான ப் எழுத்துக்கு முன் வராது. ப்ளனேட் என்று ஒலிப்பதிலும் பார்க்க பிளனட் என்று ஒலிப்பதே சரி.
- ஓப் என்பது Off என்பதற்கே பொருந்தும்
- த அபேஸ் என்பதில் த என்பதற்குப் பதில் தி என்றே ஒலிக்கும். காரணம், the Apes என்பதில் the ஜ அடுத்து
மெய்யெழுத்துச்உயிர்ச்சொல் (Apes) வருகிறது. - Apes என்பது அபேஸ் என்று ஒலிக்காது.
ஆங்கிலச் சொற்களை தமிழுக்கு ஒலிபெயர்க்கும்போது ஆங்கில ஒலிப்புக்கு நெருக்கமாகவும் இலக்கணத்திற்கேற்பவும், தமிழ் இலக்கணத்திற்கேற்பவும் ஒலிபெயர்க்க வேண்டும். தேவைப்படும் பெயர்ப்பட்டியலை இங்கு தெரிவியுங்கள், உங்களுக்கு உதவி கிடைக்கும். மேலும் தலைப்புக்கேற்ப கட்டுரையின் உள்ளேயும் மாற்றிவிடுங்கள். --AntonTalk 00:47, 21 ஏப்ரல் 2014 (UTC)
Apes என்பது ஏப்ஸ் என்றே ஒலிக்கும் கிரந்தம் தவிர்க்க விரும்பினால் ஏப்சு என எழுதலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 02:54, 21 ஏப்ரல் 2014 (UTC) விருப்பம்
திரைப்படக் கலைஞர்கள்
தொகுதிரைப்படக் கலைஞர்கள் பற்றி நீங்கள் இன்று உருவாக்கிய இரண்டு கட்டுரைகளுக்கும் உள்ளடக்கம் போதாது. மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 14:08, 23 மே 2014 (UTC) விருப்பம்
- இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். கட்டுரைகளுக்குள் ஆங்கில விக்கிக் கட்டுரைகளின் உள்ளிணைப்புகள் தருவதைத் தவிருங்கள். இது தமிழ் விக்கி, தமிழில் மட்டுமே எழுதுங்கள். புதிதாக கட்டுரைகளைத் தொடங்க முன்னர் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள உங்கள் கட்டுரைகளைத் திருத்துங்கள். --Kanags \உரையாடுக
- நீங்கள் கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் போல் தெரிகிறது. இவ்வாறான கட்டுரைகள் உடனடியாகவே நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 22:35, 23 மே 2014 (UTC)
- கனக்சின் கூற்றை வழிமொழிகிறேன். கூகுள் மொழிபெயர்ப்பு போலத் தான் தெரிகிறது. அருள் கூர்ந்து கட்டுரை உருவாக்கும் வேகத்தைக் குறையுங்கள். ஓரிரண்டு உருவாக்கினாலும் பிழையின்றி நீங்களே சொந்த நடையில் எழுதுங்கள். தானியங்கி மொழிபெயர்ப்புகள் உடனடியாக நீக்கப்பட்டுவிடும். --சோடாபாட்டில்உரையாடுக 09:22, 26 மே 2014 (UTC)
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த சை (பாடகர்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 14, 2014 அன்று வெளியானது. |
இல்லை, தற்பொழுது மிக்க மகிழ்சியாகவுள்ளது :)
பட்டியல்
தொகுதிரைப்படங்களின் பட்டியல்கள் உள்ள கட்டுரைகளை மட்டுமே பகுப்பு:தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்கள் என்ற பகுப்பினுள் சேருங்கள். தனித் திரைப்படக் கட்டுரைகளை சேர்க்காதீர்கள்.--Kanags \உரையாடுக 22:50, 6 சூன் 2014 (UTC)
காப்புரிமையுள்ள உள்ளடக்கம்
தொகுபயனர்:Thilakshan நீங்கள் உருவாக்கிய பல்வேறு திரைப்படம் குறித்த கட்டுரைகளில் காப்புரிமையுள்ள விமர்சனங்கள்/கதைக்கரு உள்ளிட்டவைகளை சேர்த்துள்ளீர்கள். விரைந்து அவற்றை திருத்தவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:39, 22 சூன் 2014 (UTC)
- பதிப்புரிமை கொண்ட உள்ளடக்கங்களை உங்கள் கட்டுரைகளில் சேர்க்க வேண்டாம். இவ்வாறான கட்டுரைகள் இனிமேல் உடனடியாகவே நீக்கப்படும்.--Kanags \உரையாடுக 06:33, 22 சூன் 2014 (UTC)
தடை
தொகு- தடை நீங்கியதும் நீங்கள் சேர்த்த பதிப்புரிமையுள்ள உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு பங்களிக்கத் தொடங்குங்கள். நன்றி. --AntonTalk 15:28, 22 சூன் 2014 (UTC)
காரணம்
தொகுஎனக்கு புரியவேல்லை, என்ன காரணத்துக்காக தடை செய்திர்கள், நான் எழுதும் திரைப்படங்கள் தொடர்பான கட்டுரையில் (கதை சுருக்கம்) அதில் என்ன பிழை?. 22:32, 22 சூன் 2014 (UTC)
- ஹோய் என்றால் என்ன? தடை செய்யப்பட்ட காரணம் மேலே வழங்கப்பட்டுள்ளது. 13 தடவைகள் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதைவிட பல அறிவுறை உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் உங்கள் பாட்டில் செயற்பட்டு வந்தீர்கள். எ.கா: சந்திரா (திரைப்படம்) இக்கட்டுரையில் இங்கிருந்து உள்ளடக்கங்களை பிரதி செய்து விக்கி கொள்கையை மீறியுள்ளீர்கள். இது பிழை. மேலும் உங்களின் கட்டுரைகளில் பல இவ்வாறு பதிப்புரிமை மீறல் கொண்டு காணப்படுகின்றன. உங்களால் பதிப்புரிமை மீறல் மேற்கொள்ளப்பட்ட 20க்கு அதிகமான கட்டுரைகளில் இருந்து நேற்று அவற்றை அகற்றியிருந்தேன். இவற்றை நீக்கச் சொன்னாலும் நீங்கள் நீக்குவதில்லை. --AntonTalk 04:16, 23 சூன் 2014 (UTC)
புரிந்தது
தொகுஇப்ப தான் எனக்கு புரிந்தது. இணையதளம் வந்த திரைப்பட விமர்சனங்களை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுத வேண்டாம் இது தானே உங்க புகார். மன்னிக்கவும் இப்ப தான் எனக்கு புரிந்தது. என்னுடம் சில கேள்விகள்.
- 1. டாப் 10 சினிமா இணையதளம் திரைப்படத்தில் நடந்ததை தானே விமர்சனமாக இருகின்றது. அதை எடுத்து கட்டுரை எழுதுவது சரியாய் பிழை
- 2. திரைப்படங்களை பற்றி கட்டுரை எழுதும் போது (கதை சுருக்கம்) போடதனே வேணும்.
- 3. பல கட்டுரைகள் இருந்து தானே எடுக்கப்படுகின்றது.
- உங்களுடைய கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த பதில்கள்.
- டாப் 10 சினிமா இணையதளம் தனக்கென்று கொள்கைகள் வைத்துள்ளது, அவர்களுடைய உள்ளடக்கங்கள் அனைத்தும் காப்புரிமை பெற்றவை. அனைத்துப் பக்கங்களிலும் © 2009 - 2014 - top10 cinema என இடம்பெற்றிருக்கும். விக்கிப்பீடியா கொள்கைகளின்படி இவ்வாறான காப்புரிமையுள்ள தகவல்கள் இடம்பெறக்கூடாது.
- அவசியம் இல்லை. உங்களுக்குத் தெரிந்தால் எழுதவும், இல்லையேல் விட்டுவிடவும்; தெரிந்தவர்கள் எழுதுவார்கள்.
- பிற தளங்களில் இருந்து தகவல்களை அறிந்து கொள்ளலாம், ஆனால் அவற்றை அப்படியே கட்டுரையில் எழுதக்கூடாது. உங்களுடைய சொந்த வார்த்தைகளில் எழுதிவிட்டு பிற கட்டுரைகளை உசாத்துணையாக கொடுக்கலாம்.
- வேறு கேள்விகள் இருந்தால் என் பேச்சுப்பக்கத்தில் கேட்கவும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:35, 23 சூன் 2014 (UTC)
தடை நீக்கம்
தொகுவணக்கம் Anton ஐயா என்னுடைய விக்கிப்பீடியா தடை எப்போது நிங்கும். 22:10, 24 சூன் 2014 (UTC)
- 22 சூன் 2014 இல் இருந்து ஒரு வாரத்தில் நீங்கும். இது மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. ஐயா போன்ற சொற்கள் அல்லாமல் இயல்பாக குறிப்பிடுங்கள். --AntonTalk 01:28, 26 சூன் 2014 (UTC)
மொழி மாற்றம்
தொகுவணக்கம் Anton The Day After Tomorrow இதை ஆங்கில மொழியில் மாற்றவும். 23:10, 29 சூன் 2014 (UTC)
- மொழிபெயர்க்கப்படாத கட்டுரைகள் அனைத்தும் அல்லது மொழிபெயர்க்கப்படாத பகுதிகள் உடனடியாகவே நீக்கப்படும். எனவே புதிதாகக் கட்டுரைகளை எழுத ஆரம்பிக்க முன்னர் உங்கள் பழைய கட்டுரைகளைக் கவனித்துத் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 09:36, 1 சூலை 2014 (UTC)
பகுப்புகள்
தொகுவணக்கம் திலக்சா! பகுப்புகள் உருவாக்கும் போது கவனம் தேவை. தேவையில்லாத பகுப்புகளைச் சேர்க்கக் கூடாது. பிரித்தானிய நடிகர்கள் என்ற பகுப்பு, பிரித்தானிய நபர்கள், நடிகர்கள் ஆகிய இரண்டு பகுப்புகளுக்குள் வர வேண்டும். அது போலவே, பிற பகுப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். தவறுதலாக, இத்தாலிய, பிரெஞ்சு நடிகர்களை பிரித்தானிய பகுப்புக்குள் சேர்க்க வேண்டாம். புரியவில்லை எனில் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:30, 2 சூலை 2014 (UTC)
வணக்கம் தமிழ்க்குரிசில் தவறு நடந்தால் அதை திருத்தி உதவி செய்யவும் நன்றி :) 12:35, 2 சூலை 2014 (UTC)
- திலக்சன், தேவையற்ற பகுப்புகளை மீண்டும் மீண்டும் உருவாக்கி வருகிறீர்கள். உப பகுப்புகளை தவறான பகுப்புகளில் சேர்த்து வருகிறீர்கள். இந்நடவடிக்கைகளை அருள் கூர்ந்து நிறுத்துங்கள்.--Kanags \உரையாடுக 11:16, 2 சூலை 2014 (UTC)
மன்னிக்கவும் Mr. Kanags நான் நிறுத்தி விட்டேன்:)
- பெண் நடிகைகளும், நடிகைகளும் வேறு வேறானவர்களா? எவ்வாறு?--Kanags \உரையாடுக 09:01, 3 சூலை 2014 (UTC)
Mr. Kanags இரண்டுமே ஒன்று தான் :)
- தமிழ் விக்கியில் யாரையும் Mr. போன்ற வார்த்தைகளால் அழைப்பதில்லை. நாம் அனைவரும் தன்னார்வத்தால் ஒன்றுபட்டவர்கள். :) தமிழ் விக்கியில் நீங்கள் அனைவரையும் பெயர் கூறியே அழைக்கலாம்.-- மாதவன் ( பேச்சு ) 16:33, 3 சூலை 2014 (UTC)
வேண்டுகோள்
தொகுதிலக்சன், நீங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள கட்டுரைகளில் பெரும்பான்மையானவற்றில் ஆங்கிலக் கலப்புடைய உள்ளடக்கங்கள் அதிகமாக உள்ளன. மேலும் அதேமாதிரியான புதுக் கட்டுரைகளை உருவாக்குவதைவிட உங்கள் பழைய கட்டுரைகளைச் சரிசெய்யும்படிக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரைகளை உருவாக்குவதில் உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனாலும் நமது விக்கிப் பங்களிப்புகள் எண்ணிக்கையில் மிகுதியாய் இருப்பதோடு, விக்கியின் கொள்கைகளுட்ப்பட்டத் தரமானவையாக இருப்பதும் அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:43, 3 சூலை 2014 (UTC)
வணக்கம் Booradleyp1 நான் எனது பழைய கட்டுரைகளை சரி செய்கின்றான். நான் இனி கட்டுரை எழுதும் போது ஆங்கில சொற்கள் கலவாது எழுதுகின்றான் நன்றி :)
- திலக்சன், நீங்கள் தொடங்கிய கட்டுரைகளில் வேறு பயனர்கள் செய்யும் திருத்தங்களை நீங்கள் கவனிப்பதில்லையா? அவற்றைக் கவனித்து உங்கள் கட்டுரைகளில் திருத்தம் செய்யுமாறு வேண்டுகிறேன். உதாரணம். உங்கள் பழைய கட்டுரைகளை முதலில் திருத்தி விட்டுப் புதிய கட்டுரைகளை எழுதத் தொடங்குங்கள். உங்கள் உழைப்பு வீணாகாமல் இருக்க இதனை நடைமுறைப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 08:09, 4 சூலை 2014 (UTC)
பிற மொழிப் பெயர்கள்
தொகுவணக்கம் திலக்சன்! நீங்கள் பிற மொழிகளில் வெளியான திரைத் தொடர்களைப் பற்றியும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றியும் எழுதி வருவதைக் கண்டேன். மகிழ்ச்சி! கட்டுரைகளில் பிற மொழிப் பெயர்களை தவறாக எழுத வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். :) www.virtualvinodh.com/aksharamukha என்ற பக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பிற மொழிப் பெயர்களைத் தந்தால், தமிழுக்கு எழுத்துப் பெயர்ப்பு செய்து தரும். நபர்கள், திரைப்படங்களின் பெயர்களை சரியாக எழுதுவதற்கு இந்த கருவி துணை புரியும். இதைக் கொண்டு நீங்கள் மிக எளிதாக எழுதி விடலாம். திருத்திக் கொள்வீர்கள் என நம்புகிறேன். :) உதவி தேவைப்பட்டால் கேட்கலாம். அவ்வப்போது பிற இந்திய மொழிப் பெயர்கள் குறித்து ஐயம் எழுந்தால் என்னைக் கேட்கலாம். நான் உதவுவேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:04, 4 சூலை 2014 (UTC)
வணக்கம் தமிழ்க்குரிசில் :) மிக்க நன்றி.
பகுப்பு இணைத்தல்
தொகு’அமெரிக்கத் திரைப்பட நடிகைகள்’ என்ற பகுப்பு இணைக்கப்பட்டால் அப்பகுப்பின் தாய்ப்பகுப்புகளான, ’நடிகைகள்’, ’அமெரிக்க நடிகைகள்’ இரண்டையும் சேர்க்காதீர்கள். இது ஒரு உதாரணம்தான். இதேபோல வரும் சந்தர்ப்பங்களில் இதனைக் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:34, 4 சூலை 2014 (UTC)
தடை
தொகு- கைப்பாவை செயற்படுத்துவது விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒரு வார தடை நீங்கியதும் வழமை போன்று நீங்கள் பங்களிக்கலாம். இனியும் கைப்பாவையூடாக செயற்பட செயற்பட முற்பட்டால் நீங்கள் முடிவிலி தடைக்கு உட்படலாம். மேலும், உங்களுக்கு பல பயனரும் அறிவுரை உதவி வழங்கியபடி செயற்படுவது மேலும் சிரமங்களைத் தவிர்க்கும். ஐயம் இருப்பின் உரையாடித் தீர்க்கலாம். இங்கு உள்ள வளங்களைக் கருத்திற் கொண்டு, ஏற்கெனவே நீங்கள் தொடங்கிய கட்டுரையில் உள்ள மேம்படுத்த வேண்டியவற்றை நிவர்த்தியாக்கிய பின் புதுக் கட்டுரைகளை உருவாக்குங்கள். நன்றி. --AntonTalk 02:39, 5 சூலை 2014 (UTC)
தடித்த எழுத்துகள்
தொகுதிலக்சன், கட்டுரை ஒன்றில் தடித்த எழுத்துகள் ஒரே ஒரு மடுமே இடம்பெறலாம். அது கட்டுரையின் ஆரம்பத்தில் (முன்னுரையில்) தலைப்பைப் பற்றி எழுதும் போத் மட்டுமே. ஏனைய பகுதிகளில் உள்ள சொற்கள் எதுவும் தடித்த எழுத்தில் இடம்பெறக் கூடாது.--Kanags \உரையாடுக 22:47, 11 சூலை 2014 (UTC)
okay நன்றி :)
- திலக்சன், நீங்கள் உங்கள் பழைய கட்டுரைகளில் திருத்தங்களை செய்து விட்டு புதிய கட்டுரைகளை எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 00:12, 12 சூலை 2014 (UTC)
நான் பழைய கட்டுரைகளையும் திருத்தி கொண்டு புது கட்டுரைகளும் எழுதுகின்றேன். திருத்தும் என்றால் ஆங்கில சொற்களை தமிழ் மொழியில் எழுதுவதுதானே உங்களுக்கு தெரிந்த மொழிமாற்று வலைத்தளம் ஒன்று சொல்ல முடியுமா? Thilakshan (பேச்சு) 02:22, 12 சூலை 2014 (UTC)
- மொழி மாற்று வலைத்தளம் எதனையும் பயன்படுத்தாதீர்கள். அவை குப்பை. இந்திய மொழிச் சொற்களை மாற்றுவதற்கு அவை உகந்ததாக இருக்கலாம். into the storm என்பதை இந்தோ தி ஸ்டார்ம் எனப் பெயர்த்திருக்கிறீர்கள். எந்த மொழிமாற்று வலைத்தளம் பயன்படுத்தினீர்கள்?--Kanags \உரையாடுக 01:22, 12 சூலை 2014 (UTC)
நான் கூகிள் மொழிமாற்று தளத்தை பயன்படுத்தினேன். Thilakshan (பேச்சு) 14:02, 12 சூலை 2014 (UTC)
- ஐயய்யோ! திலக்சன், கூகுளை பயன்படுத்துவது நல்லதல்ல. முழுமையான, சரியான மொழிபெயர்ப்பை கூகுள் வழங்காது. உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றினால் பிறரை கேளுங்கள். எனக்கு தெரிந்தால் சொல்கிறேன். -12:28, 12 சூலை 2014 (UTC)\
நான் தற்பொழுது கூகிள் மொழிமாற்று தளத்தை பயன்படுத்துவதை நிறுத்தி உள்ளேன். சில ஆங்கில பெயர்கள் தமிழில் எப்படி மொழி பெயர்ப்பது? தமிழில் எழுதுவது கடினமாக உள்ளது? எதாவது உபகாரம் உண்டா? Thilakshan (பேச்சு) 14:32, 12 சூலை 2014 (UTC)
ஆலோசனை
தொகுகட்டுரை ஒன்றை ஆரம்பிக்கும் போது அக்கட்டுரையின் தலைப்பு (தடித்த எழுத்துக்களில்) முதலில் தரப்பட வேண்டும். பின்னர்கத்தலைப்பின் ஆங்கில சொற்களை அடைப்புக்குறிகளுக்குள் தர வேண்டும் அக்கட்டுரை தமிழ், அல்லது ஆங்கிலமல்லாத வேறு மொழிக்காரர் பற்றியதென்றால், மூல மொழிப் பெயர் தெரிந்தால் அதனையும் தாருங்கள். இது கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விக்கி நடைமுறை. //உ+ம்: சோயி பிரான்சிஸ் தாம்சன் டொச் (Zoey Francis Thompson Deutch, பிறப்பு: நவம்பர் 10, 1994) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகை.//--Kanags \உரையாடுக 12:41, 12 சூலை 2014 (UTC)
நன்றி நான் இனி எழுதும் கட்டுரை களில் இவ்வாறு எழுதுகின்றேன். பழைய கட்டுரைகளையும் மாற்றுகின்றேன் :)
விளக்கம்
தொகுதிலக்சன், இம்ரான் அப்பாஸ் நக்வி கட்டுரையில் இணைக்கப்பட்டிருந்த படமானது பதிப்புரிமை மீறல் காரணமாக நீக்கப்பட்டுவிட்டதால் தகவற்பெட்டியில் படம் இல்லை. ’படிமம்:இம்ரான் அப்பாஸ் நக்வி.jpg’ விக்கியில் இல்லாத பக்கமாக ஆகிவிட்ட காரணத்தினால், கட்டுரையில் அது சிவப்பு இணைப்பாகத் தோற்றமளிக்கும். மேலும் கட்டுரையின் பகுப்பில் சிவப்பு நிறத்தில் ’அறுபட்ட கோப்புகளைக் கொண்ட பக்கங்கள்’ என்ற பகுப்பு தானியக்கமாக இணைக்கப்பட்டுவிடும். அதனால் தான் நான் அவ்வாறுள்ள சிவப்பு இணைப்பை நீக்கினேன். இதற்கான சரியான விளக்கத்தை பயனர் கனக்ஸ் எனது பேச்சுப் பக்கத்திலே தந்திருந்ததைப் பார்த்திருப்பீர்களென நினைக்கிறேன்.
வாழும் நபர்கள் குறித்த படிமங்களைப் பதிவேற்றும்போது அவை விக்கிப் பொதுவகத்தில் இருப்பவையாக இருந்தால் மட்டும் கட்டுரைகளில் இணைக்கவும். உங்களுக்கு இப்படிமங்களைப் பதிவேற்றும்போது கடைபிடிக்க வேண்டிய காப்புரிமை விதிகள் குறித்த முழுபுரிதல் ஏற்படும்வரை வாழும்நபர்களின் படிமங்களை பதிவேற்றுவதைத் தவிர்த்தல் நல்லதென நினைக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 14:02, 12 சூலை 2014 (UTC)
ஆங்கிலப் பெயர்களை தமிழில் எழுதும் முறை
தொகுஇதற்கு எளிய வழிகள் இருக்கின்றன. இணையத்தில் IPA பற்றி படித்து அடிப்படையை தெரிந்து கொள்வது நல்லது. english to IPA converter என தேடினால் நல்ல கருவி ஒன்று கிடைக்கும். அதில் ஆங்கில திரைப்படங்களின் பட்டியலை போட்டு, IPA எழுத்துகளாக மாற்றுங்கள். IPAவிலிருந்து தமிழுக்கு மாற்ற vinodh ஒரு கருவி உருவாக்கியிருந்தார் என நினைக்கிறேன். அதன் பெயர் IPA to Tamil converter. அவருடைய தளம் www.virtualvinodh.com . ஆனால், இந்த தளத்தில் தற்போது சிக்கல் உள்ளதால் இயங்காது. இன்னும் சில நாட்களுக்குள் பழையபடி மாற்றிவிடுவதாக கூறியுள்ளார். பின்னர், எளிதில் பயன்படுத்தலாம். இந்த கருவிகள் உங்களுக்கு கிடைக்காவிட்டாலும் சிக்கல் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் IPA பற்றி முறையாக தெரிந்த யாரிடமாவது உதவி பெற்ற இங்கேயே ஒரு கருவியை உருவாக்கி கொள்ளலாம். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:58, 15 சூலை 2014 (UTC)
- இவையெல்லாம் 100% சரியானவை அல்ல. இவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். ஆங்கிலப் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் போல அல்ல. எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இணையக் கருவிகள் நேரடியாக எழுத்துப் பெயர்ப்பையே தரும். ஆனால் சரியான உச்சரிப்பைத் தராது. இவற்றைத் தேடி நீங்கள் அலைய வேண்டாம். தமிழ்க்குரிசில் நீங்கள் தவறாக வழிகாட்டுகிறீர்கள் என நினைக்கிறேன். மன்னிக்கவும்.--Kanags \உரையாடுக 07:46, 15 சூலை 2014 (UTC)
- இல்லை கனகு!! ஆங்கிலச் சொற்களும் அவற்றிற்கு இணையான ஒலிக்குறிகளும் சில அகராதிகளிலேயே இருக்குமல்லவா! அதைப் போன்றே, சில லட்சம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான ஒலிக்குறிகளை சிலர், தரவுத் தளத்தில் சேமித்து வைத்துள்ளனர். அவற்றை எடுத்துவந்து IPA-வாக காட்டும்படி கருவிகளைச் செய்திருக்கின்றனர்! இப்படிப்பட்டவற்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், பயன்படுத்தியதில்லை. நீங்கள் ஒரு முறை தேடிப் பார்த்துவிருங்களேன். ஏதாவது சிக்க வாய்ப்புள்ளது. தவறாக வழிகாட்டவில்லை. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:53, 21 சூலை 2014 (UTC)
எச்சரிக்கை
தொகுதிலக்சன், உங்கள் பழைய கட்டுரைகள் பல மொழிபெயர்க்கப்படாமல், அல்லது திருத்தப்படாமல் உள்ளன. ஆனாலும் நீங்கள் பல புதிய கட்டுரைகளை தொடங்கி வருகிறீர்கள். இவை தொடர்ந்தால் உங்கள் பழைய திருத்தப்படாத கட்டுரைகள் நீக்கப்படலாம். இனி உங்கள் விருப்பம்.--Kanags \உரையாடுக 10:31, 15 சூலை 2014 (UTC)
உங்கள் கவனத்துக்கு Kanags நான் கிறிஸ் எவன்ஸ், நீல் பாட்ரிக் ஹாரிஸ், கேம் ஜிகாண்டே, ஜாக் கரிப்போ போன்ற சில பழைய கட்டுரைகளையும் திருத்தி உள்ளேன். தற்பொழுது திருத்தி கொட்டுள்ளேன். எனது பழைய கட்டுரைகளை அழிக்க வேண்டாம். ஒன்றை உருவாக்குவது கஷ்டம் ஆனால் அழிப்பது எளிது. ஏதேனும் தவறு செய்திருந்தால் இந்த அடியனை மன்னியுங்கள். :) :) :) :) Thilakshan (பேச்சு) 13:08, 15 சூலை 2014 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகு- \\ஒன்றை உருவாக்குவது கஷ்டம் ஆனால் அழிப்பது எளிது\\
உருவாக்குவது கஷ்டம்தான். ஆனால் அவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் விக்கியின் கொள்கைகளுக்கு உட்பட்டவையாய் இல்லாவிட்டால் உருவாக்கியவரின் உழைப்பும் வீண்; விக்கியின் தரமும் குறையும். அவ்வாறான கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, துப்புரவுப் பணி அனைவரையும் அசரவைத்து விடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மாறிமாறி மூத்த பயனர்கள் உங்களுக்கு அளிக்கும் ஆலோசனைகளுக்குச் செவிசாயுங்கள். அவை உங்கள் விக்கிப் பங்களிப்புகளை மேலும் மேம்படுத்தும். விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் உருவாக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விவரங்கள் பற்றிய புரிதலையும் வளர்க்கும்.
- இப்பொழுது நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. எனவே புதுக்கட்டுரைகளை உருவாக்கும் ஆர்வமிகுதியிலிருந்து சற்று விடுபட்டு, ஏற்கனவே தொடங்கிய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள் அல்லது உங்களால் தமிழாக்கம் செய்ய முடியாத பகுதிகளை நீங்களேகூட நீக்கிவிடலாம்.
- கட்டுரைகளின் தகவற்பெட்டியில், years active இல் ’present’ என்பதற்கு ’அறிமுகம்’ என்று மொழிபெயர்க்கிறீர்கள். அது தவறு. ’தற்சமயம்’ அல்லது ’நடப்பு’ என்று மாற்றுங்கள்.
- எனது பேச்சுப் பக்கத்தில் நீங்கள் எழுதியிருந்ததை நீக்கியிருந்தீர்கள். ஒரு முறை பதிந்துவிட்டால், நாம் எழுதியதாக இருந்தாலும் அதை நாம் நீக்குதல் கூடாது. அது வேண்டாம் என நினைத்தால் அதனைக் கீழுள்ளவாறு அடித்து விடலாம்.
அடிக்கப்பட்ட பகுதி
இக்கருத்துக்களைக் கவனத்தில்கொண்டு உங்கள் பங்களிப்புகளைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:47, 16 சூலை 2014 (UTC) விருப்பம்
விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:38, 16 சூலை 2014 (UTC)
பிற மொழிப் பெயர்கள்
தொகுவணக்கம் திலக்சன்! இந்திய மொழிகளில் எழுத்துமுறை வேறுபடுகின்றன. ஆங்கிலப் பெயர்களின்படி எழுதுவது பிழை. teri என்பது டெரி அல்ல, தேரி என்று வரும். kunhangad என்பதை குன்ஹன்காட் என்று எழுதுவது தவறு. இது குஞ்ஞங்காடு என்று வரும். ஒவ்வொரு இந்திய மொழியிலும் வேறுபாடுகள் உள்ளன. ஒவ்வொரு மொழி தொடர்பான கட்டுரைகளை எழுதும்போதும், அந்த மொழியைப் பற்றிய அடிப்படைகளை தெரிந்து கொள்வது நலம் பயக்கும். தெரியாவிடில், இந்த கருவியை பயன்படுத்துங்கள். இந்தி திரைப்படத்தை பற்றி எழுதும்போது, இந்தியில் கட்டுரை இருந்தால் அதை இந்த கருவியில் போட்டு தமிழில் மாற்றிக் கொள்ளுங்கள். அதைப் போன்றே, தெலுங்கு, கன்னடம், வங்காளம் என்று எந்த மொழியாக இருந்தாலும் இந்த கருவி உதவும். உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது. :) புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சரியாக எழுதினால், இன்னொருவருக்கு வேலை மிச்சம். :P நீங்களும் கற்றுக் கொண்டது போல் இருக்கும். ;) இது தொடர்பாக உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். ஒரே துறையில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதும்போது, அதைப் பற்றி தெரிந்துகொள்வது நல்லது. உங்கள் நேரமும் மிச்சமாகும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:48, 21 சூலை 2014 (UTC)
- மன்னிக்க வேண்டும் தமிழ்க்குரிசில். இம்மாதிரியான கருவிகள் ஒரு வழிகாட்டியே தவிர அவற்றை முழுமையாக நம்ப முடியாது. அவை அந்தந்த மொழிகளின் பெயர்ப்பையே தருகின்றன. தமிழ் இலக்கணத்திற்கு அல்லது பயன்பாட்டிற்கு ஏற்ற முறையில் தருவதில்லை. ஒரேயொரு உதாரணம் தருகிறேன். உங்கள் கருவியில் నరసింహారావు என்பதை பெயர்த்துப் பாருங்கள். வினோத்தின் இக்கருவி கூகுள் போன்றதொரு குப்பை என்ற முடிவுக்கு வருவீர்கள்.--Kanags \உரையாடுக 08:44, 21 சூலை 2014 (UTC)
- இல்லை, நான் குறிப்பிட்டது பெயர்களுக்கானது. முற்றிலும் பொருந்தாத வகையில் எழுதுவதைக் காட்டிலும் பல விதத்தில் இந்த கருவி உதவியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பெயரைக் கூட அது சரியாகவே காட்டியிருக்கிறது! அதை தமிழ்ப்படுத்தி எழுத வேண்டியது நம் கடமையல்லவா! ;) மேலும், இப்போது திலக்சன் எழுதிவரும் எழுத்துப்பெயர்ப்பு முற்றிலும் தவறானதாகவும், பொருந்தாமலும் இருக்கின்றன. இது அவருக்கு ஓரளவுக்காகவது வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை அவரைப் பயன்படுத்தவிடாமல் தடுத்தால், இனி தவறாக எழுவதை தொடர்வார். :( எங்கெல்லாம் தமிழ்ப் படுத்த வேண்டும் என சொன்னால் புரிந்துகொள்வார் என நம்புகிறேன். இப்போது எழுதும் முறையிலேயே தொடர்ந்தால், பல இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டி வரும். :( கூகுள் தேடலிலும் சிக்காது. தமிழ் விக்கியிலேயே தவறாக எழுதுகின்றனர் என்ற பெயர் வந்துவிடும். இதை பயன்படுத்துவதால் பிழைகள் பெரிதும் குறையும். தேவையான மாற்றங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளலாம். இந்த கருவி எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது. :) நானும் அவருக்கு அவ்வப்போது கண்காணித்து உதவுவேன். கவலை வேண்டாம் கனகு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:22, 21 சூலை 2014 (UTC)
- //நான் குறிப்பிட்டது பெயர்களுக்கானது// நானும் பெயரைத்தானே குறிப்பிட்டேன். //அதை தமிழ்ப்படுத்தி எழுத வேண்டியது நம் கடமையல்லவா// அதனை நீங்கள் திலக்சனிடம் தெரிவிக்கவில்லை. கருவி பெயர்த்துத் தருவதை எழுதச் சொன்னீர்கள். நீங்களே சரியாக இதனைப் பெயர்க்கவில்லை. திலக்சனிடம் இருந்து எவ்வாறு எதிர்பார்க்கலாம்?--
- இல்லை, நான் குறிப்பிட்டது பெயர்களுக்கானது. முற்றிலும் பொருந்தாத வகையில் எழுதுவதைக் காட்டிலும் பல விதத்தில் இந்த கருவி உதவியிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பெயரைக் கூட அது சரியாகவே காட்டியிருக்கிறது! அதை தமிழ்ப்படுத்தி எழுத வேண்டியது நம் கடமையல்லவா! ;) மேலும், இப்போது திலக்சன் எழுதிவரும் எழுத்துப்பெயர்ப்பு முற்றிலும் தவறானதாகவும், பொருந்தாமலும் இருக்கின்றன. இது அவருக்கு ஓரளவுக்காகவது வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை அவரைப் பயன்படுத்தவிடாமல் தடுத்தால், இனி தவறாக எழுவதை தொடர்வார். :( எங்கெல்லாம் தமிழ்ப் படுத்த வேண்டும் என சொன்னால் புரிந்துகொள்வார் என நம்புகிறேன். இப்போது எழுதும் முறையிலேயே தொடர்ந்தால், பல இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டி வரும். :( கூகுள் தேடலிலும் சிக்காது. தமிழ் விக்கியிலேயே தவறாக எழுதுகின்றனர் என்ற பெயர் வந்துவிடும். இதை பயன்படுத்துவதால் பிழைகள் பெரிதும் குறையும். தேவையான மாற்றங்களை அவ்வப்போது சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளலாம். இந்த கருவி எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது. :) நானும் அவருக்கு அவ்வப்போது கண்காணித்து உதவுவேன். கவலை வேண்டாம் கனகு. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:22, 21 சூலை 2014 (UTC)
- ஏற்கனவே, தேவதாஸு என்று தெலுங்கு மொழி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. எழுதியவன் நானல்ல. நான் எழுதியிருந்தால் எனக்கு தெரிந்தவரை திருத்தியிருப்பேன். அதை யாரும் நகர்த்தியிருக்கவில்லை. அதனாலேயே அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். தமிழ்ப்படுத்தி எழுதுவதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என நினைத்தேன். ஸுப்ரஹ்மண்யம் என்பதை சுப்பிரமணியம் என்று எழுதுவதை அறியாமல் இருப்பாரா? அப்படியே புரியாவிடிலும் எங்கேனும் தவறு நேர்கையில் திருத்திக் கொண்டு விடலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:56, 21 சூலை 2014 (UTC)
விருப்பம்
இது என்ன தமிழ்ப் படமா?
தொகுதிலக்சன், சின் சிட்டி: அ டமே டு கில் போர் என்ற கட்டுரை தமிழ்ப் படத்தைப் பற்றியதா? dame என்பது டமே அல்ல. அது டேம். A என்பதெ எ அல்லது ஏ. வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் பற்றி எழுதுவதைத் தவிருங்கள். வெளிவந்த பிறமொழித் திரைப்படங்கள் கோடிக்கணக்கில் உள்ளன. அவற்றைப் பற்றி எழுதுங்கள். மீண்டும் நினைவு படுத்துகிறேன்: பிறமொழிப் படங்களைப் பற்றி எழுதும் போது அதன் ஆங்கில, மற்றும் மூல மொழிப் பெயர்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் தரப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 02:27, 27 சூலை 2014 (UTC)
மன்னியுங்கள் போதிய நேரம் கிடைக்கவில்லை அதனால் சில தவறுகள் செய்துள்ளேன். இனி புதிதாக கட்டுரை எழுதும் போது நீங்கள் சொன்னவற்றை எல்லாம் கவனத்தில் கொள்கின்றேன். ஒரு கேள்வி? திரைப்படங்களை பற்றி கட்டுரை எழுதும் போது நடிகர்களின் பெயரை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் எழுதலாமா?
இந்த பெயர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து தர முடியுமா?
- When the Game Stands Tall
- Harry Potter and the Philosopher's Stone
- Harry Potter and the Chamber of Secrets
- Harry Potter and the Prisoner of Azkaban
- Harry Potter and the Order of the Phoenix
- Harry Potter and the Half-Blood Prince
- திலக்சன், எல்லா இடங்களிலும் ஆங்கிலப் பெயர்களை அடைப்புக்குறிகளுக்குள் தந்தால் நன்றாக இராது! தமிழ் விக்கிப்பீடியாவா, தமிங்கில விக்கிப்பீடியாவா என்ற எண்ணம் தோன்றிவிடும்!! தெரிந்த வரையில் எழுதுங்கள். தவறு இருந்தால் திருத்தும் மற்றொருவர் உங்களுக்கு உதவுவார்.
- When the Game Stands Tall - வென் த கேம் ஸ்டாண்ட்ஸ் டால்
- Harry Potter and the Philosopher's Stone - ஹாரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்
- Harry Potter and the Chamber of Secrets - ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்
- Harry Potter and the Prisoner of Azkaban - ஹாரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்
- Harry Potter and the Order of the Phoenix - ஹாரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்
- Harry Potter and the Half-Blood Prince - ஹாரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்
ஹாரி பாட்டர் திரைப்படங்கள் தமிழிலும் வெளியாகிவுள்ளன. அந்த தமிழ்ப் பெயர்கள் கிடைத்தால் தமிழிலேயே தலைப்பை வையுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:39, 27 சூலை 2014 (UTC)
நன்றி விருப்பம்
உங்கள் கவனத்திற்கு
தொகுதிலக்ஷன், படிமங்களைத் தேர்வு செய்யும் போது தொலைகாட்சிச் சின்னம் இல்லாத படிமங்களைத் தேர்ந்தெடுத்து பதிவேற்றுங்கள். அலைபாயுதே தொலைக்காட்சித் தொடர் படிமத்தில் ராஜ்டிவி சின்னம் உள்ளது. அவ்வாறில்லாத படிமமாக இருத்தல் நல்லது. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:24, 4 செப்டம்பர் 2014 (UTC)
பிழையான புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்காதீர்கள்
தொகுஇங்கிலாந், நியூசிலாந் போன்ற சொற்கள் வழக்கிலில்லை. இவற்றை உங்கள் கட்டுரைகளில் சேர்க்காதீர்கள்.--Kanags \உரையாடுக 22:43, 26 செப்டம்பர் 2014 (UTC)
மன்னியுங்கள்:)
லிவ் அண்ட் மட்டி
தொகுDo you think you could improve லிவ் அண்ட் மட்டி like you did சாம் & கேட்? According to பயனர்:Kanags the page needs more contents. 184.20.182.105 02:09, 28 செப்டம்பர் 2014 (UTC)
பதக்கம்
தொகுவிடாமுயற்சியாளர் பதக்கம் | ||
களைப்படையாமல், கடினமாக உழைக்கும் தங்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக... இப்பதக்கம் வழங்கப்படுகிறது! -- mohamed ijazz(பேச்சு) 10:39, 2 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி விருப்பம்
- விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:18, 2 அக்டோபர் 2014 (UTC)
தடை
தொகு--AntonTalk 02:34, 13 அக்டோபர் 2014 (UTC)
- மன்னிக்கவும், நான் பதிப்புருமை மிரலை மறந்து விட்டேன். ஒரு மாதம் என்பது மிகவும் அதிகம். அதை குறைக்க முடியுமா?
- பல முறை தங்களுக்கு அறிவுறுத்தியும் கேட்காததால் ஒரு மாதத் தடை. இது தொடர்ந்தால் மிக நீண்ட தடைக்கு உள்ளாகலாம். --AntonTalk 23:50, 21 அக்டோபர் 2014 (UTC)
எனது தடை எப்பொழுது நீங்கும்?
படிமம்:ஸ்காட் ஈஸ்ட்வுட்.jpgஇன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது
தொகுபடிமம்:ஸ்காட் ஈஸ்ட்வுட்.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும் இதன் நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் இவ்வகைப்படிமங்களுக்கான விக்கிப்பீடியா பயன்பாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை. இதை சரிசெய்யப் படிமப் பக்கத்துக்கு சென்று அதன் காரணத்தை அறியலாம். உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேவைப்படும் மாற்றங்களைச்செய்யவும். பதிப்புரிமை தொடர்பான விவரங்களும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணமும் ஒன்றல்ல. பதிப்புரிமை உடைய ஆக்கங்களைப்பயன்படுத்த நியாயமான பயன்பாட்டுக்கான காரணம் தரவேண்டும் என்பதை கவணத்தில் கொள்க.
இதன் பயன்பாடு நியாயமான பயன்பாட்டுக்கான காரண வரையரைகளுக்குள் வராவிட்டால் [[விதிமுறைகளுக்கு ஏற்ப இப்படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். நன்றி. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 06:45, 15 நவம்பர் 2014 (UTC)
மெய்யெழுத்து
தொகுமெய்யெழுத்து சொல்லின் முன்னாக் கொண்டு சொற்கள் வருவது இலக்கணப்படி பிழை. இதனைத் தவிர்க்கவும். எ.கா: ப்ரேக் (break) என்பது பிழை பிரேக் என்பதே சரி. --AntonTalk 06:08, 20 திசம்பர் 2014 (UTC)
- பார்க்க மொழிமுதல் எழுத்துக்கள். ஆய்த எழுத்தை முதலாகக் கொண்டு சொற்கள் அமைக்க வேண்டாம். ஊடகங்கள் செய்யும் தவறைப் பின்பற்றி எழுதுவது இலக்கணச் சரியாகாது. எ.கா: ஃப்ளவர் (flower) என்பது பிழை பிளவர் என்பதே சரி. --AntonTalk 04:10, 21 திசம்பர் 2014 (UTC)
நடிகர்கள்
தொகுநடிகர்கள், நடிகைகள் பற்றிய கட்டுரைகளில் இந்த இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஆனார் என்ற ஒரே வரிகளை அனைத்துக் கட்டுரைகளிலும் எழுதி வருகிறீர்கள். அந்தப் படங்களில் நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் தரப்படவில்லை. என்வே பொதுவாக இந்த இந்தப் படங்களில் இவர் நடித்துள்ளார் என மட்டும் எழுதினால் போதுமானது.--Kanags \உரையாடுக 21:59, 20 திசம்பர் 2014 (UTC)
ஒகே அடுத்த கட்டுரையில் இருந்து அப்படியே எழுதுகின்றேன். நான் எழுதும் கட்டுரைகளின் பெயர்களை சரி பார்க்கவும் நன்றி :)
- நீங்கள் குறுங்கட்டுரைகளை உருவாக்கும் வேகத்தில் என்னால் உடனடியாகத் திருத்த முடியாது. ஒன்றிரண்டு திருத்த முடியும். ஆனாலும், நீங்களே உங்களது கட்டுரைகளை சரிபார்த்துத் திருத்த முயல வேண்டும். வெறுமனே குறுங்கட்டுரைகளை ஆக்குவதில் நீங்கள் எவ்வித முன்னேற்றமும் அடைந்து விட முடியாது. உங்கள் உழைப்பு ஏனையோருக்குப் பயனுடையதாக இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாது, உங்கள் அறிவையும் மேம்படுத்த விழைய வேண்டும். வெறுமனே கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதில் எவருக்கும், எவ்விதப் பயனும் இல்லை. இது எனது அனுபவமும், ஏனைய விக்கிப்பீடியரின் அனுபவமும் ஆகும்.--Kanags \உரையாடுக 23:32, 24 திசம்பர் 2014 (UTC)
எழுத்துப்பிழைகள்...
தொகுவணக்கம்!
- தொலைகாட்சி என எழுதுவது தவறு. தொலைக்காட்சி என்பது சரியானது.
- நிகழ்ச்சிகள் என எழுதுவது தவறு. நிகழ்ச்சிகள் என்பது சரியானது.
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:29, 30 திசம்பர் 2014 (UTC)
- விருப்பம் --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:15, 30 திசம்பர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Thilakshan!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
--ஆதவன் 07:15, 30 திசம்பர் 2014 (UTC)
- வணக்கம் திலகசன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:32, 16 சனவரி 2015 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுஒலிவியா வில்லியம்ஸ் கட்டுரையின் பகுப்பில் "ஆங்கிலத் தொலைக்காட்சி நடிகைகள்" சேர்த்திருக்கிறீர்கள், ஆனால் கட்டுரையில் அவர் \\இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகை\\ என்பது மட்டுமே தரப்பட்டுள்ளது. அவர் தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகையும் கூட என்பது ஆவி கட்டுரையில் உள்ளது. கட்டுரையின் உள்ளடக்கத்தில் அவர் குறித்த விவரங்களைத் தந்துவிட்டு அதற்குப் பொருத்தமான பகுப்பில் கட்டுரையை இணையுங்கள்.
கட்டுரையை ஒரு துணைப்பகுப்பில் இணைத்து விட்டால் அத்துணைப் பகுப்பிற்குரிய தாய்ப்பகுப்பில் அக்கட்டுரையை இணைக்க வேண்டாம். எடுத்துக்காட்டிற்கு, "அமெரிக்கப் பெண்கள்" பகுப்பில் கட்டுரையை இணைத்தால், அதன் தாய்ப் பகுப்பான "அமெரிக்கர்கள்" தேவையில்லை.
தகவற்பெட்டி, ஓரிரு வாக்கியங்களில் அமையும் உள்ளடக்கம் என்ற அளவிலிருந்து மாற்றி, கட்டுரைகளை விரிவான உள்ளடக்கங்கள் கொண்டவையாய் உருவாக்கி விக்கியில் உங்களது பங்களிப்பினை அடுத்தநிலைக்கு முன்னெடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:39, 11 சனவரி 2015 (UTC)
நன்றி :) தற்பொழுது நான் எனது கட்டுரைகளை விரிவாக்கும் வேலையில் தான் ஈடுபட்டு இருக்கின்றேன். :)
- விருப்பம்
உங்கள் கருத்தை பதிவு செய்துவிட்டு உங்கள் கையொப்பம் இடுவதற்கு மேலுள்ள நீலப்பட்டையில் உள்ள பேனா வடிவை சொடுக்கிவிட்டு சேமியுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 16:23, 11 சனவரி 2015 (UTC)
பகுப்பு
தொகுதயவுசெய்து கட்டுரைகளில் தொடர்பில்லாத பகுப்புகளை இணைப்பதைத் தொடராதீர்கள். சரிசெய்வது மிகவும் சிரமமாகிவிடும். பல பகுப்புகளிலும் தொடர்பற்ற தாய்ப்பகுப்புகளை இணைத்திருக்கிறீர்கள்.--Booradleyp1 (பேச்சு) 16:48, 11 சனவரி 2015 (UTC)
மன்னிக்கவும். ஒரு நடிகையுன் பகுப்பில் :நடிகைகள், திரைப்பட நடிகைகள், ஆங்கிலத் திரைப்பட நடிகைகள் மற்றும் அவர் எந்த நாட்டு நடிகை என்பதற்காக: அமெரிக்க நடிகைகள், அமெரிக்கத் திரைப்பட நடிகைகள் அல்லது அவர் ஒரு விளம்பர நடிகையாக இருக்கும் பச்சத்தில் விளம்பர நடிகைகள். அவர் எந்த நாட்டை சேர்த்தவர் என்பதற்காக அமெரிக்கர்கள்& இங்கிலாந்து நபர்கள் என செய்வது தவறா? உதராணம்: சிகாரா பிரேவோ என்ற நடிகையின் பகுப்பில் நடிகைகள், திரைப்பட நடிகைகள், ஆங்கிலத் திரைப்பட நடிகைகள், அமெரிக்க நடிகைகள், அமெரிக்கத் திரைப்பட நடிகைகள், அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள், அமெரிக்க குழந்தை நட்சத்திரங்கள், அமெரிக்க குரல் நடிகைகள், அமெரிக்கர்கள் போன்ற பல வற்றை சேர்ந்துள்ளேன் ஆனால் நீங்கள் அதை நிக்கி விட்டீர்கள். காரணம்? ஆங்கில விக்கிப்பீடியா வில் இப்படித்தானே பகுப்பில் சேர்த்துள்ளர்கள்?.
சிகாரா பிரேவோ கட்டுரையில், அவர் அமெரிக்க நடிகை மற்றும் குரல் நடிகை என்று மட்டுமே தரப்பட்டுள்ளது. நீங்கள் மேலே தந்துள்ள திரைப்பட நடிகை, ஆங்கிலத் திரைப்பட நடிகை, குழந்தை நட்சத்திரம், என்பது குறித்த விவரங்கள் இல்லை. அதனால்தான் அப்பகுப்புகள் நீக்கப்பட்டன. மேலும்,
- அமெரிக்க நடிகைகள் என்ற பகுப்பில் இணைக்கப்படும்போது அது அமெரிக்கர்கள், அமெரிக்கப் பெண்கள் மற்றும் நடிகைகள் என்ற தாய்ப்பகுப்புகளிலும் அடங்கும். எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற தனிப் பகுப்புத் தேவையில்லை.
- அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகைகள் கட்டுரையில் அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகைகள், அமெரிக்க திரைப்பட நடிகைகள் என்ற தனித்தனி பகுப்புகளை இணைக்கலாம். ஆனால் நீங்கள் திரைப்படங்களில் நடித்துள்ளார் அல்லது தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார் என்பது மட்டும் தரப்பட்டிருக்கும் கட்டுரைகளுக்கும்கூட இரு பகுப்புகளையும் இணைத்திருந்தீர்கள். பகுப்பில் இணைத்தால் அந்த விடயம் கட்டுரையினுள் இருப்பது அவசியம். இல்லாவிடின் அப்பகுப்பு பொருத்தமற்றது.
- கட்டுரையில் குழந்தை நட்சத்திரம் என்று குறிப்பிடப்படாமல் பகுப்பில் மட்டும் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அப்பகுப்பினை நீக்கியிருக்கிறேன்.
- ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் அந்தந்த நபர்கள் குறித்த விவரங்கள் நிறையத் தரப்பட்டுள்ளதால் அவ்விடயங்களுக்குப் பொருத்தமான பகுப்புகளும் அதிகமாக உள்ளன.
- அமெரிக்க நடிகைகள் என்ற பகுப்பினை, ஆஸ்திரேலிய நடிகைகள், கனடிய நடிகைகள், இத்தாலிய நடிகைகள் என்ற பகுப்பில் இணைத்திருந்தீர்கள். அமெரிக்க நடிகைகள் என்பது அவற்றுக்குத் துணைப்பகுப்பாக முடியாது.
- பொதுவில் பகுப்புகள் குறித்து சற்று கவனமாகச் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- தங்களுக்குத் தோன்றும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைத் தயங்காமல் கேளுங்கள். அனைவரும் உதவுவோம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:54, 12 சனவரி 2015 (UTC)
நன்றி :) : விருப்பம் --Thilakshan 22:37, 12 சனவரி 2015 (UTC)
திலக்சன், ஏன் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் துணைப்பகுப்புகளோடு, தாய்ப்பகுப்புகளையும் சேர்த்து ஏகப்பட்ட பகுப்புகளை இணைத்துக் கொன்டிருக்கிறீர்கள்?--Booradleyp1 (பேச்சு) 16:12, 16 பெப்ரவரி 2015 (UTC)
மன்னிக்கவும் எனக்கு புரியவில்லை எது துணைப்பகுப்பு மற்றும் தாய்ப்பகுப்பு என்று? --Thilakshan 16:39, 18 பெப்ரவரி 2015 (UTC)
மொழிபெயர்ப்பு
தொகுதிலக்சன், நீங்கள் எழுதிய கட்டுரைகளில் உள்ள மொழிபெயர்க்கப்படாத பகுதிகள் (உ+ம்: கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்) விரைவில் நீக்கப்படும். எனவே அவற்றை உடனடியாக மொழிபெயர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:43, 5 மார்ச் 2015 (UTC)
Translating the interface in your language, we need your help
தொகுPlease register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:47, 7 மே 2015 (UTC)
தலைப்பு
தொகுமீண்டும், ஆங்கிலப் படங்களை தமிழுக்கு ஒலிபெயர்க்கும்போது வேறு அர்த்தம் தரும்விதமாக ஒலிபெயர்க்கிறீர்கள். எ.கா: child என்பதை சில்ட் என்று ஒலிபெயர்த்துள்ளீர்கள். chilled என்பதை எப்படி எழுதுவது. தயவு செய்து தலைப்புக்கள் நகர்த்தப்பட்டவாறு உள்ளடக்கத்தை மாற்றிவிடுங்கள். --AntanO 14:06, 15 அக்டோபர் 2015 (UTC)
- தலைப்புக்கள் தமிழில் உச்சரிக்க உகந்தவாறும், இலக்கண விதி மீறாதவாறும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். --AntanO 17:57, 16 அக்டோபர் 2015 (UTC)
சரி :) --Thilakshan 19:26, 18 அக்டோபர் 2015 (UTC)
உதவி
தொகு--Thilakshan , 1 st chess olymbiad கட்டுரையில் உள்ள படத்தை பதிவேற்றம் செய்யவும் --கி.மூர்த்தி 16:30, 24 சனவரி 2016 (UTC) படத்தை 1 வது சதுரங்க ஒலிம்பியாடு என்ற கட்டுரையிலா பதிவேற்ற வேண்டும்? --Thilakshan 18:11, 25 சனவரி 2016 (UTC)
கவனிக்க
தொகுவணக்கம் நண்பரே, தொடர்ந்து பல்வேறு திரைப்பட கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். இது பெரும் வரவேற்புக்குறியது. உடன் ஒவ்வொரு கட்டுரையிலும் குறைந்த பட்சம் அதிக தகவல்களை இணைக்கவும். இல்லையென்றால் விக்கிப்பீடியாவின் தரத்தில் பிரட்சனையாகும். தங்களால் முடிந்தளவு ஒரு கட்டுரையில் பங்காற்றிவிட்டு பின்பு வேறு கட்டுரையை எழுதுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:42, 30 ஏப்ரல் 2016 (UTC)
- சரி, நான் அப்படியே செய்கிறேன்.--Thilakshan 17:44, 29 சூன் 2016 (UTC)==விக்கித்திட்டம்:15 - கருத்துக்கோரல்==
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி கருதி முன்னெடுக்கப்படவுள்ள விக்கித்திட்டம்:15 பற்றிய உங்கள் கருத்துகள், ஆதரவு/நடுநிலைமை/எதிர்ப்பு ஆகியவற்றை இங்கு இடுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:59, 25 பெப்ரவரி 2017 (UTC)
கவனத்திற்கு
தொகுவணக்கம். மீண்டும் தமிழ் விக்கியில் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி. நீங்கள் துவக்கும் கட்டுரைகளில் உள்ள அதிகப்படியான பகுப்புகளை சில கட்டுரைகளில் நீக்கியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக இதனைக் காணவும். "தமிழ் காதல் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்" பகுப்பு இருக்கும்போது "தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்" தேவையற்றது. சரியான புரிதலுடன் தேவையற்ற, அதிகப்படியான பகுப்புகளை உங்களது ஏனைய கட்டுரைகளை நீக்குமாறும், இனிவரும் கட்டுரைகளில் இணைக்காமலும் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 11:19, 5 ஏப்ரல் 2018 (UTC)
உதவி தேவை
தொகுவணக்கம் Booradleyp1 (பேச்சு). தமிழ் காதல் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் (Category:Tamil romance television series) என்பதை நான் அந்த தொடர் எந்த வகையை கொண்டுள்ளது என்பதை பிரித்து பகுப்பில் காட்டியுள்ளேன். (ஆங்கில விக்கிபீடியா கட்டுரை போன்று) தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் (Category:Tamil-language television programs) இந்த பகுப்பில் எல்லா தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளும் சேரும். எல்லா தொடரும் காதல் நிகழ்ச்சிக்குல் வராது ஆனால் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிக்குள் (தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள்) உள்ளடங்கும். இதை மீண்டும் ஆய்வு செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன். நன்றி வணக்கம் :)--Thilakshan 16:42, 5 ஏப்ரல் 2018 (UTC)
நீங்கள் கூறுவதையே தான் நானும் சுட்டிக் காட்டுகிறேன்.
- "தமிழ் காதல் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்" - இந்தப் பகுப்பினுள் கட்டுரையை இணைப்பது தான் சரி. ஆனால் அவ்வாறு இணைத்த பின்பு "தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்" என்ற பகுப்பு கட்டுரைக்குத் தேவையற்றது. ஏனெனில் "தமிழ் காதல் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்" என்ற பெயரிலேயே கட்டுரை ஒரு தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சி என்பதற்கான விளக்கம் உள்ளது. மீண்டுமொருமுறை குறிக்கத் தேவையில்லை.
- இதேபோல "தமிழ் தொலைகாட்சி நாடகங்கள்" என்ற பகுப்பினுள் ஒரு கட்டுரையை இணைத்து விட்டால் அக் கட்டுரைக்கு "தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் " என்ற பகுப்பு அதிகப்படியானது; தேவையற்றது. ஏனெனில் தொலைகாட்சி நாடகங்கள் அனைத்தும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் ஒரு உட்பிரிவே.
தாய் பகுப்புகளுக்கு துணைப் பகுப்புகள் உருவாக்குவதே தாய்பகுப்பில் அமையும் தனித்தனிக் கட்டுரைகளின் அளவைக் குறைப்பதற்கும், எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலான வகைப்படுத்தலுக்குமே ஆகும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:12, 6 ஏப்ரல் 2018 (UTC)
நன்றி :) : விருப்பம்--Thilakshan 12:29, 6 ஏப்ரல் 2018 (UTC)
Image resolution
தொகுபடிம அளவுகள் 320 × 240 pixels / 250 × 400 pixels --AntanO (பேச்சு) 23:33, 21 சூலை 2018 (UTC)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | |
தாங்கள் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் கட்டுரைகளை உருவாக்கி, சிறப்பாக பங்களித்து வருகிறீர்கள். தங்களின் பங்களிப்பிற்கு என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள்! --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:55, 4 சனவரி 2019 (UTC) |
- மிக்க நன்றி --Thilakshan 19:56, 4 சனவரி 2019 (UTC)
நியாயமான பயன்பாடு
தொகுவணக்கம். நீங்கள் பதிவேற்றும் நியாயமான பயன்பாடு படிமங்கள் பெரிய அளவில் உள்ளதால், படிமக் கொள்கை மீறல் காரணமாக நீக்கப்படலாம். எனவே குறைந்தளவு படிமங்களைப் பதிவேற்றுங்கள். --AntanO (பேச்சு) 22:50, 5 சனவரி 2019 (UTC)
- வணக்கம், நியாயமான பயன்பாடு படிமங்கள் என்றால். அந்த படிமம் அந்த கட்டுரைக்கு பொருத்திய படிமமாக இருக்க வேண்டு மா, ஒரு கட்டுரைக்கு 2 படிமங்கள் இருத்தல் கூடாது, படிமத்தை பற்றிய விளக்கம் செய்தல் . இவை போன்றவையா நியாயமான பயன்பாடு படிமங்கள. இல்லையெனில் இதை பற்றி எனக்கு விளக்கவும்.--Thilakshan 13:07, 6 சனவரி 2019 (UTC)
புதிய பகுப்புகள்
தொகுபுதிய பகுப்புகள் உருவாக்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் உருவாக்கிய பகுப்புகளின் தலைப்புகள் முறையான தமிழாக்கம் அல்ல. நேரடியாக கூகுள் மூலம் தமிழாக்கியவை. இவ்வாறு மேலும் பகுப்புகள் உருவாக்கின்பால், உங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய நேரிடும். நன்றி.--Kanags (பேச்சு)
- மன்னிக்கவும், புதிய பகுப்புகளை உருவாக்கும் பொது மீண்டும் மிக கவனமாக மொழி பெட்கின்றேன். பழைய பகுப்புகளை முறையான தமிழில் மாற்ற அனுமதி உண்டா? முடித்தால் எனக்கு உதவவும்? நன்றி. --Thilakshan 14:06, 12 சனவரி 2019 (UTC)
- மீண்டும் மீண்டும் நீங்கள் தவறான தலைப்புகளில் பகுப்புகளை சேர்க்கிறீர்கள். பகுப்புகள் உருவாக்கும் போது மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். இது தொடர்ந்தால், உங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய நேரிடலாம். பழைய பகுப்புகளை மாற்றுவதற்கு பேச்சுப் பக்கத்தில் அனுமதி கேளுங்கள். ஆங்கில விக்கியில் இருக்கும் அனைத்துப் பகுப்புகளும் ஏனைய விக்கிகளில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உ+ம்: தொடக்கங்கள்.--Kanags (பேச்சு) 22:27, 23 சனவரி 2019 (UTC)
- 1.மன்னிக்கவும் நான் தவராக புரிந்துகொண்டேன், நான் நினைத்தேன் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கும் பகுப்புகள் போன்று தமிழிலும் இருக்க வேண்டும் என்று. நான் தற்பொழுது பிறப்புகள், இறப்புகள் மற்றும் கொரியன் நடிகர்கர்களின் கட்டுரையை விரிவாக்க இருக்கின்றேன். அந்த கட்டுரையில் தேவைப்படும் அளவிற்கு பகுப்புகள் சேர்க்க அனுமதி உண்டா? உதாரணம் (Actors from Seoul: சியோல் நபர்கள் அல்லது சியோல் நடிகர்கள், 21st-century South Korean male actors: 21 ஆம் நூற்றாண்டு தென் கொரியன் நடிகர்கள் (ஆண்)) போன்ற புதிய பகுப்புகளை சேர்க்க விரும்புகின்றேன். இதை பற்றிய உங்கள் கருது அல்லது அலசனையை சொல்ல முடியுமா?
- 2.நான் புதிதாக எழுத இருக்கும் கொரியன் நடிகர்களின் பெரியார் தமிழில் மொழிபேர்ப்பது கொஞ்சம் கஷ்டம் அந்த பெயர்களை நீங்கள் பிழை திருத்த முடியுமா?
- 3.நான் தவறுதலாக செய்யும் மொழிமாற்றத்தை கொண்டு என்னை தடை செய்து விடவேண்டாம். நன்றி :)--Thilakshan 22:46, 23 சனவரி 2019 (UTC)
- கொரிய நபர்களைப் பற்றிய கட்டுரைகளை உருவாக்குங்கள். ஆனால், கட்டுரைகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு கட்டுரைகளை உருவாக்க வேண்டாம். மூன்று வரிக் கட்டுரைகள் வேண்டாம். ஓரளவு விரிவாக எழுதுங்கள். குறிப்பிடத்தக்கவரா எனவும் பாருங்கள். எனக்குக் கொரிய மொழி அறிவு இல்லை. எனவே ஓரளவு ஆங்கில மொழி ஒலிப்பெயர்ப்பு செய்தால் போதும். யாராவது தமிழர் இக்கட்டுரைகளால் பயன் பெறுவர் என நான் நம்பவில்லை.--Kanags (பேச்சு) 23:34, 23 சனவரி 2019 (UTC)
- நன்றி, நீங்கள் கூறியதை கவனத்தில் வைத்துக்கொள்கின்றேன். தமிழர்கள் மத்தியில் கொரியன் நடிகர்கள் 2013 லிருந்து பிரபலமாகி உள்ளார்கள் அதை கவனத்தில் கொண்டுதான் கொரியன் நபர்களை பற்றி கட்டுரை எழுதுகிறேன்.பகுப்புகள்: தமிழில் உள்ள பல பகுப்புகள் ஏனைய மொழி பகுப்புகளுடன் சேர்க்கப்படவில்லை, அதை நான் சேர்க்கும் போது புதிய பகுப்புகள் உருவாக்க வேண்டியுள்ளது. திரில்லர் என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன? நன்றி :)--Thilakshan 07:56, 24 சனவரி 2019 (UTC)
- புதிய பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அப்பகுப்பு குறைந்தது இரண்டு தாய்ப்பகுப்புகளுக்குள் வருமாறு உருவாக்க வேண்டும். உ+ம்: "பகுப்பு:மாநகரம் வாரியாக இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்". இப்படி ஒரு பகுப்பு கட்டாயம் தேவை என்றால், இது "இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்" என்ற பகுப்புக்குள்ளும், "இந்திய மாநகரங்கள் வாரியாகப் பகுப்புகள்" என்ற பகுப்புக்குள்ளும் வர வேண்டும்.--Kanags (பேச்சு) 23:02, 30 சனவரி 2019 (UTC)
- புரிந்து விட்டது நான் இனி அப்படியே செய்கின்றேன்.--Thilakshan 19:21, 20 பெப்ரவரி 2019 (UTC)
அடுக்கு வீட்டு அண்ணாசாமி (தொலைக்காட்சித் தொடர்)
தொகுவணக்கம். இந்தக் கட்டுரையில் எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:22, 15 சனவரி 2019 (UTC)
- நன்றி, நான் பிழை திருத்துகின்றேன்.--Thilakshan 11:48, 15 சனவரி 2019 (UTC)
மேற்கோள்கள்
தொகுவணக்கம். உங்களின் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில் மேற்கோள்கள் இல்லை. தயவுசெய்து உரிய மேற்கோள்களைச் சேர்த்து கட்டுரைகளை மேம்படுத்துங்கள். 'சான்றில்லை வார்ப்புரு' இடப்படுவதைத் தவிருங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:37, 19 சனவரி 2019 (UTC)
- வணக்கம் செல்வசிவகுருநாதன் அண்ணா, நானும் இப்பொழுதுதான் மேற்கோளை பற்றி கவனித்தேன். மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்க்கப்படும்.நன்றி--Thilakshan 08:40, 19 சனவரி 2019 (UTC)
விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:45, 19 சனவரி 2019 (UTC)
கொரிய நடிகர்கள்
தொகுகொரிய நடிகர்கள் பற்றிய உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஒரே வரிகளுடன் கூடிய தானியங்கிக் கட்டுரைகள் போன்று உள்ளன. இவை போன்றே, துடுப்பாட்ட வீரர்கள் போன்ற கட்டுரைகளும் முன்னர் பல்லாயிரக்கணக்கில் எழுதப்பட்டு குப்பையாகக் உங்கள் கட்டுரைகள் வெறும் எண்ணிக்கையை மனதில் கொண்டு எழுதப்படுகின்றன போன்று தோன்றுகின்றன. இவை பின்னர் அழிக்கப்படாமல் இருப்பதற்கு மேலதிக தகவல்களையும் எழுதுங்கள். பரிச்சயம் போன்ற சொற்கள் தமிழ் அல்ல.--Kanags (பேச்சு) 22:47, 24 சனவரி 2019 (UTC)
- நன்றி, இந்த கட்டுரைகள் எல்லாம் 1-2 வருடங்களுக்கு முன்னர் எழுதியது என்று நினைக்குகின்றேன் . நான் கட்டுரைகளை முடிந்தவரைக்கும் விரிவாக்குகின்றேன் நன்றி. --Thilakshan 10:44, 25 சனவரி 2019 (UTC)
- கொரிய நடிகர்கள் அனைவருக்கும் கட்டுரைகள் எழுதவிருக்கிறீர்களா? இரண்டுவரி, மூன்றுவரிக் கட்டுரைகள் அல்லது குறிப்பிடத்தக்கமை இல்லாவிடினோ அவை நீக்கப்படும். "பகுப்பு:அனிங், ஜியொங்கி நபர்கள்" போன்ற பகுப்புகள் தமிழ் விக்கியில் தேவையற்றவை. நடிகர்களை தென்கொரிய நடிகர்கள் பகுப்பில் மட்டும் சேர்த்தால் போதுமானவை. இவை மேலும் மேலும் குப்பைகளை சேர்க்கும். ஏற்கனவே இந்த நடிகர்கள் கட்டுரைகள் அனைத்தும் குப்பைகளே, (மன்னிக்கவும்).--Kanags (பேச்சு) 22:05, 30 சனவரி 2019 (UTC)
- @Kanags:
- நீங்கள் குறியாதகவல்களை ஞாபகத்தில் வைத்து கொள்ளுகின்றேன். நான் தற்பொழுது பழைய கொரியன் நடிகர்களின் கட்டுரைகளை சரியான பகுப்பில் மாற்றம் செய்வதும், அதை விரிவாக்கம் செய்து வருகின்றேன். புதிய கட்டுரை எழுதுவதை குறைக்கிறேன் (கொரியன் நடிகர்களை பற்றி). தற்பொழுது நான் மறு திருத்தும் செய்யும் கட்டுரைகளில் 95% பழய கட்டுரைகள். இதை ஏன் நான் மீட்டும் உங்களுக்கு சொல்கின்றேன் என்றால், நீங்கள் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், நான் மீண்டும் மீண்டும் கொரியன் நடிகர்களை பற்றி குறுகிய கட்டுரைகளை எழுத்து வருகின்றேன் என. எனது நோக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகள் தரமான கட்டுரைகளை கொண்டு இருக்க வேண்டும் என்பது (இந்த நோக்கம் 2 மாதங்களுக்கு முன்புதான் வந்தது). எனது ஆர்வம் மொழி மற்றும் பொழுது போக்கு சந்தாவை அதை பற்றி தான் எழுத இருக்கின்றேன். --Thilakshan 18:07, 31 சனவரி 2019 (UTC)
மேம்படுத்தல்
தொகுவணக்கம், தங்களால் இக்கட்டுரையை மேம்படுத்த முடியுமா ?? --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:17, 27 சனவரி 2019 (UTC)
- ஆம் கண்டிப்பாய்.--Thilakshan 11:20, 28 சனவரி 2019 (UTC)
படிம அளவு
தொகுநியாயமான பயன்பாடு படிம அளவு 320 × 240 px (screenshots from TV, films, and videogames) மற்றும் 250 × 400 px (அட்டை) இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு இல்லாதவை நியாயமான பயன்பாடு கொள்கை மீறலாக நீக்கப்படலாம். --AntanO (பேச்சு) 16:43, 7 மார்ச் 2019 (UTC)
- நன்றி அண்ணா. அப்படியே செய்கின்றேன்.--Thilakshan 20:35, 7 மார்ச் 2019 (UTC)
கவனிக்க
தொகுபுதிய பகுப்புகள் உருவாக்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் உருவாக்கிய பகுப்புகளின் தலைப்புகள் முறையான தமிழாக்கம் அல்ல. நேரடியாக கூகுள் மூலம் தமிழாக்கியவை. இவ்வாறு மேலும் பகுப்புகள் உருவாக்கினால், உங்களைத் தற்காலிகமாகத் தடை செய்ய நேரிடும். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:29, 7 ஏப்ரல் 2019 (UTC)
- மன்னிக்கவும், மீண்டும் கவனத்துடன் செயல்படுகிறேன். studios, Superhero, Thriller இவைகளுக்கு சரியான தமிழ் பெயர் சொல்ல முடியுமா? Marvel Studios என்பது ஒரு நிறுவனம் இதன் பெயரை அப்படியே தமிழாக்கம் செய்வது தவறா? ஏன் என்றால் விக்கிபீடியா கட்டுரையில் இந்த பெயரில் தான் உள்ளது. எனக்கு சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் புரியாத காரணத்தால் தான் கூகுளின் உதவியை தேடுகின்றேன்.--Thilakshan 19:36, 7 ஏப்ரல் 2019 (UTC)
- @Thilakshan: ஒரு நிறுவனத்தின் பெயரை தமிழாக்கம் செய்வது தவறில்லை. ஆனால் studios, Superhero, Thriller இது போன்ற ஆங்கில எழுத்துக்களை தமிழாக்கம் செய்வது தான் தவறு. --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 19:46, 7 ஏப்ரல் 2019 (UTC)
- @Gowtham Sampath:: நன்றி. studios, Superhero, Thriller இவைகளுக்கு சரியான தமிழ் பெயர் சொல்ல முடியுமா?--Thilakshan 20:02, 7 ஏப்ரல் 2019 (UTC)
- Studios - நிழற்படமனை
- Superhero - சிறந்த நாயகர்கள் / சக்திவாய்ந்த நாயகர்கள்
- Thriller -
Virus
தொகுஅன்பே Thilakshan! ஜப்பானிய திரைப்படமான 1980 ஃபுக்கட்சு ஹாய் (வைரஸ்) பற்றி தமிழில் ஒரு கட்டுரையை நீங்கள் தயாரிக்க முடியுமா? நன்றி! --91.122.27.104 15:33, 17 ஏப்ரல் 2019 (UTC)
கவனிக்க
தொகுதயவுசெய்து ஒரு ஆங்கில பகுப்பை தமிழாக்கம் செய்யும் போது ஒன்றுக்கு, இரண்டு முறை தமிழாக்கம் சரியாக உள்ளதா என பார்த்து பகுப்பை உருவாக்குங்கள். இதை காண்க--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:31, 26 ஏப்ரல் 2019 (UTC)
April 2019
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.தேவையற்ற தொகுப்புகள். கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:33, 26 ஏப்ரல் 2019 (UTC)
- நன்றி நீங்கள் கூறியதை கவனத்தில் கொள்கின்றேன். இனி நான் புதிய பகுப்புகளை உருவாகுவதை தற்காலிகமாக நிறுத்தி, பழைய பகுப்புகளை சரியான தமிழ் பெயரில் மாற்றுகிறேன். நான் பகுப்புகளை பெயர் மாற்றும் பொழுது எவரிடமும் சம்பந்தம் வாங்க வேண்டுமா?--Thilakshan 11:39, 26 ஏப்ரல் 2019 (UTC)
- தேவையில்லை, அந்த பகுப்பு எந்த பக்கத்தில் இணைத்துள்ளதோ அதே பக்கத்தில் புதிய பகுப்பு இருத்தல் வேண்டும் மற்றும் wikidataவிலும் சரிசெய்ய வேண்டும். ஏதாவது உதவி தேவை என்றால் (பயனர்:Kanags, AntanO மற்றும் Nan) இவர்களிடம் கேட்கவும். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:55, 26 ஏப்ரல் 2019 (UTC)
Virus
தொகுவணக்கம் அன்பே திலகன்! ஜப்பனீஸ் திரைப்படமான "ஃபிகாட்சு நோ ஹாய்" 1980 இல் தமிழில் ஒரு கட்டுரை எழுத முடியுமா [1] (en:Virus (1980 film), Fukkatsu No Hi)? நன்றி! --178.66.120.141 17:47, 28 மே 2019 (UTC)
மொழிமுதல் எழுத்துக்கள்
தொகுமொழிமுதல் எழுத்துக்கள் --AntanO (பேச்சு) 01:43, 3 மே 2019 (UTC)
- நன்றி --Thilakshan 05:54, 3 மே 2019 (UTC)
மீண்டும் எச்சரிக்கை
தொகுதேவையற்ர பகுப்புகளை உருவாக்காதீர்கள். கட்டுரைகளைப் போலல்லாமல் பகுப்புகளின் தலைப்புகள் துல்லியமான தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலம் வேறு, ஆங்கிலேயம் வேறு என்பதை அறியுங்கள்.--Kanags \உரையாடுக 09:05, 3 சூன் 2019 (UTC)
- ஆம், நான் சரியான தமிழ் பகுப்புகளை ஆங்கில பகுப்புகளுடன் சேர்க்கும் முயற்சியில் தான் செய்து வருகின்றேன். தேவைப்படும் இடத்தில தான் புதிய பகுப்புகளை சேர்ந்து வருகின்றேன். நீங்கள் கூறியது சரிதான் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலேயம் வேறு. நீங்கள் ஒன்றே கவனிக்க வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு அதனால் தான் ஒரு பகுப்பு பல பெயர்களில் உருவாகி உள்ளது. அது மட்டும் இன்றி அது ஆங்கில பகுப்புடன் சேர்க்காமல் இருப்பதனால் புதிய நபர் ஒருவர் புதிய பகுப்பு உருவாக்க நெருடுகிறது. [2] நான் கட்டுரையில் தலைப்பில் அதை பற்றி எழுதி உள்ளேன். அதை கவனித்தீர்களா? எதாவது தவறு இருந்தால் அதை பற்றி விளக்கப்படுத்தவும். ஒரு கட்டுரைக்கு சரியான பகுப்பு இருத்தல் சரி என நினைக்கின்றேன்.--Thilakshan 09:20, 3 சூன் 2019 (UTC)
- ஆங்கில மொழி நடிகர்களுக்குத் தகுந்த ஆங்கில விக்கிப் பகுப்பு இல்லை என்பதைக் கவனித்தீர்களா? ஏதேனும் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. இங்கும் அது இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இங்கு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை உருவாக்கியவர் தெரிந்து உருவாக்கினாரா எனத் தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது பகுப்பை நான் தானியங்கி மூலம் நீக்கி விடுகிறேன். அத்துடன் //ஆங்கிலேயத் தொலைக்காட்சி நடிகைகள் என்பது இங்கிலாந்துத் தொலைக்காட்சி நடிகைகளை மட்டுமே குறிக்கும்.//--Kanags \உரையாடுக 09:44, 3 சூன் 2019 (UTC)
- நன்றி, தற்பொழுது புரிந்து விட்டது. ஆங்கிலியம் என்ற பகுப்பை நீக்காமல் அதை ஆங்கிலேயம் என்று மாத்த முடியாதா? ஏன் என்றால் புதிதாக ஆங்கிலேயத் தொலைக்காட்சி நடிகர்கள், ஆங்கிலேயத் திரைப்பட நடிகைகள் என்ற பெயரில் உருவாக்க தேவையில்லை. நான் அதை மாற்றவா?--Thilakshan 10:03, 3 சூன் 2019 (UTC)
Non-free content criteria
தொகுAs few non-free content uses as possible are included in each article and in Wikipedia as a whole. Multiple items are not used if one will suffice; one is used only if necessary. --~AntanO4task (பேச்சு) 15:19, 7 சூலை 2019 (UTC)
- ஆலோசனை பேச்சு
- படிமத்தின் அளவு? ஒரு படமத்தின் அளவை விக்கிபீடியா விற்கு ஏற்ற வாறு மாற்றும் பொது அந்த படிமம் சிறியதாகவும் தெளிவு இல்லாமலும் இருக்கின்றது அதற்க்கு என்ன செய்வது?--Thilakshan 17:42, 8 சூலை 2019 (UTC)
ஆயிரம் கட்டுரைகள்
தொகுஆயிரவர் பதக்கம் | ||
வணக்கம் திலக்ஷன் நாதன் தாங்கள் விக்கிப்பீடியாவில் 1000 கட்டுரைகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதி வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ஸ்ரீ (talk) 14:41, 10 சூலை 2019 (UTC) |
- நன்றி--Thilakshan 06:11, 11 சூலை 2019 (UTC)
July 2019
தொகுதயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத படிமத்தை பதிவேற்றம் செய்யாதீர்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். நன்றி. AntanO (பேச்சு) 22:00, 24 சூலை 2019 (UTC)
- அண்ணா அது எந்த படிமம் என்று சுட்டிக் காட்டினால் உதவியாக இருக்கும் நன்றி.--Thilakshan 18:10, 25 சூலை 2019 (UTC)
Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi Thilakshan,
The Wikimedia Foundation is asking for your feedback in a survey about your experience with விக்கிப்பீடியா and Wikimedia. The purpose of this survey is to learn how well the Foundation is supporting your work on wiki and how we can change or improve things in the future. The opinions you share will directly affect the current and future work of the Wikimedia Foundation.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi Thilakshan,
A couple of weeks ago, we invited you to take the Community Insights Survey. It is the Wikimedia Foundation’s annual survey of our global communities. We want to learn how well we support your work on wiki. We are 10% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! Your voice matters to us.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)
Reminder: Community Insights Survey
தொகுShare your experience in this survey
Hi Thilakshan,
There are only a few weeks left to take the Community Insights Survey! We are 30% towards our goal for participation. If you have not already taken the survey, you can help us reach our goal! With this poll, the Wikimedia Foundation gathers feedback on how well we support your work on wiki. It only takes 15-25 minutes to complete, and it has a direct impact on the support we provide.
Please take 15 to 25 minutes to give your feedback through this survey. It is available in various languages.
This survey is hosted by a third-party and governed by this privacy statement (in English).
Find more information about this project. Email us if you have any questions, or if you don't want to receive future messages about taking this survey.
Sincerely,
வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு
தொகுசென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக
மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்
அழைத்ததற்கு நன்றி, நான் ஏற்கனவே எனது பெயரை பதிவு செய்து 2 கட்டுரைகளையும் தொகுத்துள்ளேன்.--Thilakshan 13:51, 16 அக்டோபர் 2019 (UTC)
யுவராணி
தொகுதாங்கள் உருவாக்கிய யுவராணி கட்டுரையில் மேற்கோள்கள் இல்லை. மேற்கோள் சேர்க்காமல் வேங்கைத்திட்டத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தக்க மேற்கோள்களைச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 06:50, 31 அக்டோபர் 2019 (UTC)
- நன்றி. நீங்கள் இதை சுட்டிகாட்டியதற்கு. நான் மேற்கோள் இணைப்பை மறுத்துவிட்டேன். தற்பொழுது அதை நான் இணைத்துள்ளேன் பார்க்கவும். நன்றி.
உரை திருத்தம்
தொகுவேங்கைத் திட்டத்தில் பல்வேறு கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு நன்றி. ஒரு வேளை நீங்கள் Google Translate கருவி பயன்படுத்துகிறீர்கள் என்றால், பதிப்பிக்கும் முன் ஒரு முறை சரி பாருங்கள். நிறைய கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளன. சரியான இடங்களில் நிறுத்தற்குறிகள் இடவில்லை. இவற்றைக் கவனித்துத் திருத்த வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 15:22, 2 நவம்பர் 2019 (UTC)
- நன்றி, அடுத்த கட்டுரையில் சரியான முறையில் எழுதுகின்றேன்.--Thilakshan 19:22, 2 நவம்பர் 2019 (UTC)
- மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள் --இரவி (பேச்சு) 22:10, 3 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
- குறிப்பிட்டமைக்கு நன்றி. போதிய நேரம் இன்மையால் என்னால் தொடரமுடியவில்லை. முடித்தவரைக்கும் என்னால் முடித்த அளவு கட்டுரைகளை எழுதுகின்றேன். --Thilakshan 13:10, 12 நவம்பர் 2019 (UTC)
பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019
தொகுவணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:14, 25 நவம்பர் 2019 (UTC)
வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி
தொகுவனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குகள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:46, 4 சனவரி 2020 (UTC)
விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020
தொகுவணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:26, 17 சனவரி 2020 (UTC)
பதக்கம்
தொகுஆயிரவர் பதக்கம் | ||
Thilakshan, நீங்கள் தமிழ் விக்கிக்குப் பணியாற்றி இன்றளவில் 1000-க்கு மேற்பட்ட கட்டுரைகளை
உருவாக்கி பேராக்கம் தத்துள்ளீர்கள். இந்தப் பதக்கத்தை நான் சில மாதங்களுக்கு முன்பே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் கவனித்தேன், தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்களுக்கு உடன்பணியாளராகிய நான் ஆயிரவர் என்னும் பட்டம் தந்து என் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:23, 26 சனவரி 2020 (UTC) |
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 13:55, 26 சனவரி 2020 (UTC)
- விருப்பம் நன்றி--Thilakshan (பேச்சு) 19:08, 26 சனவரி 2020 (UTC)
விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 15:55, 8 பெப்ரவரி 2020 (UTC)
விருப்பம்--அஸ்வின் (பேச்சு) 14:01, 13 பெப்ரவரி 2020 (UTC)
விருப்பம் --ஸ்ரீ (✉) 16:40, 13 பெப்ரவரி 2020 (UTC) விருப்பம் வாழ்த்துகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:00, 13 பெப்ரவரி 2020 (UTC)
பகுப்பு
தொகுதேவையற்ற பகுப்புக்களை உருவாக்கவோ அல்லது முறையற்று பகுப்புக்களில் சேர்க்கவோ நீக்கவோ வேண்டாம். --AntanO (பேச்சு) 02:30, 9 பெப்ரவரி 2020 (UTC)
February 2020
தொகுதயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.
இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 02:34, 9 பெப்ரவரி 2020 (UTC)
- புரிந்தது. இது போன்ற தவறுகள் செய்யாத வாறு கவனித்து கொள்கின்றேன்--Thilakshan (பேச்சு) 06:27, 9 பெப்ரவரி 2020 (UTC)
வாணி போஜனுக்கான மற்றொரு படம் Susenaes (பேச்சு) 04:12, 27 மே 2020 (UTC)
March 2020
தொகுஇன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.make disruptive edits to Wikipedia contrary to the Manual of Style. AntanO (பேச்சு) 19:59, 23 மார்ச் 2020 (UTC)
--AntanO (பேச்சு) 20:04, 23 மார்ச் 2020 (UTC)
- தலைப்பு சரியாகவும் இலக்கணம் மீறாமல் இருப்பதும் அவசியம். சிவப்பு இணைப்புகளை அதிகம் கட்டுரையில் குறிப்பாக பகுப்பில் சேர்க்க வேண்டாம். --AntanO (பேச்சு) 18:03, 31 மார்ச் 2020 (UTC)
- பேச்சு மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளது. சிவப்பு இணைப்பு பகுப்புகள் புதிதாக உருவாக்க வேண்டியது. நீங்கள் ஒரு முறை குறிப்பிட்டிருந்திரகள் நான் புதிய பகுப்பு உருவாக்க வேண்டாம் என்று அதனால் இப்படி செய்துள்ளேன் நீங்கள் சம்மதித்தாள் பயனுள்ள சிவப்பு பகுப்புகளை உருவாக்குவேன். நீங்கள் கூறியவாறு ஏற்கெனவே உள்ளவற்றை சிறப்பாக மேன்படுத்த முயற்சிக்கின்றேன். இப்போதைக்கு தடை வேண்டாம்.--Thilakshan (பேச்சு) 11:27, 1 ஏப்ரல் 2020 (UTC)
April 2020
தொகு
May 2020
தொகுதேவையற்ற அளவுக்கு அதிகமான பகுப்புகளை உருவாக்காதீர்கள்.--Kanags \உரையாடுக 10:11, 10 மே 2020 (UTC)
- @ Kanags நீங்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி. -Kanags \உரையாடுக நான் விக்கிப்பீடியாவிற்கு வந்து சில வருடங்கள் ஆகியும் இன்னும் சரியான தமிழ் விக்கிபிடியா பற்றிய நோக்கம் புரியவில்லை. அது கட்டுரை உருவாக்குவதிலிருந்து, படிமம், பகுப்பு போன்ற பல.
ஒரு நடிகரின் திரைப்படத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் என்ற பகுப்பு [3] ஏற்கனவே பல உள்ளது அதை மனதில் வைத்து தான் விஜய் தேவரகொண்டா நடித்த திரைப்படங்கள் என்ற பகுப்பை உருவாக்கினேன். 2. இந்திய காதல் நகைச்சுவைத் திரைப்படம் என்ற பகுப்பு பல மொழிகளில் [4] உருவாகி உள்ளது ஏன் தமிழ்ல் உருவாக்கி முடியாதா? 3. நான் உருவாக்கிய பகுப்புகளில் பெரும்பாலும் [5], [6], [7] பல மொழிகளில் உருவாக்கி இருந்தது மற்றும் அது தேவையான பகுப்பு என் கருதி தான் உருவாக்கினேன். அதன் காரணமாகவும் நான் 1 மாதம் தடையும் அடைத்தேன். 4. எனக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம் பற்றிய சரியான விளக்கம் தேவைப்படுகின்றது முக்கியமாக பகுப்பு சார்ந்த விளக்கம்? 5. ஒரு கட்டுரை சரியான பகுப்பிற்கு கீழ் இருந்தால் அதை மற்றவர்கள் வாசிக்க இலகுவாக இருக்கும் என்பது எனது கருத்து. நீங்கள் எனக்கு எல்லாவற்றையும் சரியாக விளக்கப்படுத்தும் வரைக்கும் நான் புதிய புதிய கட்டுரைகள், பகுப்பாக்களை உருவாக்மால் இருக்கின்றேன். பல கட்டுரைகள் ஆங்கில கட்டுரையை உதாரணமா வைத்து தான் உருவாக்கப்படுகின்றது. அதன் நோக்கில் சரியான பகுப்புகள் உருவாக்கலாம் தானே?
- படிமம்
நான் எழுதிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கான படிமங்கள் சேர்ப்பதற்கும் எனக்கு அனுமதி இல்லை. அதை போன்ற பலவற்றுக்கு. படிம அளவு மிகவும் சிரியதற்காக உள்ளது அதை சுருக்கும் தருணத்தால் படிமம் சரியாக பார்க்க முடியவில்லை (சரியான படிம அளவு தேவை) . காரணம்? இப்படி எனக்கு இங்கு பல அனுமதிகள் மறுக்கப்படுகின்றது. இதுவரைக்கும் நான் தமிழ் விக்கிப்பிடியாவிற்கு செய்யாத பணியை பரிசீலனை செய்து எனக்கு சரியான விளக்ககங்கள் தரவும்? உங்கள் விளக்கத்திற்காக காத்திருக்கும் நான் திலக்சன் நன்றி.--Thilakshan (பேச்சு) 13:53, 10 மே 2020 (UTC)
This is your only warning; if you create an inappropriate page again, you may be blocked from editing without further notice. AntanO (பேச்சு) 16:25, 20 மே 2020 (UTC)
en:Wikipedia:Categorization dos and don'ts --AntanO (பேச்சு) 16:26, 20 மே 2020 (UTC)
- @ AntanO என்ன மீண்டும் எச்சரிக்கையா நான் தற்பொழுது எந்த ஒரு தேவை இல்லாத பகுப்பு ஒன்றும் உருவாக்கவில்லையே?--Thilakshan (பேச்சு) 16:30, 20 மே 2020 (UTC)
en:Wikipedia:Categorization dos and don'ts - இங்கு இலகுவாக என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்று உள்ளது. அதன்படி செயற்படுவது நல்லது. தடைக்குப்பின்னரான உங்கள் தொகுப்புக்களை கவனியுங்கள். பல தடைகளுக்கு உள்ளாகியதால் அடுத்த தடை மிக நீண்டதாக இருக்கலாம். நன்றி. --AntanO (பேச்சு) 16:47, 20 மே 2020 (UTC)
- @ AntanO எனக்கு ஒரு சந்தேகம்?
நீங்க சொல்லுற en:Wikipedia:Categorization dos and don'ts படி பார்த்தல் நான் உருவாக்கிய எல்லா பகுப்புகளும் ஆங்கிலத்திலும் உள்ளது. அப்ப ஆங்கில மொழிக்கு ஒரு சட்டம் தமிழ் மொழிக்கு ஒரு சட்டமா? உதாரணம் கடைசியாக நான் உருவாக்கி நீங்க நீக்கிய பகுப்பு en:Category:Telugu male actors - ta:பகுப்பு:தெலுங்கு ஆண் நடிகர்கள் இதில் யார் தவறு?--Thilakshan (பேச்சு) 15:07, 21 மே 2020 (UTC)
- Don't categorize based on trivial characteristics. என்பதற்கு தமிழில் பொருள் என்ன? --AntanO (பேச்சு) 16:01, 21 மே 2020 (UTC)
- தேவையற்ற (முக்கியமற்ற) பண்புகளின் அடிப்படையில் பகுப்பாக்கம் வேண்டாம். என நினைக்கிறேன்? --Thilakshan (பேச்சு) 16:11, 21 மே 2020 (UTC)
- @ AntanO எதற்காக கேட்டீர்கள்?--Thilakshan (பேச்சு) 09:09, 22 மே 2020 (UTC)
படங்களை பதிவேற்றவும்
தொகுதயவுசெய்து வாணி போஜனில் படங்களை பதிவேற்ற முடியுமா? நீங்கள் படங்களை வாணி போஜனில் பதிவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன். பதிவேற்றவும். வாணி போஜனுக்கு இன்னொரு படம். தயவு செய்து Susenaes (பேச்சு) 14:13, 26 மே 2020 (UTC)
- வாணி போஜன் கட்டுரையில் அவரின் புகைப்படம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. --Thilakshan (பேச்சு) 16:02, 26 மே 2020 (UTC)
வாணி போஜனுக்கான மற்றொரு படம் Susenaes (பேச்சு) 04:12, 27 மே 2020 (UTC)
Please upload the pictures in Vani Bhojan Wikipedia page please Susenaes (பேச்சு) 11:22, 11 சூன் 2020 (UTC)