நீல் பாட்ரிக் ஹாரிஸ்

அமெரிக்க நடிகர் மற்றும் பாடகர்

நீல் பாட்ரிக் ஹாரிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆவார். இவர் 1973ம் ஆண்டு 06ம் மாதம் 15ம் திகதி ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, ஐக்கிய அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1988ம் ஆண்டு கிளாராவின் இதயம் (Clara's Heart) என்ற திரைபடத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

நீல் பாட்ரிக் ஹாரிஸ்
பிறப்பு1973
ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, ஐக்கிய அமெரிக்கா
பணிதயாரிப்பாளர்
இயக்குனர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–அறிமுகம்
துணைவர்டேவிட் Burtka
பிள்ளைகள்2

2010 ஆம் ஆண்டு டைம் இதழ் ஹாரிஸை மிகவும் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராக குறிப்பிட்டது.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஹாரிஸ் ஆல்புகெர்க்கி நியூ மெக்ஸிக்கோ நகரில் பிறந்தார். Ruidoso, நியூ மெக்ஸிக்கோவில் வளர்ந்தார். இவரது பெற்றோர் ஷீலா (ஸ்காட்) மற்றும் ரான் ஹாரிஸ் ஆகியோராவர். இவர் ஆல்புகெர்க்கியிலுள்ள La Cueva உயர்நிலை பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார். அவரது பள்ளிக் காலத்தில் இவருக்கு நாடகங்கள் மற்றும் இசை மீது ஆர்வம் இருந்ததால் இவர் நாடகங்களில் நடித்தார். 1991ம் ஆண்டு உயர்தகமைகளுடன் தனது பட்டதாரிப் படிப்பை முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

 
தான் திருமணம் செய்யப்போகும் David Burtka என்பவருடன் ஹரிஸ் இருக்கும் படம் (செப்டம்பர் 2011 இல் எடுக்கப்பட்டது)

இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர் ஆவார். David Burtka என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்கின்றார்.

திரைப்படம் தொகு

இவர் 1988ம் ஆண்டு Clara's Heart என்ற திரைபடத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள் சில:

சின்னத்திரை தொகு

இவர் 1989ம் ஆண்டு Hallmark Hall of Fame என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார். இவர் இன்று வரை 50 மேல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் 2004ம் ஆண்டு நடித்த ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொடர் 10 வருடமாக இன்னும் வெற்றி கரமாக ஒளிப்ரப்பகிகொன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_பாட்ரிக்_ஹாரிஸ்&oldid=3359725" இலிருந்து மீள்விக்கப்பட்டது