விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள்
![]() | இந்த Wikipedia page காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த Wikipedia page தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
துரித நீக்கல் தகுதிகள் (CSD) என்பது நிர்வாகிகள், நீக்கலுக்கான வாக்கெடுப்பு இன்றி விக்கிப்பீடியா பக்கங்கள் அல்லது ஊடகங்களை உடனடியாக நீக்குவதற்கான இணக்க முடிவினைக் குறிப்பிடுகிறது. துரித நீக்கல் வார்ப்புருக்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்ப்பதன் மூலம் நீக்குவதற்கு கோரிக்கை வைக்கலாம். நிர்வாகிகளால் மட்டுமே அவை பரிசீலிக்கப்பட்டு நீக்கப்படும்.
கட்டுரைகளை நீக்குதல் என்பது நிர்வாகிகளால் மட்டுமே மீளமைக்கக் கூடியது, மற்ற நீக்குதல்கள் (முன்மொழியப்பட்ட நீக்கல்களைத் தவிர) விவாதத்திற்குப் பிறகுதான் நீக்கப்படும். துரித நீக்குதல் என்பது விக்கிப்பீடியாவில், கட்டுரையினையோ அல்லது ஊடகங்களையோ தக்கவைக்கலாமா எனும் விவாதத்திற்கு தேவையற்ற சமயத்தில் நிகழ்வதாகும். இதனால் நேரவிரயம் தவிர்க்கப்படுகிறது.[1]
துரித நீக்கலுக்குப் பரிந்துரைக்கும் முன்னர், அந்த கட்டுரையினை மேம்படுத்த இயலுமா, குறுங்கட்டுரையாகக் கருதலாமா, தொடர்புடைய வேறொரு கட்டுரையுடன் ஒன்றிணைக்கலாமா அல்லது வேறு வழிகளில் கையாளலாமா என்பதைக் கவனியுங்கள். ஒரு கட்டுரையின் அனைத்து வரலாறுகளும் தகுதியுடையதாக இருந்தால் மட்டுமே விரைவாக நீக்குவதற்குத் தகுதிபெறும். துரித நீக்கலுக்குப் பரிந்துரைக்கும் முன்னர் அந்தப் பக்கம் எந்த அளவுகோல்/அளவுகோல்களின் படி உள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும். அந்தப் பக்கத்தை உருவாக்கியவ்ருக்கோ அல்லது பெரும்பான்மையாகப் பங்களித்தவர்களுக்கோ இது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
எனினும், அழிக்கும்போது இப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளை நீக்கலுக்கான காரணமாகத் தெரிவிக்கவும் வேண்டும்.
- #%$"", தடித்த எழுத்துக்கள் சாய்வெழுத்து, == தலைப்பு எழுத்துக்கள் == என்பது போன்ற பொருளற்ற உள்ளடகத்தை மட்டுமே கொண்ட பக்கங்கள்.
- கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் முழுக்க ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகள்.
- கட்டுரைப் பெயர்வெளியில் பயனர் பேச்சு, பயனர் பக்கங்கள் இருப்பது.
- ஒன்றுக்கு மேற்பட்ட பயனர் புகைப்படங்கள்.
- படிமங்கள் மட்டுமே உள்ள கட்டுரைகள். (அழிக்கும் முன்னர் கட்டுரைப் பக்கத்திலேயே, எவரும் உள்ளடக்கத்தை சேர்க்காவிட்டால் ஒரு வாரத்தில் அழிக்கப்படும் என்பது போன்ற இவ்வார்ப்புருவை இட்டு, ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு இன்றி அழிக்கலாம்).
- விக்கியாக்கம் செய்வதை விட முழுக்க அழித்து விட்டு புதிதாக எழுதுவதே மேல், நேரத்தை மிச்சப்படுத்தும் என்பது போல் அமைந்திருக்கும் கட்டுரைகள். இவ்வகைப் பக்கங்களை நீக்கும்முன் அதன் தொகுத்தல் வரலாற்றை ஒருமுறை பார்க்கவும். அடிக்கடி நம் தளத்திற்கு வந்து பங்களிக்கும் பயனர் அல்லது சில பயனர்களால் அப்பக்கம் தொகுக்கப்பட்டிருப்பின், முதலில் பேச்சுப் பக்கத்தில் செய்தி விடுத்து பங்களிப்பாளர்களின் கருத்தை அறிய முயலவும்.
- தமிழ் விக்சனரியில் இடம் பெறத்தக்க சொல்லுக்கு பொருள் மட்டும் கூறுவது போன்ற கட்டுரைகள்.
- வெற்றுப் பக்கங்கள் (அழிக்கும் முன்னர் கட்டுரைப் பக்கத்திலேயே, எவரும் உள்ளடக்கத்தை சேர்க்காவிட்டால் ஒரு வாரத்தில் அழிக்கப்படும் என்பது போன்ற இவ்வார்ப்புருவை அல்லது இவ்வார்ப்புருவை இட்டு, ஒரு வாரம் கழித்து வாக்கெடுப்பு இன்றி அழிக்கலாம்).
- ஒத்த பெயர்வெளிப் பக்கமில்லாத பேச்சுப் பக்கங்கள்.
- தெளிவான எழுத்துப் பிழைகளை தலைப்பில் கொண்டிருக்கும் கட்டுரைகளை வழிமாற்றி விடுவதற்கு பதில் அழித்தல் வேண்டும். அவற்றின் உள்ளடக்கம் நன்றாக இருந்தால் நகர்த்திவிட்டு வழிமாற்றை நீக்கலாம்.
- கட்டுரைகள் ஏதும் இல்லாத பகுப்புப் பக்கங்கள்.
- முழுக்க ஆங்கிலத் தலைப்பில் அமைந்த பகுப்புப் பக்கங்கள்.
- கட்டுரை எண்ணிக்கையை உயர்த்துவதை மட்டுமே தெளிவான நோக்கமாக கொண்டு மளமளவென்று உருவாக்கப்படும் பயனற்ற ஒரே மாதிரியான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள். ((எ.கா)1885- இது ஒரு ஆண்டு என்பது போல் பல ஆண்டுகளுக்கும் தனிக்கட்டுரைகள் உருவாக்குவது; தற்பொழுது மூலிகைகள் குறித்த கட்டுரைகள் உள்ளடக்கத்தில் சிறிதாக இருந்தாலும் அவற்றில் குறைந்தபட்ச பயனுள்ள தகவலாக உள்ளது. அவற்றை இந்தப் பரிந்துரையில் சேர்ப்பது பொருந்தாது.) பயன் குறித்து மாற்றுக்கருத்து இருக்கும் வேளையில் கலந்துரையாடி மற்ற பயனர்களின் கருத்துக்களைப் பெற்று நீக்க வேண்டும்.
![]() | இப்பக்கம் குறைவாக தகவல்களுடன் உள்ளன. |
- ↑ In this context, speedy refers to the simple decision-making process, not the length of time since the article was created.