விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு

நீக்கலுக்கான கட்டுரைகள் என்ற பக்கத்தில் விக்கிப்பீடியர்கள் ஒன்றுகூடி ஒரு கட்டுரை நீக்கப்பட வேண்டுமா என்று கலந்தாலோசிப்பர். சாதாரணமாக ஒரு கட்டுரையை நீக்குவது குறித்து ஏழு நாட்கள் கலந்துரையாடப்படும். இதன் பின்பு, கருத்தொற்றுமை எட்டிய பின்பு நீக்குதல் செய்முறை தொடங்கும்.கட்டுரை மேம்படுத்தப்படலாம், ஒன்றாக்கப்படலாம், வழிமாற்றப்படலாம், அடைக்காக்கப்படலாம், அடைக்காக்கப்படலாம்,வேறு விக்கித்திட்டங்களுக்கு மாற்றப்படலாம், அடைக்காக்கப்படலாம் (வேறு விக்கிப்பீடியா திட்டத்துக்கு நகர்த்துதல்),வேறு தலைப்பிற்கு பெயர்மாற்றம் செய்யப்படலாம்/நகர்த்தப்படலாம், மற்றொரு கட்டுரை அல்லது பக்கத்தின் ஒரு அங்கமாக்கப்படலாம், பயனர்ப்பக்கத்தில் சேர்க்கப்படலாம் அல்லது நீக்குதல் கொள்கையின்ப்படி நீக்கப்படலாம்.

தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3

நீக்கப் படவேண்டும் என்று நீங்கள் கருதும் கட்டுரையை கீழே தகுந்த காரணங்களுடன் பரிந்துரையுங்கள். பிற பயனர்கள் தகுந்த ஆட்சோபனை தெரிவிக்காவிடத்தும் தகுந்த காரணங்கள் இருக்குமிடத்தும் நிர்வாகிகள் அக்கட்டுரையை நீக்குவார்கள். இவ் வாக்கெடுப்பு பொதுவாக ஒரு வாரம் நிலுவையில் இருக்கும். பார்க்க:விரைவு நீக்கல் தகுதிகள்

Purge (மேலும் அறிய, விக்கிப்பீடியா:துப்புரவு பார்க்கவும்)

தற்போதைய விவாதங்கள் தொகு

நடப்பு வேண்டுகோள்கள் தொகு

21 நவம்பர் 2014 தொகு

பிரம்ம முகூர்த்தத்தில் தொகு

"பிரம்ம முகுர்த்தத்தில்" என தலைப்புக் கொண்ட இந்த கட்டுரையை நீக்கலாமா? - Vatsan34 (பேச்சு) 17:50, 21 நவம்பர் 2014 (UTC)Reply[பதிலளி]

ஆதரவு தொகு
எதிர்ப்பு தொகு
கருத்து தொகு
முடிவு தொகு

கட்டுரை பத்திப்புரிமை மீறலின் கீழ், நீக்கப்பட்டுள்ளது. - Vatsan34 (பேச்சு) 18:20, 21 நவம்பர் 2014 (UTC)Reply[பதிலளி]

16 மே 2014 தொகு

குறிப்பிடத்தக்கமை இல்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகள் தொகு

வாக்கெடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு பக்கத்தில் இறுதி முடிவு எட்டிய பிறகு மீண்டும் வாக்கெடுப்பு தொடரும்.

குறிப்பிடத்தக்கமை இல்லாத துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளை ஒரு மாத காலம் முன் அறிவிப்பு தந்து நீக்க பரிந்துரைக்கிறேன். எடுத்துக்காட்டுகள்: எட்வார்ட் கேல், அந்தோனி ஆர்டிங்டன், ஃபிரான்சிஸ் இசர்வுட்--இரவி (பேச்சு) 11:38, 16 மே 2014 (UTC)Reply[பதிலளி]

ஆதரவு தொகு
 1. --நந்தகுமார் (பேச்சு) 18:41, 16 மே 2014 (UTC)Reply[பதிலளி]

நடுநிலை

எதிர்ப்பு தொகு
 1. நீக்க வேண்டாம். ஈராண்டுகளாக பங்களிப்பாளனாக அல்லாது வெறும் பயனாளியாக விக்கிகளில் உலாவியதில் inclusionism குறித்த எனது நிலைப்பாடுகள் இளகியிருக்கின்றன. குறுங்கட்டுரைகள் இருப்பதாலும் தொடர்ந்து உருவாக்கப்படுவதாலும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பெரிய பாதகம் இல்லை. ஒரு தலைப்பு எவ்வளவு விரிவாக எழுதப்படக்கூடியது எனும் அளவுகோல் கலைக்களஞ்சியத்தில் இடம் பெற அதுவும் விக்கி போன்ற ஒரு மின் களஞ்சியத்தில் இடம் பெற கருதக்கூடாதது. --சோடாபாட்டில்உரையாடுக 03:56, 17 மே 2014 (UTC)Reply[பதிலளி]
கருத்து தொகு

பொதுவாக சொல்கிறேன். இதுபோன்ற 100 கணக்கான கட்டுரைகளை நீக்க வேண்டி இருந்தால், அனைத்தையும் ஒரேயடியாக நீக்க வேண்டாம். நாளொன்றுக்கு நான்கைந்து என்ற வீதத்தில் நீக்கலாம். தொடர்ந்து நீக்கினால், புள்ளிவிவரக்கணக்கில் இறங்குமுகமாக தோன்ற வாய்ப்பு உண்டு. என் போன்றோரை சோர்வடையச் செய்யலாம். :( -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:11, 16 மே 2014 (UTC)Reply[பதிலளி]

தமிழ்க்குரிசில், ஒரு மாதம் முன் அறிவிப்பு தருவதன் நோக்கமே, குறிப்பிடத்தக்கமை நிறுவுவதற்கான வாய்ப்பு தர வேண்டும் என்றே. ஒவ்வொரு கட்டுரையின் தரவுகளையும் ஆய்ந்து வார்ப்புரு சேர்ப்பதற்கே வேலை எடுக்கும். எனவே, ஒரேயடியாகவும் உடனேயும் நூற்றுக் கணக்கில் கட்டுரைகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவே. எனவே, உங்கள் தெளிவான வாக்கினை அளிக்க வேண்டுகிறேன் :) --இரவி (பேச்சு) 12:19, 16 மே 2014 (UTC)Reply[பதிலளி]

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு பக்கத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் துடுப்பாட்டக்காரர் பற்றிய குறிப்பிடத்தக்கமை வரையறை தீர்மானிக்கப்படாமல் இங்கே நீக்குவதற்கான வாக்கெடுப்புச் செய்வது பொருத்தமில்லை என்று தோன்றுகிறது. குறுங்கட்டுரை அளவுசார்ந்து அல்லது வேறு காரணங்களுக்காக நீக்கக் கோரப்படவில்லை. நன்றி. கோபி (பேச்சு) 04:53, 17 மே 2014 (UTC)Reply[பதிலளி]

குறிப்பிடத்தக்கமையை வரையறை செய்வது முதல் படி. வரையறுக்கப்பட்ட குறிப்பிடத்தக்கமை நிறுவப்படாத போது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது இரண்டாவது படி. இரண்டாவது படி குறித்த வாக்கெடுப்பு நடக்கும் போது முதல் படி பற்றிய மீளாய்வைத் துவங்கியுள்ளதால் அதனை இறுதி செய்து விட்டு, மீண்டும் இந்த வாக்கெடுப்புக்கு வருவதே பொருத்தம். எனவே, தற்காலிகமாக இந்த வாக்கெடுப்பை கோரிக்கையை நிறுத்தி வைக்கிறேன்.--இரவி (பேச்சு) 05:29, 17 மே 2014 (UTC)Reply[பதிலளி]

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை வாக்கெடுப்பு இணக்க முடிவு நோக்கி நகராததால், இவ்வாக்கெடுப்பையும் கைவிடுகிறேன். குறிப்பிடத்தக்கமை இல்லாத கட்டுரைகளை என்ன செய்வது என்ற பொது அணுகுமுறையே தற்போது தேவைப்படும் ஒன்று. உங்கள் கருத்துகளை விக்கிப்பீடியா பேச்சு:குறிப்பிடத்தக்கமை#குறிப்பிடத்தக்கமையை முன்வைத்த துப்புரவுப் பணி தொடர்பான கேள்விகள் பகுதியில் தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 13:15, 16 சூன் 2014 (UTC)Reply[பதிலளி]

8 ஏப்ரல் 2014 தொகு

32 விநாயகர் திருவுருவங்கள் குறித்த கட்டுரைகள் தொகு

கட்டுரை: பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் பகுப்பிலுள்ள கட்டுரைகள்

காரணம்: இக்கட்டுரைகள் அனைத்தும் ஒரே கட்டுரையாக்கப்படலாம். தனித்தனிக் கட்டுரைகளாக இருப்பதனை விட ஒரே கட்டுரை போதுமானதாக இருக்கும். தொடர்புடைய கொள்கைக்குப் பார்க்க: விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு - 8 ஏப்பிரல் 2013

ஆதரவு தொகு
 1. --கோபி (பேச்சு) 17:37, 8 ஏப்ரல் 2014 (UTC)
 2. --நந்தகுமார் (பேச்சு) 17:56, 8 ஏப்ரல் 2014 (UTC)
 3. --ஸ்ரீதர் (பேச்சு) 05:07, 9 ஏப்ரல் 2014 (UTC)
 4. --சரவணன் பெரியசாமி (பேச்சு) 10:57, 13 ஏப்ரல் 2014 (UTC)
 5. தொடர்புடைய தலைப்புகள் துண்டு துண்டாக பல பக்கங்களில் சிதறி இருப்பதை விட, ஒரே பக்கத்தில் இருந்தால் செறிவான, தரம் கூடிய கட்டுரையாக இருக்கும். அச்சடித்துப் படிப்போருக்கு உதவும். ஒரு சில வரிகளுக்காக 32 பக்கங்களைத் திறக்கத் தேவைப்படாது. கட்டுரைகளில் கூடுதல் உள்ளடக்கம் சேர்க்கும் காலத்தில், தேவைப்பட்டால் தனிக்கட்டுரையாக ஆக்கிக் கொள்ளலாம்.--இரவி (பேச்சு) 20:15, 13 ஏப்ரல் 2014 (UTC)
 6. --இணைப்பதற்கு ஆதரவு. இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. --பவுல்-Paul (பேச்சு) 17:09, 19 ஏப்ரல் 2014 (UTC)
பவுல், வளர்முகமான பரிந்துரைக்கு நன்றி. இக்கட்டுரைகளை உருவாக்கிய பயனரிடம் கருத்து கோரியுள்ளேன்.--இரவி (பேச்சு) 18:46, 11 மே 2014 (UTC)Reply[பதிலளி]
நடுநிலை தொகு

#//இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.//என்ற பவுலின் கருத்தை பின்பற்ற விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:07, 20 ஏப்ரல் 2014 (UTC)

எதிர்ப்பு தொகு
 1. முதலில் இணைக்கப் பரிந்துரைத்தவன் நான் என்றே நினைக்கிறேன். அப்பொழுது, பிற விடயங்கள் இணைக்கப்படுவதை எதிர்த்து வேகத்தில், consist அணுகுமுறை வேண்டி இப்படிப் பரிந்துரைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இக் கட்டுரைகள் இருப்பதால் நாம் இழக்கப்போவது எதுவும் இல்லை. ஆனால், இவை வளர்வதற்கான வாய்ப்புக்கள் உண்டு. --Natkeeran (பேச்சு) 20:10, 13 ஏப்ரல் 2014 (UTC)
  • வளர்வதற்கான வாய்ப்பு வரும் போது தனிக்கட்டுரைக்கு நகர்த்தினால் ஆயிற்று. கட்டுரைகளை ஒன்றிணைப்பதால் எப்படி வளர்ச்சிக்கான வாய்ப்பு தடுக்கப்படும் என்று சான்றுகளோடு விளக்க முடியுமா? --இரவி (பேச்சு) 16:27, 19 ஏப்ரல் 2014 (UTC)
 2. //இக்குறுங்கட்டுரைகளைத் தொடங்கிய பயனரிடம் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உளவா என்று கேட்டறிந்து, அதன்பிறகு செயல்பட்டால் நலமாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது.//என்ற பவுலின் கருத்தை பின்பற்ற விரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:07, 20 ஏப்ரல் 2014 (UTC)
  • தகவலுழவன்! ஆதரவு / எதிர்ப்பு / நடுநிலை ஆகிய நிலைப்பாடுகளில் ஏதேனும் ஒன்றில் மட்டும் உங்கள் வாக்கைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:45, 11 மே 2014 (UTC)Reply[பதிலளி]
   • இரவி! பக்கவடிவைச் சீரமைத்து, எனது ஒரு நிலையைத் தெரிவித்துள்ளேன். அப்பக்கங்கள் இருப்பதால் ஒரு கெடுதலும் நமக்கு ஏற்படாது. பெரும்பாலோனோர் குறைந்த நேரத்தில் செயல்படுபவர்களாகவே இருக்கின்றனர். பிற விக்கியிலும், இதுபோல குறுங்கட்டுரைகளை, ஆயிரகணக்கில் பேணுகின்றனர். (எ. கா) W:Category:Articles with 'species' microformats. எனவே, நீக்குதல் என்பது கட்டுரை உருவாக்குனரை, அதிகமாக எழுத நிர்பந்த படுத்துவதும், சோர்வடைய செய்வதும் ஆகும். அக்கட்டுரைக்கான படங்களை எடுத்தல், அனைத்துக்கும் பொதுவான ஒரு வார்ப்புருவை உருவாக்குதல், தொடர்புடைய பக்கங்களை இவைகளையும் காணவும் என்ற உட்பிரிவாக உருவாக்கலாம். பக்கங்களை வளர்த்தெடுத்தல் என்பது அனைவரது இலக்காக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். பக்க மேலாண்மை என்பது பக்கங்களை ஒன்றினுள் மடக்குவதல்ல. நமது சமூகம் மெதுவாகத்தான் வரும். வளரும். எனவே, காத்திருக்கக் கோருகிறேன். பங்களிப்பாளர் அதிகரிக்கும் போது இவை வளர்க்கப்படலாம். அதிகரிக்க நானும் ஈடுபடுகிறேன். ஈடுபடுவோம். மற்றவை தானாகவே செழிக்கும். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 17:40, 16 மே 2014 (UTC)Reply[பதிலளி]
 3. தற்போது குறுங்கட்டுரைகளாக இருக்கும் இவைகளில், கணபதியின் சக்தி (பெண் தெய்வம்), உருவ அமைப்பு, மந்திரம், இவ்வுருவம் அமைந்திருக்கும் கோயில்கள், இவ்வுருவத்திற்கான காரணம் என எழுதப்படுமானால் கட்டுரை பெரும் கட்டுரையாகும் வாய்ப்புள்ளது. காணாதிபத்திய சமயத்தின் மீது காதல் கொண்ட விக்கிப்பீடியர்கள் கிடைத்தால் 32 கணபதிகளுக்கும் உருவப்படமும் கிடைக்க கூடும். பிற்காலத்தில் இக்கட்டுரைகள் முழுமைப் பெறக் கூடிய வாய்ப்புள்ளதாக கருதுவதால் இந்த நீக்கலுக்கு எதிர்ப்பினை தெரிவிக்கிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:59, 21 மே 2014 (UTC)Reply[பதிலளி]
கருத்து தொகு

கருத்து முரண் முற்றிய உரையாடல்கள் மட்டும் வாக்கெடுப்பு நிலைக்கு வந்தால் போதும். இந்தக் கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம் என்று ஏற்கனவே புரிந்துணர்வு உள்ளது. பார்க்க: பகுப்பு பேச்சு:32 விநாயகர் திருவுருவங்கள்#அனைத்தையும் ஒன்றாக்கவும். தவிர, கட்டுரைகள் ஒன்றிணைப்பு கொள்கையில் இப்பகுப்பே ஒரு எடுத்துக்காட்டாக தரப்பட்டுள்ளது. எனவே, கட்டுரைகளை ஒன்றிணைக்கலாம்.--இரவி (பேச்சு) 20:16, 13 ஏப்ரல் 2014 (UTC)

இந்த விவாதம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதே. இதை விரைவில் முடித்துக்கொள்ளலாமா? இனிவரும் நீக்கலுக்கான வாக்கெடுப்பை ஒரு வாரத்திற்குள் முடிக்க முயலலாமே?-Vatsan34 (பேச்சு) 15:35, 18 மே 2014 (UTC)Reply[பதிலளி]
ஒருமித்த கருத்து இல்லாத போது இணக்க முடிவை நோக்கி நகர்வற்கு கூடுதல் காலம் தேவைப்படும். மற்றபடி பொதுவாக, ஒரு வார காலம் போதும்.--இரவி (பேச்சு) 13:49, 21 மே 2014 (UTC)Reply[பதிலளி]
முடிவு தொகு

75% வாக்குகள் பக்கங்களை ஒன்றிணைப்பதை ஆதரிக்கின்றன. பக்கங்களை உருவாக்கிய பயனரும் கருத்து ஏதும் கூறவில்லை. பக்கங்களை நீக்காமல் ஒன்றிணைக்கத் தான் போகிறோம் என்பதால் தரவு இழப்பு ஏதும் இல்லை. எனவே, வாக்கெடுப்பின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப பக்கங்களை தகுந்த வரலாறு, வழிமாற்றோடு இணைக்க வேண்டும் என்பதை முடிவாகப் பரிந்துரைக்கிறேன். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள், இவ்வாக்கெடுப்பு குறித்து தங்கள் சொந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி, வாக்கெடுப்பின் முடிவுகளை எப்படிப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவது என்பதை புறவயமாக தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:48, 21 மே 2014 (UTC)Reply[பதிலளி]