விக்கிப்பீடியா:துப்புரவு

துப்புரவுக் குழுவின் பக்கத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்
.

தமிழ் விக்கிப்பீடியாவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்குழு செயற்படுகின்றது. மேலும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்ற பயனர்களை ஒன்று சேர்த்துத் திட்டங்களை வகுத்து உழைக்கவும் வழிசமைக்கிறது. இதன்மூலம் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகின்ற பயனர்களுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பயனர்களுக்கும் துப்புரவு தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஏதுவாக இருக்கும்.

தமிழ் விக்கிப்பீடியாவானது வேகமான வளர்ச்சி கண்டுவருகின்ற, அதிகப் பயனர்கள் விக்கியில் உலவும், இந்த நேரத்தில் விக்கிப்பீடியாப் பக்கங்களின் செம்மையையும் புதியவர்களுக்கான வழிகாட்டலையும் தொடர்ந்தும் வழங்குவது செம்மையான விக்கிப்பீடியாக்களில் ஒன்றாக தமிழ் விக்கியை உருவாக்க வழிவகுக்கும்.

ஏற்கனவே சில பயனர்கள் விக்கிப்பீடியாவில் தமது நேரத்தை ஒதுக்கித் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மையான தமிழ் விக்கிப்பீடியா நோக்கிய பயணத்தில் இணைய உங்களையும் அன்போடு அழைக்கின்றோம். இக்குழுவைப் பற்றிய கருத்துக்களையும் புதிய முன்மொழிவுகளையும் பேச்சுப்பக்கத்தில் முன்வையுங்கள். நன்றி!

ஏன்தொகு

நோக்கம்தொகு

நமது துப்புரவுக் குழுவின் நோக்கம்:

 • தமிழ் விக்கியில் தேங்கிக் கிடங்கும் துப்புரவுப் பணிகளை நிறைவு செய்தல்
 • புதுப்பயனர்களுக்கு விக்கிப்பீடியாவின் கொள்கைகள் பற்றி அறிவுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
 • விக்கிப்பீடியக் கட்டுரைகளில் உலவி துப்புரவு வார்ப்புருக்களை இணைத்தல். முடியுமானவரை துப்புரவு செய்தல்.
 • மற்ற பயனர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தித் துப்புரவுப் பணிகளில் ஈடுபடச் செய்தல்.
 • சிறப்பான துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் பயனர்களை ஊக்குவித்தல்.

நீங்கள் என்ன செய்யலாம்?தொகு

 1. முதன்மைவெளியில் உள்ள கட்டுரை இல்லாமல் பேச்சுப் பக்கம் மட்டும் கொண்ட பல பக்கங்கள் விக்கியில் உள்ளன. அவை: இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணியிலுள்ளோர் இதனை நீக்கியோ, இணைத்தோ ஒழுங்குபடுத்தலாம்.
 2. பொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில எழுத்தில் தலைப்புகள் வைப்பதில்லை. மொத்த விக்கியில் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட தலைப்புகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் அறிவியல் குறியீடு, சாலைக் குறியீடு, சர்வதேசக் குறியீடு போன்றவற்றிற்கு ஆங்கில எழுத்து முதன்மை தலைப்பாகவோ வழிமாற்றியாகவோ அமையலாம், அவை அன்றி தலைப்பில் ஆங்கிலம் கொண்ட மற்றவற்றை உரிய முறையில் நீக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம்.
 3. பகுப்பு:பகுப்பில்லாதவை பகுப்பில் மொத்தம் சுமார் 1,850 கட்டுரைகள் உள்ளன. தானியங்கியால் திரட்டப்படும் இப்பகுப்பின் உருப்படிகள் சில காலமாக உரிய பகுப்பின்றி அநாதையாக உள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்தலாம்.

குழு உறுப்பினர்கள்தொகு

துப்புரவுக் குழுவில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் கீழே தங்கள் பெயரையும் மூன்று அலைக்குறிகளைப் (~~~) பயன்படுத்தி இணைக்கலாம்.

 1. ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀
 2. ʋɐɾɯɳபேச்சு
 3. பாலாஜி (பேசலாம் வாங்க!) 13:43, 25 மார்ச் 2016 (UTC)
 4. --கலை (பேச்சு) 06:40, 22 சனவரி 2019 (UTC)