விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு/தொகுப்பு 3

நடப்பு வேண்டுகோள்கள்

தொகு

கட்டுரை: பொட்டு சுரேஷ் படுகொலை

காரணம்: தனிக்கட்டுரையாக இருக்கும் அளவுக்கு வரலாற்று முக்கியத்துவமும் கலைக்களஞ்சியக் குறிப்பிடத்தக்கமையும் இல்லை. பார்க்க: பேச்சு:பொட்டு சுரேஷ் படுகொலை

ஆதரவு:
  1. --குறும்பன் (பேச்சு) 03:06, 6 மார்ச் 2013 (UTC)
  2. --நந்தகுமார் (பேச்சு) 17:57, 8 ஏப்ரல் 2014 (UTC)
நடுநிலை:
எதிர்ப்பு:
கருத்து:

முந்தைய வேண்டுகோள்கள்

தொகு
கட்டுரை சுட்டி: இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் பகுப்பில், என்ன எழுதினார்கள் என்றே குறிப்பிடப்படாத அனைத்துக் கட்டுரைகளும். சில கட்டுரைகளில் எழுத்துப்பணி பற்றிய குறிப்புகள் உள்ளன. அவற்றை நீக்கப்போவதில்லை.

*எம். ஏ. தாவூத் பாட்சா



நீக்கப் பரிந்துரைக்க காரணங்கள்: எழுத்தாளர்கள் என்ற வகையிலேயே இவர்களைப் பற்றிய அறிமுகம் விக்கிப்பீடியாவில் தரப்பட்டுள்ளது. ஆனால், என்ன எழுதினார்கள் என்பதே பல கட்டுரைகளில் இல்லை. இவர்கள் புகழ்பெற்ற எழுத்தாளர்களாக இல்லாத நிலையில் இவர்களைப் பற்றிய கூடுதல் தகவல் சேர்க்கப்படுவதற்கோ கூடுதல் ஆதாரங்கள் இல்லாத நிலையில் இவர்களின் குறிப்பிடத்தக்கமையை உறுதிய செய்யவோ வழி இல்லை.
பரிந்துரை பயனர்/நாள்:--இரவி 20:17, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
ஆதரவு:
  1. இவ்வாறான கட்டுரைகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்கிவிட்டுப் பட்டியலில் சேர்க்கலாம். கட்டுரையில் உள்ள தகவல்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:55, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  2. --செல்வா 05:25, 26 சனவரி 2012 (UTC) (கீழே கருத்தைப் பார்க்கவும்)[பதிலளி]
  3. இதுபோன்ற பொதுவானப் பெயர்களில் அதிகம் அறியப்படாதவர்களை (குறைந்தபட்சம் அவரவர் ஊர்களில் கூட அறியப்படாதவர்களாக இருக்கக்கூடும்) நீக்குவதை ஏற்கிறேன். அதேசமயம் பட்டியல் பக்கம் ஒன்றை உருவாக்கி (உசாத்துணை இருப்பதால்) பெயர்களை அப்பட்டியலில் இடம்பெறச்செய்யலாம். (தாவூத் பாட்சா கட்டுரையை நீக்கவேண்டாம்) -- மாகிர் 16:11, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  4. --குறும்பன் 18:08, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  5. எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் என்பதால் அவரது எழுத்துக்களைத் தவிர்த்து வசிக்கும் தெரு முதலிய தகவல்களை நீக்க வேண்டும். மிஞ்சியிருக்கும் தகவல்களை வைத்து தனிக்கட்டுரையாக எழுத முடியாத நிலையில் அவற்றை நீக்கிவிட்டு, ஒரு பட்டியிலில் இடலாம். -- சுந்தர் \பேச்சு 17:03, 22 மார்ச் 2012 (UTC)
எதிர்ப்பு:
  1. நீக்க வேண்டாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்கள் பற்றிய ஆவணங்கள் அரிது. மேலும் ஏற்கனவே ஒரு மேற்கோள் தரப்பட்டுள்ளது. ஆங்கில விக்கி போல இறுகிய பிடி இங்கு தேவை இல்லை. --Natkeeran 15:53, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  2. முழுமையாக நீக்க எதிர்ப்பு, பட்டியலாக்க ஆதரவு. சுமார் நூறு கட்டுரைகள் இரவி குறிப்பிடும் நிலையில் உள்ளன. அவற்றிலும் தேடினால் இரவி கேட்கும் ஆதாரங்கள் சிலவற்றுக்கு எளிதாக சிக்குகின்றன [1] [2] [3]. அல்லது மாகிர் சுட்டுவது போல வேறு விதமான குறிப்பிடத்தன்மை சிக்குகிறது. ஆங்கில விக்கியில் இவ்வாறு தனித்து நிற்க உள்ளடக்கம் இல்லாதவற்றை பட்டியலாக்குவது வழக்கம்.--சோடாபாட்டில்உரையாடுக 16:32, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  3. உடனடியாக கட்டுரைகளை நீக்கத் தேவையில்லை. கட்டுரையை மேம்படுத்தப் போதிய கால அவகாசம் வழங்கப்படலாம். தேனி.எம்.சுப்பிரமணி கூறியுள்ளதுபோல் கட்டுரையை எழுதிய பயனருக்கு மின்னஞ்சல் அனுப்பிப் பார்க்கலாம்.--கலை 22:42, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  4. நீக்கவேண்டாம். இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பங்களிப்பாளர்கள் பற்றிய குறிப்புகள் நற்கீரன் கூறியது போல அரிதானவை. அவசரப்பட்டு நீக்கக்கூடாது.--சஞ்சீவி சிவகுமார் 23:30, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
கருத்து: அச்சில் வெளியான ஒரு உசாத்துணையை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. அதே உசாத்துணையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பிற எழுத்தாளர் கட்டுரைகளை கூடுதல் உசாத்துணையின்றி ஏற்றுக் கொண்டால் (என்ன எழுதினார்கள் என்ற தரவுகள் உள்ள போது), இவர்களையும் ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட செய்திகள் தவிர வேறு எதுவும் தற்சமயம் இல்லாத எழுத்தாளர்களை ஒரு பட்டியல் கட்டுரை உருவாக்கி இட்டுவிடலாம். அப்பட்டியலுக்கு இத்தனிக்கட்டுரைகளை வழிமாற்றி விடலாம். இம்முறையே ஆங்கில விக்கியில் கடைபிடிக்கப்படுகிறது. (மேலும் சில குறிப்புகள் பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் பக்கத்தில் உள்ளன).--சோடாபாட்டில்உரையாடுக

20:43, 25 சனவரி 2012 (UTC)

  1. என் கருத்து:"Notability(people)" குறிப்பிடத்தக்கவர் என்னும் எதிர்பார்ப்பைப் பற்றி முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டுகிறேன் (அதிக நீளம் இல்லை). குறைந்தது அதில் உள்ள முதல் இரு சிறு பகுதிகளைப் பார்க்க வேண்டும்: (1) "Basic" (Basic அடிப்படை ), (2) "Any biography" என்னும் பகுதி "வாழ்க்கைவரலாறு". இன்னும் குறிப்பாக வாழும் மாந்தர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் "Biographies of living persons வாழும் மாந்தர்கள் வரலாறு " என்னும் கொள்கைப்படி இருக்க வேண்டும். இவை தவிர w:en:WP:NOT என்பதையும் பாருங்கள். நான் மேலே ஆதரவு தெரிவித்திருக்கின்றேன் எனினும், எனக்குச் சில கவலைகள் உண்டு. இப்பொழுது இங்கே குறிப்பிடப் பட்டுள்ள வாழும் தமிழ் எழுத்தாளர்கள் (100+ ???) , அவர்களின் படைப்புகளைப் பற்றிப் பரவலாகவும், ஆழமாகவும் பிறரால் திறனாய்வு செய்த தரவுகள் கொடுக்கப்படாத நிலையில்தான் அந்தக் கட்டுரைகள் இரவி குறிப்பிட்டவாறு நீக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறேன். எழுத்தாளர்கள் மட்டும் அல்லாமல், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் (எ.கா w:en:WP:ATH, w:en:WP:NF) போன்றவர்களைப்பற்றியும், ஓர் ஒழுங்கு முறையைப் பின் பற்றுவது வேண்டும். தனிக் கட்டுரைகளாக இல்லாவிடில், ஏதேனும் துறைவகுத்த பட்டியல்களில் இடம்பெறச் செய்ய வழிகள் இருக்கின்றனவா என்றும் எண்ணிப்பார்க்கலாம். இது போன்று ஒரே மாதிரியாக, தக்க ஆதாரமோ மேலே குறிப்பிட்டவாறு குறிப்பிடத்தக்க தன்மை இல்லாத கட்டுரைகளை நீக்க என் ஆதரவு. - செல்வா 26 சனவரி 2012
  2. என்ன எழுதினார்கள் என்ற குறிப்பு இருந்தால் அந்த எழுத்தாக்கத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்கமையை ஆராய முடியும். மற்றவர்களுக்கு அது இயலாது. இதன் காரணமாகவே இக்கட்டுரைகளை நீக்கக் கோருகிறேன். --இரவி 20:54, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  3. இக்கட்டுரைகளில் முதலில் குறிப்பிட்ட கால அளவிலான நீக்கல் அறிவிப்பு கொடுக்கலாம். பொதுவாக, இது போன்ற கட்டுரைகள் உருவாக்கியவரே விரிவாக்கம் செய்யக் கூடிய நிலையிலிருந்தால், கட்டுரையை உருவாக்கியவருக்கு கட்டுரை விரிவாக்கத்திற்கு உதவக் கோரி மின்னஞ்சல் அனுப்பிப் பார்க்கலாம். இந்த இரு நிலைகளிலும் கட்டுரை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில் நீக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:54, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  4. நற்கீரன், தகவலை வேறு விதமாகவும் வைத்து இருக்கலாமே. உள்ளடக்கத்தின் தன்மையையும், கருத்துகளையும் பகுப்பு பேச்சு:இந்திய முஸ்லிம் எழுத்தாளர்கள் என்னும் பக்கத்தில் பாருங்கள். ஓரிரு அட்டவனையில் தரலாமே (தகவல் எல்லாம் இருக்கும்தானே). --செல்வா 16:01, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  5. எழுத்தாளர் என்றால் அவர் எழுதிய புத்தகம் பற்றி குறிப்பு வேண்டும்; வேண்டாம், புத்தகத்தின் பெயராவது வேண்டும். இல்லாவிட்டால் அவற்றை பட்டியலுக்கு மாற்றி விடலாம். கட்டுரையை மேம்படுத்த கட்டுரை ஆக்குநருக்கு குறிப்பிட்ட காலம் தரவேண்டும் (முடிந்தால் அக்கட்டுரைகளில் இன்னும் xx நாட்களுக்குள் யாராலும் கட்டுரை மேம்படுத்தப்படாவிட்டால் நீக்கப்படும் என வார்ப்புரு இடலாம்). மேம்படுத்தி இருந்தால் தனி கட்டுரையாக வைத்திருக்கலாம் இல்லாவிட்டால் பட்டியலுக்கும் நகர்த்தலாம். --குறும்பன் 18:08, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  6. @நற்கீரன் இசுலாமியத் தமிழ் இலக்கியம் எழுதுவது வேறு. எழுதுபவர் இசுலாமியராக இருப்பது வேறு. இது குறித்த கருத்துகளை பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்து உள்ளேன். எனவே, இசுலாமியத் தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்கள் பற்றிய ஆவணங்கள் அரிது என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.--இரவி 05:43, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  7. @கலை, @சுப்பிரமணி: அனைத்துக் கட்டுரைகளையும் எழுதி உள்ள புன்னியாமீனுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுரையை எழுதிய பயனருக்கு மின்னஞ்சல் அனுப்பும் தேவை இல்லை. தரமற்ற கட்டுரைகளை நீக்கி விடுங்கள் என்று பொதுவாகத் தெரிவித்து உள்ளார். இக்கட்டுரைகளை மேம்படுத்துவது பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை--இரவி 23:03, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
முடிவு: கட்டுரையை மேம்படுத்த காலம் தந்து, கூடுதல் தகவல் சேர்க்கப்படாத நிலையில் ஒரு பட்டியல் பக்கத்துக்குக் கட்டுரைகளை நகர்த்த வேண்டும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே, இதனை ஒரு இணக்க முடிவாக முன்வைக்கிறேன். எவருக்கேனும் மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும். நன்றி--இரவி 10:21, 4 பெப்ரவரி 2012 (UTC)
Appealஇந்த முடிவை எதிர்க்கிறேன். தமிழ்ச் சூழலில் இருக்கும் பெரும்பான்மை எழுத்தாளர்களுக்கோ முக்கிய நபர்களுக்கோ இணையத்தில் ஆதாரம் தேடுவது தற்சமயத்தில் சாத்தியம் அற்றது. இக் கட்டுரைகளுக்கு ஒரு மேற்கோள் தரப்பட்டு இருக்கிறது. notability என்பது இறுதியாக வரையறை செய்யப்படக் கூடியது அல்ல. இங்கு கோரப்பட்டு இருக்கும் proof beyond doubt குற்ற வழக்குகளில் மட்டுமே பொருந்தும். மேலும் 4 பேர் ஆதரவு, 4 பேர் எதிர்ப்பு. ஆகாவே வாக்கு எடுப்பு இங்கு தீர்வல்ல. --Natkeeran (பேச்சு) 14:19, 14 மார்ச் 2012 (UTC)

நற்கீரன், இங்கு இணையத்தில் இருந்து ஆதாரம் கோரவில்லை. புத்தகத்தில் இருந்தாலும் தாருங்கள். எழுத்தாளர் என்றால் என்ன எழுதினார் என்று சொல்ல வேண்டும். விளையாட்டு வீரர் என்றால் என்ன விளையாடினார் என்று சொல்ல வேண்டும். இது proof beyond doubt அன்று. அடிப்படை தகவல். ஒரு எழுத்தாளர் என்ன எழுதினார் என்று கூட கூற முடியாவிட்டால் அவருக்குத் தனிக் கட்டுரை வைக்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்கமை இல்லை என்றுதான் பொருள். மொத்தம் வாக்கு அளித்தவர்கள் ஒன்பது பேர். முன்மொழிந்த என்னையும் சேர்த்து நீக்க வேண்டும் என்று சொல்லி உள்ளோர் ஐவர். சோடாபாட்டில் பட்டியல் ஆக்க வாக்கிட்டுள்ளார். சுப்பிரமணி பட்டியல் ஆக்க ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நீக்க வேண்டும் என்று முன்மொழிந்தோரே கூட பட்டியல் பக்கத்துக்காவது நகர்த்தலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக, 10ல் 7 பேர் பட்டியல் ஆக்கத்துக்கு இசைவாகவே கருத்தளித்துள்ளனர். கலையும் சஞ்சீவி சிவக்குமாரும் அவசரப்பட்டு நீக்க வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதற்கு என்ன பொருள் என்று நீங்களே தெளிவுபடுத்திவிட்டுச் சொல்லுங்கள். விக்கிப்பீடியாவில் வாக்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் முடிவு எடுப்பதில்லை தான். ஆனால், இங்கு இணக்க முடிவு வந்து இத்தனை நாட்களாக யாரும் முறையிட வில்லை. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 158 கட்டுரைகளில் பட்டியலாக்க வார்ப்புரு இட்ட போதும் யாரும் முறையிட வில்லை. எனவே, இங்கு பொதுக்கருத்து தெளிவாக உள்ளது--இரவி (பேச்சு) 14:32, 14 மார்ச் 2012 (UTC)

பெரும்பான்மைத் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் நபர்கள் கட்டுரைகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. எனவே அவை அனைத்தையும் இவ்வாறு ஒருங்கிணைக்கவும். ஒட்டுமொத்தமாக இவ்வாறு கட்டுரைகளை அடையாளம் காண்பது பொருத்தமற்றது. மேலும் ஒரு ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பொது விதியாக ஆக்கப்படின் அனைத்து கட்டுரைகளும் அதே கண்ணோட்டத்தோடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். பிற கட்டுரைகளை நீக்கி/திருத்தி/இணைத்ப்பது இதன் ஒரு முதன்மை பணியாக இதை முன்னெடுப்பவர்கள் செய்ய வேண்டும். எந்த ஒரு கட்டுரையின் விரிவுபடுத்த தக்கது என்ற நோக்கிலேயே சிறு திட்டங்கள் இயங்குவது பொருந்தும். அதற்காகவே சிறிய கட்டுரைக்கான வரையறைகள் செய்துள்ளோம். --Natkeeran (பேச்சு) 17:27, 14 மார்ச் 2012 (UTC)
ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் போன்ற கட்டுரைகளில் என்ன உள்ளடக்கம் உள்ளது?! ஏன் இங்கு இப்படியான தகவல்களைக் கொண்ட கட்டுரைகள் இருக்கின்றன? நற்கீரன் உங்கள் மறுப்பின் பொருள் எனக்குப் புரியவில்லை! இணையத்தில் உள்ள வலைப்பதிவர்கள் 10,000+ பேருக்கும் ஒவ்வொருக்கும் தனிக் கட்டுரைகள் எழுதி இங்கு இடல்மாமா? (இணைப்பைக் கூட தரலாம்). ஏன் தமிழ் வலைப்பதிவர்கள் மட்டும்? ஆங்கில, இடாய்ச்சு மொழி அனைத்து மொழி வலைப்பதிவுகள் பற்றியும் கட்டுரைகள் எழுதலாமா? என்ன ஐயா இது?! வலைப்பதிவாளர்களுக்கு, அவர்களின் எழுத்துகளுக்குச் சான்றுகள் கூடத் தர முடியும். இதெல்லாம் ஒரு கலைக்களஞ்சியத்தில் இருக்க வேண்டும் என்பதற்கான தகுதிகளா? ஆய்வுக்கட்டுரைகள் எழுதியவர்களும், புத்தாக்கம் செய்து உரிமம் பெற்றவர்களும் மில்லியன் கணக்கில் உள்ளனர். எனவே எல்லோருக்கும் தனித்தனியாக கட்டுரைகள் எழுத வேண்டுமா?!! நற்கீரன், உங்கள் மறுப்பை மறுபார்வை இட வேண்டுகிறேன். --செல்வா (பேச்சு) 17:52, 14 மார்ச் 2012 (UTC)

நற்கீரன், எழுத்தாளர் என்றால் எதையாவது எழுதியிருப்பார்கள் அல்லவா? எழுதிய எதையாவது கட்டுரையில் குறிப்பிட்டால் தான் அவர் இதை எழுதியுள்ளார் என்று தெரியும். சொல்லப்போனால் கட்டுரையை நீக்குவதே பொருத்தம், ஆனால் தமிழ் சூழலில் எல்லா எழுத்தாளர்களுக்கும் இணைய ஆதாரம் கிடைப்பது கடினம் என்பதால் நீக்காமல் பட்டியலில் சேர்ப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது. தனி கட்டுரை என்பது கூடாது. அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். --குறும்பன் (பேச்சு) 17:52, 14 மார்ச் 2012 (UTC)

எல்லாத் தொலைக்காட்சி, திரைத்துறை நடிக/நடிகைகளுக்கு இருக்கும் கட்டுரைகளை யாரும் இங்கு மதிப்பீடு செய்யவில்லை. அப்பிடி என்றால் அனைத்து தமிழ் விக்கி நபர்கள் கட்டுரைகளையும் இதே விதியுடன் மதிப்பிட்டு ஒரே மாதிரிச் செய்யவும். --Natkeeran (பேச்சு) 17:58, 14 மார்ச் 2012 (UTC)

நற்கீரன், பல ஆண்டு விக்கி அனுபவமும் தேர்ந்த பங்களிப்பும் அதிகார அணுக்கத் தரமும் உள்ள தாங்கள் இவ்வாறு கருத்தளிப்பது வியப்பை மட்டுமல்ல கவலையையும் அளிக்கிறது. inclusionismக்கும் ஒரு அளவுண்டு. இந்தக் கட்டுரைகளை நகர்த்துகிறோமா அப்படியே வைத்திருக்கிறோமா என்பதை விட தாங்கள் முன் வைக்கும் வாதங்கள் முற்றிலும் பொருத்தற்றவை. இதே இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளில் அவர் ஏதேனும் ஒரு நூல் எழுதியிருக்கிறார் என்று குறிப்பு இருந்தால் கூட வார்ப்புரு இடாமல், நகர்த்தாமல் அப்படியே தான் வைத்து உள்ளோம். ஒரு நூல் எழுதியவர் எல்லாம் எழுத்தாளரா, யார் எழுத்தாளர், குறிப்பிடத்தக்க எழுத்தாளர் யார் என்றெல்லாம் உரையாடத் தொடங்கினால் முடிவே இல்லாமல் போகும். ஆனால், என்ன எழுதினார் என்ற தகவலைக் கோருவது புறவயமான அடிப்படையான எதிர்பார்ப்பு. எனவே, இங்கு குறிப்பிடத்தக்கமை என்பதற்கு முதல் போதிய தகவல் இல்லை என்பதே முதன்மையான குறை. ஒரு படம் நடித்த நடிகராக இருந்தாலும் அவர் என்ன படத்தில் நடித்தார் என்ற தகவலாவது தேவை. இது போன்ற அடிப்படை தகவல் கூட இல்லாத வேறு எந்தக் கட்டுரையாக இருந்தாலும் தெரிவியுங்கள். இதே போன்ற அணுகுமுறையை மேற்கொள்வோம். ஆனால், அவற்றை எல்லாம் சீராக்கி விட்டு இதற்கு வர வேண்டும் என்பது நேர்மையான வாதம் அன்று. ஒரு புறம், ஒட்டு மொத்தமான அணுகுமுறை கூடாது என்கிறீர்கள். அதே வேளை, நீங்களே இதே போன்ற ஒட்டு மொத்த எடுத்துக்காட்டுகளைத் தான் தருகிறீர்கள். கூகுள் கட்டுரைகளை நீக்கலாம் என்ற வாதம் வந்த போது கூட, இதே போன்ற inclusionism காரணமாக அவற்றை அப்படியே வைத்திருக்கிறோம். இரண்டு ஆண்டுகள் ஆகியும் 10% கட்டுரைகளைக் கூட உரை திருத்தி முடிக்கவில்லை. இதே நிலைமை தான் இக்கட்டுரைகளுக்கும் வரும். கட்டுரைகளை நகர்த்தக்கூடாது என்று கோருபவர்கள் ஏன் இவர்களைப் பற்றிய கூடுதல் தகவலைக் கட்டுரையில் சேர்க்க முனையக்கூடாது?--இரவி (பேச்சு) 18:08, 14 மார்ச் 2012 (UTC)


பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் என்பதற்கு ஒரு பகுப்பு இருக்கிறது. அங்கு ஒன்றாக்கலாமா. --Natkeeran (பேச்சு) 18:13, 14 மார்ச் 2012 (UTC)
1. பொதுவிதியை உருவாக்கவும்.
2. பொதுவிதிக்கான இணக்க முடிவை இட்டவும்.
3. பொதுவிதியை இந்தக் கட்டுரைகள் மீறினால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும்.
4: எல்லாக் கட்டுரைகளுக்கும் அதே பொது விதியைப் பயன்படுத்தவும்.

--Natkeeran (பேச்சு) 18:19, 14 மார்ச் 2012 (UTC)

நல்லது, நற்கீரன். இன்னும் சில எடுத்துக்காட்டுப் பகுப்புகளைத் தர முடியுமா? அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத் தேவைப்படும் கொள்கை முன்மொழிவை அளிக்கிறேன்.--இரவி (பேச்சு) 18:29, 14 மார்ச் 2012 (UTC)

en:Deletionism and inclusionism in Wikipedia என்ற கட்டுரையைப் பார்க்கவும். பெரும்பாலும் நபர்கள், அமைப்புகள், சிறப்பு ஈடுபாடுகள் போன்றவை தொடர்பாகவே இந்தச் சிக்கல் வரும் என்று நினைக்கிறேன். --Natkeeran (பேச்சு) 18:53, 14 மார்ச் 2012 (UTC)

நற்கீரன், இங்கு பட்டியலாக்கம் குறித்தே பேசுகிறோம். எனவே, deletionismக்கான மேற்கோள் பொருந்தாது. பட்டியலாக்குவதும் ஒரு வகை inclusionism தான். தரவை எங்கு தனித்தனிக் கட்டுரையாகத் தர வேண்டும், எங்கு பட்டியல் வடிவில் தர வேண்டும் என்றும் இதனை நோக்கலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் போக்குகள், வளங்கள், தேவைகளை முன்வைத்தே கொள்கைகளை உருவாக்க முடியும் என்பதால், தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தே இன்னும் சில எடுத்துக்காட்டுகளைத் தந்தால் உதவும். நன்றி--இரவி (பேச்சு) 19:02, 14 மார்ச் 2012 (UTC)

  • நற்கீரன், பொதுப்பட பேசுவதை விடுத்து, ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் என்னும் கட்டுரை ஏன் இருக்க வேண்டும் என்று கூறுங்கள். தக்க அறிவடிப்படையான காரணம் தாருங்கள். எல்லாவற்றையும் சேர்த்து எண்ணாமல், இக்கட்டுரையை நீக்கலாமா என்று மட்டும் (உள்ளடக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு) கருத்துரையுங்கள். (இங்கே ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் என்னும் கட்டுரை ஒரு எடுத்துக்காட்டுதான்.)
  • பகுப்பு:32 விநாயகர் திருவுருவங்கள் என்பதற்கு ஒரு பகுப்பு இருக்கிறது. அங்கு ஒன்றாக்கலாமா? என்று கேட்டீர்கள். என் கருத்து, ஆம், கட்டாயம் ஒன்றாக்கலாம். ஒன்றாக்குவதே நல்லது. ஒவ்வொரு வடிவுருவுக்கும் தனித்தனி படங்கள் இருந்தாலும், அவற்றையும் ஒரே பக்கத்தில் தரலாம்.

--செல்வா (பேச்சு) 21:59, 14 மார்ச் 2012 (UTC)


en:Wikipedia:Notability கொள்கை தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் இடத்து இந்த விடயமும் அதற்குள் அடங்கும் எனக் கருதுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 00:41, 20 மார்ச் 2012 (UTC)