விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல்

குறுக்கு வழி:
WP:நகர்த்து

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பக்கங்களின் தலைப்புகளில் பிழை இருந்தால், முழுமையானதாக இல்லாதிருந்தால், தவறான தலைப்பாக இருந்தால் அல்லது பிற துப்புறவுப் பணிகளுக்காக பெயர் மாற்றம் செய்ய வேண்டி வந்தால் அந்தப் பக்கத்தை நகர்த்துகிறோம். இவ்வாறு தலைப்பை நகர்த்துவதால் அதன் வரலாறு காக்கப்படுகிறது. தவிர முந்தைய தலைப்பிற்கு தானாகவே வழிமாற்று ஏற்படுத்தப்படுகிறது. ஆகவே இந்தப் பக்கத்துடன் இணைந்த பிற பக்கங்களில் இணைப்புகள் முறிந்து அவை சிவப்பாவதில்லை. (நிர்வாக அணுக்கம் உள்ளவர்களுக்கும் தானியங்கி பயனர்களுக்கும் இந்த வழிமாற்றை மறைக்கும் விருப்பத் தேர்வு உள்ளது). இவ்வாறான பக்க நகர்த்தலுக்கு உறுதி செய்யப்பட்ட பயனர்களுக்கு (பதிகை செய்து,நான்கு நாட்கள் புகுபதிகை செய்து 10 கட்டுரைகளையாவது தொகுத்தவர்கள்)மட்டுமே அணுக்கம் வழங்கப்படுகிறது. நீங்கள் பதியாத பயனரென்றாலோ அல்லது உறுதி செய்யப்படாத பயனர் என்றாலோ, அப்பக்கத்தில் [[பகுப்பு:தலைப்பு மாற்ற வேண்டிய பக்கங்கள்]] [[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]] என்ற பகுப்பினை இடவும்.

பெயர்வெளியில் உள்ள படிமங்கள், ஊடகங்கள் இவற்றை நகர்த்தும்போது அதனுடன் இணைந்த கோப்புகளும் நகர்த்தப்படுகின்றன. செப்டம்பர் 2009 நிலவரப்படி,நிர்வாக அணுக்கம் உள்ளவர்கள் படங்களை நகர்த்தலாம்.

ஆனால் பகுப்புகள் நகர்த்த வியலாது. அவ்வாறு நகர்த்த வேண்டுமென்றால் அனைத்துக் கட்டுரைகளிலும் சென்று கொடுக்கப்பட்ட பகுப்பை மாற்றி ஏதேனும் உரைப்பகுதி இருந்தால் அதனையும் பதிய பகுப்புப் பக்கத்தில் வெட்டி ஒட்ட வேண்டும்.

ஏன் நகர்த்துகிறோம் ? தொகு

ஓர் விக்கிப் பக்கத்தை நகர்த்த பல காரணங்கள் உள்ளன:

  • தலைப்பில் ஒற்றுப்பிழை, சொற்பிழை, தவறான நிறுத்தற்குறி அல்லது பிழையான தலைப்பு
  • தலைப்பு விக்கிப்பீடியா பெயரிடல் மரபுகளுக்கேற்ற வகையில் அமையாதிருத்தல்.
  • ஏற்கெனவே உள்ள பக்கத்தலைப்புடன் குழப்பம் நேராதிருக்க மாறுபட்டு பக்கவழி நெறிமுறைப்படுத்த அல்லது இதுவே முதன்மை கட்டுரையாகக் காட்டிட: காட்டாக தமிழ் என்பது மொழி,திரைப்படம்,நபர் பெயர் என இருந்தால்,முதன்மைக் கட்டுரையாக தமிழ் ((தமிழ்(மொழி)அல்ல)மற்றும் தமிழ்(திரைப்படம்),தமிழ்(நபர்) என தலைப்பிடுதல்
  • கட்டுரையை விக்கிப்பீடியா பயனரின் பக்கத்தில் துணைப்பக்கமாக வளர்த்தெடுத்து பின்னர் விக்கிப்பீடியாவில் பதிப்பித்தல்.
  • நீண்டு வரும் ஓர் பயனர் பேச்சுப் பக்கத்தை அதன் உரையாடல்களுடன் காப்பகத்தில் இட இதுவும் ஓர் வழி. (பிற வழிகளுக்கு பார்க்க உதவி:பேச்சுப்பக்கத்தை ஓர் காப்பகத்திலிட)

பக்கத்தை நகர்த்தும் முன் தொகு

பல நேரங்களில் நீங்கள் விரும்பும் பெயர்மாற்றத்தை நகர்த்தல் கோரிக்கையாக எழுப்ப வேண்டியிருக்கும்:

  • உங்கள் கணக்கு மிகவும் புதியதாக இருப்பதால் உறுதி செய்யப்படாது இருக்கலாம்.
  • கட்டுரைக்கு விரும்பும் திருத்திய தலைப்பில் ஏற்கெனவே பக்கமொன்று இருக்கலாம் (நிர்வாக அணுக்கம் உள்ளவர் உதவி வேண்டும்)
  • பக்கம் நகர்த்தலில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம்
  • உங்கள் நகர்த்தல் பிறரால் எதிர்க்கப் படலாம்.
  • எது சிறந்த மாற்றுப் பெயர் என்பதில் உங்களுக்கு ஐயம் எழலாம்

இச்சமயங்களில் நீங்கள் உங்கள் விருப்பத்தை பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் உங்கள் பரிந்துரைகளுடன் இடலாம்.

தயவு செய்து பக்கத்தை அதன் உள்ளடக்கத்தை வெட்டி ஒட்டி நகர்த்தி பெயர் மாற்றம் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் பக்கத்தின் தொகுத்தல் வரலாறு அழிக்கப்பட்டுவிடும். விக்கிப்பீடியா பின்பற்றும் GFDL உரிமத்தின்படி அனைத்துப் பங்களிப்பாளர்களின் பங்களிப்பையும் ஒப்புகை அளித்தல் இன்றியமையாததாகும். அந்தப் பங்களிப்பாளர் தங்கள் படைப்புகளுக்கு, அவரே மறுதளிக்காதவரை, காப்புரிமை பெற்றவராகிறார். ஆகவே அவர்களின் காப்புரிமை தீரும்வரை தொகுத்தல் வரலாறுகளை பாதுகாப்பது இன்றியமையாதது.

நீங்கள் அவ்வாறான வெட்டி ஒட்டுதலைக் கண்டால் நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

எவ்வாறு ஓர் பக்கத்தை நகர்த்துவது தொகு

 

இதனை உள்பதிகை செய்த உறுதி செய்யப்பட்ட எந்த பயனரும் செய்யலாம்.அனானிகள் செய்யவியலாது. தவிர மாற்றவிருக்கும் தலைப்பில் ஏற்கெனவே கட்டுரை இருப்பின் உங்கள் முயற்சி தோல்வியடையும்.

இனி இதற்கான படிப்படியான செயல்கள்:

  • நீங்கள் உட்பதிகை செய்திருப்பின் கட்டுரையின் மேல் ஒரு விண்மீன் குறியும் அம்புக் குறியும் இருக்கும். அம்புக் குறியின் மேல் உங்கள் சொடுக்கியைக் கொண்டு சென்றால் ஒரு பட்டியல் விரியும். அதில் நகர்த்தவும் என்ற தெரிவைச் சொடுக்கவும்.

இதனை அழுத்தினால் பின்வரும் புலங்கள் வரும்:

 

பக்கத்தை நகர்த்து .... கட்டுரையின் தற்போதைய பெயர்

புதிய தலைப்பு : …நீங்கள் இடவேண்டிய புதுப் பெயர்

காரணம்  : இங்கு திருத்தத்திற்கான காரணத்தை இடவும்

ஒரு வழிமாற்றை விட்டுச்செல் --> இந்தக் கட்டுரையுடன் பிற பக்கங்கள் இணைக்கப்பட்டிருப்பின்* இங்கு ஓர் √ சின்னத்தை இடலாம்.

இப்பக்கத்தைக் கவனி ---> நீங்கள் வேறு யாரேனும் இதனை மாற்றுகிறார்களா என கவனிக்க வேண்டியிருந்தால் √ சின்னம் இடலாம்

*எந்தெந்தப் பக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிய கட்டுரைப் பக்கத்தின் இடது பட்டையில் "இந்தப் பக்கத்தை இணைத்தவை" இணைப்பு மூலம் அறியலாம்.

  • எல்லாவற்றையும் சரிபார்த்தபின்னர், நகர்த்து தத்தலை அழுத்தவும். உங்கள் செயல்பாடு வெற்றிகரமாக நிறைவேறினால் செயல்பாடு நிறைவுற்றது என்ற செய்தி கிடைக்கும். கட்டுரையின் தலைப்பு புதிய தலைப்பிற்கு மாற்றப்பட்டிருக்கும். பழைய தலைப்பு ஓர் வழிமாற்றுப் பக்கமாக அடையாளப்படுத்தப்பட்டு பழைய பக்கத்திற்குள்ள இணைப்புகள் புதிய தலைப்பிற்கு செல்லும். எனினும்,இரட்டை வழிமாற்றிகள் (முதற்பக்கத்திற்கு வழிமாற்றிய பக்கங்கள்)தானாக புதிய பக்கத்தை வந்தடையா.அவற்றை தனிநபரே ஒவ்வொன்றாகத் திருத்த வேண்டும். (விளக்கமாகச் சொன்னால்:எம்.ஜி.ஆர் என்ற பக்கத்திற்கு வழிமாற்றியாக ம.கோ.ராமச்சந்திரன் என்றிருந்தால், இப்போது ம.கோ.ராமச்சந்திரன் பக்கத்திற்கு ம.கோ.இராமச்சந்திரன் என்று நகர்த்தினால், எந்தப் பக்கங்களில் ம.கோ.ராமச்சந்திரன் என்றுள்ளதோ அங்கெல்லாம் இணைப்பு ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லும். ஆனால் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் என்று உள்ளதோ அந்த இணைப்புகள் தாமாகவே ம.கோ.இராமச்சந்திரன் பக்கத்திற்கு இட்டுச் செல்லாது. ) இவ்வாறான இரட்டை வழிமாற்றுகளை எவ்வாறு சரி செய்வது மற்றும் எவ்வாறு இனம் காண்பது என ஆங்கில விக்கியில் காண்க.
  • வெற்றிகரமான செயல்பாட்டை அடுத்து இத்தகையப் பக்கமொன்று காட்டப்படும்: மீடியாவிக்கி:1movedto2.
  • இப்பக்கத்தை இணைத்தவை பட்டியலைத் திறக்கவும்.(பக்க நகர்வு செய்திப் பக்கத்திலேயே உங்கள் வசதிக்காக ஓர் குறுக்கிணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும், இருப்பினும் இடது பக்கமுள்ள கருவிப்பட்டையின் "இந்தப் பக்கத்தை இணைத்தவை" இணைப்பு மூலமும் அறியலாம்)
  • அந்தப் பக்கத்தில் உள்ள வடிகளில் இணைப்புகளை மறை என்ற தத்தலை அழுத்தவும்.இது முந்தைய தலைப்பிற்கு வழிமாற்றுகளைக் காட்டும்.ஒவ்வொன்றாக இந்த வழிமாற்றுகளுக்குச் சென்று தொகுத்தல் தத்தலை அழுத்தி வழிமாற்றினை இப்போது நீங்கள் மாற்றிய புதிய தலைப்பிற்கு மாற்றவும்.இதனை நீங்கள் செய்ய மறந்தாலும், விக்கி தானியங்கி பயனர் ஒன்று இதனை பின்னர் சரி செய்யும்.
  • இந்தப் பக்கத்தில் 50க்கும் கூடுதலான வழிமாற்றுகள் (மிக அதிசயமாக) இருப்பின், "அடுத்த 50" இனை அழுத்தி எல்லாப் பக்கங்களையும் சரி செய்யவும்.
  • கட்டுரையின் பெயர் முதல் பத்தியில் வருவது வழக்கமாதலால் நீங்கள் மாற்றிய தலைப்பு முதல் பத்தியில் இடம் பெற செய்யுங்கள்.

இவற்றையும் பார்க்க தொகு