விக்கிப்பீடியா:வகைப்படுத்துதல்
வகைப்படுத்தல் அறிதலின் ஒரு முக்கிய வழிமுறை. அனைத்தையும் இயல்களாக வகுக்கும் பொழுது நாம் உலகை நோக்கி ஒரு புரிதலையும் எமது உலக பார்வையையும் முன்வைக்கின்றோம். இச்செயற்பாடு எம் அறிவுக்கும் தேடல்களுக்கும் ஒரு அடிப்படை அம்சம்.
த.வி வின் வகைப்படுத்தல் தமிழ்ச் சூழமைவுக்கமைய, தமிழர் பின்புலத்தில் இருந்து அறிவியலோடும், இயற்கையோடும், உலக இயல்போடும் ஒத்து கட்டமைக்கப்படுகின்றது. வகைப்படுத்தல் நோக்கி சீரான பகுத்தறிவை நாம் தொடர்ச்சியாக வளர்த்துகொண்டு இச்செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.
கட்டுரை ஆக்கம், நுட்ப கட்டமைப்பு, சமூகம், கொள்கைகள் போன்றே வகைப்படுத்தல் தமிழ் விக்கிபீடியாவின் ஒரு முக்கிய அம்சம். இந்தப்பக்கத்தின் நோக்கம் தமிழ் விக்கிபீடியாவின் வகைப்படுத்தல் அணுகுமுறையை வரையறை செய்து விபரித்தலே ஆகும். அச்செயற்பாட்டில் அந்த அணுகுமுறையை விளங்கிகொண்டு மேம்படுத்தலும் உட்படும்.
இங்கு எமக்கு இரண்டு நிலைகளில் புரிதல் தேவை. ஒன்று வகைப்படுத்தல் நோக்கிய புரிதல். இரண்டாவது வகைப்படுத்தப்படும் இயல்கள் நோக்கிய புரிதல்.
வகைப்படுத்தல் தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் உதவும் ஒரு செயற்பாடு. தமிழ் விக்கிபீடியாவில் இலக்கமியல் முறையில் தகவல்கள் சேகரிப்பதும் மீட்டெப்தும் பிற முறைகளில் (எ.கா நூலம், காப்பகம் - archives) தகவல்களை சேகரிப்பதற்கும் மீட்டெப்பதற்கும் காட்டிலும் பல்வேறு வழிகளில் வேறுபட்டது.
கையேடு
தொகுவகைப்படுத்தலின் அடிப்படை
தொகு- Ontology: உலகின் இயல்பு - உலகம் எப்படி இயங்குகின்றது - how the world is
- Priority: எவை மனிதருக்கு முக்கியம்? - What in the world is important to humans?
கீழே த.வி வில் உள்ள தாய்ப் பகுப்புகளும், அவை ஏன் தாய்ப் பகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டன என்பதற்கான சுருக்க விளக்கமும்.
இயல்கள்
தொகு- இலக்கியம் - எழுத்து. மொழி. இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இருப்பினும் தமிழில் இன்ப இலக்கயங்களையே சிறப்பாக சுட்டி நிற்கின்றது. எழுதப் பட்ட மனித அறிவு காலத்தை தாண்டியும் அறிவை பகிர்ந்து நிற்கும் ஒரு முக்கிய வழிமுறையாகும்.
- பண்பாடு - அடையாளம். தினசரி வாழ்வியல், ஈடுபாடுகள், விளையாட்டு என மனிதருக்கு உடனடியாக நேரடியாக உதவும் இயல்.
- வரலாறு - நேரம். இதுவே ஒரு இனத்தின், மனிதரின் நினைவகம். எமது புரிதல்களையும், அடையாளங்களையும் நிர்ணயிக்கின்றது.
- அறிவியல் - அறிவியல் அணுகுமுறையும் அதன் நேர்த்தியான பயன்பாடும் இவ்வுலகை அறிவதற்கும், மனிதரின் முன்னேற்றத்தக்கும் அடிப்படையானது.
- கணிதம் - எண். கணிதத்தில் அதற்கே உரிய ஒரு ontology உண்டு. அது தனித்துவமானது. முற்றிலும் material world ஐ அடிப்படையாக கொண்டதில்லை. கணிதம் தற்கால வாழ்க்கைக்கு இன்றியமையாதது. தமிழர்களும் எண்ணும் எழுத்தும் என்று அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள்.
- புவியியல் - இடம். உலகைப் பற்றிய அறிவு.
- சமூகம் -
- தொழில்நுட்பம் - வழிமுறை.
- நபர்கள் -
(மேலே தரப்பட்டவற்றை தவிர, சமயம், கலைகள், வேளாண்மை, மருத்துவம், ஊடகங்கள், தமிழர் போன்ற தலைப்புகளையும் தாய்ப் பகுப்பு ஆக்குவது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.)
தகவல் வெளிப்படுத்தல் முறைகள்
தொகு- கட்டுரைகள் - இயல்கள்
- பகுப்பு:படிமங்கள்
- பகுப்பு:பட்டியல்கள்
- பகுப்பு:காலக்கோடுகள்
- பகுப்பு:அட்டவணைகள் (நேரடி ஒப்பீடுகள்)
- பகுப்பு:வரைபடங்கள்
- பகுப்பு:நிலப்படங்கள்
- Wikipedia:ஊடக உதவி
வகைப்படுத்தல் கலந்துரையாடலுடன் தொடர்புடைய சில முக்கிய சுட்டிகள்
தொகு- விக்கிப்பீடியா பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு
- விக்கிப்பீடியா:அனைத்து மொழி விக்கிபீடியாக்களிலும் இருக்க வேண்டிய கட்டுரைகளின் பட்டியல்
- விக்கிப்பீடியா:இயல் தலைப்புகளின் பட்டியல்
- விக்சனரி_பின்னிணைப்பு:கல்வித்_துறைகள்
- உயிரினங்களை வகைப்படுத்தல்
- நோய்களை வகைப்படுத்தல்
- Wikipedia:பக்க வகைகளின் கட்டமைப்பு மாதிரி
- வகைப்படுத்தல்
- வார்ப்புரு:தமிழர் தகவல்கள்
- Wikipedia:விக்கித் திட்டம் நாடுகள்
- தமிழ் இலக்கியப் பட்டியல்
- அடிப்படை வேதியியல் எண்ணக்கரு பட்டியல்
- இலத்திரனியல் நுட்பியல் சொற்கள்
- போரியல் கலைச்சொற்களின் பட்டியல்
- இசம்ஸ் பட்டியல்
- திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல்
- நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்
- நோய்கள் பட்டியல்
- இனக்குழுக்களின் பட்டியல்
- தமிழ்ச் சூழலில் சாதிப் பிரிவுகள் பட்டியல்