கலைகள்

மனித வெளிப்பாடு மற்றும் படைப்பாற்றல், பொதுவாக கலாச்சாரத்தால் பாதிக்கப்படுகிறது

கற்றற்கு உரியவை எல்லாம் கலைகள். இது தமிழில் கலை என்பதற்கு தரப்படும் ஒரு பொது வரையறை. இந்த வரையறைக்கிணங்கவே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தின் பெயரும் அமைந்திருக்கின்றது. கலைச்சொல் என்ற சொற்றாடலிலும் இப்பொருளே வழங்குவதே காணலாம். எனினும் "உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவிய முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும்" என்று தமிழ் அறிஞர் மு. வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய 'கற்றற்கு உரியவை எல்லாம் கலை' என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

கலைகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

  விக்சனரி விக்சனரி
  நூல்கள் விக்கிநூல்
  மேற்கோள் விக்கிமேற்கோள்
  மூலங்கள் விக்கிமூலம்
  விக்கிபொது
  செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைகள்&oldid=3524899" இருந்து மீள்விக்கப்பட்டது