விக்கிப்பீடியா பேச்சு:துரித நீக்கல் தகுதிகள்

ஒரு பக்கம் இன்னொரு பக்கத்திற்கு வழிமாற்றப்படும் போது (நகர்த்தல் அல்ல) குறித்த பக்கத்தின் பேச்சுப்பக்கத்தை என்ன செய்ய வேண்டும்? அது துரித நீக்கல் தகுதியுடையதா? --கோபி 12:40, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

இதற்கு பொதுவான ஒரு விதி உருவாக்க முடியாது என தான் நினைக்கிறேன். case by case ஆக அணுகலாம். பேச்சுப் பக்க உரையாடல் விரிவாக இருக்கும்போது (எடுத்துக்காட்டு:பேச்சு:நீலிறும்பு)அழிக்காமல் அப்படியே விடலாம் என்பது என் பரிந்துரை. --ரவி 18:49, 24 ஆகஸ்ட் 2006 (UTC)
பின்னாளில், அந்தத் தலைப்பில் கட்டுரை உருவாக வாய்ப்புள்ளது (பெயரிடல் மரபிற்கு ஏற்புடையது) எனில் விட்டு விடலாம் என்பது என் கருத்து. அவ்வாறு இல்லையென்றால், இப்பக்கத்தில் உள்ள உரையாடல் பயனுள்ளதாக இருப்பினும், பக்கம் இணைப்பின்றி போய்விடும். அந்த உரையாடல் பொதுவான கொள்கை குறித்ததென்றால், தகுந்த கொள்கைப் பக்கத்தின் பேச்சுப் பக்கமாக நகர்த்தலாம். துவக்கத்தில் விக்கிபீடியா பேச்சு:சொல் தேர்வு என்ற பக்கத்தை ஒத்த கொள்கைப் பக்கம் இல்லாத போதே உருவாக்கினோமல்லவா? மாறாக, வேறு விடயம் தொடர்பான உரையாடல் என்றால் தகுந்த இடத்திற்கு நகர்த்தியபின் பக்கத்தை அழித்து விடலாம். -- Sundar \பேச்சு 07:05, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

தானியங்கிகளைப் பாவித்து தேவையற்ற பக்கங்களை நீக்குதல் தொகு

தானியங்கிகளைப் பாவித்துத் தேவையற்ற பக்கங்களை நீக்குவது இலகுவாக இருக்கும் என்றே கருதுகின்றேன். இவ்வாறு செய்வதால் நேரமும் மிச்சமாகும் உடைந்த இணைப்புக்களும் தோன்றாது. ஆங்கில விக்கிப் பீடியாவில் தமிழில் உள்ள சில கணினி தொடர்பான கட்டுரைகள் மீள்வழிநடத்தற் பக்கங்களை நீக்கியமையால் உடைந்த இணைப்பிலுள்ளன. எடுத்துக் காட்டாக en:Windows Live Local. நீக்கப் பட்ட பக்கங்களும் விண்டொஸ் லைவ் லோக்கல்கூகிள் தேடுபொறியில் தோன்றுகின்றன. இது குறித்து விக்கிப் பீடியர்களின் கருத்தை அறியவிரும்புகின்றேன்.--Umapathy 18:06, 26 செப்டெம்பர் 2006 (UTC)

உமாபதி, முதலில் தானியக்க முறையில் எப்படி பக்கங்களை நீக்குவது? இது போன்ற பொருத்தமான தானியங்கிகள் ஆங்கில விக்கிபீடியாவில் செயற்பாட்டில் இருந்தால் தெரியப்படுத்துங்கள். சுந்தர் போன்றார் உதவியோடு இங்கும் செயற்படுத்துவோம். அடுத்து, தற்போது துப்புரவுப்பணிகளை செய்வதற்கான அவசியம், வேலைப் பளுவும் அதிகம். இதனால், ஓரிரு பக்கங்களில் இது போன்ற இணைப்பு முறிவுகள் கவனக் குறைவின் காரணமாக ஏற்படுவது இயல்பு தான். துப்புரவுப் பணியில் ஈடுபடும் பயனர்கள் அனைவரும் இணைப்பு முறியாமல் பக்கங்களை அழிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டே செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற முறிவுகளை பார்க்கும்போது, நீங்களே அவற்றை சரி செய்து தந்து உதவுங்கள். தவிர, விக்கியிடை இணைப்புகள் முறிந்தாலும் எப்படியும் விரைவில் தானியக்கமாகவே சீர்செய்யப்பட்டுவிடும். ஏனெனில், இது தொடர்பாக sundarbot போன்று பல விக்கியிடை தானியங்கிகள் இயங்கி வருகின்றன.--ரவி 21:30, 26 செப்டெம்பர் 2006 (UTC)

புதுப்பயனர்கள் உருவாக்கும் 3 வரிகளுக்குக் குறைவான கட்டுரைகள் தொகு

அண்மையில் புதிய பயனர்கள் பலர் 3 வரிகளுக்குக் குறைவான கட்டுரைகளை எழுதி வருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, தமிழக சட்ட மன்ற உறுப்பினர்கள் குறித்த கட்டுரைகள். இவற்றில் பெரும்பாலான தலைப்புகளின் பயன், முக்கியத்துவம் கருதியும் ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே அதற்கு மேல் உள்ளடக்கம் இல்லை என்பதாலும் இவற்றை மேம்படுத்த கூடுதல் காலம் தரலாம் என்று பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:36, 5 சூலை 2017 (UTC)Reply[பதில் அளி]

3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் துரித நீக்கம் குறித்து தொகு

3 வரிக்குக் குறைவான கட்டுரைகளை துரித நீக்கம் செய்வது குறித்த கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறேன். இக்கொள்கை தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலங்களில் சில குறிப்பிட்ட வகை தொகுத்தல் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது (எடுத்துக்காட்டு - 1833 - இது ஒரு ஆண்டு என்பது மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்ட கட்டுரை). எனினும், தற்போது பல புதுப்பயனர்கள் உருவாக்கும் பயனுள்ள கட்டுரைகள் இக்கொள்கையின் காரணமாக நீக்கப்படுகிறதோ என்று அஞ்சுகிறேன்.

குறிப்பாக, ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே அதற்கு மேல் உள்ளடக்கம் இல்லாமல் இருக்கும் போதும், தகுந்த பகுப்பு, சான்று, தகவல் பெட்டி சேர்த்து இடப்படுகிற போதும் ஒரு பயனுள்ள தகவலைத் தாங்கிய கட்டுரை அழிக்கப்படுவது சரி தானா என்ற தயக்கம் என் மனதுள் எழுகிறது.

ஒருவரின் பேச்சுப் பக்கத்தில் செய்தியிட்டும் அவர் அதனைக் கவனிக்காவிட்டால் என்ன தான் செய்வது என்று தமிழ் விக்கிப்பீடியாவின் தரம் காக்கும் துப்புரவுப் பணியில் ஈடுபடுவோர் அனைவரின் கேள்வியையும் ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை, புதுப்பயனர்கள் விக்கிப்பீடியா எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள கணிசமாக காலம் பிடிக்கிறது. அதற்குள் அவர்கள் உருவாக்கிய பழைய கட்டுரைகளை நீக்குவதால் அவர்கள் ஊக்கம் குன்றி மீண்டும் விக்கிப்பீடியாவுக்குத் திரும்பாமலேயே போகலாம் என்ற கவலையைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு மில்லியனில் ஒருவர் தான் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார் என்னும் போது இது கணிசமான இழப்பு.

ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே அதற்கு மேல் உள்ளடக்கம் இல்லாத போது, ஒருவரிக் கட்டுரைகளில் பயன் உள்ள தகவல் இருக்கும் எனில் அவற்றை ஏன் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கக் கூடாது என்ற கேள்வி தோன்றுகிறது. அதே வேளை, ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் இவ்வாறான கட்டுரைகள் மட்டும் உருவாகும் எனில் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது.

என்னுடைய பரிந்துரை:

 • ஆங்கில விக்கிப்பீடியாவிலேயே அதற்கு மேல் உள்ளடக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், தகுந்த பகுப்பு, சான்று, தகவல் பெட்டி சேர்த்து இடப்படும் கட்டுரைகள் மூன்று வரிக்குக் குறைவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளலாம்.
 • ஒரு பயனர் இத்தகைய கட்டுரைகளை மட்டும் ஆயிரக்கணக்கில் எழுதிக் குவிக்காமல் இருக்க, அவர் 100க்கு மேல் இத்தகைய கட்டுரைகளை உருவாக்கும் போது, அதே துறையில் விரிவான கட்டுரைகளை உருவாக்கவும், ஏற்கனவே உருவாக்கிய கட்டுரைகளை விரிவாக்கவும் வேண்டலாம். இயன்றால் பேச்சுப் பக்கம், தொலைப்பேசி, மின்மடல் என்று அனைத்து வழிகளிலும் தொடர்பு கொள்ள முயலலாம். தொடர்பு முயற்சிகள் பயன் அளிக்காத போது, அவரது கணக்கைத் தற்காலிகமாக (ஒரு வாரம்) nocreate என்ற நிலைக்கு மாற்றலாம். கணக்கைத் தடை செய்ய வேண்டாம்.

அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன். --இரவி (பேச்சு) 14:01, 18 சூன் 2018 (UTC)Reply[பதில் அளி]

கருத்துகள் தொகு

நந்தகுமார்
3 வரிக்குக் குறைவான கட்டுரைகள் பெருமளவு எழுதுவதால் தரம் குறையும் என்பதால் ஒருவர் 10க்கு மேல் இத்தகைய கட்டுரைகளை உருவாக்கும் போது தடுப்பது, தற்காலிகமாக (ஒரு வாரம்) nocreate என்ற நிலைக்கு மாற்றுவது, அவசியம் என கருதுகிறேன். இதன் பின்னும், சரியாகாவிட்டால் கணக்கைத் தற்காலிகமாக (ஒரு வாரம்) தடை செய்வதும் அவசியம் என கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 14:52, 18 சூன் 2018 (UTC)Reply[பதில் அளி]
 • nocreate என்ற நிலைக்கு அதிகாரிகளால் மட்டுமே மாற்ற முடியும் என்று அன்ரன் கீழே குறிப்பிட்டு உள்ளதால்,கணக்கைத் தற்காலிகமாக (ஒரு வாரம்) தடை செய்வது அவசியம் என கருதுகிறேன். இதன் பின்னும், சரியாகாவிட்டால் கணக்கை ஒரு மாதம் வரைத்தடை செய்வதும் அவசியம் என கருதுகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 05:07, 20 சூன் 2018 (UTC)Reply[பதில் அளி]
அன்ரன்

பெரும்பாலானவர்களின் விருப்பத்துடன் 3 வரிக்கு குறைவான கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்ற கொள்கை இங்கு உருவாக்கப்படுமானால் நன்றே. ஆனால், பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 • இதற்கு முன் 3 வரிக்கட்டுரை என்ற காரணத்தினால் நீக்கப்பட்ட கட்டுரைகளை என்ன செய்வது?
 • ஆங்கில விக்கிப்பீடியாவில் அளவு ஒரு சிக்கல் இல்லை. குறிப்பிடத்தக்க தன்மை இல்லாவிட்டால் நீக்கப்படும். நான் உருவாக்கிய 2 வரிக் கட்டுரையும் (குறிப்பிடத்தக்கமையினால்) உள்ளது. உள்ளடக்கம் இதற்கு மேல் இல்லை என்ற முடிவுக்கு வர இயலாது அல்லது அது மிக மிக அரிதான சந்தர்ப்பம். குறிப்பிடத்தக்கமை நிறுவுதல் என்பதே மிகப் பிரதானம்.
 • கிரிக்கெட் வீரர்கள் தொடர்புடைய கட்டுரைகள் பல குறிப்பிடத்தக்கமையைக் காரணமாகக் கொண்டு நீக்கியுள்ளோம். தற்போது தமிழ், தமிழர் வாழ்வியலுக்குப் பொருத்தமற்ற கட்டுரைகள் பல உருவாக்கின்றன. இவற்றை எவ்விதம் அணுகுவது?
 • ஏற்கெனவே, தானியங்கிக் கட்டுரைகள் பல உள்ளன. அவற்றின் தரம் பற்றிய கேள்விகளும் உள்ளன.
 • இரவி குறிப்பிட்ட ஒரு மில்லியனில் ஒருவர் தான் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கிறார் என்ற ஆதங்கள் நியாயமானதே. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவை தரமாக மாற்றவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் முறையானவர்கள் தேவை என்பதையும் மறுக்கவியலாது.
 • பயனர் பேச்சுப்பக்கத்தில் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். தடைசெய்து பாருங்கள் கட்டாயம் வழியைத் தேடுவார். இது என் அனுபவ உண்மை. பேச்சுப் பக்கம் தெரியாது, அதைக் காணவில்லை என்ற சாக்குப் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாது. புதிய பயனர் எனப்படுவோர் ஆசியர்கள்தானே? இவர்களின் கற்றுக் கொள்ளலும், பதிலளிக்கும் முறைகளும் ஐயங்களை உருவாக்குகின்றன. ஆங்கில பக்கங்களைக் கொண்டு இங்கு பக்கங்களை உருவாக்குவோருக்கு பேச்சுப் பக்கம் தெரியாததென்பதை என்னவென்பது. இச்சிறு விடயத்திற்கு இயலாமை உள்ளவர்கள் விக்கிப்பீடியாவிற்கு எந்தளவு பயனாவார்கள் என்பதும் சிந்திக்க வேண்டியது. TNSE SIVA VLR என்ற பயனர் தடை செய்யப்பட்டபோது இரவியைத் தொடர்பு கொண்டார். இரவி என்ன விளக்கம் கொடுத்தார் எனத் தெரியவில்லை. ஆனால் குறித்த பயனர் இது வரைக்கும் பேச்சுப் பக்கத்தில் பதில் அளிக்கவில்லை. தன் செயலை பரிசீலித்ததாகவும் தெரியவில்லை. இவ்வாறான பயனர்களை என்ன செய்வது?
 • nocreate என்ற நிலைக்கு அதிகாரிகளால் மட்டுமே மாற்ற முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும். அதிகாரிகளுக்கு அறிவித்து காத்திருப்பது ஏற்புடையதல்ல.

பரிசீலனை ஒருபுறமிருக்க, சில சிக்கலான விடயங்களை இங்கு முன்வைத்துள்ளோன். இவற்றுக்கு தீர்வு கண்டு அடுத்த கட்டம் நகர்வது ஏற்புடையது. --AntanO (பேச்சு) 15:09, 18 சூன் 2018 (UTC)Reply[பதில் அளி]

கொள்கை மீளாய்வு தொகு

இப்பக்கம் காலாவதி ஆகி விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், சில வழமையான அடிப்படைகளில் துரிதமாக நீக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். அண்மைய தமிழ்விக்கி16 நிகழ்வில், பல புதுப்பயனர்கள் தங்கள் கட்டுரைகள் உடனுக்கு உடன் அழிக்கப்படும் போது ஊக்கம் இழப்பதுடன் குழம்பிப் போகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இக்கொள்கையை மீளாய்வு செய்ய வேண்டும் என்ற கருத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படைகளில் இரு பரிந்துரைகளை முன்வைக்கிறேன்:

துரித நீக்கல் தகுதி உடைய, ஆனால் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையாக வளர்த்தெடுக்கப்படக் கூடிய தலைப்பு/பொருளில் அமைந்த கட்டுரைகளை உடனடியாக நீக்க வேண்டாம். கட்டுரையைத் தொடங்கியவர் அதனை மேம்படுத்த 3 நாட்கள் காலம் தரலாம். அதற்குப் பிறகும் மேம்பாடு இல்லை எனில், அவரது பயனர் வெளிக்கு அக்கட்டுரையை நகர்த்தலாம். ஒரு பயனர் தன் பங்களிப்பைத் தொடங்கி 100 நாட்கள் அல்லது/மற்றும் 100 தொகுப்புகளுக்குக் குறைவாகப் பங்களித்திருந்தால் புதுப் பயனர் என்று கருத்தில் கொள்ளலாம்.

எந்த வகையிலும் கலைக்களஞ்சியக் கட்டுரையாகவே மாற்ற முடியாத குப்பைகளை வழமை போல் துரித நீக்கல் செய்யலாம் என்று பரிந்துரைக்கிறேன். இந்த மாற்றம் குறிப்பாக, 3 வரிகளுக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளையும் கலைக்களஞ்சிய நடையில் அமையாத கட்டுரைகளையும் உடனடியாக நீக்குவதைத் தவிர்க்கும்.

இந்த புதிய ஏற்பாடு நிச்சயமாக நிருவாகிகளின் பணிச்சுமையை அதிகரிக்கும். எனவே, கூடுதல் நிருவாகிகள் இந்தப் பணியில் இணைவது நன்று.

இந்தப் புரிதல் தவிர, காலாவதியானது என்று ஏன் இப்பக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து அவற்றையும் சீராக்கி பக்கத்தை உயிர்ப்பிக்க வேண்டியுள்ளது.

வேறு ஏதேனும் தயக்கங்கள், மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:21, 25 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]

//கட்டுரையைத் தொடங்கியவர் அதனை மேம்படுத்த 3 நாட்கள்// என்பதை அதிகப்படுத்தலாம். புதியவரின் சூழலும், அவருக்கு வழிகாட்டுனர் சூழலும் மூன்று நாட்களுக்குள் அமைவது எளிதல்ல என்பதால் பத்து நாட்கள் தரலாம். அவர் கற்று வருகிறார் என்பதனைத் தெரிவிக்க, வார்ப்புருவை பயன்படுததுதல் நலம். ஒரு பங்களிப்பாளரை கொண்டு வருதல், நிலைநிறுத்துதல் என்பது எளிதல்ல. நூறு நபர்களை அணுகினால், ஒருவர் நிலைப்பதே அரிது. நாம் எந்த அளவுக்கு மேம்படுத்த உதவுகிறோமோ அந்த அளவு நம்மில் நிலைப்பர். உடனே மதிப்பிட்டு, உடனே நீக்குவது சமூகத்தினை வளர்த்தாது. எனது தவறுகள் பல ஆண்டுகள் விக்சனரியில் இருந்தன. சீனி போன்றவரின் தொழில் நுட்ப உதவியால் ஏறத்தாழ இரண்டு இலட்சம் மேம்பாடுகளைச் செய்துள்ளேன். இன்னும் நற்கீரனின் உதவியோடு மேம்பாடு செய்ய வேண்டியுள்ளது. உடனுக்குடன் நீக்க வேண்டாம் என்பதை அனைவரும் ஏற்பர். பிறரையும் ஏற்கக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 01:34, 26 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]
Sorry to write in English. A quick response.
 • We give 1 month time for துரித நீக்கல் தகுதி உடைய, ஆனால் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை. So, can we delete in 3 days? eg: மூன்றாம் சம்பாஜி
 • Copyvios should be deleted immediately since it is global policy.
 • What to do for குறிப்பிடத்தக்கமை? It could be very vague or கலைக்களஞ்சியக் கட்டுரை type. eg: இல்லந்தோறும் இணையம் is tagged since 3 சூன் 2019‎

I suggest to adopt main ideas from en.wiki. If a new user tells that which article have been deleted, we can see some realities. If wiki community agree with some points from en.wiki, we can update here. If we don't have clear policy/guideline, it will be chaos for sysop and users or new users. --AntanO (பேச்சு) 01:55, 26 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]

I have added "update" template since many accused me that I deleted articles immediately, but they failed to see was I with wiki's guideline or not. I always asked to update wiki policies including this page, but people ignore. It is unfair to ignore to participate in discussion and spread gossip about me or other active sysops. I do as per wiki policy / guideline. The accusers should consider whether they are with wiki policy / guideline. I am ok if wiki allows to create article for your pet. (This response is not for Ravi, but a main response, specially those who concern on தமிழ்விக்கி16)--AntanO (பேச்சு) 02:13, 26 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]
ஆரம்பத்தில் 3 நாட்கள் என்றிருந்ததை அதிகம் பேர் பங்களிக்காத காலத்தில் நாம் ஒரு மாத காலம் ஆக்கினோம். இப்போதும் Speed-delete-on வார்ப்புருவில் அவ்வாறுதான் உள்ளது. இப்போது அதனைக் குறைப்பது நல்லது என நினைக்கிறேன். குறிப்பிடத்தக்கமை வார்ப்புருவிலும் கால அவகாசம் கொடுக்கலாம். ஆனாலும், அவற்றை நீக்குவதில் அவசரம் காட்டக் கூடாது. நீக்க நினைப்பவர் கூகுளில் தேடிப் பார்த்து குறிப்பிடத்தக்கமையை அறியலாம். சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்கவர் உலகளாவிய அளவில் அவ்வாறில்லாமல் இருக்கலாம்.--Kanags \உரையாடுக 03:22, 26 அக்டோபர் 2019 (UTC)Reply[பதில் அளி]

உடனுக்குடன் நீக்கல் தொகு

@Kanags, AntanO, மற்றும் Info-farmer: Speed-delete-on வார்ப்புரு இட்டு ஒரு மாதம் கழித்து நீக்குவதையோ, பதிப்புரிமை/குப்பை போன்ற காரணங்களால் உடன் நீக்கப்படுவதையோ, குறிப்பிடத்தக்கமை சிக்கல் குறித்தோ நான் முறையிடவில்லை. அது வேறு உரையாடல். எடுத்துக்காட்டுக்கு, பேச்சு:சேலம் அறிவு தொழில்நுட்ப நிறுவனம் வாருங்கள். இது போன்ற கட்டுரைகளை உடனுக்கு உடன் எந்த அறிவிப்பும் இன்றி நீக்க வேண்டிய தேவை என்ன? இத்தகைய செயற்பாடு தான் புதுப்பயனர்களை ஊக்கம் குன்றச் செய்கிறது. இதை மாற்றும் பொருட்டே கொள்கை மீளாய்வு கோருகிறேன். --இரவி (பேச்சு) 17:42, 7 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]

 1. ஒரு கட்டுரை எத்தகையது ஆயினும், உடன் நீக்குதலில் எனக்கு உடன்பாடில்லை. மேலே நான் கூறியதையே திரும்ப கூற விரும்புகிறேன். அதில் மிக மிக முக்கியமானது யாதெனில், //நூறு நபர்களை அணுகினால், ஒருவர் நிலைப்பதே அரிது. // என்பதே ஆகும். பயனரைக் காக்க வேண்டியதே, நமது முக்கிய கடமையாகும். அனைத்து நடைமுறை விதிகளையும் பின்பற்றுகிறாரா என்பதை விட, அவரது மேலான நேரத்தை நமக்கு ஒப்ப அவரை எப்படி மாற்றுவது என்பதில் தான் சமூகத்தின் எதிர்காலம் இருக்கிறது. தூக்கிலிடும் இந்திய சட்டம் இருந்த போது கூட, உன் கடைசி ஆசை என்ன? என்று இறக்கப் போகும் குற்றவாளியிடம் கேட்பது வழக்கம. --உழவன் (உரை) 00:29, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]
@Info-farmer: //ஒரு கட்டுரை எத்தகையது ஆயினும்// இக்கூற்றிற்கு விதிவிலக்குண்டா அல்லது எந்தக் குப்பையானாலுமா?--Kanags \உரையாடுக 07:06, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]
ஒரு கட்டுரை என்ற அளவுகோல் ஒரு பயனருக்கு தானே. அந்த ஒரு பக்கம் இருந்தால் தான், அதனை வைத்து அவருக்கு விக்கியாக்க நடைமுறைகளைச் சொல்லித்தர இயலும். அதையும் மற்றொருவர் அழித்துவிட்டால், கற்பிக்க எதைக் காட்டுவது? உரையாடும் போது, இது மாதிரி செய்யக்கூடாது என்று சொல்லி காட்ட, கற்பிக்க வசதியாக இருக்கும். எரிதங்களை அனுப்பவர், பல பக்கங்களில் செயற்படுவர் என்பதால் இப்படி செய்யலாம் எனக் கருதுகிறேன். ஒருவருக்கு பலர் உதவி செய்யும் போது, அவர் நம்மை விட்டு விலக மாட்டார்கள். ஏற்காடு இளங்கோ, புதுப்பயனருக்கு சில மணிநேரங்கள் செலவு செய்து கட்டுரையாக்கத்தினை நானும், அருளரசனும், தீபாஅருளும் கொடுத்தோம். இலங்கையில் அவர்களிடையே கற்றாலும், இந்தியா வந்தவுடன் அலைப்பேசி வழியே அவ்வப்போது பேசி இவருக்கு பயற்சி அளித்தோம். காண்க:சிறப்பு:Contributions/Yercaud-elango தெரிந்த நபர்களுக்கே கற்றுத்தருவதில் பல கேள்விகள் எழுகின்றன. புதியவர் கேட்கும் கேள்விகள் நமக்கு சாதரணமாகப் படுகின்றன. ஏற்காடு இளங்கோ இதற்கும் பல நூல்களை எழுதி கட்டற்ற உரிமையில் வெளியிட்டுள்ளார். எழுதும் இயல்புடையவருக்கே பல விடைகளை நாம் தரவேண்டியுள்ளது. இங்கு தமிழகத்தில் எந்த பள்ளியிலும் கணினி எழுத்துப்பயிற்சி பாடத்திட்டத்திலேயே இல்லை. எனவே, அவர்கள் மெதுவாகத் தான் நம் இலக்கை அடைய முடியும். --உழவன் (உரை) 09:08, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]
நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். புதிய கட்டுரைகள் குறித்து நிருவாகிகள் பலருக்கும் பலருக்கும் நல்ல புரிதல் உண்டு. தங்கள் பயனர் பெயர்களில் புகுபதிகை செய்து எழுதப்படும் கட்டுரைகளை உடனடியாக நீக்குவதில் அதிக தீவிரம் காட்டக்கூடாது. புகுபதிகை செய்யாதவர்கள் எழுதும் குப்பைகளை உடனடியாகவே நீக்கி விடுகிறோம் (உ+ம்: கவரை). இவை பேன்றவைக்கு நாம் நேரம் மெனக்கெடத் தேவையில்லை. அதே வேளை மிகத் தெளிவாக மனித உழைப்பின்றித் தானியங்கி மொழிபெயர்ப்பி மூலமாக எழுதப்படும் கட்டுரைகளையும் அவ்வாறே நீக்கலாம். (ஆனாலும், இப்போது கூகுள் மொழிபெயர்ப்பி ஆரம்ப காலத்தைப் போலல்லாமல், மிகச்சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தருகின்றது என்பது உண்மை, ஆனாலும் ஓரளவாவது மனித உழைப்பும் தேவைப்படுகிறது) இவ்வாறு நீக்கப்படும் போது பயனர்களுக்கு அறிவுறுத்துகிறோம். தொடர்ந்தும் எழுதினால் எச்சரிக்கை கொடுத்து ஓரிரு வாரங்களுக்குத் தடை செய்கிறோம். இவையெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளே.--Kanags \உரையாடுக 09:25, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]
மகிழ்ச்சி. ஆனால் நம்மில் அனைத்து காப்புரிமை பற்றிய கொள்கைகளையும் புரிந்தவர் இல்லை. வரைவுகளும் தெளிவாக இல்லை என்பதே உண்மை. நாட்டுடைமை நூல்களில் உள்ள நீக்கல் இடர்களை இன்னும் சீர்செய்ய வேண்டிய நிலையிலேயே இருக்கிறோம். அதை தமிழக அரசிடம் கேட்டு பெறுவதற்கு எனக்கு ஒரு சில நாட்களே ஆயின. அரசு தரப்பிலும் சரியான ஆவணத்தை நாம் பெற தவறிவிட்டோம். இடையில் நம்மவர்களே நீக்கல்.. நீக்கல்.. என்று முன்மொழிந்துள்ளனர். காப்புரிமையை காக்க பலர் உள்ளனர். காப்புரிமையற்றதை காக்கவும், பேணவும் தான் பற்றாக்குறை என வருந்துகிறேன். மீண்டும் மற்றுமொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 10:30, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]
காப்புரிமையற்ற ஆக்கங்களை எவ்வாறு விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைப்பது குறித்து பலருக்குப் புரிதல் இல்லை. அவற்றை அப்படியே படி எடுத்து இடலாம் என எண்ணுகின்றனர். ஆனாலும் இது வேறு இடத்தில் விவாதிக்கப்படுகிறது. வணக்கம்..--Kanags \உரையாடுக 11:09, 8 நவம்பர் 2019 (UTC)Reply[பதில் அளி]

கூடுதல் தகவல்களைச் சேர்க்க தொகு

கீழ்கானும் பகுதிகளையும் துரித நீக்கலில் சேர்க்க பரிந்துரைக்கிறேன்.ஸ்ரீ (✉) 05:34, 25 மார்ச் 2020 (UTC)Reply[பதில் அளி]

சோதனைப் பக்கம் தொகு

விக்கிப்பீடியாவிற்கு புதியதாக அறிமுகமானவர்கள் விக்கிப்பீடியாவின் கொள்கைகளை சரியாக அறியாது உருவாக்கிய பக்கங்களை சோதனைப் பக்கம் எனலாம். உதாரணமாக

 1. முழுக்க ஆங்கிலத்தில் எழுதுதல்
 2. ABC
 3. இது ஒரு கட்டுரையாகும்.
 4. ஒரு வரியில் கட்டுரைகளை சேமித்தல்.

ஆனால் இது பயனர் பக்கங்களுக்குப் பொருந்தாது. இதனைப் உபயோகப்படுத்த

{{வார்ப்புரு:நீக்கல்-சோதனைப் பக்கம்}}

பயன்படுத்தவும்.

விளம்பர நோக்கு தொகு

விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை மற்றும் நடுநிலை நோக்கு ஆகிய கொள்கைகளுக்கு முரணாக தங்களையோ அல்லது தமது குடும்பம், நிறுவனம் போன்றவற்றை விளம்பரம் செய்வதனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகளை மற்றும் பயனர் பக்கங்களை இவை குறிக்கிறது. நடுநிலை நோக்கோடு எழுதப்படும் கட்டுரைகளுக்கு இது பொருந்தாது.

ஏமாற்றுதல் மற்றும் காலித்தனம் தொகு

மற்றவர்களை முற்றிலும் ஏமாற்றும் நோக்கத்துடன், தவறான தகவல்களைக் கொண்டு எழுதப்படும் கட்டுரைகளை மற்றும் பயனர் பக்கங்களை இவை குறிக்கிறது. இது படங்களுக்கும் பொருந்தும்

Return to the project page "துரித நீக்கல் தகுதிகள்".