வாணி போஜன்

இந்திய நடிகை

வாணி போஜன் (Vani Bhojan, பிறப்பு: 28 அக்டோபர், 1988) ஒரு தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.[1] இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார்.[2] தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.[3]

வாணி போஜன்
Vani Bhojan At The ‘Oh My Kadavule’ Press Meet.jpg
2020 இல் ஓ மை கடவுளே பத்திரிக்கையாளர் சந்திப்பில் போஜன்
பிறப்புஅக்டோபர் 28, 1988 (1988-10-28) (அகவை 32)
ஊட்டி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை,தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சத்தியா, வாணி, சின்னத்திரை நயந்தாரா
கல்விஇளங்கலை (ஆங்கிலம்)
படித்த கல்வி நிறுவனங்கள்கலைக் கல்லூரி
பணி
  • நடிகை
  • மாடல்
செயற்பாட்டுக்
காலம்
2012-இன்று
பெற்றோர்போஜன்,
பார்வதி
விருதுகள்சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருது

வாழ்க்கைக் குறிப்பு

இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்துவருகிறார்.

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்பு
2012 ஆஹா சுருதி விஜய் தொலைக்காட்சி
2012 மாயா மாயா ஜெயா தொலைக்காட்சி
2013–2018 தெய்வமகள் சத்யபிரியா சன் தொலைக்காட்சி
2015–2017 லட்சுமி வந்தாச்சு நந்தினி, லட்சுமி, ஜான்சி ஜீ தமிழ்
2016 காமெடி ஜங்ஷன் சன் தொலைக்காட்சி விருந்தினராக
2017 அசத்தல் சுட்டிஸ் சன் தொலைக்காட்சி தலைவர்
2017–2018 கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் விஜய் தொலைக்காட்சி தலைவர்

திரைப்படங்கள்

குறியீடு
  இன்னும் வெளியிடப்படாத படங்களை குறிப்பிடுகின்றன.
ஆண்டு பெயர் கதபாதிரம் மொழி விபரம்
2010 ஒரு இரவு அவந்திகா (மார்கரிட்டா) ஹரிசங்கர்
ஹரேஷ் நாராயண்
கிருஷ்ணன் சேகர்
தமிழ்
2012 அதிகாரம் 79 டாக்டர் பூஜா வினோத் வீர தமிழ்
2019 மீக்கு மாத்ரமே செப்தா ஸ்டெஃபி தெலுங்கு அறிமுகம்
2020 ஓ மை கடவுளே மீரா தமிழ் அறிமுகம்:

படப்பிடிப்பு

லாக் அப் அறிவிக்கப்படும் தமிழ் [4]
Mr.W   அறிவிக்கப்படும் நிரஞ்சன் பிரபாகரன் தமிழ்

விருதுகள்

ஆண்டு விருது வகை பாத்திரம் முடிவு
2014 சன் குடும்பம் விருதுகள் சிறந்த நடிகை சத்தியா பரிந்துரை
2014 தேவதைகள் சத்தியா வெற்றி
2018 சிறந்த நடிகை சத்தியா வெற்றி
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகை சத்தியப் பிரியா வெற்றி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_போஜன்&oldid=3112969" இருந்து மீள்விக்கப்பட்டது