கலைக்களஞ்சியம் என்ற வகையில் விரிவான பயன்மிக்க கட்டுரைகள் இருப்பது அத்தியாவசியமானதாகும். தமிழ் விக்கிப்பீடியாவில் 1,70,332 கட்டுரைகள் உள்ளபோதிலும் 11 கட்டுரைகளே சிறப்புக் கட்டுரைகளாக விளங்குகின்றன. இச்சிறப்புக் கட்டுரைகளும் 2006 ஆம் ஆண்டில் சிறப்புக் கட்டுரைகளாக நியமிக்கப்பட்டிருப்பதால் இக்கட்டுரைகளில் பெரும்பாலானவை சிறப்புக் கட்டுரைக்கான தகுதியை இழக்கும் தறுவாயிலுள்ளன. அதுமட்டுமல்லாமல் விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைத் தகுதிகள் பக்கத்திலுள்ள சிறப்புக் கட்டுரைத் தகுதிகளை மேம்படுத்த வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
சிறப்புக் கட்டுரைகள் தொடர்பான நிலை தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்வாறுள்ள தருணத்தில் 8 வருடங்களின் பின்னர் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை விரிவாக்கி அக்கட்டுரைகளைச் சிறப்புக் கட்டுரைத் தரத்திற்கு உயர்த்துவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிச்சயம் வெற்றியளிக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.
ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள முக்கியத்துவம் மிக்க சிறப்புக் கட்டுரைகளையும், நல்ல கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து அவற்றைத் தமிழிலும் சிறப்புக் கட்டுரைகளாக இத்திட்டத்தின் மூலம் மேம்படுத்துகின்றேன். இதன் மூலம் கட்டுரைகளின் தரம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
- இன்னும் 5 வருடங்களில் 15 சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவதே எனது தற்போதைய இலக்காகும். இக்காலகட்டத்தில் நான் க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த ஆகிய முக்கியமான எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ளதால் இவ்விலக்கு எட்டப்படாமலும் போகலாம். குறைந்தது 8 சிறப்புக் கட்டுரைகளையாவது 2020 ஆம் ஆண்டிற்கு முன் உருவாக்குவேன்.
- இத்திட்டத்தின் மூலம் குறைந்தது 100 சிறப்புக் கட்டுரைகளை உருவாக்குவது எனது வாழ்நாள் இலக்காகும்.
நான் இத்திட்டத்தினூடாக விரிவாக்கிவரும் கட்டுரைகளின் மேம்பாட்டிற்கு சக விக்கிப்பீடியர்களிடமிருந்தும் சில உதவிகளை வேண்டி நிற்கின்றேன். அவையாவன;
- கட்டுரைகளில் மொழிபெயர்ப்பின் போது தவறுதலாக ஏற்பட்ட எழுத்து/இலக்கணப் பிழைகளைத் திருத்தி உதவலாம்.
- மொழிபெயர்க்கும் போது கட்டாயம் தேவையானவையாக நான் கருதும் கட்டுரைகள் தமிழில் இல்லையாயின் அவறை சிவப்பு இணைப்பாக விட்டுச் செல்வேன். அக்கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். (நானே உருவாக்கலாம் தான் ஆனால் ஒரு கட்டுரையையும் உருவாகுவதில்லை என்ற விசித்திரமான கொள்கையை நான் பின்பற்றி வருவதால் என்னால் புதிய கட்டுரைகளை உருவாக்க முடியாது)
தற்போது மேம்படுத்தப்படுபவை
தொகு
சிறப்புக் கட்டுரைகளாக்கப்பட்டவை
தொகு
|