வலைவாசல்:பெண்ணியம்
பெண்ணியம் வலைவாசல்
பெண்ணியம் என்பது பெண்களை தாழ்வுபடுத்தும் சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், கட்டமைப்புக்கள் மற்றும் சமத்துவமின்மையைக் கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள், கோட்பாடுகளின் தொகுப்பாகும். ஆண் பெண் சமத்துவத்தில் கவனம் செலுத்தும் கோட்பாடாகவும் இது வரையறுக்கப்படுவதுண்டு. பெண்ணியத்தை வரையறுப்பதென்பதே கூட சிக்கலானதாக இருப்பதுண்டு. சமத்துவமின்மையின் மூலங்கள், சமத்துவத்தை அடைவதற்கான வழிமுறைகள், பால் மற்றும் பால்நிலை அடையாளங்களை விமர்சிப்பது, கேள்விக்குட்படுத்துவதற்கான எல்லைகள் போன்றன தொடர்பில் பெண்ணியவாதிகளிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. பால் அடையாளங்களான ஆண் - பெண் போன்றவை வெறுமனே சமூகத்தால் கட்டமைக்கப்பட்டவையே என்ற வாதங்களும் உள்ளன.
பெண்ணியம் பற்றி மேலும்... |
சிறப்புக் கட்டுரை
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஒரு பெண்கள் அமைப்பு. இது பெண்களுக்கு சம உரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக போராடி வரும் அமைப்பு.
பெண்ணிய எழுத்தாளர்கள்
பெண்ணியப் போராளிகள்
பெண்ணியம் குறித்த பகுப்புகள்
சாதனைப் பெண்கள்
இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.
உங்களுக்குத் தெரியுமா...?
- பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டி (படம்), சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியாவார். தேவதாசி முறை ஒழிப்பு, இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டங்களை நிறைவேற்றியவர்.
- மலாலா யூசப்சையி மிகவும் சிறுவயதில் 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர்.
- சிவசங்கரி, 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியருக்கான பரிசு பெற்றவர். இவர் எழுதிய பாரத தரிசனம் எனும் நூலுக்கு இப் பரிசு வழங்கப்பட்டது.
சிறப்புப் படம்
காமினி ராய் (அக்டோபர் 12, 1864 – செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார். பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார்.
அண்மைய நிகழ்வுகள்
உள்ளதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் எனும் செய்தி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. (தினமணி, 5 நவம்பர் 2014)
- சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (படம்), 20 அக்டோபர் 2014 அன்று சென்னையில் காலமானார். (தினமணி)
நீங்களும் பங்களிக்கலாம்
- பெண்ணியம் தொடர்பான விக்கித் திட்டத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- பெண்ணியம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
- பெண்ணியம் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
- பெண்ணியம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
- பெண்ணியம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
- பெண்ணியம் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்