வலைவாசல்:பெண்ணியம்/சாதனைப் பெண்கள்

பயன்பாடு‎

தொகு

சாதனைப் பெண்கள் துணைப் பக்கத்தின் வடிவமைப்பு -வலைவாசல்:பெண்ணியம்/சாதனைப் பெண்கள்/வடிவமைப்பு.

சாதனைப் பெண்கள்

தொகு

1

அன்னை தெரேசா (’Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.


2

கல்பனா சாவ்லா(Kalpana Chawla, ஜூலை 1, 1961 - பெப்ரவரி 1, 2003) இந்தியாவின் பஞ்சாபில் பிறந்த அமெரிக்கர் ஆவார். விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமை இவருக்கு உண்டு. பிப்ரவரி 1, 2003 இல் ஏழு வீரர்களுடன் STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது விண்கலம் வெடித்து உயிரிழந்தார்.





3

ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) மக்களாட்சி-ஆதரவாளர், மியான்மாரில் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் ஆவார். மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். கடைசியாக 1990 ஆம் ஆண்டில் இருந்து 2010 நவம்பர் 13 ஆம் நாள் இராணுவ ஆட்சியாளர்களால் விடுவிக்கப்படும் வரை வீட்டுக்காவலில் இருந்து வந்துள்ளார்.





4 இரோம் சானு சர்மிளா அல்லது ஐரோம் ஷர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகிறார். இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வருகிறது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்.




5

இராஜேஸ்வரி சண்முகம் (மார்ச்சு 16, 1940 - மார்ச் 23, 2012) இலங்கை வானொலி புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார். 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.





6

சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911), (இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில - ஐரியப் பெண்ணான இவர் 1895ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898ஆம் ஆண்டு ஜனவரி 28இல் இந்தியால் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும்போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது.




முன்மொழிதல்

தொகு

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் நபர்கள் பற்றிய கட்டுரைத் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. மேரி கியூரி
  2. இந்திரா காந்தி
  3. அன்னை சாரதா தேவி
  4. இராணி மங்கம்மாள்
  5. இலட்சுமி சாகல்
  6. ராணி அப்பக்கா (Rani Abbakka Chowta) - மங்களூர் பகுதியில் வெளிநாட்டு காலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராடிய ராணி.
  7. மகாசுவேதா தேவி
  8. முத்துலட்சுமி ரெட்டி
  9. கஸ்தூரிபாய் காந்தி
  10. ருக்மிணி தேவி அருண்டேல்
  11. ருக்மிணி லட்சுமிபதி
  12. ஜான்சி ராணி
  13. ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் (எழுத்தாளர்)
  14. நடின் கோர்­டிமர் (Nadien Gordimer)