மகாசுவேதா தேவி
சாகித்திய அகாதமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர்
மகாசுவேதா தேவி (Mahasweta Devi, 14 சனவரி 1926 — 28 சூலை 2016)[2][3] வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.
மகாசுவேதா தேவி মহাশ্বেতা দেবী | |
---|---|
![]() மகாசுவேதா தேவி | |
பிறப்பு | டாக்கா, பிரித்தானிய இந்தியா | 14 சனவரி 1926
இறப்பு | சூலை 28, 2016 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா | (அகவை 90)
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், சமூகஆர்வலர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 1084ன் அம்மா [1] |
விருதுகள் | ரமோன் மக்சேசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் |
கையொப்பம் | ![]() |
ரமன் மெகசசே விருது, நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது, சாகித்ய அகாதமி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் முதலான பல விருதுகள் பெற்றவர்.
இவரது நூல்கள் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது கதைகள் பல திரையுருவம் பெற்றுள்ளன.
விருதுகள்
தொகு- 1979: சாகித்திய அகாதமி விருது (வங்காள மொழி): – அரன்யெர் அதிகார் (Aranyer Adhikar) (புதினம்)[4]
- 1986: சமூகப்பணிக்காக பத்மசிறீ விருது[4][5]
- 1996: ஞானபீட விருது[4]
- 1997: ரமோன் மக்சேசே விருது[3][6]
- 1999: மதிப்புறு முனைவர் பட்டம் – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
- 2006: பத்ம விபூசண் – [4]
- 2009: மான் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
- 2010: யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது[7]
- 2011: வங்க பிபூஷண் (Banga Bibhushan) – மேற்கு வங்காள அரசு[8]
மறைவு
தொகுமகாசுவேத்தாதேவி 2016 சூலை 23 இல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016 சூலை 28 வியாழக்கிழமை தனது 90வது அகவையில் காலமானார்.[9][10]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.goodreads.com/book/show/262038.Mother_of_1084
- ↑ Detailed Biography பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
- ↑ 3.0 3.1 John Charles Hawley (2001). Encyclopedia of Postcolonial Studies. Greenwood Publishing Group. pp. 142–. ISBN 978-0-313-31192-5. Retrieved 6 October 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Who was Mahasweta Devi? Why her death is a loss for Indian readers". Retrieved 2016-07-31.
- ↑ "Padma Awards Directory (1954–2014)" (PDF). Ministry of Home Affairs (India). 21 May 2014. pp. 72–94. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2016. Retrieved 22 March 2016.
- ↑ Citation பரணிடப்பட்டது 2012-04-26 at the வந்தவழி இயந்திரம் ரமோன் மக்சேசே விருது.
- ↑ "Yashwantrao Chavan Award for Mahasweta Devi". The Hindu. 13 March 2011. Retrieved 31 July 2016.
- ↑ "Soumitra refuses Banga Bibhushan Award". The Times of India. 20 May 2013. Retrieved 31 July 2016.
- ↑ Staff, Scroll. "Eminent writer Mahasweta Devi dies at 90 in Kolkata". Scroll. http://scroll.in/latest/811738/eminent-writer-mahasweta-devi-dies-at-90-in-kolkata. பார்த்த நாள்: 28 சூலை 2016.
- ↑ பிரபல எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவி மரணம்