கொல்லங்குடி கருப்பாயி

தலித் தமிழ் நாட்டுப்புற பாடகர்

கொல்லங்குடி கருப்பாயி, ஒரு தமிழ்ப் பாடகராவார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.[1] பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர் தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2] தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3] பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.[4][5] அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.[6] இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார்.[7]

திரைத்துறைதொகு

நடிப்புதொகு

ஆண்டு திரைப்படம்[8]
1985 ஆண்பாவம்
1987 ஆயுசு நூறு
1996 கோபாலா கோபாலா

பாடகராகதொகு

ஆண்டு பாடல் திரைப்படம்[9]
1985 பேராண்டி ஆண்பாவம்
1985 ஒட்டி வந்த ஆண்பாவம்
1985 கூத்து பாக்க ஆண்பாவம்
1985 சாயா சீலை ஆண்பாவம்
1985 அரசப்பட்டி ஆண்பாவம்
1997 கானாங்குருவி கூட்டுக்குள்ளே ஆகா என்ன பொருத்தம்

பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. "வறுமையில் வாடும் நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி: கூடுதல் உதவித் தொகை கேட்டு முதல்வருக்கு மனு". தி இந்து. 4 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. "அனைவரும் விரும்பும் பாடல்கள்". தி இந்து. மார்ச்சு 18, 2003. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003031807480200.htm&date=2003/03/18/&prd=thlf&. பார்த்த நாள்: 2009-07-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. முனைவர் இளங்கோவன் (அக்டோபர் 19, 2007). "கரிசல் கிருட்டிணசாமி" (in தமிழ்). திண்ணை. http://www.thinnai.com/?module=displaystory&story_id=50710182&format. பார்த்த நாள்: 2009-07-29. 
  4. "Of the unexpected break". தி இந்து. செப்டம்பர் 15, 2007. http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007091551020400.htm&date=2007/09/15/&prd=mp&. பார்த்த நாள்: 2009-07-30. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Throaty treat". தி இந்து. ஜனவரி 21, 2004. Archived from the original on 2004-03-04. https://web.archive.org/web/20040304061722/http://www.hindu.com/thehindu/mp/2004/01/21/stories/2004012100210300.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  6. "In tune with the times". தி இந்து. அக்டோபர் 22, 2004. Archived from the original on 2004-11-12. https://web.archive.org/web/20041112181353/http://www.hindu.com/mp/2004/10/22/stories/2004102200040100.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  7. "Her life reflects reel life tragedy". தி இந்து. மார்ச்சு 30, 2003. Archived from the original on 2012-01-19. https://web.archive.org/web/20120119031502/http://www.hindu.com/2003/03/30/stories/2003033002740500.htm. பார்த்த நாள்: 2009-07-30. 
  8. "Filmography of Kollangudi Karuppayi". www.cinesouth.com. 2012-03-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-11 அன்று பார்க்கப்பட்டது.
  9. "கொல்லங்குடி கருப்பாயி பாடிய பாடல்கள்". www.thiraipaadal.com. 2009-12-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-11 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு