வலைவாசல்:உயிரியல்

தொகு  

வலைவாசல்:உயிரியல்


உயிரியல் என்பது உயிர் வாழ்வன பற்றிய அறிவியலாகும். இது உயிரமைப்புகளுடைய இயல்புகள் மற்றும் நடத்தைகள், எப்படி உயிரின வகைகளும், தனிப்பட்ட உயிரினங்களும் தோற்றம் பெற்றன, அவை தங்களுக்குள் ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகள் என்பன பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலானது சகல உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு, பரம்பல், மற்றும் பாகுபாட்டை ஆராய்கின்றது.

தொகு  

சிறப்புக் கட்டுரை


ரைபோசோம்கள் அல்லது ஐங்கரிமக் கருக்காடியகங்கள் என்பன நிலைக்கருவுள்ள எல்லா உயிரணுக்களின் உள்ளும் காணப்படும் ஒரு நுண்ணுறுப்பு. இதன் இயக்கத்தாலேதான் டி.என்.ஏ-வில் உள்ள குறிப்புகள் உயிரணுக்களாக உருவெடுக்கின்றன. ரைபோசோம்கள் விளைவிக்கும் புரதங்கள் எல்லா உயிரிகளின் வேதியியல் வினைகளையும் கட்டுப்படுத்துகின்றன.

ரைபோசோம்கள் டி.என்.ஏ இழைத்தொடரின் குறியீடுகளைக்கொண்டு குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கப் பயன்படும் அமைப்பாகும் இந்தப் புரதங்கள் உருவாக்கும் ரைபோசோம்களில் (ஐங்கரிமக் கருக்காடியகங்களில் 50 உக்கும் மேலான வெவ்வேறு வகைப் புரதங்களும் ரைபோச்சோமிய ஆர்.என்.ஏ எனப்படும் பொருள்களும் இருக்கும். ரைபோசோமிலேயே உள்ள புரதங்களை ரைபோசோமியப் புரதங்கள் (ribosomal proteins) என்பர்.

தொகு  

சிறப்புப் படம்


மிகப் பெரிய உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungi) ஒன்று. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போல தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. பல முக்கியமான புல்லுருவிகள் மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. படத்தில் காணப்படுவது ஆரஞ்சு புல்லுருவி வகைப் பூஞ்சை

தொகு  

உங்களுக்குத் தெரியுமா..?


  • ஒற்றை உயிரணு நுண்ணுயிர் ஆர்க்கீயாக்கள் முதன்முதலாக எரிமலை வெப்ப நீரூற்றுகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
  • சுருட்டைவிரியன் நச்சு குருதி சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது.
  • இந்திய அளவில் மிகக் குறைந்த அளவு குழந்தைகள் இறப்பு உள்ள விகிதம் உள்ள மாநிலம் கேரளா. இதன் விகிதம் 13. அதிகம் உள்ள மாநிலம் மத்திய பிரதேசம். இதன் விகிதம் 72. இந்திய சராசரி 55.
  • உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன.
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்!



  • உயிரியல் தொடர்பான கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் {{விக்கித்திட்டம் உயிரியல்}} என்ற வார்ப்புருவை இணைக்கலாம்.
  • உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவாக்கலாம்.
  • உயிரியல் தொடர்பான கட்டுரைகளில் மேற்கோள்கள் சுட்டுவது, பொருத்தமான படங்களை இடுவது போன்ற பங்களிப்புக்களின் மூலம் அதன் தரத்தை உயர்த்தலாம்.
தொகு  

உயிரியலாளர்கள்


புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனி தாலில் பிறந்தவர். ஆங்கில வம்சாவளியினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர்.புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர். 1907க்கும் 1935க்கும் இடையே, மனிதர்களைக் கொன்று வந்த 12 புலிகளை வேட்டையாடி குமாவுன் பகுதி மக்களால் காவல் தெய்வமாகவேக் கொண்டாடப்பட்டார். இந்த 12 புலிகளும் ஏறத்தாழ ஆயிரத்து முந்நூற்றூவரின் மரணத்துக்குக் காரணமானவை. இவர் முதன்முதலில் வேட்டையாடிய சம்பாவத் புலி மட்டும் 436 ஆவணப்படுத்தப்பட்ட மரணங்களுக்குக் காரணமானது.கடத்தல்காரன் ஒருவனால் சுடப்பட்ட நிலையில் இரைதேட வழியின்றி நானூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றிருந்த பானார் சிறுத்தைப்புலியையும் கொன்றார். கடைசியாக, இவர் தனது 63வது வயதில் ஆண்புலி போலக் குரல் தந்து ஈர்த்து ஒரு பெண்புலியைக் கொன்றார்.

தொகு  

விக்கித் திட்டங்கள்


தொகு  

உயிரியல் பகுப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:உயிரியல்&oldid=1678855" இலிருந்து மீள்விக்கப்பட்டது