சுருட்டைவிரியன்
சுருட்டைவிரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | செதிலுடைய ஊர்வன(Squamata)
|
துணைவரிசை: | |
குடும்பம்: | நச்சுப்பாம்புகள்
(Viperidae) |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | Echis
|
இனம்: | E. carinatus
|
இருசொற் பெயரீடு | |
Echis carinatus (Johann Gottlob Schneider, 1801) | |
வேறு பெயர்கள் | |
|
புல் விரியன்[1][தொடர்பிழந்த இணைப்பு], என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper (Echis carinatus)] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்[2]நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது.
பெயர்க்காரணம்
தொகு- செதில்கள் அதிக அளவில் கீலுடையதாகவும் கீலிணைப்புகளின் ஓரங்கள் இரம்பப்பற்களைப் போல இருப்பதாலும் இப்பாம்பிற்கு இரம்பச்செதில் விரியன் [அ] வாட்செதில் விரியன்- Saw-scaled viper என்ற பெயர் வந்தது.
- இது சலசலவென்றும் புஸ்ஸென்றும் ஒலிப்பதால் ஊது சுருட்டை, குறட்டைப் பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
- அழகிய கம்பளம் போன்ற நிறமுடையதால் கம்பள விரியன் என்றும் அழைக்கப்படுகிறது [3]
உடல் தோற்றம்
தொகு- தலை முக்கோண வடிவில் இருக்கும்; அதில் அம்பு வடிவில் வெள்ளைக்குறி காணப்படும். தலை கழுத்தை விடவும் பெரியது. தலையின் மேற்பரப்பிலுள்ள செதில்கள் சிறியதாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
- தடிமனான, சிறிய உடலையுடையது.
- கண் பெரியதாகவும் கண்மணி செங்குத்தாகவும் உள்ளது.
- வால் சிறியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்.
இயல்பு
தொகு- அளவில் சிறியதாக இருந்தாலும் (45 - 60 செ.மீ.), இதன் நஞ்சு அல்லது நச்சு சிவப்பணுக்களை அழிக்கும் குருதி நச்சு (hemotoxin) வகையைச் சேர்ந்தது; வீரியம் வாய்ந்தது; தொல்லை தரப்பட்டால் உடன் தாக்கக்கூடியது; பெரும்பாலான இறப்புகளுக்கு சுருட்டை விரியன்களே காரணமாகின்றன.[4]
- தொந்தரவு தரப்படும்போது, இது தன் உடலை இரு சுருள்களாக எண் 8 வடிவத்தைப் போல சுருட்டிக்கொண்டு அச்சுருள்களை ஒன்றோடொன்று தொடர்ச்சியாக உராய்விக்கும்; அப்போது உப்புக்காகிதத்தைத் தேய்த்தால் உண்டாகும் ஒலி போன்ற சலசலப்பு உரக்கக் கேட்கும்.[3]
- பெரும்பாலும் இரவில் நடமாடக்கூடியது; காலை வெயிலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
- காய்ந்த வெளி, மணல்/பாறைப் பாங்கான சமவெளி/மலை, மலைப்பாங்கான இடத்திலுள்ள பாறைப்பகுதி ஆகிய இடங்களில் அதிகம் காண முடியும்.
- பகலில் பாறைகளுக்கடியில், மரப்பட்டைகளுக்குப் பின்னால், முட்செடிகளின் அடி போன்ற இடங்களில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
- பக்கவாட்டில்-வளைந்து செல்லும் ( side-winding ) முறையில் வேகமாக இயங்கும்.
- மரங்களில் நன்றாக ஏறும்.
உணவு
தொகு- எலிகள், பல்லி/ஓணான்கள், தவளைகள், தேள்கள் மற்றும் பூச்சிகள்.
மேலும் சில இயல்புகள்/குணங்கள்
தொகு- ஆண் பாம்புகள் சண்டையிடுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
- முட்டையிட்டு குஞ்சு பொரிக்காமல் 4 - 8 வரையில் குட்டிகளை ஈனும். ஈனும் காலம் - ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை.
புல்விரியன் -- படிமங்கள்
தொகு-
இரம்பச்செதில் - 1890இல் பவுலேங்கர் வரைந்த படம்
-
ஈவார்ட் (1878)-இன் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட படம்
இதையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ McDisarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ ஆக்ஃசுபோர்டு அகராதி, வைப்பெரிடீ (viperidae) என்னும் சொல்லை 1909 இல் இருந்து ஆங்கிலத்தில் பயன்படுதுவதைக் குறிப்பிடுகின்றது
- ↑ 3.0 3.1 "தமிழ் இணையப்பல்கலையின் கலைக்களஞ்சியம்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2009-12-21.
- ↑ Wilderness Survival
தகவலுதவி
தொகு- Snakes of India - A Field Guide by Romulus Whittaker and Ashok Captain.