உ. வாசுகி
உ. வாசுகி (U. Vasuki) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியகுழு உறுப்பினரும்,[1] தமிழ்நாடு மாநிலக்குழுவின் செயற்குழு உறுப்பினரும்,[2] அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.[3] மகளிர் சிந்தனை என்ற சிற்றிதழின் ஆசிரியராவார்.
உ. வாசுகி | |
---|---|
பிறப்பு | ஜனவரி 21, 1958 திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியகுழு உறுப்பினர் |
வாழ்க்கை வரலாறு
தொகுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஆர். உமாநாத் இவரது தந்தை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் இவரது தாய், இவரது கணவர் ஏ. பி. விஸ்வநாதன் ஆவார்.[சான்று தேவை]
அரசியல் வாழ்க்கை
தொகுஇவர் 1977-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார்.[சான்று தேவை]
வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000இல் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர். இந்தியப் பொதுத் தேர்தல், 2014 இல் வடசென்னை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) இன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.[4] மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.[3]
அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியகுழு உறுப்பினராக உள்ளார்.
எழுதிய புத்தகங்கள்
தொகு- பெண்ணியம் பேசலாம் வாங்க
- பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி
மேற்கோள்கள்
தொகு- ↑ "People's Democracy". Archived from the original on 2012-02-05. பார்க்கப்பட்ட நாள் 2013-12-21.
- ↑ "CPI(M) State Secretariats Formed". People's Democracy. 22 மே 2005. Archived from the original on 5 பெப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 21 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ 3.0 3.1 "போராட்டப் பாதைகள் மீது பெண்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: உ.வாசுகி". தினமணி. 10 ஆகத்து 2013. Archived from the original on 10 ஆகத்து 2013. பார்க்கப்பட்ட நாள் 21 திசம்பர் 2013.
- ↑ "களம் காணும் சிபிஎம் வேட்பாளர்கள்". தீக்கதிர். 18 மார்ச் 2014. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 18 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)