விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்

அடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற வாய்ப்புள்ளவர்களாகச் சிலரை இனங்கண்டுள்ளீர்களா? ஆனால், நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் செல்லும் முன் அவர் இன்னும் சில பணிகளைச் செய்தால், இன்னும் சில பண்புகளைப் பட்டை தீட்டிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறீர்களா? உங்கள் பரிந்துரைகளை இங்கு இட்டு அவருக்கான ஆலோசனைகளையும் வேண்டுகோள்களையும் முன்வைக்கலாம்.

நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும்.

இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று.

காண்க- நிர்வாகிகளின் பட்டியல்

தற்போது விக்கி விடுப்பில் இருக்க முயலும் இவர், மீண்டும் தொடர்ந்து சீரான, முனைப்பான பங்களிப்புகள் தந்தால் போதும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

நிர்வாக அணுக்கம் கொடுக்கப்பட்டவர் என்றே நினைத்திருந்தேன். விக்கிப்பீடியாத் துப்புரவில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர் துடிப்புடன் செயல்படுகின்றார். வேகத்தைக் குறைத்துக் கொண்டால் பலரது நம்பிக்கையைப் பெறுவார்.--மணியன் (பேச்சு) 04:16, 29 மார்ச் 2015 (UTC)

தொடர்ந்து, சீரான, முனைப்பான பங்களிப்புகளைத் தந்தால் போதும். அதற்கு முன் சரளமான தமிழ்த் தட்டச்சைப் பழக வேண்டும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா பராமரிப்புக்கு பொருத்தமானவர். கூடுதல் நேரம் ஒதுக்கவியலுமாயின் நலம். --மணியன் (பேச்சு) 04:12, 29 மார்ச் 2015 (UTC)

வழக்கமான முனைப்பான பங்களிப்புகளைத் தொடர்வதுடன், விக்கிமீடியா இயக்கம், நுட்பம், கொள்கைகள், நடைமுறைகள் குறித்த புரிதல்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் :)--இரவி (பேச்சு) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)   விருப்பம்--மணியன் (பேச்சு) 04:08, 29 மார்ச் 2015 (UTC)[பதிலளி]

உரையாடல் தொணி (அக்டோபர் 2013), உரையாடல் தொணி (ஏப்ரல் 2015), பயனர்:Balurbala - இவற்றைக் கருத்திற் கொள்ளவும். --AntonTalk 04:25, 6 ஏப்ரல் 2015 (UTC)

நிருவாகப் பொறுப்புக்கான அனைத்து தகுதிகளும் நிரம்பியவர். தமிழ் விக்கிப்பீடியாவின் நடைக்கையேட்டுடன் முரண்பட்டு கட்டுரையாக்கத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதை மட்டும் கை விட்டு மீண்டும் முன்பு போல் பங்களிக்க வர வேண்டும் :) --இரவி (பேச்சு) 05:38, 8 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

கட்டுரையாக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பயனர்:shanmugamp7 போல பிற விக்கிப்பீடியா பங்காற்றல்களுக்கு பொருத்தமானவர். முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.--மணியன் (பேச்சு) 04:23, 29 மார்ச் 2015 (UTC)

கடும் உழைப்பாளி. நன்னோக்கு உடையவர். சுற்றுக்காவல் அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--இரவி (பேச்சு) 14:11, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்பாளர். இணக்கச் செயற்பாடுடையவர். சுற்றுக்காவல் அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--இரவி (பேச்சு) 14:11, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நீண்ட காலப் பங்களிப்பாளர். பரப்புரைப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சுற்றுக்காவல் அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--இரவி (பேச்சு) 14:11, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]


நிருவாக அணுக்கம் மூலம் கிடைக்கும் பல நுட்பக் கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வல்லவர். சில விசயங்களில் இன்னும் கூடுதல் முதிர்ச்சியான மதிப்பீட்டினை (mature judgment) வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, எங்கு தானியங்கி பயன்படுத்தலாம், கூடாது, இதற்கான சமூக ஒப்புதலையும் இணக்க முடிவையும் எப்படிப் பெறுவது போன்ற விசயங்கள். சுற்றுக்காவல் அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--இரவி (பேச்சு) 14:11, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இரவி அவர்களே //நிருவாக அணுக்கம் மூலம் கிடைக்கும் பல நுட்பக் கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வல்லவர்.// என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவற்றை செய்வதற்கு நிர்வாக அணுக்கம் கட்டாயம் அவசியமில்லை. தற்போது meta:Interface_editors பயனர் குழுவினருக்கு இவ்வணுக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வணுக்கத்தை த.வியில் மட்டும் நிறுவ பப்ரிகேட்டரில் வழு பதிய வேண்டும். பின்வரும் அணுக்கங்களை இணைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
  • autoconfirmed
  • edit
  • editinterface
  • editprotected
  • editsemiprotected
  • editusercss
  • editusercssjs
  • edituserjs
  • protect
  • suppressredirect
  • tboverride
  • templateeditor
  • import
இவற்றைத் தகவலுக்காக வழங்கியுளேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:17, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி, Shrikarsan. --இரவி (பேச்சு) 07:31, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நம்பிக்கைக்குரிய பங்களிப்பாளர். உரையாடல்களில் கூடுதலாகப் பங்கேற்று விக்கி கொள்கைகளின் அடிப்படையில் தேவையான இடங்களில் துணிவான நிலைப்பாட்டை எடுக்கவல்லவர் என்பதைப் புலப்படுத்துவது நன்று. சுற்றுக்காவல் அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--இரவி (பேச்சு) 14:11, 1 சனவரி 2016 (UTC)[பதிலளி]