பேச்சு:புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்)

Active discussions

புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் என்ற தலைப்பு இங்கு பொருந்தாது. இது ஈரானியத் திரைப்படம், பாரசீக மொழியிலேயே திரைப்படத்தின் தலைப்பு உள்ளது. அவ்வாறிருக்க ஆங்கில எழுத்துப் பெயர்ப்பில் தலைப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பை தலைப்பாக வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 04:05, 19 அக்டோபர் 2013 (UTC)

இத்திரைப்படம் பற்றி செய்திகள் அனைத்துமே Buddha Collapsed out of Shame என்ற பெயரிலேயே வந்துள்ளன. மேலும் மக்மால்பஃப் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் Buddha Collapsed out of Shame என்றே உள்ளது. யூடியூப் காணெளிகளும் இவ்வாறே காட்டப்படுகின்றன. மஹசன் மஹ்மல்பஃப் குடும்பத்தாரின் படங்கள் அனைத்துமே ஈரான் அல்லது ஆப்கானைக் களமாகக் கொண்டவை. அவரது பெரும்பாலான படங்களைப் பார்த்திருக்கிறேன். அனைத்திற்கும் பாரசீக மொழிப் பெயர் இருந்தாலும் அவை ஆங்கிலத்திலேயே பிற நாடுகளில் வெளியிடப்படுகின்றன. உதாரணமாய் 'பாஞ்ச் இ அஸர்' எனும் படம் At five in the afternoon என்று இயகுனரால் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. பைசைகிளிரான் என்ற பாரசீக மொழித் தலைப்பை கொண்ட இவரது படம் The Cyclist என்றே வெளியானது. எனவே Buddha Collapsed out of Shame என்பது நான் மொழிமாற்றம் செய்ததல்ல. மேலும் இத்திரைப்படத்தின் 40 வது வினாடியில் திரையில் Buddha Collapsed out of Shame என்றே காட்டப்படுகிறது. இயக்குனரால்தான் அவ்வாறு வெளியிடப்பட்டது. நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 04:43, 19 அக்டோபர் 2013 (UTC)
நீங்கள் சொல்வது உண்மை. ஆனாலும், இப்படம் வெளிநாடுகளில் திரையிடப்படும் போது ஆங்கில subtitle உடன் திரையிடப்பட்டிருக்கும், மேலும் பாரசீக மொழியில் அல்லது அதன் ஒலிப்பெயர்ப்போ வெளியுலகில் தலைப்பிட முடியாது. அது வேறு விடயம், ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு பெயரிடல் மரபு உள்ளது அல்லவா? ஏனைய மொழி விக்கிப்பீடியாக்கள் தந்துள்ள தலைப்புகளைப் பாருங்கள்..--Kanags \உரையாடுக 05:45, 19 அக்டோபர் 2013 (UTC)
சிறீதரன் கனகு சொல்லும் கருத்து சரி. பிறமொழிகளில் வெவ்வேறு விதமாகக் கொடுத்துள்ளார்கள். பிரான்சிய மொழியில் "Le Cahier" என்று தந்து பாரசீக மொழித்தலைப்பை அப்படியே தந்து அதன் ஒலிபெயர்ப்பை உரோமன் எழுத்தில் தந்துள்ளார்கள், காட்டாக: (en persan: بودا از شرم فرو ریخت ;Buda azsharm foru rikht). எனவே நாமும் தலைப்பை புத்தர் வெட்கிச் சாய்ந்தார் என்று தந்து (அல்லது இது போன்ற மொழிபெயர்ப்பு ஒன்றைத் தந்து) புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் என்ற பாரசீகப் பெயரைத் தரலாம். எசுப்பானியரும் பிற மொழியாளர்களும் தனித்தனி தலைப்புகள் தந்திருக்கின்றார்கள். பொருள் புரியுமாறு தலைப்பு இருப்பது நல்லதே.--செல்வா (பேச்சு) 06:06, 19 அக்டோபர் 2013 (UTC)
மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பவரின் புரிதலின் படி தவறாகவும் இருக்க வாய்ப்புண்டு. பலவேளைகளில் ஒரு கலைப் படைப்பிற்கு ஒரே பொருள் படும் தலைப்புகள் வைக்கப்படுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டுகிறேன். இப்படம் ஆங்கிலத் தலைப்பில் தான் (அதிகமாக) பிறமொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது(காண்க:மலையாளத்தலைப்பை) இப்படமொரு வணிகப் பொருளாதலால், தயாரிப்பாளர் வைத்தப் பெயரை மாற்றுவது சிறப்பாகாது(Apple iphone என்பதை குமளிப்பழ ஐபோன் என்பது போலாகிவிடும்). ஆர்.பாலா அவர்களின் விளக்கத்தின்படி தற்போதைய தலைப்பே இருக்கலாம். இப்படம் தமிழுலகில் பரவலாக எப்பெயரிலும் அறியப்படாததால் மூல மொழிப் பெயரில் தலைப்பிட்டாலும் பெரிய குழப்பமில்லை என்று நினைக்கிறேன் --நீச்சல்காரன் (பேச்சு) 07:43, 19 அக்டோபர் 2013 (UTC)
புத்தர் வெட்கிச் சாய்ந்தார் (ஈரானியத் திரைப்படம்) என்ற தலைப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்போதுள்ள தலைப்பு மூல மொழியும் அல்ல தமிழும் அல்ல, வேறொரு மொழி. அப்படியிருக்க வேற்று மொழி ஒன்றில் ஏன் தலைப்பிட வேண்டும்? apple Iphone ஐ ஆப்பிள் ஐபோன் எனத் தலைப்பிடுவதில் தவறில்லை. அது விக்கிப்பீடியா பெயரிடும் வழிமுறைக்கேற்ப உள்ளது. மலையாளம் தெரிந்தவர்கள் மலையாள விக்கியில் தலைப்பை மாற்றுமாறு கோரிக்கை வைக்கலாம்:).--Kanags \உரையாடுக 07:58, 19 அக்டோபர் 2013 (UTC)
இத்திரைப்படத்தின் குறுவட்டு அட்டையிலும் Buddha Collapsed out of Shame என்றே அச்சிடப்பட்டுள்ளது. நான் சொன்ன 40 வது வினாடியில் தோன்றுவது subtitle அல்ல. உலகப்புகழ் பெற்ற சில்ரன் ஆப் ஹெவன் படத்தின் உண்மைப் பெயர் Bacheha-ye Aseman. ஆனால் சில்ரன் ஆப் ஹெவன் என இதே தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கிறது. உலகம் முழுவது அவ்வாறே அறியப்பட்டது. விக்கியின் பெயரியல் மரபு லிங்க் கொடுத்து உதவுங்கள் ப்ளீஸ். அதில் இவ்வாறு மொழிபெயர்க்காதீர்கள் என படித்த ஞாபகம்.( உதாரணம்:Life is beautiful என்பதை வாழ்க்கை அழகானது என மொழிபெயர்க்க வேண்டாம் எனப் படித்த ஞாபகம்). இதே போல முரண்பாடுகள் அயர்வடையச் செய்கின்றன. கிரந்த எழுத்துகள் பற்றிய உரையாடலில் அதற்கான சரியான காரணம் சொல்லப்பட்டது. ஆனால் தமிழ் விக்கியில் பல கட்டுரைளின் தலைப்புகள் கிரந்த எழுத்துகளைக் கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டுரைகளுக்கு அனுமதியும் ஒரு சில கட்டுரைகளுக்கு அனுமதி மறுப்பும் ஏன் எனத் தெரியவிலை. கிட்டத்தட்ட நான்கே முக்கால் வருடம் தமிழ் விக்கியில் இருந்தும் கடந்த 2 மாதமாகத் தான் கட்டுரைகளை எழுதி வைத்து வருகிறேன். உங்கள் அனைவரின் வழிகாட்டல்கள் எனக்குத் தேவை. தலைப்புகளை ரெம்பவும் தமிழ்ப்படுத்த வேண்டாம் என நினைக்கிறேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 08:49, 19 அக்டோபர் 2013 (UTC)
life is beautiful என்பது ஆங்கில மூலப் படமா? அவ்வாறெனில் அதனை லைஃப் ஆஃப் பியூட்டிஃபுல் என எழுதலாம். அவ்வாறே ஆங்கிலத் திரைப்படங்களின் பெயர்கள் இடப்பட்டுள்ளன. புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் என்ற தலைப்பு ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தைப் பற்றியது எனத் தோன்றியது. கட்டுரையைப் படித்த பின்னர் தான் தெரிந்தது அது ஆங்கிலமல்ல, பாரசீக மொழித் திரைப்படம் என்று. இப்படம் ஆங்கில மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டதா? அவ்வாறெனின் இப்போதுள்ள கட்டுரைத் தலைப்பையே வைத்திருங்கள். கட்டுரையிலும் இதைப் பற்றி முதல் வரியிலேயே குறிப்பிடுங்கள்.--Kanags \உரையாடுக 09:36, 19 அக்டோபர் 2013 (UTC)
life is beautiful என்பது உதரணத்திற்காக கொடுக்கப்பட்டிருந்தது. மேலதிக விவரங்கள் அதில் இல்லை. நான் பெரும்பாலும் ஈரானியத் திரைப்படங்கள், ஊர்கள், புத்தகங்கள் அவ்வப்போது விண்வெளி தொடர்பாய் கொஞ்சம் எழுத வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். ஈரனியப் படங்கள் அனைத்துமே பாரசிக மொழியில் வெளியாகும் போதே அதற்கு ஆங்கிலத் தலைப்பும் சூட்டிவிடுகின்றனர். திரைப்பட விழாவுக்கு அனுப்புவதெற்கென அந்த ஏற்பாடு. எல்லாப் படங்களும் அல்ல மதிஜ் மஜிதி மற்றும் மக்மல்பஃப் குடும்பத்தினர் படங்கள். அவை பாரசீக மொழிப் படங்களே. ஆங்கில மறு உருவாக்கம் பெற்றவை அல்ல. ஆனால் ஆப்கான், ஈரான் மற்றும் சில அரபு நாடுகள் தவிர்த்து உலகெங்கும் ஆங்கில மொழித் தலைப்புடனே வெளியாகிறது. நான் எந்த மொழித் தலைப்பைக் குறிப்பிட வேண்டும்? ஆங்கில மொழித்தலைப்பே எல்லோருக்கும் பரிச்சயமான ஒன்று. தொடர்ந்து ஈரனியப் படங்கள் பார்ர்கும் ரசிகர்கள் கூட ஆங்கிலத் தலைப்புகளின் வழியே இப்படத்தை ஞாபகம் வைத்துள்ளோம். அல்லது தலைப்பிலேயே அடைப்புக் குறிக்குள் இரண்டு தலைப்பையும் கொடுக்கலாமா? தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன்.--ஆர்.பாலா (பேச்சு) 10:43, 19 அக்டோபர் 2013 (UTC)
தலைப்பிடல் குறித்து நான் ஏற்கனவே எனது கருத்தைச் சொல்லி விட்டேன். உங்கள் விருப்பம் போன்று செய்யுங்கள்.--Kanags \உரையாடுக 10:54, 19 அக்டோபர் 2013 (UTC)

தலைப்பிடல் குறித்து தெளிவான விளக்கம் கொடுங்கள்.

 • ஆர். பாலா, உங்கள் கேள்வி கேட்கப்படவேண்டிய ஒன்றுதான். எந்த மொழிப்படமானாலும் அந்த மூல மொழியை ஒலிபெயர்த்துத் தமிழில் எழுதுதலே முறை. ஆனால் ஆங்கிலத்திலும் பிரான்சிய மொழியிலும் இன்னும் பல மொழிகளிலும் தங்கள் மொழிகளில் பெயர்த்துத் தலைப்பிடுகின்றார்கள். இதனை நீங்கள் பார்க்கலாம். அது போல நாமும் தமிழில் பெயர்த்து இடலாம். Life is Beautiful என்பதை வாழ்க்கை அழகு என்று பெயர்க்க்கூடாது எனில் ஏன் ஆங்கிலேயர் பிரான்சியர் முதலானவர்கள் மட்டும் பெயர்க்கின்றார்கள், ஆனால் நாம் பெயர்க்கக்கூடாது? ஆங்கிலேயர்கள் ஆட்களின் பெயரைக் கூட பெயர்க்கின்றார்கள் Maȟpíya Ičáȟtagya என்னும் இலக்கோட்டா இந்தியரின் பெயரை Touch the Cloud என்று அழைக்கின்றார்கள். இன்னொரு இலக்கோட்டா இந்தியராகிய ȟatȟáŋka Íyotake என்பாரை Sitting Bull என்கிறார்கள். இப்படிப் பல சொல்லலாம். நாம் புத்தர் வெட்கிச் சாய்ந்தார் (பாரசீகத் திரைப்படம்) என்று இடலாம், ஆனால் உள்ளே விளக்கமாக மூலப்பெயரையும், தேவை என்றால் அடிக்குறிப்பாக ஆங்கில, பிரான்சியப் பெயர்களையும் கூட குறிப்பிடலாம். இது இந்தப் படத்துக்கு மட்டும் இல்லை அதிகம் அறியாத பிற மொழித் திரைப்படப் பெயர்களுக்கு இடலாம். மொழிபெயர்ப்புத் துல்லியம் என்று இல்லை. தமிழில் இப்படி அறியப்படுகின்றது இன்ன தலைபபி ஒட்டியது என்று அறிந்தால் போதும். புத்தா கொலாப்ஃசிடு அவுட்டு ஆவ் சேம் என்பது துல்லிய மொழிபெயர்ப்பா என்று நமக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அப்படம் அப்படி அறியப்படுகின்றது என்பதுதான் செய்தி. கட்டுரைக்குள் மூல மொழிச்சொற்களாலும் மூல மொழியின் எழுத்துக்களாலும் குறிப்பதால் செய்தி எதுவும் விடுபடாது. வழிமாற்றுகள் கூட ஓரிரு விதமாக வைத்திருக்கலாம். இது எளிய தீர்வு என்பது என் கருத்து.--செல்வா (பேச்சு) 04:08, 20 அக்டோபர் 2013 (UTC)

முரண்பாடுகள்தொகு

 1. புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் என்ற பாரசீக மொழிப்படம் ஆங்கிலத்தில் Buddha Collapsed out of Shame என இயக்குனரால் பெயர் சூட்டப்பட்டு வெளியானது. அதை புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் என தலைப்பிட்டது தவறு எனச் சுட்டிக்காட்டப்படது. ஆனால் சில்ரன் ஆப் ஹெவன் மட்டும் ஏன் அனுமதிக்கப்பட்டது?
 2. Sokout/the silence இந்த ஆங்கில விக்கியில் இரண்டு தலைப்புகள் இருந்தன. நானும் அதைப்போல் கோனர்பிச்சே/ தி ஆக்டர் (திரைப்படம்) தொடங்கினேன். ஆனால் அது தி ஆக்டர் என மாற்றப்பட்டது. இது புத்தா கொலாப்சுடு அவுட் ஆஃப் சேம் என்ற மொழி பெயர்ப்புக்குச் சமம்.

மேற்குறிப்பிட்ட இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுகிறது.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே தெரியவிலை. எனக்குத் தெளிவுபடுத்துங்கள். பெயரிடல் தொடர்பான விக்கியின் வழிமுறைகளை எப்படித் தெரிந்து கொள்வது. இது தொடர்பாய் விதிகள் இருந்தால் அதன் சுட்டியைத் தாருங்கள். அனைவருக்கும் நன்றி--ஆர்.பாலா (பேச்சு) 03:07, 20 அக்டோபர் 2013 (UTC)

 • மேலே நான் கூறியிருக்கும் கருத்தைப் பாருங்கள். சில்றன் ஆவ் ஃகெவன் (Children of Heaven) என்பதும் சொர்க்கத்தின் குழந்தைகள் என்றே தலைப்பிட்டு உள்ளே பாரசீகப்பெயரை இட்டிருக்க வேண்டும். இது பிறர் கண்ணில் படவில்லை என்று பொருள். இதே படம் இடாய்ச்சு மொழியில் Kinder des Himmels என்று பெயரிட்டிருப்பதையும் பிறமொழிகளில் பிறவாறு மொழிபெயர்க்கப்பட்டு உள்ளதையும் பார்க்கலாம். --செல்வா (பேச்சு) 04:13, 20 அக்டோபர் 2013 (UTC)
செல்வா கூறிய தீர்வு ஏற்றுக் கொள்ளக்கூடியதே. இப்போதுள்ள ஆங்கிலப் படங்களின் தலைப்புகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஒலிபெயர்த்திருக்கிறார்கள். கிரந்தம் தவிர்த்து எழுதுதல், ஈழத் தமிழ் உச்சரிப்பு, தமிழகத் தமிழ் உச்சரிப்பு என்று பல்வேறுவிதமாக வேறுபடுகிறது. சில தலைப்புகளைப் பார்த்தீர்கள் என்றால் படிக்கவே சிரமமாக உள்ளது. தலைப்பைத் தமிழில் மொழிபெயர்த்து தலைப்பிட்டு, கட்டுரையின் முதல் வரிகளில் மூல மொழிச் சொல்லை தமிழில் பெயர்த்து எழுதுவது சிறந்தது. கூகுளில் தேடுபவர்களுக்கும் இது கிடைக்கும்.
மற்றும், இரு மொழிச் சொற்களையும் தலைப்பில் இடுவது வரவேற்கத்தக்கதல்ல. இரண்டுமே வெவ்வேறு மொழிச் சொற்கள். அது எதற்காக? இவ்வாறு நாம் தமிழ் விக்கியில் தலைப்பிடுவதில்லை.--Kanags \உரையாடுக 04:31, 20 அக்டோபர் 2013 (UTC)
செல்வா மற்றும் கனக்சு அவர்களே, உங்கள் வாதங்களில் நியாயம் இருக்கலாம், ஆனால் என்னால் ஒப்புக்கொள்ளமுடியவில்லை. சில கேள்விகளைக் கேட்டுள்ளேன் உங்கள் விடைகளைத் தந்தால் புரிந்துகொள்ளமுயல்கிறேன் மற்றவருக்கும் விளங்கலாம். எனது வாதம் தவறு என்றாலும் திருத்திக்கொள்கிறேன்.
 1. இம்மொழிபெயர்ப்புப் பெயர்கொண்ட படத்தை முதன்முதல் த.வி.யில் படித்துவிட்டு வெளியில் இப்பெயருடன் ஒருவர் ஆய்வு செய்தாலோ, தேர்வு எழுதினாலோ, மற்றவருக்குச் சொன்னாலோ பயன்கிட்டுமா?
 2. ஒவ்வொரு முறையும் இத்தகைய பிறமொழிப் படங்களை மொழிபெயர்த்து தரும் உதவியை நீங்கள் செய்து தருவது தொடர்ப் பளுவாக இருக்காதா?
 3. Samaaj, white போன்ற படங்களைப் போல இது நடிகரின் பெயரா அல்லது வேறுபொருள் கொண்ட பெயரா என்று எப்படி கண்டுபிடிப்பது? (பலபொருள் ஒரு சொல் என்றால்)
 4. ஒரு வணிகப் பொருளின் அடையாளப் பெயரை மொழிபெயர்த்து மாற்றி எழுதுதல் சிறப்பா?(இடாய்ச்ச்சு போன்ற அரிதான மொழிகளை உதாரணம் காட்டவேண்டாம்) சிறப்பெனில் திரைப்படம் நீங்கலாக புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், பாடல்கள் என அனைத்தையும் மொழிபெயர்த்து எழுத்த நீங்கள் விரும்புகிறீர்களா?
 5. இறுதியாக.. திருக்குறள் என்ற நூல் பெயரை மொழிமாற்றி The Great vocal என்று ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ அழைத்தால் சிறப்பா? The Great vocalist என்று திருவள்ளுவர் என்று ஆகிவிடக்கூடாதல்லவா?

நீங்கள் குறிப்பிடும் வாதத்திற்கு எனது பதிகள்:

 1. படிக்கவே சிரமமாக உள்ளது என்று கொண்டால் அதற்கு தீர்வு மொழிபெயர்ப்பல்ல என்று நினைக்கிறேன். நடைமுறைவாழ்வில் பலரது பெயர்கள்(பிறமொழி) சிரமமாக இருப்பதால் யாரும் மொழிமாற்றுவதில்லை என்று நினைக்கிறேன்.
 2. ஆங்கிலேயர் பிரான்சியர் முதலானவர்கள் மட்டும் பெயர்க்கின்றார்கள் என்றால் அது அவர்களின் குறை. உலகின் மற்ற பெரும்பான்மையான மக்கள் எல்லாம் வணிக அடையாளப் பெயர்களை மொழிபெயர்ப்பதில்லை என்றே நினைக்கிறேன்--நீச்சல்காரன் (பேச்சு) 05:29, 20 அக்டோபர் 2013 (UTC)
 3. மூலமொழிப் பெயர்கள் புரியவில்லை என்ற உண்மையான குறைக்கு மொழிமாற்றுப் பெயரை அடைப்புக் குறியிலோ விளக்க உரையிலோ கொடுப்பதுதான் சிறப்பு என நினைக்கிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 05:29, 20 அக்டோபர் 2013 (UTC)
கீழே உள்ளவை விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு எனும் பக்கத்தில் உள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெயர்களை தமிழாக்க வேண்டாம்.

பிற மொழி வணிகப் பெயர்கள், நூல்கள், திரைப்படங்கள் போன்றவற்றின் பெயர்களை நிறுவன ஏற்பற்ற முறையில் மொழிபெயர்க்க வேண்டாம்.

 • கூகுள் எர்த் - சரியான பெயரிடல் மரபு.
 • கூகுள் பூமி - தவறான பெயரிடல் மரபு.
 • லைஃவ் ஈசு பியூட்டிஃவுல் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
 • வாழ்க்கை அழகாக இருக்கிறது (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :)!.

மொழிமாற்றப்பட்டு தமிழில் வெளிவரும் பிறமொழித் திரைப்படங்களின் தமிழ்ப்பெயர்கள் பழக்கம் இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்பதாலும் தவிர்க்கலாம்.

 • சவோலின் சாக்கர் (திரைப்படம்) - சரியான பெயரிடல் மரபு.
 • மிரட்டல் அடி (திரைப்படம்) - தவறான பெயரிடல் மரபு :) - தமிழாக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்களுக்கு வணிகக் காரணங்களுக்காக வேடிக்கையான மூலத் திரைப்படத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பெயரிடுவது உண்டு. அவற்றை தவிர்க்கலாம்.

மேலே உள்ள தகவலின் படி தலைப்புகளை மொழிபெயர்க்க வேண்டாம் என்றே உள்ளது.--ஆர்.பாலா (பேச்சு) 05:59, 20 அக்டோபர் 2013 (UTC)

பாலா அது இற்றைப்படுத்தப்படாத பெயரிடல் மரபு. நீங்கள் பாரசீக மொழியில் இடுவதில் தவறில்லை. ஆனால் பாரசீக மொழிப்படத்துக்கு ஆங்கிலத்திலோ பிறமொழிகளிலோ பெயர் சூட்டி (உலகத்தில் அப்படித்தான் அறியப்படுகின்றது என்று நீங்கள் கூறுவது சரியன்று. ஆங்கில மொழி நாடுகளில் அப்படி ஆனால் பெருங்கண்டங்களான தென்னமெரிக்க போன்ற இடங்களில் எசுப்பானியத்திலும், பிரான்சிய உலகில் பிரான்சியத்திலும் என்றவாறு அந்தந்த மொழிகளில்தான் வழங்குகின்றது).--செல்வா (பேச்சு) 06:20, 20 அக்டோபர் 2013 (UTC)

மறுமொழிதொகு

 • //இம்மொழிபெயர்ப்புப் பெயர்கொண்ட படத்தை முதன்முதல் த.வி.யில் படித்துவிட்டு வெளியில் இப்பெயருடன் ஒருவர் ஆய்வு செய்தாலோ, தேர்வு எழுதினாலோ, மற்றவருக்குச் சொன்னாலோ பயன்கிட்டுமா?//
கிட்டும். ஏனெனில் மூலமொழிப்பெயரையும் மூல மொழியிலும் எழுத்துப்பெயர்த்தும் கட்டுரையின் முதல் வரியிலேயே இட்டிருப்பீர்கள்.
 • //ஒரு வணிகப் பொருளின் அடையாளப் பெயரை மொழிபெயர்த்து மாற்றி எழுதுதல் சிறப்பா?(இடாய்ச்ச்சு போன்ற அரிதான மொழிகளை உதாரணம் காட்டவேண்டாம்) சிறப்பெனில் திரைப்படம் நீங்கலாக புத்தகங்கள், இசைத்தட்டுக்கள், பாடல்கள் என அனைத்தையும் மொழிபெயர்த்து எழுத்த நீங்கள் விரும்புகிறீர்களா?//
பொதுவாக மொழிபெயர்ப்பது கிடையாது, ஒலிப்பைக் கூடியமட்டிலும் எழுத்துப்பெயர்ப்பு மட்டுமே செய்கிறோம். ஆனால் இது மொழிக்கு மொழி மாறுபடும். மிகப்பல சிக்கல்கள் எல்லா மொழிகளிலும் ஏற்படுகின்றது. அதற்கு ஏற்பவே தீர்வுகள் கிட்டும். எடுத்துக்காட்டாக மொழியியலிலே மெய்யெழுத்துக் கூட்டம் (ஆங்கிலத்தில் consonant cluster) என்பார்களே அது மொழிக்கு மொழி மாறானது. McDonald என்றால் சப்பானிய மொழியில் அது மக்குடொனால்டு என்றுதான் கூறமுடியும். தமிழிலும் கூட அப்படித்தான் எழுத முடியும் அரபி மொழியில் Pepsi என்பதை Bebusi என்பது போலத்தான் ஒலிக்க முடியும். Collapsed, Stretched முதலான சொற்களில் வரும் 'psd' '-tchd' முதலானவற்றை முறையாக எல்லோராலும் ஒலிக்க முடியாது. தமிழில் எந்தச்சொல்லாக இருந்தாலும் மெய்யெழுத்தி தொடங்கலாகாது. வல்லின மெய்யெழுத்தில் முடியலாகாது. இவை வறட்டு தமிழ்மொழி விதிகள் அல்ல, மிக மிக நுணுக்கமான இயற்கை உண்மைகள். ஆங்கிலத்தில் ஒரு பெயரை எழுதவேண்டும் என்றால் முதல் எழுத்து தலைப்பு எழுத்தாக (Capital letter) இருக்கவேண்டும் என்பது எப்படி விதியோ அப்படித் தமிழ் மொழியிலும் சில விதிகள் உள்ளன (தமிழ் விதிகள் அறிவடிப்படையில் உள்ளவை). எனவே கொலாப்புசுடு/கொலாப்பிசிடு என்பது போல்தான் எழுதி ஒலிக்க முடியும். எழுதுவது ஒலிப்பதற்காக. கொலாப்ஸ்ட் என்று எழுதினால் -ப்ஸ்ட் என்பதை ஒலிக்கவே முடியாது -ப்ஸ்டு என்றால் சற்று ஒலிக்கலாம். ப் என்று சொல்லி அடுத்து ஸ் சொல்லப்பாருங்கள் இடையே உயிரொலி வரும். எனவேதான் கொலாப்புசுடு போன்று எழுதப்படுகின்றது. அதில் வரும் பு-சு ஆகியவற்ரின் உகரம் குற்றியலுகரம், ஆகவே ஏறத்தாழ --psd ஒலிப்பு வரும். Stretched என்று இருந்தால் இசுட்ரெச்சிடு என்றோ அது போலவோ எழுதலாம். ஸ்ட்ரெச்ட் என்று எழுதினால் ஆங்கில ஒலிப்பு என்று நினைப்பது தவறு. ஒரே ஒரு உயிரெழுத்துக்கு முன்னே இரண்டு மெய்யெழுத்தும் அடுத்து மூன்று மெய்யெழுத்தும் தமிழ் ஒலிப்புச்சுழலில் வராதது. ஸ் என்று சொல்லும் முன் முன்னே ஓர் உயிரொலி வந்தே தீரும் (உதடுகளைத் திறந்துதான் காற்றொலி சகரம் கூற இயலும்). இவை போன்றவற்றை விரிவாகக் கூறலாம். ஆனால் அலுப்புத்தட்டலாம். இசுட்ரெச்சிடு என்று எழுதி அதில் இகரத்தைக் குற்றியலிகரமாக ஒலிப்பதால் ஏறத்தாழ ஆங்கில ஒலிப்புக்கு நெருக்கமாகவே வரும். வட இந்தியாவிலும் இசுக்கூல் அல்லது சக்கூல் என்றே School என்பதைப் பெரும்பாலோர் ஒலிக்கின்றனர். இதனை initial cluster என்பார்கள் (மெய்யெழுத்துக்கூட்டம் முதலில் வருதல்). மெள்ள சொல்லிப்பாருங்கள் புரியும். தமிழ் இலக்கன விதிகளைக் கூடிய மட்டிலும் மதிக்க வேண்டுவது கடமை.
 • //ஒவ்வொரு முறையும் இத்தகைய பிறமொழிப் படங்களை மொழிபெயர்த்து தரும் உதவியை நீங்கள் செய்து தருவது தொடர்ப் பளுவாக இருக்காதா? //
ஏன் ஆங்கிலத்தில் உள்ளதை அப்படியே மொழிபெயர்க்கலாமே.
 • //Samaaj, white போன்ற படங்களைப் போல இது நடிகரின் பெயரா அல்லது வேறுபொருள் கொண்ட பெயரா என்று எப்படி கண்டுபிடிப்பது? (பலபொருள் ஒரு சொல் என்றால்)//
உரோமன் எழுத்துலேயே எழுதினாலும் அதே ஐயம் வரும் தானே! நடிகரின் பெயர் என்றால் பிறைக்குறிகளுக்குள் நடிகர் என்று எழுதலாமே. ஆங்கிலத்தில் White என்று எழுதினால் அது ஆளின் பெயராகவும் இருக்கலாம், வெண்மையைக் குறிப்பதாகவும் இருக்கலாம், ஒரு படத்தின் தலைப்பாகவும் இருக்கலாம். இது எல்லா மொழிக்கும் உள்ள பிரித்தறியும் சிக்கல்தானே!
 • //இறுதியாக.. திருக்குறள் என்ற நூல் பெயரை மொழிமாற்றி The Great vocal என்று ஆங்கிலத்திலோ பிற மொழியிலோ அழைத்தால் சிறப்பா? The Great vocalist என்று திருவள்ளுவர் என்று ஆகிவிடக்கூடாதல்லவா?//
குரல் (voice) வேறு குறள் (short in form) வேறு. திருக்குறளை The sacred Kural என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் குரலையும் குறளையும் வேறுபடுத்திக் காட்ட இயலாது. திரிபுக்குறிகள் இட்டு சிறப்பு ஆய்வு நூல்களில் காட்ட இயலும். அது போல தமிழிலும் இயலும்.
செல்வா ஐயா, உங்களின் வாதத்திறமை அருமை. இரண்டாவது கேள்விக்கான பதில் திசைமாறியதாக நினைக்கிறேன். எழுத்துபெயர்ப்பு பற்றி இவ்வகைக் கட்டுரைகளில் மெனக்கெட விரும்பவில்லை. மொழிபெயர்ப்பே கேள்வியின் நாதம். உதாரணமாகக் கேட்டால், parachute oil - என்பதை வான்குடை எண்ணெய்; Axis Bank ஆள்கூற்று வைப்பகம்; IBM என்பதை ப.வ.எ. (பன்னாட்டு வணிக எந்திரம்) என்று சொல்வதற்கு ஒப்புதானே?

முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்துவிட்டேன் Article titles should be recognizable to readers, unambiguous, and consistent with usage in reliable English-language sources (அந்தந்த மொழிகளுக்கான மேற்கோள்கள் என்பது புரியக்கூடியதே) உலகத்திற்கு அதிகம் பயன் விளைவிக்கும் ஆங்கில விக்கிப்பீடியாவில் பரிந்துரைக்கப்படும் அடிப்படை பெயரிடல் மரபான இது முற்றிலும் தவறு என்று சொல்லமுடியுமா? எதற்கெடுத்தாலும் ஆங்கில விக்கிப்பீடியா நெறிமுறைகளைக் கடைபிடிக்கும் நமக்கு இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடுமே என அஞ்சுகிறேன். --நீச்சல்காரன் (பேச்சு) 07:21, 20 அக்டோபர் 2013 (UTC)

நீச்சல்காரன், ஆங்கில விக்கியில் கூறியுள்ளது (மொழி பற்றிய கருத்துகளுக்கு) ஆங்கில மொழிக்கானது. அவை தமிழுக்குப் பொருந்தாது. பொர்து நெறிமுறைகளை நமக்கு உகந்தவாறு கொள்ளலாம். ஒவ்வாதன விலக்கியும் இல்லாதன சேர்த்தும், கொள்வன கொண்டும் செய்யலாம். தடையேதும் இல்லை. தமிழ் மரபுகள் வேறு ஆங்கில மரபுகள் வேறு அல்லவா? --செல்வா (பேச்சு) 16:03, 20 அக்டோபர் 2013 (UTC)
IBM என்பதை ஐ.பி.எம் என்று எழுதுதலே சிறந்தது, ஐ பி எம் என்று இடம் விட்டும் எழுதலாம். பன்னாட்டு வணிக எந்திரம் என்று கொண்டால் ப.எ.வ எனக்குறித்து பிறைக்குறிக்குள் உரோமன் எழுத்தில் IBM எனக்குறிக்கலாம். Axis Bank என்பதை ஆக்ஃசிசு வங்கி/வைப்பகம் என்றோ ஆக்சிசு வங்கி/வைப்பகம் என்றோ கூறலாம். ஃபேசுபுக்கு என்பதை முகநூல் என்று அழைபப்தைப்போல சில இடங்களில் ஏதேனும் காரணம் பற்றி மொழிபெயர்த்தும் இடலாம். இவற்றுக்கெல்லாம் அபல மொழிகளில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. வாசர்மன்பேட்(டு) என்பது வண்ணார்பேட்டைதானே. புழலேரி உள்ள செங்குன்றத்தை ஆங்கிலத்தில் Red Hills என்கிறோம் அல்லவா? இவை தவிர நூற்றுகணக்கான பல மொழி எடுத்துக்காட்டுகள் உள்ளன. நியூ யார்க்கு நகரத்தைக்கூட Nueva York1 (en inglés y oficialmente, New York City) என்பார்கள் எசுப்பானியர். இத்தாலியர் Nuova York. உருசிய மொழியில் Нью-Йорк (N'yu-York). Parachute Oil (பாராச்சூட்டு தேங்காய் நெய்?) என்பதை வான்குடை தேங்காய் நெய் என்று சொல்லலாம் அல்லது பாராச்சூட்டு தேங்காய் நெய் (எண்ணெய்) எனலாம். --செல்வா (பேச்சு) 16:03, 20 அக்டோபர் 2013 (UTC)
 • பாரசீக மொழியிலேயே தலைப்பை வைக்கிறேன். கட்டுரையின் முதல் வரியில் அதற்குரிய ஆங்கிலச் சொல்லையும் இணைக்கிறேன். முடிந்த அளவு அதன் கதைக்கும் மூலச் சொல்லுக்கும் நெருக்கமான தமிழ்த் தலைப்பை தெரிவு செய்கிறேன். தொடர்ந்து உரையாடுங்கள். எடுக்கும் எந்த முடிவையும் செயல்படுத்தத் தயாராய் உள்ளேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 07:45, 20 அக்டோபர் 2013 (UTC)
ஆம் பாரசீகப் பெயர் சூட்டுவது சிறந்தது எனில் அப்படியே சூட்டுங்கள், ஆனால் அதன் பொருளைத் தமிழில் முதலிலும் அடிக்குறிப்பாக ஆங்கிலத்திலும் பிரான்சியத்திலும், எசுப்பானியத்திலும் வழங்கப்படும் பெயர்களைக் கூறுங்கள். தமிழ்வழி புரிந்துகொள்வதே இங்கு நோக்கம். ஆங்கிலம் அறிந்தவர் அங்கு சென்று காணலாம். இதே போல பிற மொழிகள். ஆங்கிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பாரசீகப்படம் என்றால் அதனைக் குறிப்பிடலாம். பலவகையில் தேடும் வசதியும் கொண்டிருக்குமாறு வழிமாற்றுகள் அமைக்கலாம். --செல்வா (பேச்சு) 16:03, 20 அக்டோபர் 2013 (UTC)
ஒரு நல்ல முடிவு எட்டப்பட்டது அறிந்து மகிழ்ச்சி.--Kanags \உரையாடுக 03:23, 21 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம்உயர்வு தாழ்வு பார்க்காமல், பண்பான முறையில் உரையாடினால்...நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதற்கு இன்னொரு உதாரணத்தை இங்கு காண்கிறோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 21 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம், இதுபோன்றே அனைத்து விவாதங்களிலும், நன்முறையில் பண்பாக உரையாடி, தமிழ் மொழியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மகிழ்ச்சி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:11, 27 நவம்பர் 2013 (UTC)
விவாத முடிவின் படி கட்டுரையின் தலைப்பை புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் என்ற பாரசீக மூல மொழியில் மாற்றியுள்ளேன். அனைவருக்கும் நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 23:42, 27 நவம்பர் 2013 (UTC)
தமிழில் அல்லாமல் இவ்வாறு தலைப்பிடுவது தான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு சிறந்தது என நீங்கள் கருதினால் அவ்வாறே தலைப்பிடுங்கள். ஆனால் செல்வா கேட்டுக் கொண்டது போல இதன் தமிழாக்கத்தை அல்லது இதன் விளக்கத்தை கட்டுரையில் ஏதாவதொரு ஓரிடத்தில் தந்தால், இந்த மொழி அறியாதோருக்குப் பிரயோசனமாக இருக்கும். அல்லது ஏதோ ஒரு கட்டுரையில் இதுவும் ஒன்றாக இருந்து விட்டும் போகும் அவ்வளவு தான்.--Kanags \உரையாடுக 09:07, 15 சனவரி 2014 (UTC)
Return to "புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்)" page.