வாருங்கள்!
வணக்கம்!!
இப்பயனர் உடல் சுகவீனம் காரணமாய் தனது கிராமத்திற்கு 2013 ஜனவரி 17முதல் விக்கி விடுமுறையில் சென்றுள்ளார். அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளையும் தமிழர் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்.
தொகுப்பு

தொகுப்புகள்


1 * 2 * 3
எனது பேச்சுப் பக்கத்திற்கு வந்த
அன்பினும் இனியவரே! வணக்கம்!!. என் பேச்சுப் பக்கத்திற்கு வந்த உங்களை வரவேற்கிறேன். என் பேச்சுப் பக்கத்தில் எனக்கு சேதி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இது உதவும்.


ஆலோசனை தேவை

தொகு

வணக்கம்! சகோதரி!! எனது கைபேசியில் படம் எடுத்தேன் கணினியில் பதிவேற்றும் சமயத்தில் கவனிக்காமல் பெயர்மாற்றம் செய்யாது பதிவேற்றிவிட்டேன். மீண்டும் பெயர் மாற்றம் (எகா: படிமம்:யோக நரசிம்மர்.jpg ) செய்து பதிவேற்றலாமா?--Yokishivam (பேச்சு) 15:48, 13 சனவரி 2014 (UTC)Reply

சந்தேகம்

தொகு

வணக்கம்! சகோதரி!! தவியில் எனது பங்களிப்புகள் அண்மைய மாற்றங்களில் பதிவாவதில்லையே ஏன்? பதிதாக கட்டுரை தொடங்கினால் மட்டுமே பதிவாகிறது, மற்ற கட்டுரைகளில் பங்களிப்பு செய்கிற மாற்றங்கள் பதிவாவதில்லை ஏன்? --Yokishivam (பேச்சு) 17:14, 13 சனவரி 2014 (UTC)Reply

நீங்கள் இறுதியாகப் பங்களித்த அகப்பொருள் தலைவன் கட்டுரையை அண்மைய மாற்றங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. சரிபாருங்கள் சிவயோகி அவர்களே--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:51, 14 சனவரி 2014 (UTC)Reply

மாற்றங்கள் பதிவாகவில்லை

தொகு
நான் இறுதியாகப் பங்களித்த அகப்பொருள் தலைவன் கட்டுரையில் 10.40 பங்களித்துள்ளேன். தங்களின் தகவல் பார்த்த பின் அண்மைய மாற்றங்களை 03.15ல் பார்த்தபோது 10.40 நேரமே பதிவாகவில்லை. 10.14க்கு பயனர்:Booradleyp1/test‎ (வேறுபாடு | வரலாறு) எனவும் 11:10 பாலுறுப்பு ஹேர்பீஸ்‎ (வேறுபாடு | வரலாறு) . . (+26)‎ . . Maathavan (பேச்சு | பங்களிப்புகள்) எனவும் பதிவாகியுள்ளது. இடைப்பட்ட பதிவுகள் எனது கணினித்திரையில் காணமுடியவில்லை. ஒருவேளை உங்களது கணினித்திரையில் தெரிகிறதோ? எனது கணினித்திரையில் "அகப்பொருள் தலைவன்" தடித்த எழுத்துக்களாக தெரிகிறது.--Yokishivam (பேச்சு) 09:57, 14 சனவரி 2014 (UTC)Reply

நீங்கள் அவற்றைச் சிறுதொகுப்புக்களாகச் செய்திருந்தீர்கள். எனது திரையில் அவை இரண்டிற்கும் "அகப்பொருள் தலைவன்" நடுவில் தெரிகின்றது. இங்கு பார்த்தால் உங்கள் தொகுப்புத் தெரியாது. ஆனால் இங்கு தெரியும். அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் அண்மைய மாற்றங்களின் தேர்வுகள் பகுதியில் மாற்றங்களைக் காட்டு என்பதற்கு அடுத்ததாக வரும் சிறிய தொகுப்புகளை காட்டு என்பதில் காட்டு என்ற இணைப்பைச் சொடுக்குவதன் (click) மூலம் உங்கள் தொகுப்பைக் காணலாம், இப்போதுசிறிய தொகுப்புகளை மறை என்பது அவ்விடத்தில் தெரியும்.

சிறுதொகுப்பைத் தவிக்க தொகுத்தல் பக்கத்தில் சுருக்கம்: என்பதற்குக்குக் கீழுள்ள இது ஒரு சிறு தொகுப்பு இற்கு முன்னுள்ள சரி அடையாளத்தை எடுத்துவிடுங்கள்

//எனது கணினித்திரையில் "அகப்பொருள் தலைவன்" தடித்த எழுத்துக்களாக தெரிகிறது// நீங்கள் அக்கட்டுரையை உங்கள் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதால் தடித்த எழுத்துக்களாகத் தெரிகின்றது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:03, 14 சனவரி 2014 (UTC)Reply

தெரியாது

தொகு

அன்ப! ஸ்ரீகர்சன்!! சுறவம் (தை)முதல் நாள் வாழ்த்து!!! எனது பயனர் கணக்கில் இருக்கும் போது, எனது பங்களிப்புகள் அண்மைய மாற்றங்களில் தெரியாது. மாறாக வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகும். இதனை பயனர் பாவல் என்னை சந்திக்க வந்தார் அவர்தான் அவரது பயனர் கணக்கில் அண்மைய மாற்றங்களை சொடுக்கி அகப்பொருள் தலைவன் கட்டுரையில் ஏற்பட்ட மாற்றங்களை காண்பித்தார் சந்தேகங்களை போக்கினார்.--Yokishivam (பேச்சு) 16:13, 14 சனவரி 2014 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு

தொகு



மேற்கு கங்கர்கள்

தொகு

கட்டுரையை ஆங்கில விக்கியுடன் இணையுங்கள், தானி தானாக மற்ற கட்டுரைகளை (ஆங்கிலத்தையும்) இங்கு இணைத்து விடும். இதற்கு 3 கட்டுரைகள் உருவாகிவிட்டது. முன்பு இணைந்திருந்தீர்களா என்று தெரியாது. மெட்டா விக்கி வந்ததும் பழைய கட்டுரைகளுக்கு சிக்கல் ஆகிவிட்டது.--குறும்பன் (பேச்சு) 02:29, 10 பெப்ரவரி 2014 (UTC)

முதற்பக்க அறிமுகம் வேண்டல்

தொகு

வணக்கம் யோகிசிவம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:40, 7 மே 2014 (UTC)Reply

முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகப் பகுதி மீண்டும் துவங்க இருப்பதால் ஒரு நினைவூட்டல் :) --இரவி (பேச்சு) 08:13, 2 ஆகத்து 2014 (UTC)Reply
வணக்கம். தற்போது உங்கள் உடல்நலம் எப்படி உள்ளது? ஓய்வு கிடைக்கும் போது இதனை மட்டும் தொகுத்துத் தந்தால் முதற்பக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தி மகிழ்வோம். நன்றி.--இரவி (பேச்சு) 07:33, 2 பெப்ரவரி 2015 (UTC)

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்

தொகு

யோகிசிவம். இதில் உள்ளவை ப்ரும்பாலும் வேறு தனிக்கட்டுரைகளாக உள்ளன. நீங்கள் கொடுத்த கருவிநூலில் தேசம் எனக் குறிக்கப்பட்டிருந்தாலும் நாம் இங்கு நாடு என்றுதான் எழுத வேண்டும். மீண்டும் 56ல் எவை எவை பற்றி ஏற்கனவே கட்டுரைகள் இருக்கோ அவற்றில் அதைச் சேர்த்து வழிமாற்று ஏற்படுத்தி விடுங்கள். மேலும் சீனதேசம் புராதன இந்தியாவின் பகுதி போன்ற பின்பதை இது ஏற்படுத்துகிறது என்பதால் இதை யாரும் ஏற்கமாட்டார்கள். ஏதோ ஒரு நூலில் ஒரு ஆசிரியர் அப்படி எழுதிவிட்டார் என்பதற்காக அதை அப்படியே எழுதக் கூடாது.

மேலும் மகா ஜனபதங்கள் கட்டுரையிலும் சில உள்ளன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:25, 4 பெப்ரவரி 2014 (UTC)

கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூல்

தொகு

வணக்கம் யோகிசிவம். கொங்கு தேச ராஜாக்கள் (நூல்) என்னும் வரலாற்றுக்கு புறம்பான நூலில் இருந்து அப்படியே அனைத்து மன்னர்களின் புராணக் கதைகளை வரலாறு போல் எழுதி இருக்கிறீர்கள். அதிலேயே 27 மன்னர்களுக்கும் 27 கட்டுரைகள் வரலாறு போல் எழுதி உள்ளீர்கள். இந்த முறை விக்கியில் ஏற்கத்தக்கது அல்ல.

ஏற்கனவே புராதன இந்தியா என்னும் நூலில் இருந்து வரலாறு பொல் எழுதிய கட்டுரைகள் நிறைய எழுதி உள்ளதை நான் திருத்தும்படி கேட்டுள்ளேன். தொன்மவியல் கட்டுரைகளை எப்படி விக்கியில் எழுதுவது என்பதற்கு கீழே 2 கட்டுரைகளை தந்துள்ளேன். பார்க்கவும்.

  1. தொன்மவியல் பாண்டியர்
  2. பாண்டியர் செப்பேடுகள்

நானும் தொனமங்களை வரலாறு போல் விக்கியில் எழுதியவன் தான். ஆனால் நக்கீரன், பாஹிம், கனகு, சோடாபாட்டில் போன்றோர் சரியாக வழிகாட்டி எழுத வைத்தனர். இது விக்கியில் உள்ளவர்களுக்கு வழக்கமாக ஏற்படுவதுதான் என நினைவுறுத்துகிறேன். உங்களுக்கு நேரம் இருக்கும் போது கூறவும். நான் இதில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமெனக் கூறுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:01, 5 சூன் 2014 (UTC)Reply

பயனர்:Yokishivam கங்கநாட்டை ஆண்ட அரசர்களை எல்லாம் கொங்குநாட்டை ஆண்டவர்களாக பல கட்டுரைகளில் எழுதியுள்ளீர்கள். கேட்டு மூன்று ஆண்டுகள் ஆகிற்று. நீங்கள் எதையும் மாற்றியதா தெரியலை. அதனால் கொங்கு தேச ராஜாக்கள் நூலில் வரும் ரெட்டி வம்சம் ஒரு தொன்ம கற்பனை வம்சம்னு மாத்தப்போறேன்.

அதே போல கங்க வம்ச அரசர்களின் பட்டியலில் உள்ள அரசர்களின் கட்டுரைகளில் கொங்கு நாடு என்பதை கங்கநாடு என்றும் மாத்தப்போறேன்னு தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி இது போன்ற ஒரே நூலில் வரும் அரசர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தால் இந்தரக கட்டுரைகளில் அனுபவமுள்ளவர்களை கேட்டுவிட்டு எழுதுவது சிரமங்களை தவிர்க்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:34, 25 சூலை 2017 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் Yokishivam!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:03, 30 திசம்பர் 2014 (UTC)Reply

நன்றி ஆதவன்

தொகு

அன்பு தம்பி ஆதவன் தங்கள் அழைப்பிற்கு நன்றி!!! நான் தற்போது உடல் நலமின்றி ஓய்விலுள்ளேன். கூடிய விரைவில் விக்கியில் வலம் வருகிறேன். அதுவரை கொஞ்சம் என்னை விட்டுவிடுங்கள்...நன்றி."Yokishivam (பேச்சு) 12:44, 7 சனவரி 2015 (UTC)"Reply

      • இன்று யாரும் வீட்டில் இல்லை அதனால் சிறிது நேரம் கிடைத்த வாய்ப்பு தங்களுக்கு சின்ன பதில் நன்றி மீண்டும் விரைவில் சந்திப்போம்."Yokishivam (பேச்சு) 12:49, 7 சனவரி 2015 (UTC)"Reply
உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். மீண்டும் சிறப்புடன் பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 15:20, 11 சனவரி 2015 (UTC)Reply

எப்போதும் வென்றான்

தொகு

எப்போதும் வென்றான் என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரை இருந்திருக்கின்றது. நீங்கள் உருவாக்கிய கட்டுரையையும் அதனையும் இணைத்திருக்கின்றேன். திருத்த வரலாற்றைப் பார்க்கவும். --மதனாகரன் (பேச்சு) 03:37, 29 ஏப்ரல் 2015 (UTC)

நன்றி

தொகு

எப்போதும் வென்றான் என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு கட்டுரை இருந்ததை நான் கவனிக்கவில்லை மதனாஹரன். இணைத்ததற்கு நன்றி.--Yokishivam (பேச்சு) 13:30, 30 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

தொகு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:52, 7 மே 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:29, 8 சூலை 2015 (UTC)Reply

தொகுக்கப்படுகிறது

தொகு

வணக்கம், தொகுக்கப்படுகிறது வார்ப்புருவைப் பல கட்டுரைகளில் இணைத்து வருகிறீர்கள். ஒரே நேரத்தில் இவ்வாறு பல கட்டுரைகளில் இவ்வார்ப்புருவை சேர்ப்பதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன். ஒன்றை முடித்த பின்னர் மற்றையதைத் தொடங்குங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:06, 19 சூலை 2015 (UTC) வணக்கம் கனக்ஸ்-சில புள்ளி விபரங்கள் சேகரித்து முழுமையடையாமல் உள்ளதால் தொகுக்கப்படுகிறது வார்ப்புருவை இட்டுள்ளேன், பொருத்தருள்க நன்றியுடன் --Yokishivam (பேச்சு) 02:11, 19 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான்

தொகு

இன்று விக்கி மாரத்தான் என்பதால் கட்டுரைகளை எழுதிவருகிறேன், புதன் அன்று புள்ளி விபரங்கள் முமையடையும், கட்டுரைகளில் இணைத்து விட்டு தொகுக்கப்படுகிறது வார்ப்புருவை நீக்கிவிடுகிறேன். நன்றியுடன் --Yokishivam (பேச்சு) 02:15, 19 சூலை 2015 (UTC)Reply

பழனி வட்டம்

தொகு

வணக்கம். ஊராட்சிகளாக இல்லாமல், பழனி ஊராட்சி ஒன்றியத்தின் ஏதாவது ஒரு ஊராட்சியைச் சேர்ந்த கிராமமாக அமையும் ஊர்களின் கட்டுரைகளில்,

\\பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்)\\ என்பதற்குப் பதில், \\பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ____ ஊராட்சியில் அமைந்த ஒரு வருவாய்க் கிராமம்\\ என இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

உங்களுக்கு ஒவ்வொரு கிராமம் குறித்தும் மிகச்சரியான விவரங்கள் தெரிந்திருப்பதால் மேலுள்ளவாறு மாற்றினால் நன்றாக இருக்கும்.--Booradleyp1 (பேச்சு) 15:43, 20 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:15, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தொகு

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 15:12, 28 சூலை 2015 (UTC)Reply

படிமங்கள்

தொகு

[[படிமம்:Palace-18.jpg|thumbnail|ஒப்பீடு: நீங்கள் பதிவேற்றிது]]

 
ஒப்பீடு: பொதுவகத்தில் ஏற்கெனவே உள்ளது.

படிமங்களைப் பதிவேற்றுவதற்கு நன்றி. எனினும் சில கருத்துக்களை இனிவரும் நாட்களில் கருத்திற்கொள்ளுங்கள்.

  • சொந்தப் படிமங்களாயிருப்பின் பொதுவகத்தில் பதிவேற்றுங்கள். இங்கு நியாயப் பயன்பாட்டுப்படிமங்களை மட்டும் பதிவேற்றுங்கள்.
  • இன்னொருவரின் ஆக்கத்ததை வருடி மூலம் அல்லது ஒளிப்படம் எடுத்தல் போன்ற செயற்பாடுகளால் பெறப்பட்ட படிமங்கள் சொந்தப்படிமங்களாகக் கருதப்படமாட்டாது. அவை பதிப்புரிமை மீறலாகும்.
  • படிமங்கள் தெளிவான இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மங்கலான, தெளிவாற்ற, ஒரே தோற்றம் கொண்ட படிமங்கள் போன்றவற்றை தயவுசெய்து பதிவேற்ற வேண்டாம். எ.கா: படிமம்:Palace-17.jpg
  • படிமங்களைப் பதிவேற்று முன் பொதுவகத்தில் உள்ளதா என நிச்சயித்துக் கொள்ளுங்கள். எ.கா: மைசூர் அரண்மனை - இதற்குத் தேவையான பல நல்ல படிமங்கள் பொதுவகத்தில் ஏற்கெனவே உள்ளன.
  • கட்டுரையில் தேவையான படிமங்களை மட்டுமே இணையுங்கள். விக்கிப்பீடியா கட்டுரைகள் களைகக்களஞ்சியங்கள், அது படக்காட்சித் தொகுப்பல்ல.

--~AntanO4task (பேச்சு) 04:06, 21 அக்டோபர் 2015 (UTC)Reply

படிமங்களின் பெயர்களை பொதுவாக வைக்க வேண்டாம். எகா: photo0001.jpg, kovil.jpg, திருக்கோயியில்01.jpg. இதனால், பொதுவகத்திற்கு நகர்த்த முடியாது போய்விடும். எற்கனவே உள்ளவற்றின் பெயர்களை சரியான அல்லது தெளிவான பெயர்களுக்கு மாற்றி உதவுங்கள். நன்றி. --~AntanO4task (பேச்சு) 04:32, 21 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆலோசனைக்கு நன்றி

தொகு

நான் தங்களைப் போன்றோ பிற பயனர்களைப் போன்றோ கணினியில் தேர்ச்சி பெற்றவனல்ல மேலும் எனது 54 வயதில் கற்றுக்கொள்ளத் தொடங்கி அதன்பிறகு விக்கியில் எழுதத் தொடங்கினேன், பொதுவகத்தில் படிமங்களை தேடுவது எப்படி? படிமங்களுக்கு பெயரிடுவது எப்படி? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆகவே தங்களின் மதிப்புமிக்க ஆலோசனைகளை நிச்சயமாக கவனத்தில் கொள்வேன், அவ்வப்போது எனது கட்டுரைகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் பட்சத்தில் திருத்திக்கொள்வேன், கற்றுக்கொள்வேன். தேடாது கிடைத்த திருவருள் நிதி அல்லவா இந்த கட்டற்ற கலைக்களஞ்சியம் இதை ஒருபோதும் பாழ்படுத்தமாட்டேன். நன்றி--Yokishivam (பேச்சு) 23:23, 24 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆலோசனை தேவை

தொகு

வணக்கம் ரவி பங்களிப்பாளர் அறிமுகத்தில் கூடுதல் கட்டுரைகளை சேர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளீர்கள், எவ்வாறு சேர்ப்பது என தெரிவித்தால் மகிழ்ச்சி. நன்றியுடன் --Yokishivam (பேச்சு) 12:12, 28 அக்டோபர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/யோகிசிவம் இங்கு சேருங்கள். --AntanO 04:11, 29 அக்டோபர் 2015 (UTC)Reply

நன்றி

தொகு

கட்டுரைகள் இணைத்துள்ளேன், @ Antan அவர்களே நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 13:54, 4 நவம்பர் 2015 (UTC)Reply

முதற்பக்க அறிமுக வாழ்த்துகள்

தொகு

வணக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம். தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொண்டு இயன்ற போது தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:57, 16 நவம்பர் 2015 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 16 நவம்பர் 2015 (UTC)Reply

முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டமையறிந்து வாழ்த்துக்கள், --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:55, 16 நவம்பர் 2015 (UTC)Reply

வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:17, 18 நவம்பர் 2015 (UTC)Reply

உடனடி கவனத்திற்கு

தொகு

#புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், #புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இந்த இரண்டு பகுதியில் உள்ள கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:55, 31 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:29, 16 மார்ச் 2017 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Yokishivam&oldid=3185217" இலிருந்து மீள்விக்கப்பட்டது