பயனர் பேச்சு:Yokishivam/தொகுப்பு01

வாருங்கள்!

வாருங்கள், Yokishivam, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--அராபத் (பேச்சு) 05:10, 18 ஏப்ரல் 2013 (UTC) வருக! தாங்கள் எழுதி உள்ள நானும் இல்லை நீயும் இல்லை என்ற கட்டுரை கலைக்களஞ்சிய உள்ளடக்கமன்று. எனவே இது நீக்கப்பட்டுவிடும். இது குறித்து வருந்த வேண்டாம். நான் எழுதிய முதல் கட்டுரையும் நீக்கப்பட்டது. மாயை என்ற கட்டுரையை கலைக்களஞ்சிய நடையில் நீங்கள் விரிவாக்கலாம். இன்னும் பல ஆயிரம் கட்டுரைகள் நீங்கள் எழுதுவதற்காய்க் காத்திருக்கின்றன. நன்றி ! உதவிக்கு இங்கே சொடுக்கவும். நன்றி! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 15:42, 18 ஏப்ரல் 2013 (UTC)

மகிழ்ச்சி தொகு

தாங்கள் விக்கியில் கட்டுரை எழுதுவதில் மகிழ்ச்சி. தாங்கள் எழுதிய கட்டுரை:நில அளவை, விக்கியில் கட்டுரை எழுதும் போது முதலில் குறைந்தது மூன்றுவரிகளை எழுதுங்கள், பிறகு நேரம் கிடைக்கும் போது மேம்படுத்தலாம், நாங்களும் உதவுவோம். நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:30, 18 ஏப்ரல் 2013 (UTC)


தமிழில் எழுத தொகு

வணக்கம் யோகிசிவம் அவர்களே . விக்கியில் தாங்கள் பங்களிக்க வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் பக்களித்த நில அளவை கட்டுரையில் ஒரு வரி கூட இல்லாமையால் நீக்கினேன். தாங்கள் தட்டச்சிட முடியவில்லை எனக் கூறியுள்ளீர்கள்

தங்களின் தொகுக்கும் பக்கத்தின் மேலே 'தமிழில் எழுத' என்ற ஒரு வாய்ப்பு உள்ளது அதில் நீங்கள் தமிழ் எழுத்துப் பெயர்ப்பு என்பதனைத் தேர்ந்தெடுத்தால் ஒலியியல் முறையில் உதாரணமாக yoogisivam எனத் தட்டச்சிட்டால் 'யோகிசிவம்' என தமிழ் எழுத்துகள் கிடைக்கும். முயன்று பாருங்கள்.

தாங்கள் பழகி கட்டுரைகளை உருவாக்கி பின்னர் முதன்மை வெளிக்கு நகர்த்தலாம். இதற்கு பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் கிளிக் செய்து தொகுக்கவும். பின்னர் சேமியுங்கள். தங்கள் கட்டுரை முழுமையடைந்ததும் அதனை நான் உரிய இடத்திற்கு நகர்த்திவிடுகிறேன். உங்களுக்கு உதவ பிற விக்கியர்களும் உள்ளார்கள். ஏதேனும் ஐயம் எனின் இப்பக்க்த்தில் தெரிவித்தால் கூட உதவி கிடைக்கும். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:03, 20 ஏப்ரல் 2013 (UTC)  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் தங்களது பெயர் பதியப்பட்டிருக்கும் எனவே கட்டுரையில் பெயர் குறிப்பிடத்தேவையில்லை இங்கு அதைப்பார்க்கலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 19:08, 20 ஏப்ரல் 2013 (UTC)

ஐயா! விக்கியில் கட்டுரைகளைத் தொக்குத்தவரின் பெயர் இடம்பெறுவதில்லை. எனவே நீங்கள் தொகுத்த பக்கங்களில் தங்களின் கையெழுத்தை இடவேண்டாம். மேலும் உரையாடல் பக்கங்களில் தாங்கள் கையொப்பமிட விரும்பினால் 'தொகு' பக்கத்தின் நீலப்பட்டையில் மேலுள்ள எழுதுகோல் குறியீட்டை அழுத்தினால் தங்களின் கையொப்பம் பதிவாகிவிடும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:12, 20 ஏப்ரல் 2013 (UTC)

'சத்தியவதி' தொடர்ந்து தொகுக்க முடியுமா?யோகிசிவம்

எந்தக் கட்டுரையையும் தொகுக்கலாம் அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை--சங்கீர்த்தன் (பேச்சு) 07:00, 22 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி சங்கீர்த்தன் அவர்களே! உள் தலைப்பிடுவது குறித்து ஆலோசனை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.--14.195.51.0 07:23, 22 ஏப்ரல் 2013 (UTC) வணக்கம் பார்வதிஸ்ரீ அவர்களே!தாங்கள் வழங்கிய ஆலோசனைப் படி பயனர்:Yokishivam/test என்ற பக்கத்தில் நில அளவை என்ற கட்டுரை தொகுக்கப் பட்டது சேமித்தேன் காணவில்லை.--14.195.51.0 07:33, 22 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம்


வணக்கம் ஐயா! நீங்கள் ஒவ்வொரு முறையும் புகுபதிகை செய்தபின்பு தொகுக்க ஆரம்பிக்கவும். அப்பொழுதுதான் தங்கள் பெயருடன் கையொப்பம் பதிவாகும். மேலும் நீங்கள் அப்பக்கத்தைச் சரியாக சேமிக்கவில்லை என நினைக்கிறேன். பயனர்:Yokishivam/test தற்போது இந்தப் பக்கத்தைத் தொகுத்துச் சேமியுங்கள். விக்கிப்பீடியாவிற்கேற்ப பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

உள் தலைப்பிடுவதற்கு (== தலைப்பு ==), (=== தலைப்பு ===, (=== தலைப்பு ===)) என்பனவற்ருள் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். தொகுக்கும் பக்கத்தின் மேலுள்ள A , A என்று தொடங்கும் பட்டையில் கருவிகள் ஒவ்வொன்றையும் செயற்படுத்திப் பார்க்கவும். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:44, 22 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம் தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
கட்டுரைகளில் புதிதாக தகவல்களைச் சேர்த்து அசத்துகிறீர்கள்! உங்கள் எழுத்துநடை சிறப்பாக உள்ளது. மேலும், பல கட்டுரைகளில் திருத்துங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நன்றி! தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:00, 22 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வணக்கம் தமிழ்க்குரிசில் அவர்களே! விக்கிப்பீடியாவிற்கு புதிய பயனர் நான் எனக்குள்ள படிப்பறிவு,பட்டறிவு இரண்டையும் மேம்படுத்த அறிவுசார் உலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும் அவ்வளவே. எனது முதல் கட்டுரையின் தலைப்பு தொகுக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தம்.அதுதான் என்னை விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு எழுதத் தூண்டுகிறது.புதிய தலைப்புக் கட்டுரையை தொகுக்க வேண்டும்!!!.நன்றி- யோகிசிவம்

சத்தியவதி கட்டுரையில் பல தகவல்கள் தங்களுடையதே! அருமையாக உள்ளது. மேலும் பல கட்டுரைகளில் திருத்தங்கள் செய்து உதவுங்கள். யோசனைகள் இருந்தால் தெரிவியுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:17, 24 ஏப்ரல் 2013 (UTC)

அன்புத் தோழரே!(இப்படி அழைப்பதில் தவறில்லையே?)சத்தியவதியில் எனக்கு தெரிந்த தகவல்களை சொல்லியுள்ளேன்.மகாபாரத்தில் உள்ள எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளை விரிவாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன். எஞ்சியுள்ள குருங்கட்டுரைகளின் தகவல்களை சத்தியவதியில் சொல்லிவிட்டால் தகவல்களை திரும்ப,திரும்ப படிக்கிறபோது சலிப்பாகிவிடும்!!எனவே சத்தியவதியை உரைதிருத்தியும்,உரிய இடத்திற்கு நகர்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.நன்றி --யோகி சிவம் 07:37, 24 ஏப்ரல் 2013 (UTC)--115.118.93.15 07:27, 24 ஏப்ரல் 2013 (UTC)

  விருப்பம் உங்கள் விருப்பப்படியே அழையுங்கள்!! மேலும் தகவல்கள் தந்து உதவுங்கள். தமிழக அரசு, தமிழகரசின் துறைகள், தமிழ்நாடு புவியியல் தொடர்பான கட்டுரைகளைக் கண்காணித்து உரை திருத்தித் தர வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:30, 24 ஏப்ரல் 2013 (UTC)

அன்புத் தோழர்களே! (தமிழ்க்குரிசில்,பார்வதிஸ்ரீ)அல்லது தமிழ் விக்கியன்பு நண்பர்களே! சத்தியவதியை உரிய இடத்திற்கு நகர்த்தவும்.--யோகி சிவம் 13:17, 24 ஏப்ரல் 2013 (UTC)யோகிசிவம் (பேச்சு)

சத்தியவதியில் இருந்த பாண்டவர்கள், கௌரவர்கள் தொடர்பான உள்ளடக்கங்கள்

பக்கங்களிற்கு நகர்த்தியாயிற்று

  • வியாசர் (அந்தப்பக்கத்திற்கு போக நீல நிறத்தில் உள்ளதலைப்பை சொடுக்கவும் ) எனும் பக்கம் விக்கியில் உண்டு வியாசர் தொடர்பான தகவல்களை அங்கு சேருங்கள், நன்றி தொடர்ந்து எழுதுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 18:33, 24 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி!சங்கீர்த்தன் அவர்களே! குருங்கட்டுரை பகுப்பில் சத்தியவதி இருக்கிறாள்!?.கொஞ்சம் கவனியுங்கள்.--யோகி சிவம் 03:17, 25 ஏப்ரல் 2013 (UTC) (பேச்சு

அதை தமிழ்க்குரிசில் சரிசெய்து விட்டார்.:)--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC)

உதவி தொகு

இந்த வார்ப்புருவில் உள்ள கட்டுரைகளை முடிந்தால் விரிவுபடுத்தி உதவுங்களேன்..:)

--சங்கீர்த்தன் (பேச்சு) 09:01, 25 ஏப்ரல் 2013 (UTC) அன்புத் தோழர்கள்! சங்கீர்த்தன், தமிழ்க்குரிசில் இருவருக்கும் நன்றி!! நான் ஏற்கனவே தமிழ்க்குரிசில் அவர்களிடம் உறுதியளித்துள்ளேன்.கூடிய விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.எனக்கு தட்டச்சு செய்வது மிகவும் தாமதமாகிறது.தற்போது தட்டச்சு பயிற்சி பெற தொடங்கியுள்ளேன்.விரைவில் விரிவுபடுத்திவிடுகிறேன்.நன்றி!--யோகி சிவம் 17:55, 25 ஏப்ரல் 2013 (UTC)பயனர்:யோகிசிவம் (பயனர் பேச்சு:யோகிசிவம்பேச்சு)


தங்கள் பார்வை தேவை தொகு

ஐயா இந்தப்பக்கங்களை ஒரு முறை பார்வையிடுங்கள். தங்களுக்கு உதவியாய் இருக்கும்.

நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:23, 26 ஏப்ரல் 2013 (UTC)

நன்றி பார்வதிஸ்ரீ அவர்களே!--யோகி சிவம் 15:11, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)

நீங்கள் விரும்பினால், கையெழுத்தில் உங்கள் பெயரை வைத்துக் கொள்ளலாம் (பயனர் பெயர் மாறாது. கையொப்பத்தில் மட்டும் விரும்பிய பெயரை வைத்துக்கொள்ளலாம்.). சிலர் வெவ்வேறு வண்ணங்களிலும், குறியீடுகளிலும் அழகழகான கையொப்பம் வைத்திருக்கிறார்கள் என்ன! உங்களுக்கும் விருப்பம் தானே!!!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 26 ஏப்ரல் 2013 (UTC).
  விருப்பம் நன்றி! தமிழ்க்குரிசில் அவர்களே!-- 16:18, 26 ஏப்ரல் 2013 (UTC) யோகிசிவம் (பேச்சு)

காமன்சு/ஊடக நடுவம் தொகு

வணக்கம்! தங்கள் கட்டுரைகளில் அழகாக படங்கள் சேர்க்கலாம். கட்டுரைக்கு அழகு சேர்க்கும். பெரும்பாலும் பொதுவான தலைப்புகள் தொடர்புடைய படங்கள் காமன்சில் கிடைக்கும். Wikimedia Commons என்பதை விக்கி ஊடக நடுவம் என்று அழைக்கிறோம். இங்கே பல படங்கள், ஒலிக் கோப்புகள், காணொளி நிறைந்து காணப்படுகின்றன. தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிப்பது என்பது உட்பட பல்வேறு நாடுகளைப் பற்றிஉஅ ஊடகங்கள் நிறையவே உள்ளன, அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். :) இங்கே சென்று தேடல் பெட்டியில் விரும்பிய தலைப்புகளைத் தேடுங்கள் படங்கள் கிடைக்கும். அந்த படத்தின் பெயரை இங்கே இணைத்தால் படம் கிடைக்கும். பொதுவான தலைப்புகளில் படங்கள் கிடைக்கும். மகாபாரத கதாபாத்திரங்களின் படங்களும் காட்சிகளும் நிறையவே இருக்குமென்று நினைக்கிறேன். பயனுள்ளதாய் இருக்கும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:12, 26 ஏப்ரல் 2013 (UTC)

  • வணக்கம்! தமிழ்க்குரிசில் அவர்களே ஆங்கிலப் புலமையும்,பாண்டியத்தியமும் எனக்கில்லை இங்கே அனைத்தும் ஆங்கிலத்திலுள்ளது.தேவையான படங்களை தாங்களே சேர்த்து விடுங்கள் நன்றி!--யோகி சிவம் 03:18, 27 ஏப்ரல் 2013 (UTC)

மறுமொழி தொகு

இதற்கு ஆங்கிலப் புலமை தேவை இல்லை :) அங்கு சென்று preferences (விருப்பத்தேர்வுகள்) ஐ மாற்றிக் கொள்ளலாம். மேலே வலப்பக்கம் உங்கள் பெயருக்கு அடுத்து இருக்கும். (முதலில் அங்கும் நீங்கள் இதே யோகிசிவம் என்ற பெயருடன் புக வேண்டும். அப்போதுதான் மேலே கூறியவை தெரியும்!!!) விருப்பத்தேர்வுகளில் மொழி என்பதில் தமிழைத் தேர்வு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் தெரிவது போலவே எல்லாம் தமிழிலேயே தெரியும். ஆங்கிலம் ஒரு மேட்டரே இல்லை!! நான் கன்னட விக்கிப்பீடியாவையே தமிழில் தான் பார்க்கிறேன். :) (ஒருவேளை சில சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கலாம். அப்படி பார்த்தால் சொல்லுங்கள். மாற்றி விடுகிறேன்.)

இன்னொரு விசயம், புது பத்தியாக எழுத இடைவெளி விட வேண்டாம். அரைப்புள்ளியை (:) இட்டு வரியைத் தொடங்கினால் அதுவே இடம் விட்டு காட்டும். தற்போதைக்கு நானே படங்களை இணைக்கிறேன். நீங்களும் அங்கு பழகிப் பாருங்கள். இங்கே நிறைய கருவிகள் உள்ளன. விரைவில் ஒவ்வொன்றாய் பார்ப்போம். நன்றி!-04:12, 27 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி! தங்கள் பேச்சு புது தெம்பு ஊட்டுகிறது,விக்கியில் உலாவுவது 18 ஏப்ரல் 2013 என்பதால் மன நடுக்கம் உள்ளது.கணிணி தமிழ் எனக்கு? எதையாவது சொடுக்கி ஏதும் தவறு நடந்து விட்டால் விக்கியர்கள் உழைப்பு வீணாகும் என்ற மன பயம் உள்ளது. ஒரு முறை தங்களை நேரில் சந்தித்து உரையாடினால் ஓரளவு தேரிவிடுவேன்.--யோகி சிவம் 04:44, 27 ஏப்ரல் 2013 (UTC)

மறுமொழி தொகு

நான் இங்கு வந்த புதிதில் ஓரளவுக்கே தமிழில் எழுதத் தெரியும். (ஆங்கில வழியில் படித்தேன்.) விக்கி தொழில்நுட்பமும் புதிது, தமிழ்ச் சொற்களும் புதிது. ஒன்றுமே புரியவில்லை. இருக்குற எல்லா ஆப்ஷன்களையும் அமுக்கி விளையாடிட்டேன். :) பின்னர் ஒவ்வொரு பயனரும் உதவி செய்தனர். ஊக்கப்படுத்தினர். நானும் பேச்சுப் பக்கங்களில் கலாய்ப்பதும் எனக்கு தெரிந்ததை சொல்லியும் காலத்தை ஓட்டினேன்.

வந்து சேர்ந்து ஒரு வருடம் முடியப் போகிறது. நல்ல தமிழில் எழுதக் கற்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கங்களில் எனது கருத்துக்களைச் சொல்லி, பிறர் கருத்துக்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டேன். பின்னர், ஆங்கிலத்தில் இருந்து கட்டுரைகளை தமிழாக்கம் செய்தேன். பிற மொழி விக்கிப்பீடியாக்களிலும் தலையைக் காட்டினேன். தமிழின் பிற விக்கிமீடியா திட்டங்களிலும் தலையைக் காட்டினேன். பல கருவிகளை இயக்கக் கற்றுக் கொண்டே. (இவை என்ன என்று பிறகு சொல்கிறேன்.)
கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தை கவனியுங்கள். என்ன உரையாடுகிறார்கள் என்று பாருங்கள். உங்களுக்கு தெரிந்ததை எங்களுக்கு சொல்லித் தாருங்கள். புதியவர்களுக்கு பதக்கம் வழங்கிப் பாராட்டுங்கள்.
இங்கு உள்ள நடைமுறைகள் கடினமாக இருக்கலாம். சில நாட்களில் பழகிவிடும். எதற்கும் தயங்க வேண்டாம். தவறாக செய்துவிட்டாலும், மீளமைத்தல் என்ற வசதியின் மூலம் முன்பிருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். உழைப்பு வீணாகாது :) எப்போது சந்தேகம் இருந்தாலும், கேளுங்கள். பதில் சொல்வோம். எங்காவது தவறிருந்தால் சொல்லுங்கள் திருத்தி விடலாம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:25, 27 ஏப்ரல் 2013 (UTC)

உதவி தொகு

அன்புத் தோழர்கள்! தமிழ்க்குரிசில்,சங்கீர்த்தன்,ஆகியோருக்கு வணக்கம்!! மகாபாரத்தில் உள்ள குறுங்கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள்ளது,அவற்றை Google வலையில் காண்பது எப்படி? தயவு செய்து உதவுங்கள். --யோகி சிவம் 15:02, 28 ஏப்ரல் 2013 (UTC)
நான் அறிந்தவரையில், விக்கிப்பீடியாவில் புதுக் கட்டுரை உருவானால், அது மூன்று நாட்களுக்குப் பிறகே கூகுள் தேடலில் சிக்கும். நேற்றோ, இன்றோ உருவான கட்டுரை என்றால், சில நாட்கள் பொறுத்திருங்கள்.

(நீங்கள் கூகுளில் தேடும் சொல் விக்கிப்பீடியாவில் இருந்தால், தேடலின் முதல் முடிவாக விக்கி கட்டுரை தெரியும்.) -தமிழ்க்குரிசில்

வலைவாசல் சத்தியவதி தொகு

தோழரே, சத்தியவதிக்கு வலைவாசலா!!! வலைவாசல் என்பது குறிப்பிட்ட ஒரு தலைப்புகளில் அல்லது பகுதிகளில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பு. இங்கு ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரால் மட்டும் வலைவாசல்கள் உருவாக்க முடியாது. வேண்டுமெனில், வலைவாசல்:மகாபாரதம் உருவாக்கலாம். மற்றவர்களும் உதவுவர்.--அராபத் (பேச்சு) 04:28, 29 ஏப்ரல் 2013 (UTC)

அன்புத் தோழரே வணக்கம்!!எனது பேச்சுப் பக்கத்தில் தோழர் தமிழ்க்குரிசில் எனக்கு மறுமொழியில் சொன்ன உலாவுதலில் வந்த விளைவு! மகாபாரதத்தில் உள்ள குருங்கட்டுரைகளை தொகுத்தேன்.எனது நண்பர்கள் நச்சரிப்பால் அவற்றை google வலைப்பகுதிக்கு நகர்த்த எடுத்த முயற்சியால் விளைந்தது தான் வலைவாசல் சத்தியவதி மீண்டும் சத்தியவதியாகவே மாற்றிவிட்டேன். --யோகி சிவம் 05:07, 29 ஏப்ரல் 2013 (UTC)

நல்லது தோழரே. உங்களது மகாபாரத கட்டுரைகள் அருமை. விடாது தொடர்ந்தவன்னம் உள்ளேன் உங்கள் கட்டுரைகளை :)--அராபத் (பேச்சு) 05:52, 29 ஏப்ரல் 2013 (UTC)
யோகிசிவம், நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள்!! வலைவாசல் என்ற சொல்லுக்கும் கூகுள் வலைக்கும் சம்பந்தமில்லை. விக்கிப்பீடியா வேறு, கூகுள் வேறு... இங்குள்ள கட்டுரைகள் இங்கேயே இருக்கும். என்ன செய்தாலும் கூகுளுக்கு போகாது. ஆனால், விக்கிப்பீடியாவின் அனைத்து கட்டுரைகளும் (எந்த தலைப்பில் இருந்தாலும்), கூகுளில் தேடினால் கிடைக்கும். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பக்கம் கூட கூகுளில் தேடினால் கிடைக்கும்!! (வலைவாசல் பற்றி பிறகு சொல்கிறேன்.) மற்றபடி, எதற்கும் தயங்க வேண்டாம். இங்கே நிகழ்ந்த தவறு போல் இருந்தாலும், பரவாயில்லை. மீண்டும் பழையபடி மாற்றிவிடலாம். தயங்காமல் செய்து பழகுங்கள். தவறான தொகுப்பாய் இருந்தால், என்னைப் போன்ற சாதாரணப் பயனர்கள் பழைய படி மாற்றிவிடலாம். தலைப்பில் தவறு நேர்ந்தாலோ, தலைப்பு மாற்றக் குழப்பம் ஏற்பட்டாலோ, கட்டுரைகளை இணைக்க வேண்டி இருந்தாலோ நிர்வாகிகள் திருத்தி உதவுவர். பழைய தவறுகளில் இருந்துதானே நாம் புதியவற்றைக் கற்கிறோம்.! ) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 29 ஏப்ரல் 2013 (UTC)

நண்பரே நில அளவை பற்றிய விபரங்களை மேலே நீல நிறத்தில் காட்டப்பட்ட நில அளவை பக்கத்தை தொகுப்பதன் மூலம் சேர்க்கலாம், வேறு கட்டுரைகளின் பெயரை மாற்றவேண்டாம், தொடர்ந்து எழுதுங்கள் உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்--சங்கீர்த்தன் (பேச்சு) 12:29, 29 ஏப்ரல் 2013 (UTC) அன்பு நண்பரே நில அளவை என்பது வேலி அல்ல வேலி எனபது நிலத்தின் பரப்பளவைக் குறிக்கும் சொல் ஆகும்.எனவே வேலி(நில அளவை)என்ற பக்கத்தை நில அளவை என மாற்றினேன்.இப்போது தொகுக்கப் பட்டுள்ள நில அளவையை பார்த்தால் தெரியும்!நிலப் பகுதியை அளவை செய்து ஆவணப்படுத்தும்,அது தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் கட்டுரையாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் நன்றியுடன்--யோகி சிவம் 18:13, 29 ஏப்ரல் 2013 (UTC)

வணக்கம் நண்பரே, சந்திப்பதில் மகிழ்ச்சி! பொதுவாக கட்டுரை பற்றிய கருத்துக்களை அவற்றின் உரையாடல் (பேச்சு)ப் பக்கத்தில் எழுதி விடுங்கள். ஏனென்றால், பின்னர் அந்த கட்டுரைகளைப் பற்றிய உரையாடல்களை அறிய யாராவது விரும்பினால் பேச்சுப் பக்கத்தில் பார்த்து அறிவர். தனிப்பட்ட சந்தேகங்களையும் உரையாடல்களையும் நமது பேச்சுப் பக்கங்களில் வைத்துக் கொள்ளலாம். :) ஏதாவது பொது சந்தேகம் ஏற்பட்டால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி பக்கத்தில் கேட்கலாம். எல்லோரும் தங்களது கருத்தைத் தெரிவிப்பர். கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம். :)

நீங்கள் தமிழில் எழுத, தட்டச்சுப் பலகையில் தேடி தேடி அடிப்பதாக எழுதி இருந்தீர்கள். இது முன்பு போல கடினமான செயல் இல்லை. பக்கத்தின் மேலே உள்ள தமிழி்ல் எழுத என்பதை சொடுக்கி, தமிழ் எழுத்துப்பெயர்ப்பு என்பதைத் தேர்வு செய்யுங்கள். இது ஒலிப்பு முறையில் எழுதும். amma என்று எழுதினால் அம்ம என்று வரும். அம்மா என்று வர வேண்டும் என்றால், ammaa என்று தட்ட வேண்டும். இது ஏற்கனவே தங்களுக்குத் தெரிந்திருக்கும். நினைவூட்டல் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:55, 30 ஏப்ரல் 2013 (UTC)

கவனிக்கவும் தொகு

அன்புத்தோழர் தமிழ்க்குரிசில்!! சகுனியில் ஜைன புத்த மதம் கட்டுரையின் அடிக்குறிப்பு கட்டுரையில் உள்ளதே? பாருங்களேன் நன்றி--யோகி சிவம் 16:51, 2 மே 2013 (UTC)

புரியுமாறு சொல்லுங்கள். தவறை திருத்திவிடுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC)Reply

அன்புத்தோழர் தமிழ்க்குரிசில்!! விருப்பாச்சி கோபால் நாயக்கர் கட்டுரைக்கு உரிய புகைப்படங்கள் எனது கைபேசியிலிருந்து கணிணிக்குள் வந்துவிட்டது.ஆனால் படங்களை கட்டுரையில் பதிவேற்ற தெரியவில்லை.கொஞ்சம் ஆலோசனை தேவை நன்றி--யோகி சிவம் 13:10, 3 மே 2013 (UTC)

இந்த உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:13, 3 மே 2013 (UTC)Reply
படிமங்களை விக்கிப்பீடியாவிற்கு தரவேற்றுகிறோம். கட்டுரைகளில் இணைக்கிறோம். ஒரு படம் எத்தனை கட்டுரைகளில் தேவை என்றாலும் இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, India film clapperboard (variant).svg என்ற படத்தை இங்கே இணைக்க விரும்பினால், [[படிமம்:India film clapperboard (variant).svg|80px]] என்று தந்தால்,
 
என்று காட்டும். முயன்று பாருங்களேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:42, 3 மே 2013 (UTC)Reply
சகுனியில்-ஆட்டுக்கடாவுக்கு <ref/*ஜைன மகா பாரதம்</ref>மணம்-என்றுள்ளது,தவிரவும் ஜைன மகா பாரதம் என்பது அடிக்குறிப்பு தானே? கட்டுரைத் தொகுப்பில் உள்ளது மேலும் புகைப் படங்கள் விருப்பாச்சி சென்று பார்த்தும்,செப்பு பட்டையம் இடையகோட்டை பாளைய அரன்மனையில் நானே பார்த்து எனது கைபேசியில் படம் பிடித்தது,மேற்கண்ட புகைப்படங்களை விக்கிபீடியாவிற்குள் பதிவேற்றுவது குறித்துத் தான் கேள்வி எழுப்பினேன்.நண்பர் Kanags உதவி செய்து உரையாடியுள்ளார்.முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றியுடன்--யோகி சிவம் 15:32, 3 மே 2013 (UTC)
அடிக்குறிப்பு பற்றி நான் செய்த தவறு என்ன என்று கூறுங்கள். சரியாகப் புரியவில்லை.

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளில் அடிக்குறிப்பு இட வேண்டும் என்றால் ஒரு வரைமுறை இருக்கிறது. கட்டுரையின் ஒரு வரியில் <ref>ஆதாரம் 1</ref> என்று தந்து, பின்னர் கீழே {{reflist}} என்று தந்தால், ஆதாரம் அடிக்குறிப்பாகக் கீழே காட்டும். நாமாக, மே ஒரு வரியில் (1) எனத் தந்துவிட்டு, கீழே ”↑ ஆதாரம் 1” என்று தரக் கூடாது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:43, 3 மே 2013 (UTC)Reply

நன்பரே! -ஆட்டுக்கடாவுக்கு <ref/*ஜைன மகா பாரதம்</ref>மணம் -என கட்டுரை உள்ளது.சகுனி கட்டுரையை படிக்கவும் பக்கத்தை தயவு செய்து பார்க்கவும் (கட்டுரையை தொகுக்கும் பெட்டியில் தானே மேற்கண்டவாறு இருக்க வேண்டும்?)--யோகி சிவம் 16:19, 3 மே 2013 (UTC)

அடிக்குறிப்பு தொகு

ஐயா <ref/* ஜைன மகா பாரதம்.</ref> --- இதில் <ref>ஜைன மகா பாரதம்</ref> என வர வேண்டும். நீங்கள் தவறுதலாக குறியிட்டிருக்கிறீர்கள் அவ்வளவே. நான் சரி செய்து விட்டேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC)Reply

படங்களைப் பதிவேற்ற தொகு

வணக்கம் ஐயா. கட்டுரை தொடர்பான படங்களை சேர்க்க

தாங்கள் படத்தை "save as" தெரிவு மூலம் முதலில் உங்கள் கணினியில் சேமியுங்கள். விக்கியில் பதிவேற்ற இப்பக்கத்தில் இடப்பக்கம் கருவிப் பெட்டியில் “கோப்பைப் பதிவேற்று” என்றொரு இணைப்பு உள்ளது. அதில் choose file என்பதனை சொடுக்கி தாங்கள் கணினியில் சேமித்த படத்தை இணையுங்கள். பின்னர் அப்பக்கத்தின் கீழுள்ள அணுமதிகளுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கோப்பைப் பதிவேற்று எனற பொத்தானை அழுத்தினால் தங்கள் படம் சேமிக்கப்பட்டுவிடும். நீங்கள் படத்தை எப்பெயரில் சேமித்தீர்களோ அப்பெயரிலே இருக்கும். அதனை தகுந்த கட்டுரைகளில் இணைத்து விடலாம். அதன் மூலம் பதிவேற்றலாம்.

பிற படங்களைப் பதிவேற்றுவதும் இவ்வாறே செய்யலாம். (படங்கள் உங்கள் சொந்த ஆக்கமாக இருக்க வேண்டும். பிற தளங்களில் வெளியான படங்களை உரிய அனுமதியின்றி இங்கு மறு பயன்பாடு செய்ய இயலாது.)

கட்டுரைகளில் படகங்களை இணைக்க தொகு

எடுத்துக்காட்டாக:

தங்களின் படம்- File:Water above the Hogenakkal falls.jpg என வைத்துக்கொள்வோம்.

 
காவேரி

[[File:Water above the Hogenakkal falls.jpg|right|thumb|250px|காவேரி]] என்ற நிரல் துண்டை கட்டுரையில் இடுங்கள் இவ்வாறு செய்தால் வலப்புறம் தெரியும் படம் இணையும்.

இந்த நிரல் துண்டில் "Water above the Hogenakkal falls.jpg" என்பது இணைக்கும் படிமத்தின் பெயர்;

right என்பது படம் வலப்புறம் அமைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. left என மாற்றினால் கட்டுரை இடப்பக்கம் அமையும்.

250px என்பது படத்தின் அளவைக் குறிக்கிறது.

" ஒகேனக்கல் அருவி" என்பது படத்தின் கீழ் இடப்படும் குறிப்பு.

விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி என்ற பக்கத்தில் விவரமான செய்முறை விளக்கம் உள்ளது.

இங்கு உள்ள படிமுறை விளக்கத்தின் மூலம் செய்ய முயலுங்கள்.

படத்தைப் பதிவேற்றிவிட்டு முயற்சி செய்து பாருங்கள். சிக்கல் ஏற்படின் நான் உதவுகிறேன்.

படத்தை நீக்க தொகு

படிமத்தின் உரையாடல் பக்கத்தில் நீக்கக் கோரினால் நிர்வாகிகள் அதனை நீக்கிவிடுவர்கள் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:53, 3 மே 2013 (UTC)Reply

வணக்கம் பார்வதிஸ்ரீ, எனது கைபேசியிலிருந்து எனது கணிணிக்கு கொண்டு வந்துவிட்டேன்.விக்கியில் பதிவேற்ற நண்பர் "Kanags" தகவல் தந்தார் அது படி பதிவேற்றம் முடிந்த்து.பின் படிமங்களைக் காண பக்கத்தை சொடுக்கினால் படங்களை காணவில்லை,மீண்டும் முயன்று பார்க்கிறேன்.படங்கள் Photo.0005,0006,0008,0009,0010 என்ற பெயரில் பதிவேற்றமானது.நன்றி!--யோகி சிவம் 17:13, 3 மே 2013 (UTC)

படத்தை இணைக்கவும் தொகு

வணக்கம் பார்வதிஸ்ரீ, பதிவேற்றம் முடிந்தது.பின் படிமங்களைக் காண படிம பக்கத்தை சொடுக்கினால் பட்டியலில் தாங்கள் பதிவேற்றம் செய்த சப்புலட்சுமிக்கு அடுத்த படியாக- Gopal-1 கோபால் நாயக்கர் வரலாறு பத்தியிலும், Gopal-2 செப்புப் பட்டையம் என வருகிற பத்தியிலும், Gopal-3 இறுதிப்போர் என்ற பத்தியிலும், Gopal-4 அரன்மனை என்ற பத்தியிலும், Gopal-5 மணிமண்டபம் என்ற பத்தியிலும் இணைக்க வேண்டும். நான் இணைத்துப் பார்த்தேன் முடியவில்லை.நன்றியுடன்--யோகி சிவம் 20:11, 3 மே 2013 (UTC)

படிமங்களுக்கு நன்றி. படிமப் பக்கத்திலேயே சுருக்கம் என்பதன் கீழ் படம் பற்றிய விளக்கத்தையும் தந்தால் நன்றாக இருக்கும். உ+ம்: படிமம்:Gopal-3.jpeg என்ற படிமம் எதைப் பற்றியது. அக்கட்டடம் எங்குள்ளது. போன்ற விபரங்களைத் தாருங்கள். மேலும், படிமங்களின் படி அவரது பெயர் கோபால் நாயக்கர் என்று தெரிகிறது. கோபால நாயக்கர் அல்ல. தலைப்பை விருப்பாச்சி கோபால் நாயக்கர் என மாற்றலாமா?--Kanags \உரையாடுக 06:53, 4 மே 2013 (UTC)Reply
ஒரு படத்தை மட்டும் கட்டுரையில் இணைத்திருக்கிறேன். (இச்சிலை எங்குள்ளது?) ஏனையவற்றை நீங்கள் விரும்பிய பகுதியில் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 06:56, 4 மே 2013 (UTC)Reply

நன்றி தொகு

நன்றி கனக்ஸ்!கட்டுரையில் இறுதிப்போர் நடந்த சத்திரப்பட்டி பாளைய அரன்மனையின் முகப்புத் தோற்றம்.திண்டுக்கல்லிலிருந்து பழனிசெல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. கட்டுரையை நான் தொடங்கவில்லை.கட்டுரைக்கான தலைப்பை உள்ளிடும் போது விருப்பாச்சி கோபால் நாயக்கர் என கட்டுரை உள்ளது மேலதிகத் தகவல்களை மட்டுமே நான் தொகுத்தேன், கோபால நாயக்கர் என்பதைவிட கோபால் என்பதே சரியானதாகும் என நினைக்கிறேன்.நன்றியுடன்--யோகி சிவம் 07:12, 4 மே 2013 (UTC) \உரையாடுக

அன்பு கனக்ஸ் படங்களை சரியான இடத்தில் வைத்துள்ளேன்.தலைப்பை கோபால்என்றே மாற்றிவிடுங்கள்,தமிழக அரசின் மணிமண்டபம் குறித்த அறிக்கையில் கோபால் என்றுதான் உள்ளது.நன்றியுடன்--யோகி சிவம் 08:00, 4 மே 2013 (UTC)
அன்பு கனக்ஸ்! சிலை மணிமண்டபத்தில் உள்ளது.--யோகி சிவம் 08:03, 4 மே 2013 (UTC)

செய்தி தொகு

இங்கு தங்களுக்கு ஒரு செய்தியுள்ளது நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:37, 4 மே 2013 (UTC)Reply

இரு கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.--Kanags \உரையாடுக 23:53, 4 மே 2013 (UTC)Reply
நன்றி கனக்ஸ் நண்பரே!. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC)Reply

விக்கித்திட்டம் சைவம் தொகு

தாங்கள் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய கட்டுரைகளை இயற்றுதல், மேம்படுத்துதல் போன்றவற்றோடு விக்கித்திட்டம் சைவத்திற்கு ஆலோசனைகளையும் கூறி மெருகேற்ற வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:10, 6 மே 2013 (UTC)Reply

நன்றி!சகோதரன் ஜெகதீஸ்வரன்--யோகி சிவம் 12:38, 6 மே 2013 (UTC)

சொல்லுங்களேன்! தொகு

எனது பேச்சுப் பக்கத்தை கவனிப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் யோசனை சொல்லுங்களேன்--யோகி சிவம் 04:28, 7 மே 2013 (UTC)

வணக்கம் சிவம்! ஒரு கட்டுரையை தொகுக்கும் போது பெட்டியின் கீழே, "இதை கவனிப்புப் பட்டியலில் சேர்க்கவும்." என்ற ஆப்ஷன் இருக்கும். அதை தேர்வு செய்து கட்டுரையை சேமித்தால், கட்டுரையில் செய்யப்படும் திருத்தங்கள் கவனிப்புப் பட்டியலில் தெரியும். இது கட்டுரை, பேச்சுப் பக்கம் என எல்லாவற்றிற்கும் பொருந்தும். இயல்பாகவே, உங்களுடைய பேச்சுப் பக்கம் உங்கள் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். இல்லை என்றால், அடுத்த முறை தொகுக்கும் போது மேற்கூறியவாறு செய்யுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:46, 7 மே 2013 (UTC)Reply
நன்றி தமிழ்க்குரிசில் அன்புடன்--யோகி சிவம் 05:54, 7 மே 2013 (UTC)
அன்பு கனக்ஸ் உரைவீச்சு என்பது கட்டுரையில் சொல்லியுள்ளது தான் அதனை தொடர்ந்து தொகுக்க வேண்டியுள்ளது விக்கிபீடியா உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு மாற்றிவிடலாம்.நன்றியுடன்--யோகி சிவம் 15:12, 9 மே 2013 (UTC)

சப்த(ஏழு) சிவத் தலங்கள் தொகு

வணக்கம் ஐயா. சப்த(ஏழு) சிவத் தலங்கள் என்ற தலைப்பிற்கும் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கும் தொடர்பே இல்லாதது போல் உள்ளது. செய்யாறு என்ற கட்டுரையில் இடம்பெற வேண்டியவைகளை இக்கட்டுரையில் சேர்த்துவிட்டீர்களா? ஐயம் தீருங்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:01, 17 மே 2013 (UTC)Reply

விபரம் அறிந்தேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 20 மே 2013 (UTC)Reply

விக்கி காமன்சில் படிமம் (நீங்கள் எடுத்த) பதிவேற்ற தொகு

  • த.விக்கிப் பக்கத்தில் இடதுபுறம் பொதுவகம் என்று ஒரு இணைப்பு உள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்தால் விக்கி காமன்ஸ் என்ற பக்கம் ஆங்கிலத்தில் திறக்கும்.
  • விக்கி காமன்சில் log in செய்து கொள்ளுங்கள்
  • தவியில் கோப்பைப் பதிவேற்று என இடப்புறம் இருப்பது போல அங்கு upload a file இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
  • select a media file இணைப்புடன் பக்கம் தோன்றும்.
  • அதைக் கிளிக் செய்ய, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள படிமத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். படிமம் லோட் ஆகும். அதற்கு சற்று நேரம் ஆகலாம். லோடான பின் அந்த பக்கத்தின் வலதுபுறம் கீழே next இணைப்பை கிளிக் பண்ண,
  • அடுத்து வரும் பக்கத்தில் நாம் பதிவேற்றப்போகும் படிமம் சொந்த முயற்சியா (own work) இல்லையா என இரு options இருக்கும். அதில் own work செலெக்ட் பண்ணிவிட்டு கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அழுத்த வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் படிமத் தலைப்பு இருக்கும். பெயர் மாற்றுவதானால் மாற்றிக் கொள்ளலாம். படிமத் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கட்டும். அப்போதுதான் பிற மொழிப் பயனர்கள் பயன்படுத்த முடியும். தலைப்புப் பெட்டிக்குக் கீழ் படிமம் பற்றிய விளக்கம் தர ஒரு பெட்டி இருக்கும். அதில் உங்கள் படிமம் குறித்து ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் அங்கு எழுதலாம். (ஆங்கிலத்தில்) அப்பக்கத்தின் கீழுள்ள நெக்ஸ்ட் பட்டனை அடுத்தினால் படம் அப்லோட் ஆகிவிடும். தேங்க்ஸ் ஃபார் அப்லோடிங் என்று வரும். பகுப்பு சேர்த்தலாம், ஆனால் முதல் முயற்சியில் வேண்டாம், அவ்வளவுதான் வேலை முடிந்தது. முயன்று பாருங்கள், சந்தேகம் வந்தால் கேளுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 13:53, 21 மே 2013 (UTC

நன்றி தொகு

தங்கள் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி!முயன்று பார்க்கிறேன் --Yokishivam (பேச்சு) 16:05, 21 மே 2013 (UTC)Reply

கொண்றங்கி தொகு

தலைப்புப் பற்றைய உங்கள் கருத்தை இங்கு தொடருவது நல்லது.--Kanags \உரையாடுக 21:20, 21 மே 2013 (UTC)Reply

சில பரிந்துரைகள்... தொகு

ஐயா, வணக்கம்!
குருச்சேத்திரப் போர் குறித்து அருமையான விரிவாக்கங்களை செய்து வருகிறீர்கள். இது குறித்த எனது பரிந்துரைகள் சில:

  1. கட்டுரையில் கதைப் பாத்திரங்களின் பெயருக்கு ஒரு முறை (முதல் முறை) இணைப்பு தந்தால் போதுமானது. உதாரணமாக - கர்ணன் என ஐந்தாறு முறை வரும்போது... முதலில் கர்ணனைக் குறிப்பிடும் வார்த்தையிலிருந்து 'கர்ணன்' எனும் கட்டுரைக்கு இணைப்பு தந்தால் போதுமானது. ஐந்து முறை இணைப்பு தருவது ஒன்றும் தவறில்லை - ஆனால், நேரம் விரயமாகும்! உதாரணமாக - கர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இந்த இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
  2. விக்கியில் ஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நீங்கள் அறிவீர்கள். தாங்கள் பங்குகொள்ளும் குருச்சேத்திரப் போர் கட்டுரைகளில் இடம்பெறும் தகவல்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பதனை 'மேற்கோள்கள்' எனும் தலைப்பின்கீழ் தரவும். உதாரணத்துக்கு பத்தாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) எனும் கட்டுரையைப் பார்க்கவும். இங்கு உசாத்துணை என ஒரு புத்தகம் மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி!

நன்றி செல்வ சிவகுரு!
  1. கர்ணனைப் பற்றி மேலும் அறிய விரும்பும் வாசகருக்காக இணைப்பு தரும் நடைமுறை இங்கு விக்கியில் உள்ளது என்பது தற்போது தங்களின் வழியே தெரிந்து கொண்டேன்,மேலும் இணைப்பு தருவது குறித்து எனக்கு புரிதல் இல்லை.
  2. ஆதாரமூலம் இணைத்தல் முக்கியம் என்பதனை நன்கு அறிவேன் அதுதான் என்னை விக்கியில் இணைந்திருக்கத் தூண்டியது.நான் விரிவாக்கம் செய்யும் கட்டுரைகளுக்கு 'மேற்கோள்கள்' அல்லது 'உசாத்துணை' குறிப்பிடுவேன்.மேலும் என்னை செதுக்குங்கள் சிற்பமாகிக் கொள்கிறேன்.நன்றி--Yokishivam (பேச்சு) 07:30, 25 மே 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Yokishivam/தொகுப்பு01!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:18, 2 சூன் 2013 (UTC)Reply

ஆச்சரியம்! தொகு

வணக்கம் இரவி ! நான் தானா? 250 பங்களிப்புகளா? தங்களின் ஊக்கம் ½ கி.ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிட்ட உணர்வு! பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல... நன்றி--Yokishivam (பேச்சு) 15:45, 3 சூன் 2013 (UTC)Reply

ஆலமரத்தடியில் விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புதிய சிந்தனைகள், உதவிக் குறிப்புகள் போன்றவை இடம்பெறுவதனால் உங்கள் தொகுப்பு இங்கு மீள் பதியப்படுகின்றது. --Anton (பேச்சு) 16:06, 3 சூன் 2013 (UTC)Reply
வணக்கம் யோகிசிவம். //பங்களிப்பை அதிகப்படுத்துவேன் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல.// என்ற தங்களின் செய்தி கண்டு மிக மகிழ்ந்தேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 18:12, 3 சூன் 2013 (UTC)Reply

வேண்டுகோள்... தொகு

வணக்கம் ஐயா!
அசுவமேத யாகம், ஆடிக்கிருத்திகை போன்ற தங்களின் 'விருப்பத் துறை' சார்ந்த பல கட்டுரைகள்... பகுப்பு:விக்கிப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகள் எனும் பகுப்பில் உள்ளன. இக்கட்டுரைகளை தங்களுக்கு போதிய நேரம் கிடைக்கும்போது செம்மைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 12 சூன் 2013 (UTC)Reply

please kindly do whatever changes you want to do with enough proof. Since you have interests in spiritual, i requested you. Please take your own time & take care of your health. Thank you.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:56, 15 சூன் 2013 (UTC)Reply

கைவல்ய நவநீதம் நூலின் அட்டைப் படம்... தொகு

படிமம்: நவநீதம்.jpg|thum|right|கைவல்ய நவநீதம் இதில் thumb என திருத்தம் செய்தேன். சரியாகிவிட்டது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 15 சூன் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 15 சூன் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மறுமொழி தொகு

ஐயா, வணக்கம்!

  1. அசுவமேத யாகம் கட்டுரையை முழுமையாக மாற்ற நேரிடும் என தெரிவித்திருந்தீர்கள். தாராளமாக செய்யுங்கள். தாங்கள் ஏற்கனவே அறிந்துள்ளபடி, ஆதாரத்துடன் விக்கியில் தகவல்கள் சேர்த்தலே மிகவும் முக்கியம். இக்கட்டுரை ஒரு முக்கிய கட்டுரை என்பதாலும், இத்துறையில் தாங்கள் ஆர்வமுள்ளவர் என்பதாலுமே தங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.
  2. தாங்கள் அரசுத் துறையில் பணியாற்றியபோதும் 'சிறந்த உழைப்பாளர் விருது' களைப் பெற்றுள்ளீர்கள் என்ற தகவல் மனதிற்கு மிகுந்த மகிழ்வினைத் தருகிறது. உழைப்பிற்கு என்றும் மரியாதை உண்டு என்பது நன்றாகவே புலனாகிறது.
  3. தாங்கள் இங்கு சிறப்பாகப் பங்களிக்கும் அதே தருணத்தில்... தங்களின் உடல்நலனையும் நன்கு கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் - --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:01, 20 சூன் 2013 (UTC)Reply

வேண்டுகோள் தொகு

வணக்கம் ஐயா!
உங்களின் கட்டுரைகளில் அடுத்தடுத்த 2 வாக்கியங்களுக்கு இடையே 'ஒரு இடைவெளி' (space) விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு 'ஒரு இடைவெளி' விட்டு எழுதினால்... கணினித் திரையில் அந்த வாக்கியங்களைப் படிக்கும் கண்களுக்கு உறுத்தல் ஏற்படாது.

உதாரணம்:

இடைவெளி இல்லாத வாக்கியங்களைக் கொண்ட பத்தி:

  • பதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான்.பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது.இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.

ஒரு இடைவெளி விட்டு எழுதப்படும் வாக்கியங்களைக் கொண்ட அதே பத்தி:

  • பதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான். பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது. இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.

அதாவது தலைமை ஏற்றான் என்பதற்கும் பதினெட்டு நாட்கள் என்பதற்கும் இடையே, முற்றுப் புள்ளிக்கு (full stop) அடுத்து ஒரு இடைவெளி விடுதல் வேண்டும்.

தங்களின் உழைப்பு, குமுகாயத்திற்கு முழுமையான பயனைத் தரவேண்டும் என்ற கண்ணோட்டத்திலேயே நான் தங்களிடம் வேண்டுகோள்களை வைக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 28 சூன் 2013 (UTC)Reply

அன்பு செல்வ தங்களின் வேண்டுகோள் அல்ல வழிகாட்டல் பின்பற்றப் படும்.நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 03:44, 28 சூன் 2013 (UTC)Reply

உதவி தொகு

அன்பு செல்வா!துரோணர் கட்டுரையை உரை திருத்தம் செய்தால் நான் எழுதுவது குறித்து கொஞ்சம் புரிதல் கிடைக்கும் என்று நம்புகிறேன்.தயவு செய்து செய்வீர்களா? நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 03:50, 28 சூன் 2013 (UTC)Reply

இந்த சனி, ஞாயிறுகளில் உரைத்திருத்தம் செய்துவிட்டு தங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 28 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:32, 2 சூலை 2013 (UTC)Reply

தங்களின் உடல்நலம் தற்போது மேம்பட்டிருக்கும் என நம்புகிறேன். உரிய ஓய்வு எடுத்துக் கொள்ளவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:51, 19 ஆகத்து 2013 (UTC)Reply

இராமாயணம் தொகு

வணக்கம், இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) என்ற கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதுகிறீர்களா என்பதைக் கவனியுங்கள். இக்கையேட்டை உதவிக்குப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:14, 14 செப்டம்பர் 2013 (UTC)

அய்யா வணக்கம்! விக்கி நடைக்கு ஏற்ப இல்லாததை தயவு செய்து சுட்டிக் காட்டுங்கள் திருத்தலாம்/ மாற்றலாம்/ நீக்கலாம் --யோகிசிவம் (பேச்சு) 13:18, 14 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:07, 18 செப்டம்பர் 2013 (UTC)

உங்கள் தொலைப்பேசி எண் தேவை. என் எண் 99431 68304. பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான நேர அட்டவணை, இட விவரங்கள் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா பக்கத்தில் இற்றைப்படுத்தியுள்ளேன். அருள்கூர்ந்து உடனே தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 19:58, 27 செப்டம்பர் 2013 (UTC)

ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்) தொகு

வணக்கம். ராஜஸ்தானத்து அந்தப்புரங்கள் (புதினம்) கட்டுரையில்

\\இலக்கியத்தின் முதல் பயனே,வாழ்க்கைப் பிரச்சினைகளை,வாழ்க்கை நிலைகளை அறிமுகப்படுத்திக் கொள்வதுதான். இதன் மூலம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித நிலைகளைப் புரிந்துகொள்வதும், சமூக பரிணாமத்தின் மாற்றத்தை அறிய உதவும் ஆவணமும்;அறிவுத் தேவையும் கூட. ஆணாதிக்க சிந்தனையும், அதை உயர்த்திப்பிடிக்கிற இலக்கியங்களும்,உரத்துப்பெசுகிற ஊடகங்களும் வலம் வரும் இக்காலச் சூழலில்,பெண்ணியம் குறித்து பேசுகிற, அக்கரைப்படுகிற, தமிழ் பேசும் வாசகர்கள் பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான ஆர்வம்.\\

இப்பகுதி, பொதுவாக இலக்கியத்தைப் பற்றித்தானே சொல்கிறது? இக்கட்டுரைக்குத் தேவையில்லை; அதனால்தான் நான் நீக்கினேன். ஆனால் நீங்கள் மறுபடியும் இணைத்துள்ளீர்கள். இப்பகுதி வேண்டாம். இதற்குப் பதில், நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 17:24, 19 செப்டம்பர் 2013 (UTC)

சகோதரிக்கு தொகு

வணக்கம்! Booradleyp1 இப்பகுதி இலக்கியத்தைப் பற்றிய எனது கருத்து. பொதுவாக பிற மொழிகளில் உள்ள மிகச் சிறப்பான பெண்ணிய இலக்கியப் படைப்புகளை அறிய விளைவது வளர்க்கப்பட வேண்டிய ஆரோக்கியமான,அவசியமென்று கருதுகிறேன். இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் இலக்கிய சமூக,சமுதாய பிண்ணனி அக்காலத்திய அரசர்களின் வீரதீர செயல்களும், தனித்த அந்தரங்கமும் ஆக இருப்பதை தாங்கள் அறிவீர்கள்!!!. ஆனால் எனது பணிவான கருத்து அந்த சமூதாயத்தில் அரசர் மட்டுமில்லை,மக்களும், ஏனையோரும். இந்த மக்களும், ஏனையோரும் ஏன் இலக்கிய படைப்புக்களில் இல்லை. பிற மொழியில் குறிப்பாக ராகுல்ஜீ படைப்புக்களில் மேற்ச் சொன்னவாறு மக்களும், ஏனையோரும் பங்கேற்பை காணமுடியும்.

தற்போதைய நமது சமூக சூழல் அவ்வளவு ஆரோக்கியமாக இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் (தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி...) இதுகுறித்து நாம் உரத்து பேச வேண்டியவர்களாக இருக்கிறோம், என்பதை தங்களின் மேலான கவனத்திற்கும், பார்வைக்கும்...... சமர்ப்பிக்கிறேன்.

நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களை இணைக்கலாம்.

நான் தற்போது தொகுத்துக் கொண்டிருக்கிற இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) நூலின் உள்ளடக்கங்களை, அதிலுள்ள அத்தியாயங்களின் விவரங்களைத் தொகுக்கிற சமயத்தில் நண்பர் கனக்ஸ் விக்கியின் நடைக்கையேட்டை கவனிக்கவும் என்றார்.(எனது பேச்சுப் பக்கத்தை பாருங்கள்) எனக்குப் புரியவில்லை, இராமயணம் குறித்த உண்மையான யதார்த்தம் அது.

மேற்கண்ட கருத்து பரிமாற்றமே! தங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்குமானால் தெரிவியுங்கள். மாற்ற முயற்சி செய்கிறேன்.--யோகிசிவம் ([[பயனர் பேச்சு:Yokishivam|பேச்சு]]) 12:28, 20 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம், உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் விக்கி ஒரு கலைக்களஞ்சியம். அதில் விவரங்களை மட்டுமே பதிவு செய்யலாம்; நமது சொந்தக் கருத்துக்களுக்கு இது இடமாகாது. ஒரு நூலைப் பற்றி எழுதும்போது அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், காலம், பின்னணி, அதன் உள்ளடக்கங்கள் (மிகவும் சுருக்கமாக, விரிவாகத் தந்தால் அந்த நூலையே படிக்கத் தந்தது போல இருக்கும். விக்கிமூலத்தில்தான் முழுநூலை அப்படியே எழுதலாம்).

ராஜஸ்தானத்து அந்தப்புரம் கட்டுரையைப் பொறுத்தவரை நீங்கள் இலக்கியம் குறித்து எழுதியுள்ளது இந்த நூலைப் பற்றி எழுதும் கட்டுரைக்கு பொருத்தமானது அல்ல; அதனால் அதனை நீக்கிவிடலாம் என்பதே மீண்டும் எனது கருத்து.

பெண்களின் நிலை சமுதாயத்தில் மோசமாக இருக்கிறது என்பது உண்மையே; அதைக் குறித்து நாம் கவனம் கொள்ளவேண்டும் என்ற உங்கள் எண்ணமும் சரியே; ஆனால் அதனை நாம் விக்கியில் பேச முடியாது. நடந்த சம்பவங்களையும் விளைவுகளையும் (உள்ளது உள்ளபடியே) தகுந்த ஆதாரங்களுடன் விக்கியில் கட்டுரையாகத் தரலாம். அவ்வளவுதான் இங்கு நாம் செய்யலாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:04, 20 செப்டம்பர் 2013 (UTC)

மறுமொழி தொகு

வணக்கம்! Booradleyp1 நாம் எழுதுகிற கட்டுரை என்பதால் இலக்கியம் குறித்து எழுதினேன். இப்போது ராஜஸ்தானத்து அந்தப்புரம் பாருங்கள் நன்றி--யோகிசிவம் (பேச்சு) 16:12, 21 செப்டம்பர் 2013 (UTC)

புரிந்து கொண்டமைக்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:45, 21 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்... தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:13, 27 செப்டம்பர் 2013 (UTC)

தமிழில் எழுதல் தொகு

கட்டுரைகள் எழுதும் போது பின்வருவனவற்றைக் கவனியுங்கள்

சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்(நூல்) - தவறு
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள் (நூல்) - சரி
சாதிகளையும்,சடங்குகளையும்,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு
சாதிகளையும் ,சடங்குகளையும் ,உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - தவறு
சாதிகளையும், சடங்குகளையும், உருவ வழிபாடுகளையும் கடுமையாக சாடினார்கள் - சரி

--Kanags \உரையாடுக 05:30, 28 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி கனக்ஸ்! கவனமுடன்....பின்பற்றுகிறேன். நன்றியுடன்

பதக்கம் தொகு

  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான மகாபலிபுரம் சுற்றுலாவில் காணத்தக்க இடங்களுக்கு எங்களுக்கு வழிகாட்டியும், வரலாறுகளை எடுத்துரைத்தும் எங்களை வழிநடத்தியமைக்காக இந்தப் பதக்கத்தினை தந்து மகிழ்கிறேன். சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 30 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:52, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம் எனக்கு இந்த வாய்ப்பு கிட்டவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:35, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

மறுமொழி தொகு

இனிய சகோதரா! நன்றி!!

  • எனது உடல்நிலை கருதியே ஐந்துரதம், கடல் கோவில் ஆகிய இடங்களுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. கடல் கோவிலில் உள்ள சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன் சைவ வலைவாசலுக்கு கூடுதல் தகவல் தங்களுக்கு கிடைத்து இருக்கும். மீண்டும் நான் சென்னை வரும்போது (ஞாயிற்றுக் கிழமையாய் பார்த்து) மீண்டும் மல்லை குறித்து கூடுதல் தகவலுடன் தங்களை சந்திக்கிறேன்.நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 16:39, 30 செப்டம்பர் 2013 (UTC)

அன்புடைய சகோதரி! சகோதரன் ஜெகதீசுவரனுடன் மாமல்லை செல்லும்போது தகவல் தருகிறேன்.

\\சிவலிங்கம் எண்முகப் பட்டையுடையது, அது குறித்த தகவல்கள் நேரில் காண்பித்து கருத்துப் பரிமாற்றம் செய்ய எண்ணியிருந்தேன்\\ உண்மைதான் அய்யா, தேனியாரிடம் கூட இலிங்க திருமேனியில் எதற்காக பட்டைகள் என்ற கேள்வியிருந்தது. என்னிடம் பதிலில்லை என்பதால் வெறுமையாகவே வந்தேன். தேனியார், சிவகோசரன் ஆகியோருடன் அனந்த சயனம் பற்றிய சிறு தமிழாய்வு கூட நிகழ்ந்தது. சிவகோசரன் முடிவில்லா கிடக்கை என்று தமிழ்படுத்தினார். கோயிலிலுள் திருமால் முழுவதுமாக படுத்திருந்தார். இதெல்லாம் என்னவகையான சிற்ப முறைகள் என்று தெரியவில்லை. அறிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறேன். ஒரே முறையில் மாமல்லபுரத்தினை அறிந்து கொள்ளுதல் இயலாது என்பது அறிந்ததே. வருங்காலத்தில் ஈசன் அனுமதித்தால் நிச்சயம் அனைவரும் செல்வோம் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:54, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

சிவன் தொகு

எண்முகப் பட்டைக்கான சிறு விளக்கம்-( எமது குருநாதர் எமக்கு அருளியது) ஒருவன் தன்னையறிதல் வேண்டும் தான் யார்? தன் நிலை என்னை? என்பதை அறிவது தன்னையறியும் அறிவகும். அஃதில்லாமல், பிற அறிவெல்லாம் பேயறிவாகும். (பேய்போல் பிறப்பு இறப்பு என்று அழைய வேண்டும்)

சிவன் தன்னையறிந்த எங்கும் நிறைந்த ஏகாந்தன்,சித்தன்,அட்டமா சித்திகளோடு இருப்பவன்

அட்டமா சித்திகள் தொகு

  1. அனிமா  : மிகச்சிறிய பொருளாவது
  2. மகிமா  : மலைபோல் மிகப் பெரிதாவது
  3. கரிமா  : கனமாவது
  4. இலகிமா  : பஞ்சைப்போல் லேசாவது
  5. பிராப்தி  : எல்லாப் பொருளையும் தன்வசப்படுத்துதல்
  6. பிரகாமியம் :தங்கு தடையின்றி எல்லா இன்பங்களையும் பெறுவது
  7. ஈசத்துவம் :தத்துவங்களில் விருப்பப்படி நடத்தல்
  8. வசித்துவம் :எங்கும் நிறைந்து இறையிடம் கலந்து இருத்தல்

மேற்கண்ட அட்டமாசித்திகளை (எட்டு) சொல்கிற தத்துவமே எண்முகப் பட்டை கொண்ட சிவலிங்கம்

மிக விரிவான விளக்கத்திற்கு நன்றி அய்யா! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:48, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

டிவிட்டரில் தமிழ் தொகு

ஐயா, டிவிட்டரில் தமிழ் இடைமுகமோ, எழுத்துப்பெயர்ப்போ இல்லை. அதனால் வேறு எங்காவது தமிழில் தட்டச்சு இட்டு பயன்படுத்த வேண்டும் --நீச்சல்காரன் (பேச்சு) 17:12, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி! நீச்சல்!!அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 17:23, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

பழனி விரைவுத் தொடருந்து தொகு

வணக்கம். பழனி விரைவுத் தொடருந்தின் படிமம் இணைத்தது நன்றாக உள்ளது. எனினும் எனக்கு ஒரு விருப்பம். தொடருந்தின் முடிவில் அல்லது தொடக்கத்தில் ஒரு பெட்டியில் அந்த வண்டியின் பெயர், எண் விவரங்களுடன் இருக்கும் ஒரு பலகை பொருத்தப்பட்டிருக்கும். அப்பகுதி படிமத்தில் இருக்குமாறு படமெடுத்து இணைத்தால் மேலும் பொருத்தமாக இருக்கும். முடிந்தால் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம்! தங்களின் விருப்பம் நாளை 08/10/2013 அன்று நிறைவு பெறும் --யோகிசிவம் (பேச்சு) 16:59, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 17:19, 7 அக்டோபர் 2013 (UTC)Reply

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீ சுவரர் ஆலயம் - பக்கம் தொகு

மேற்குறிப்பிட்ட பக்கம் சிறப்பாக வருகின்றது. மெருகூட்டவும். --பரிதிமதி (பேச்சு) 18:29, 14 அக்டோபர் 2013 (UTC)Reply


நன்றியுரைத்தல் தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:01, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:32, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

எங்கே? சொல்லுங்கள் தொகு

தாங்கள் என் பேச்சுப் பக்கத்தில் கேட்டுள்ள மருது சகோதரர்கள் குறித்த தகவல்கள் குறித்து சந்தேகம்

வேண்டுகோள் தொகு

தாங்கள் விரிவாக்கம் செய்த சிவகங்கைச் சீமை கட்டுரையில் பெரியமருது பாண்டியர் பிறந்த நாள் ஆதாரம் இருந்தால் இணைத்து விடுங்கள். வரலாற்று கட்டுரைகள் ஆண்டுகள் குறிப்பிட்டாலே போதுமானது--ஸ்ரீதர் (பேச்சு) 06:51, 21 அக்டோபர் 2013 (UTC)Reply


வேதனை வேதனை தொகு

அன்புள்ள அய்யா! சென்னை கூடலுக்குப் பின் கருத்து மற்றும் கலந்துரையாடல் வேதனையளிக்கிறது. புதுப்பயனரான நான் (இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்) மிகுந்த வேதனைப் படுகிறேன். தயவுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் அன்புடன் --யோகிசிவம் (பேச்சு) 02:19, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

வேதனை என்பது பற்றி தொகு

  • மிக இனிய கூடல் நிகழ்ச்சிக்குப் பிறகு இங்கே விக்கியில் நடப்பது பலருக்கும் வருத்தம் அளிக்கின்றது என்பது உண்மை. ஆனால் இது விரைவில் தீரும். நம்புங்கள். இதில் பங்குள்ளவர்கள் 4-5 பேரே என்றாலும் எல்லோருக்கும் ஒருவகையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பது உண்மை. ஆனால் அருள்கூர்ந்து இதுகுறித்து கவலைப்படாதீர்கள். ஓராண்டு கழித்துப் பார்த்தால் இப்படி ஒன்று நடந்ததா என்பதே நினைவில் கூட இராது. ஆகவே நாம் நம் பணியில் கவனம் செலுத்துவோம். இப்பிணக்கு விரைவில் தீர்வு எய்தும் என்றே நினைக்கின்றேன். தீர்வு நோக்கி நகர என்னால் ஆன உதவிகளைச் செய்வேன். இதுவும் ஏதோ ஒருசில வழிகளில் நம்மை வலுவாக்கிக்கொள்ள உதவும் என்று நம்புகின்றேன். உடல்நிலையை அருள்கூர்ந்து பார்த்துக்கொள்ளுங்கள். --செல்வா (பேச்சு) 02:30, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:29, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--மயூரநாதன் (பேச்சு) 08:38, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
  • யோகிசிவம், இது பற்றிக் கவலைப் படாதீர்கள். இப்படியான பொது முயற்சிகளில் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், நம்மை அறியாமலே நம்மிடையே புகுந்துவிடக்கூடிய பிழையான எண்ணங்களையும், செயல்பாடுகளையும் திருத்திக்கொள்வதற்கும், மீண்டும் புதிய புரிதலோடு களத்தில் இறங்குவதற்கும் இத்தகைய நிலைமைகள் உதவக்கூடியவையே. நாம் ஒவ்வொருவரும் மற்றவரைப்பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டே இருந்தால், நம்முடைய இன்னொரு பக்கம் நமக்குத் தெரியாமலே போய்விடும். நாம் பிழையான வழியில் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். எனவே, நம்மோடு சேர்ந்து உழைப்பவர்களிடமிருந்து நம்மைப் பற்றிய விமர்சனங்களையும் அறிந்து கொள்வது நல்லது தானே. எனினும், நீங்கள் சொல்வது போல் இதை நீண்ட காலத்துக்கு எடுத்துச் செல்லக் கூடாது. பல மூத்த பயனர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நல்லதே நடக்கும். ---மயூரநாதன் (பேச்சு) 03:57, 26 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:29, 26 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--Kanags \உரையாடுக 07:06, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

விமர்சனம் என்பது தொகு

அன்புள்ளவர்களே வணக்கம்!நான் அரசுத்துறையில் பணியாற்றியபோது எமது துறை சார்பு பிணக்குகளை தீர்வுகாண சங்கம் அமைத்துக் கொள்வது, தீர்வுகாணுவது என்ற நிலையில் நான் மாவட்டச்செயலாளர் (தமிழ்நாடு நிலளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் திண்டுக்கல் மாவட்டம்) எமது சங்கக் கூட்டம் நடைபெறும் சமயத்தில் விமர்சனங்கள் வரும் அதுவும் பூனைத் தன் குட்டியை கவ்வித் தூக்குவது போல மாறாக பூனை எலியை கவ்வுவது மாதிரி இருந்தால் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. நண்பர் தேனி மு.சுப்பிரமணி தனது பேச்சுப்பக்கத்தை முடக்கியுள்ளார். அவரிடமும் கொஞ்சம் கூடுதலாக பேசுங்கள்-நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 10:46, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

சுந்தர் தொகு

யோகிசிவம், சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் சில குறிப்புக்களை விட்டுள்ளீர்கள். அவர் தனிப்பட்ட காரணங்களினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:29, 26 அக்டோபர் 2013 (UTC)Reply

யோகிசிவம், கூடலுக்குப் பிந்தைய நிகழ்வுகள் அனைவருக்குமே வேதனையளிக்கக் கூடியவைதாம். ஆனால், இதையும் கடந்து நாம் மீண்டு வருவோம். அழுத்தமும் கவலையும் அதிகமாகும்போது ஒருவாரம் விக்கி விடுப்பு எடுத்துக் கொள்வது நல்லது. -- சுந்தர் \பேச்சு 12:02, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

கிராமம், சிறிய கிராமம் - ஊர், சிற்றூர் தொகு

ஐயா வணக்கம்! கிராமம் என்பதனை தனித்தமிழில் எழுத விரும்பினால்... ஊர் எனவும், சிறிய கிராமத்தை சிற்றூர் எனவும் எழுதலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:37, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

அன்பு செல்வ சிவா! அப்படியே ஆகட்டும் வழிகாட்டலுக்கு நன்றி--யோகிசிவம் (பேச்சு) 18:43, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

//வறட்சி மாவட்டம் என்பதால் சீமை கருவேள் விறகுகளால் தயாரிக்கும் அடுப்புக்கரி தயாரித்தல் முக்கிய பயிராக விளைவிக்கப்படுகிறது.// - இவ்வாக்கியத்தை அனைத்துக் கட்டுரைகளிலும் உரை திருத்துமாறு வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:33, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

ஆலோசனைக்கு நன்றி தொகு

அன்பு செல்வ சிவா!ஆலோசனைக்கு நன்றி உடன் பின்பற்றப்படும் நன்றியுடன்--யோகிசிவம் (பேச்சு) 19:42, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

கிராமம் பற்றிய கட்டுரைகளில் ஆதாரம் தொகு

கவனிக்க கிராமம் பற்றிய கட்டுரைகளில் ஆதாரம் இணைப்புகள் முன்தோற்றம் கண்டு பிழை திருத்தி பின்னர் சேமிக்கவும்.

படங்கள் தொடர்பான காப்புரிமை தொகு

நீங்கள் தெரிவுசெய்த உரிமத்தின் படி படிமம்:KADAUVL.jpg காப்புரிமை உங்களது. இந்த நூலை அல்லது அட்டப்படத்தை நீங்கள் உருவாக்கினால் அந்தக் காப்புரிமை உங்களதாக அமையும். இல்லாவிடின் நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும். இந்தப் படத்தை நீங்கள் எடுத்து இருந்தாலும் நூல் அட்டை என்ற உரிமமே பொருத்தமாக இருக்கும். --Natkeeran (பேச்சு) 01:55, 3 நவம்பர் 2013 (UTC)Reply

காப்புரிமை விலக்கு தொகு

அன்புள்ள Natkeeran ! வணக்கம்!! மேற்கண்ட கடவுள் உண்டா இல்லையா? சிறு புத்தகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவினால் வெளியிடப்பட்ட நூலாகும். யாவராலும் எடுத்தாள அனுமதிக்கப்பட்ட புத்தகமாகும். மேலும் தாங்கள் கூறிய //நூல் அட்டை என்ற உரிமத்தைத் தேர்தெடுக்கவும்//. எவ்வாறு? என தயவு செய்து பகரவும்--யோகிசிவம் (பேச்சு) 02:08, 3 நவம்பர் 2013 (UTC)Reply

  அனுமதி திருத்தியுள்ளேன் (வரலாற்றைக் காட்டவும் சொடுக்கி) மாற்றங்களை காணுங்கள்--ஸ்ரீதர் (பேச்சு) 02:32, 3 நவம்பர் 2013 (UTC)Reply

நன்றி தொகு

தங்களின் உதவிக்கு நன்றி!--யோகிசிவம் (பேச்சு) 04:25, 3 நவம்பர் 2013 (UTC)Reply

Return to the user page of "Yokishivam/தொகுப்பு01".