அதிரதன் (अधिरथ) இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் கர்ணனின் வளர்ப்பு தந்தையாகும். தேரோட்டத்தில் சிறந்தவன். அங்க தேசத்தின் மன்னன் எனவும் சிலர் கூறுவர். சாந்தனு மற்றும் திருதராட்டிரன்ஆகிய குரு குல மன்னர்களுக்கு தேரோட்டியாக பணி புரிந்தவர். இவர் திருதராஷ்டிரனின்  தலைமைத் தேரோட்டி. ஸ்ரீமத் பாகவதத்தின்படி அதிரதன் யயாதியின் வழிவந்தவர். கிருஷ்ணனின் உறவினர்.

கங்கையில் நீராடும்போது ஆற்றில் மிதந்து வந்த அழகான கூடைப்பெட்டியை காண்கிறாள் அதிரதனின் மனைவி. அதனை பிரித்து உள்ளே காதில் பளிச்சிடும் குண்டலங்களுடன் குழந்தையைக் கண்டு அதற்கு கர்ணன் எனப்பெயரிட்டு எடுத்து வளர்க்கிறார்கள் (கர்ணன் குந்திதேவிக்கு  சூரியனின் அருளால் திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை. எனவே பயந்த குந்தி குழந்தையை பட்டு வஸ்திரத்தில் சுற்றி கூடையில் வைத்து ஆற்றில் விட்டார்). போர்கருவிகளில் பயிற்சிபெற மகனை அத்தினாபுரம் அனுப்புகிறான் அதிரதன். அங்கு கர்ணனுக்கு துரியோதனனுடன் நட்பு ஏற்படுகிறது.

சூதர் குல தலைவனான அதிரதனால் வளர்க்கப்பட்டதால், கர்ணனை சூதபுத்திரன் என பாண்டவர்கள் மற்றும் திரௌபதி போன்றவர்கள் ஏளனம் செய்து பேசினர். அதிரதனின் மனைவி இராதை ஆவார். எனவே கர்ணன் இராதேயன் என்றும் அழைக்கப்பட்டார். [1][2]

கர்ணனுக்குப் பின் இவர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் ஷான்.

மேற்கோள்கள்

தொகு
  • "வியாசர்விருந்து" இராசாசி (தமிழ்)
  • A Dictionary of Hindu Mythology & Religion by John Dowson (ஆங்கிலம்)
  • Laura Gibbs, Ph.D. Modern Languages MLLL-4993. Indian Epics. Adhiratha(ஆங்கிலம்)
  • அதிரதன்(ஆங்கிலம்)
  • ஒரு அகராதி இந்து புராணங்களில் மற்றும் மதம் by John Dowson
  • லாரா, கிப்ஸ், Ph. D. நவீன மொழிகள் MLLL-4993. இந்திய காவியங்கள். Adhiratha
  1. கர்ணனின் இருப்பிடம் அறிந்த குந்தி! - வனபர்வம் பகுதி 307
  2. Srimad Bhagavatham, Canto 9, Chapter 24 verses 32 to 36
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிரதன்&oldid=3176877" இலிருந்து மீள்விக்கப்பட்டது