சித்திராங்கதை
சித்திராங்கதை (அல்லது சித்திராங்கதா) மகாபாரதக் கதையில் வரும் அருச்சுனனின் மனைவிகளுள் ஒருவர் ஆவார். அருச்சுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தார். அப்போது அவர் இமயமலைக்குக் கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தார். அருச்சுனன் அவரை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினார். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்திராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அருச்சுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். இவர்களுக்கு பாப்புருவாகனன் என்ற மகன் பிறந்தான். அவனே மணிப்பூர் அரசின் வாரிசு ஆவான்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Devi, Lairenlakpam Bino (2002). The Lois of Manipur: Andro, Khurkhul, Phayeng and Sekmai (in ஆங்கிலம்). Mittal Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-849-5.
- ↑ Bhanu, Sharada (1997). Myths and Legends from India - Great Women. Chennai: Macmillan India Limited. pp. 7–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-93076-2.
- ↑ Tagore, Rabindranath (2015). Chitra - A Play in One Act. Read Books Ltd. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781473374263.