பாப்புருவாகனன்
பாப்புருவாகனன் அல்லது பப்ருவாகனன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் அருச்சுனனிற்கும் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும் பிறந்த மகனாவான். [1]
அருச்சுனன் தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றித் திரிந்தான். அப்போது அவன் இமயமலைக்குக் கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவன் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தான். அருச்சுனன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினான். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்ராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அர்ஜுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச் செல்வதில்லை என்று உறுதி கொடுத்து மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்குப் பிறந்த பாப்புருவாகனனை மன்னர் தனது வளர்ப்பு மகனாக வரித்துக் கொண்டு முடி சூட்டினார். பல வளங்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய அழகிய அரண்மனையில் சிறப்பாக ஆண்டு வந்தான்.
பின்னாளில் அருச்சினன் அசுவமேத வேள்வி நடத்த குதிரையுடன் மணிப்பூர் வரும்போது தனது மகன் பாப்புருவாகனனாலேயே அம்பெய்து கொல்லப்படுகிறான். இது பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்தினால் நிகழ்கிறது. தனது தந்தையை தானே கொன்றதை எண்ணி வருந்தி தற்கொலை செய்யவிருக்கையில் பாப்புருவாகனனுக்கு அருச்சுனனின் மற்றொரு மனைவி நாக அரசி உலுப்பி மாணிக்கம் ஒன்றை வழங்க, அதனைக் கொண்டு அருச்சுனனை உயிர்ப்பிக்கிறான் பாப்புருவாகனன். பின்னர் தனது தந்தையுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறான்.
ஆதாரங்கள்
தொகு- ↑ தீபம் இதழ் மே 05 2016 பக்கம் 47