பதினேழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

பதினேழாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) தனது வாழ்நாள் முழுவதும் தேரோட்டியின் மகன் என்று அவமானப்படுத்தப்பட்ட கர்ணன் ஓர் போர் வீரனாக, அக்கால போர்விதி முறைகளையெல்லாம் மீறி கர்ணன் கொலை செய்யப்பட்டதையும், பாண்டவர்களில் முதல் பிறந்தவன் என்ற உண்மை வெளிப்பட்டதையும் விவரிக்கிறது. இதனை வில்லிப் புத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.[1]

கர்ணனின் மக்கள் மரணம்

தொகு

பதினேழாம் நாள் போரில் பாண்டவர் படையின் கவனம் முழுதும் கர்ணனை நோக்கி திருப்பப்பட்டது. கர்ணனின் மகன் விருஷசேனனை கொன்று வீழ்த்தினான்அருச்சுனன்,அபிமன்யு இறந்த போது தான் பட்ட துயரத்தை கர்ணன் படவேண்டும் என எண்ணியே இதைச் செய்தான். மற்ற பாண்டவர்கள் கர்ணனின் மற்ற பிள்ளைகளை கொன்றனர்; ஆனால் கர்ணன் இவை எதற்கும் சோர்வடையாமல் அருச்சுனனை கொல்வதிலேயே தனது போர் உத்திகளை அமைத்து போர் செய்தான். வாழ்நாள் முழுவதும் யாருக்காக கடமைப்பட்டிருந்தானோ அருச்சுனனை கொல்வதின் மூலமாக தன் நன்றியை நண்பன் துரியோதனனுக்கு செலுத்தத் தீர்மானித்தான்.[2]

கிருட்டிணனின் புகழ்ச்சி

தொகு

அருச்சுனனை கர்ணன் நேருக்கு நேர் சந்தித்தான். அருச்சுனன் தன் அம்பு வீச்சால் கர்ணனின் தேரை நூறு கெஜ தூரத்திற்கு பின்னே தள்ளினான். ஆனால் கர்ணனோ அருச்சுனனின் தேரை பத்து கெஜ தூரத்திற்குத் தான் தள்ளமுடிந்தது. ஒவ்வொரு முறையும் அருச்சுனன் கர்ணனின் தேரைப் பின்னுக்குத் தள்ளிய போது கிருட்டிணன்,கர்ணனையே புகழ்ந்தார். "நான் கர்ணனின் தேரை நூறு கெஜ தூரத்திற்கு பின்னே தள்ளுகிறேன், அவனோ என்னை பத்து கெஜ தூரத்திற்குத் தான் தள்ளுகிறான், நீங்கள் அவனைப் பகழ்கிறீர்களே" என்று கோபப்பட்டான். அதற்கு கிருட்டிணரோ "கர்ணனுடைய தேரை கவனமாகப் பார் அவனது தேரில் தேரோட்டியும்,கர்ணனும் மட்டும்தான்,ஆனால் உனது தேரில் நாராயணன் தேரை ஓட்ட,உனது கொடியிலோ அனுமன் இருக்கும் போது அவனது தேரை நூறு கெஜ தூரத்திற்கு பின்னே தள்ளுவது எளிது" என்று அருச்சுனனுக்கு கோபத்தை மூட்டினார்.[2]

அருச்சுனன் தப்பினான்

தொகு

அருச்சுனன் ஒன்றன்பின் ஒன்றாக அம்புகளை எய்து சண்டைசெய்தான். ஒரு கட்டத்தில் அருச்சுனனின் தலையை குறிவைத்து கர்ணன் எய்த (நாகாஸந்திரம்) அம்பு பாம்பாக மாறி அருச்சுனனை நோக்கி வந்தது. அவ்வாறு வந்த அம்பின் தன்மையை அறிந்த கிருட்டிணன் தன் காலின் பெருவிரலால் அருச்சுனனின் தேரை தரையை நோக்கி கீழாக அழுத்த தேர் இரண்டடி அமிழ்ந்தது. கர்ணன் எய்த (நாகாஸந்திரம்) அம்பு அருச்சுனனின் கீரிடத்தை தட்டி மீண்டும் கர்ணனிடமே வந்தது. யார் சிறந்த வில் வீரன் நானா? கர்ணனா? என ஒரு கணம் அருச்சுனனை திகைப்படைய வைத்தது. இதை உணர்ந்த கிருட்டிணன் அம்பை எய்தவனின் திறமையை சாய்க்க வில்லை. அம்பின் வீரியத் தன்மையைச் சாய்த்து விட்டது என்று அருச்சுனனிடம் கூறினார். எப்படியோ ஒருமுறை அருச்சுனன் உயிர் தப்பினான். மீண்டும் அந்த அம்பை அருச்சுனன் மீது செலுத்தாமல் குந்திக்கு கொடுத்த வரத்தால் அமைதியாக இருந்தான்.[2]

நாகனின் சபதம்

தொகு

அருச்சுனன்இந்திரப்பிரஸ்தத்தை ஏற்படுத்த காண்டவப்பிரஸ்தம் வனத்தை அழித்த போது அதில் வசித்த நாகவம்சமும் அழிந்தது,அஷ்வசேனன் என்ற நாகம் அதன் தாயின் கருவில் இருந்ததால் தப்பிப் பிழைத்தது.தனது இனத்தை அழித்த அருச்சுனனை பழிக்குப் பழி வாங்கவே கர்ணனின் (நாகாஸ்திரம்) அம்பு அருச்சுனனை தாக்க முனையும் போது அதனோடு இணைந்து பழிதீர்த்துக் கொள்ள நினைத்தான்.கிருட்டிணனின் செயலால் அருச்சுனன் தப்பியவுடன் கர்ணனிடம் அஷ்வசேனன் மீண்டும் அம்பு எய்யுமாறு வேண்டினான்,கர்ணன் மறுத்து "ஒரு வீரன் இரண்டாம் முறையாக அம்பு செலுத்த மாட்டான்,அது அவன் நிலைக்கு இழுக்கு, உன் பழியைத் தீர்த்துக்கொள்ள வேறு வழியைத் தேடிக்கொள் அருச்சுனனைக் கொல்ல ஒரு நாகனின் உதவி எனக்குத் தேவையில்லை" எனக்கூறி மறுத்துவிட்டான்.கர்ணனால் மறுக்கப்பட்ட அஷ்வசேனன் அருச்சுனனை கொல்ல ஓடினான்,அருச்சுனன் ஒரே அம்பில் அஷ்வசேனனை மாய்த்தான்.[2]

கர்ணன் மரணம்

தொகு

'விஷ்ணு,ராமனாக அவதாரம் எடுத்த போது சூரியனின் மகன் சுக்ரீவனின் பக்கம் நின்று,இந்திரனின் மகன் வாலியைக் கொன்றான்.கிருட்டிணனாக அவதாரம் எடுத்த போது இந்திரனின் மகன் அருச்சுனன் பக்கம் நின்று சூரியனின் மகன் கர்ணனுக்கு எதிராக இருந்தார்.இராமாயணத்தில் வாலியும்,மகாபாரதத்தில் கர்ணனும் வஞ்சிக்கப்பட்டார்கள்.[2]

மேலும் பார்க்க

தொகு

கர்ணன்

வெளி இணைப்பு

தொகு

சான்றாவணம்

தொகு
  1. வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லி பாரதம்
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK