அலாயுதன்
அலாயுதன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். மகாபாரதம் கூறும் குருச்சேத்திரப் போரில் கௌரவர் படைகள் சார்பாக பாண்டவர் படைகளை எதிர்த்துப் போரிட்டு கடோற்கஜனால் கொல்லப்பட்டார். அலாயுதன் குறித்த செய்திகள் மகாபாரதத்தின் துரோண பருவம், பகுதி 176, 177 மற்றும் 178களில் கூறப்பட்டுள்ளது.[1][2][3]
வரலாறு
தொகுஅலாயுதனின் நண்பர்களான இடும்பன், பகாசுரன் மற்றும் கிர்மீரன் ஆகிய அரக்கர்களைக் கொன்ற பீமனைக் கொல்ல சபதம் எடுத்து அரக்கர் படைகளுடன் கௌரவர் சார்பாக குருச்சேத்திரப் போரில் அலாயுதன் கலந்து கொண்டான். மாயாஜால வித்தைகளில் வல்லவனான அலாயுதனை பாண்டவப் படைகளால் கொல்ல இயலவில்லை. எனவே பீமனின் மகனும் மாயாஜால வித்தைகள் தெரிந்தவனுமான கடோற்கஜன் அலாயுதனுடன் போரிட்டுக் கொன்றான்.