துரோண பருவம்


துரோண பருவம் (சமசுக்கிருதம்: द्रोण पर्व) இந்தியாவின் இதிகாசமான மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 7 ஆவது பருவம் ஆகும். பத்தாம் நாட்போரில் வீடுமர் இறந்தபின்னர் துரோணர் கௌரவப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பதுடன் இப்பருவம் தொடங்குகிறது. இப்பருவத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. துரியோதனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனைத் திருப்திப்படுத்துவதற்காகத் தருமபுத்திரனை உயிரோடு பிடிப்பதாகத் துரோணர் சூளுரைக்கிறார்.

அபிமன்யு சக்கர வியுகத்தை உடைத்து உள் நுழையும் சிற்பம்

அருச்சுனனின் மகன் அபிமன்யு, எதிரிகளின் வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மீள முடியாமல் கொல்லப்பட்டான். இதற்குக் காரணமாக இருந்த செயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் சூளுரைத்தல், இதனைக் கேள்வியுற்ற கௌரவப் படைகள் சயத்திரதனுக்குக் கடுமையான பாதுகாப்பு வழங்குதல், சயத்திரதனைத் தேடி அருச்சுனன் எதிரிப் படைக்குள் புகுந்து நீண்ட தூரம் செல்லல், தருமரின் கட்டளைப்படி வீமனும், சாத்தியகியும் அருச்சுனனைத் தேடி எதிரிப் படைக்குள் புகுந்து போராடுதல், இறுதியில் சயத்திரதனை அருச்சுனன் கொல்லுதல் போன்ற நிகழ்வுகள் இந்தப் பருவத்தில் மிகவும் முக்கியமானவை. [1]

துரோணரின் முடிவு

தொகு

பதினைந்தாம் நாள் போரின் போது, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணனின் ஆலோசனையின் படி, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் அறிவிக்கப்பட்டதால், மனத்துயரமடைந்த துரோணர் ஆயுதங்களை எறிந்து விட்டு போர்க்களத்திலே தியானத்தில் அமர்ந்து விட்டார். அந்நிலையில், திருட்டத்துயும்னன் வாளால் துரோணரின் தலையைச் சீவிக் கொன்றான்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Drona Parva

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=துரோண_பருவம்&oldid=3722141" இலிருந்து மீள்விக்கப்பட்டது