ஜரிதை
ஜரிதை அல்லது ஜரிதா (Jarita) (சமக்கிருதம்: जरित), மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். இவர் சாரஙகப் பறவை இனத்தைச் சேர்ந்தவர். மேலும் சாரங்கப் பறவை உடல் கொண்ட முனிவர் மந்தபாலரின் மனைவியும் ஆவார். மந்தபாலர்-ஜரிதை தம்பதியருக்கு காண்டவ வனத்தில் 4 ஆண் சாரங்க குஞ்சுகள் பிறந்தனர். இது போது மந்தபாலர் லபிதா எனும் பெண் சாரங்கப் பறவையுடன் காதல் வயப்பட்டு, தனது குடும்பத்தை கண்டு கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் பாண்டவர்கள், தங்கள் பாகத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தத்தை நிர்மாணிக்க, அக்னி தேவன் உதவியால் காண்ட வனத்தை, கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் அருச்சுனன் எரித்துக் கொண்டிருந்தான். அவ்வமயம் மந்தபாலர், அக்னி தேவனிடம் காண்டவ வனம் எரியும் போது, தன் குடும்பத்தாரைத் தப்ப விடுமாறு கேட்டுக்கொண்டார். அக்னிதேவனும் மந்தபாலரின் கோரிக்கை ஏற்று சம்மதித்தார்.
காண்டவ வனம் எரியும் போது மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் எரிந்து சாம்பாலானது. இக்காட்டுத் தீயில் ஜரிதை, லபிதா, நான்கு குஞ்சுகள் உள்ளிட்ட மந்தபாலர் டுடும்பத்தினர், தட்சகன் மகன் அஸ்வசேனன் மற்றும் மயன் ஆகியவர் மட்டும் உயிர் பிழைத்தனர்.[1]