மகாபாரதத்தில் அஸ்வசேனன், காசியப்பர்-கத்ரு தம்பதியருக்கு பிறந்த நாகர் இன தட்சகனின் மகன் ஆவார். பாம்பினமான அஸ்வசேனன் தன் மனைவி மற்றும் இனத்தாருடன் காணட வனத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் பாண்டவர்களுக்கு வழங்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் நாட்டை விரிவாக்க, கிருஷ்ணன் ஆலோசனையால் அருச்சுனன், அக்னி தேவன் உதவியுடன் காண்டவ வனத்தை 15 நாட்களில் எரித்தான். காண்டவ வனம் எரிக்கையில் தப்பியவர்களில் மந்தபாலர் குடும்பத்தினர், மயன், சாரங்கப் பறவைகள் மற்றும் அஸ்வசேனனும் ஒருவர்.[1]

தீயிலிருந்து தப்பித்து வெளியேறுகையில் அஸ்வசேனன், அருச்சுனை கோபத்துடன் நோக்கி, குருச்சேத்திரப் போரில் நான் கர்ணனின் நாகாஸ்திரமாக மாறி உன் உயிரைக் குடிப்பேன் என சபதம் செய்தான்.

குருச்சேத்திரப் போரில் கர்ணன், அருச்சுனனின் கழுத்தை நோக்கி நாகாஸ்திரம் எய்த போது, கிருஷ்ணன் தேர்ச் சக்கரத்தை ஒரு அடி ஆழத்திற்கு கீழே இறக்கினார். இதனால் அருச்சுனனின் உயில் தலைப்பாகையுடன் போயிற்று. அஸ்வசேனன் கர்ணனிடம் மீண்டும் ஒரு முறை நாகாஸ்திரத்தை அருச்சுனன் மீது ஏவ வலியுறுத்திய போது, கர்ணன் மறுத்து விட்டார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வசேனன்&oldid=4104998" இலிருந்து மீள்விக்கப்பட்டது