பதினோராம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)
வீடுமர் போரிட இயலாத சூழலில் பல மாற்றங்கள் கவுரவ படையில் ஏற்பட்டன.
கர்ணனின் வருகை
தொகுகுருச்சேத்திரப் போரின் பதினோராம் நாளன்று வீடுமர் தொடர முடியாத நிலையில் கர்ணன் போர்க்களத்தில் குதித்தான். இது துரியோதனனுக்கு பெரிதும் மகிழ்ச்சி அளித்தது.
துரோணர் தலைவராகுதல்
தொகுதுரியோதனன் தன் குருவான துரோணரை படைகளின் தலைமை ஏற்கச் செய்தான்.
யுதிட்டிரனை கைப்பற்ற திட்டம்
தொகுதருமனை உயிரோடு பிடிக்க கர்ணனும் துரோணரும் விரும்பினர். தருமனின் இறப்பு பாண்டவர்களை பெருங்கோபம் கொள்ள வைக்கும். ஆனால் அவரை பிடிப்பின் பணயக்கைதியாக உபயோகிக்கலாம் என்றெண்ணி திட்டம் தீட்டினர். துரோணர் தருமனை போர்புரிய அழைத்து போரிட்டு அவனின் வில்லை முறிக்க, பாண்டவ சேனைகள் பயம்கொள்ளலாயினர்.
அர்ச்சுனனின் திறன்
தொகுஇதைக் கண்ட அருச்சுனன் அவரிடம் சென்று பல அம்புகளை எய்தி துரோணரை பின்வாங்க செய்து தன் அண்ணனைக் காப்பாற்றினான்.